Sunday 25 February 2007

sumoவின் சூசகங்கள்

2 . பின்னூட்டங்கள்
எனது நண்பர் குழாமில் மிக முக்கியமானவர் தான் sumo(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 6ம் ஆண்டிலிருந்து எமது கல்லூரியில் தான் கல்வி பயில்கிறார். இவரின் விளையாட்டுக்கள் பல சமயங்களில் நகைச்சுவையாக இருக்கும் அதேசமயத்தில், சில சமயங்களில் விபரீதமாக அமைவதுமுண்டு.7ம் ஆண்டில் பாடசாலைக்கு வந்த அநபாயன் முதலில் வகுப்புக்கு வந்த நேரம் ஓடாத மின்விசிறியை விரல் விட்டு சுற்றிய பெருமைக்குரியவர் நமது sumo.

vibration என இன்னொருபெயரைக்கொண்ட இவர் பேசும் போது ஒரு மின்குமிழை ஒளிரச்செய்யுமளவிற்கு மின்சாரம் பெற்றுவிடலாம்.அவர் பேசுவது அவருக்கு புரிந்ததோ இல்லையோ, சத்தியமாக எமக்கு புரியாது.இந்த நிலைமையில் தலைவருக்கு 10க்கும் மேல் அந்தப்புரத்து ராணிகள் வேறு(தலையெழுத்து).

எது எவ்வாறெனினும் எமது வகுப்பின் கனவான்களில் இவரும் ஒருவர். இதற்கு பல காரணங்கள் உண்டு.
1) தலைவர் கல்லூரியின் தமிழ் இலக்கியமன்றத்தின் செயலாளர்.
2)கல்லூரியின் பிரபல குத்துச்சண்டை வீரர்.
3)பாடசாலை ஊடகமன்றத்தில் சிரேஷ்ட உறுப்பினர்.
4)கர்நாடக மன்ற செயற்குழு உறுப்பினர்.

ஊடக மன்றத்தில் செய்தி வாசிக்கும் போது 10 பக்க செய்தியை ஒரே நிமிடத்தில் வாசித்து முடிக்கும் பெருமை இவருக்குண்டு(என்ன அவசரமோ தெரியவில்லை).
இப்படி பையனின் குறும்புத்தனங்கள் சொல்லிமாளாதவை. எனது அடுத்த பதிவுகளில் மேலும் பல சூசகங்களை வெளியிட காத்திருக்கின்றேன்.
sumoவின் சூசகங்கள்SocialTwist Tell-a-Friend

Saturday 24 February 2007

தனிமை

1 . பின்னூட்டங்கள்
1) ஒரு மனிதன் -
ஒரே ஒரு மனிதன்.
உடன் ஒரு ஈ -
ஒன்றே ஒன்று,
பிரமாண்டமான
வரவேற்பறையில்

2)
ஆற்றின் மேல்
பளபளக்கும் நிலவு;
ஊசியிலை மரங்களில்
காற்றின் பெருமூச்சு;
நீளும் இரவு முழுவதும்
சாந்தமாய் விழித்திருப்பது
எதற்காக?
யாருக்காக?

3)
மலைக்கிராமத்தின்
குளிர்காலத்தனிமை
ஆழமுறவே செய்கிறது,
விருந்தாளிகள் போய்விட்ட பிறகு,
இலைகளும் புற்களும் மட்கிய பிறகு,
தொந்தரவு செய்கின்ற எண்ணங்கள்.
தனிமைSocialTwist Tell-a-Friend

அறிமுகம்

10 . பின்னூட்டங்கள்
வணக்கம் நண்பர்களே,
நான் இந்த வலைப்பதிவு உலகத்திற்கு புதியவன்.
எனது கருத்துகளை உங்களுக்கு் வெளிப்படுத்த
இது ஒரு சிறந்த ஊடகமாகும். தமிழ் மீது கொண்ட
பற்று காரணமாகவே இந்த முயற்சி.
கதை, கவிதை, அனுபவங்கள், சினமா விமர்சனங்கள்
போன்றவற்றை இங்கு வெளியிட காத்திருக்கின்றேன்.
எதிர்வரும் பதிவுகளில் இது சாத்தியமாகும் என எதிர்பார்கின்றேன்.
இந்த புதியவனுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்குமாறு
வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி,

வேத்தியன்.

அறிமுகம்SocialTwist Tell-a-Friend
 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.