Wednesday 22 October 2008

கிளியும் நானும்

2 . பின்னூட்டங்கள்
வந்த நாளன்றே
வரவேற்பளித்து
வணக்கம் சொல்லி
சொன்னதற்க்கு
பதில் பல கூறி
சம்பந்தப்பட்டும்
படாமலும்
தெளிவாய் இருந்தும்
இல்லாதவனாய்
நடிப்பா இல்லை
நகைப்பா என்று
அறிந்தும் அறியாமலும்
மணி ஒலிக்குமுன்
வருவான்
இவன்
இடைவேளையிலும்
இருப்பான்.
வணிகம் படித்த போதிலும்
வண்ணத்துப்பூச்சி
பிடித்தான்
தொடர்மாடிதனில்
குடியிருந்தான்
நீரின் பயன் மூன்று
கேட்டிடுவான்
நங்கையர் தாய்தனை
தொலைபேசி தனில்
அழைத்து
கூறிடுவான்
முப்பயன்கள்
ஒன்று குடிப்பதற்கு
இரண்டு குளிப்பதற்கு
மூன்று கு.... கழுவுவதற்கு (?)
கறுப்பியுடன் (Metho)காதல் கொண்டான்
அது ஆணா பெண்ணா
யாமறியோம்
பாடிடும் வேளை தனில்
பேய் உண்ட
பலாக்கனியாய்
வந்து
பழ - பலான மொழி கூறி
மானமிழப்பான்
அது உண்டா இவனுக்கு
இழப்பதற்க்கு
சிரிப்பு போலீஸ்
இவன்
பெயரில் இருவருளர்
ஒருவன்
விஞ்ஞானி
எம்மவன் மெய்ஞ்ஞானி
கிளிப்பிள்ளை என்று
அழைத்தனர் இவனை
கிளி என்கிறோம்
இன்று
எமைப்பிடித்த ஏழரையா?
ஆறடி கோமாளியா?
யாமறியோம் பராபரமே !!!!
கிளியும் நானும்SocialTwist Tell-a-Friend

Thursday 16 October 2008

கானல் நீர் !

2 . பின்னூட்டங்கள்
காலங்களோடு சென்று
பல கனவுகள் கண்டு
கண்மணியே - உனை
காத்து
கருவாகி - உருவாகி
காதல் கொண்டு
காலாற நடைபயின்று
காற்றோடு உறவாடி
கதைபேசிய
காலங்கள்
உயிரோடில்லை - எம்
கனவுகள் வெறும்
கானல் நீராய்...!
கானல் நீர் !SocialTwist Tell-a-Friend

வகுப்பில் இனியவை !

5 . பின்னூட்டங்கள்
சீரிய இளம் தென்றல்
வருடி - வெண்
உடையணிந்து
பேரூந்திலேறி
காட்சிகள் பலகண்டு
காட்டி
பயமறியாமல்
மணி ஒலித்ததும்
கேட்காமல்
காலாற நடந்து
வகுப்பறை - அகம்
சென்று ஆசனம்
செய்து
முடியிழந்தோனின்
முடிவற்ற வெடிகள்
கேட்டு - வெட்டு
வினாக்கள் பல
வினவி விடை
இல்லாது மணி
ஒலிக்க - நெட்டை
கொக்கு வந்து
நீலாம்பரி வசனம்
பேசி - உறக்கம் தனை
வரவழைக்க
செய்யாத ஒப்படை
பல செய்தேன்
என தலையாட்டி
வையத்தின் பொய்
எல்லாம் வாயில்
வரவழைத்து
ஐயகோ ! கேட்காதா
ஒசையுடன் மணி என
கடிகாரம் பார்த்து
விநாடிகளை வடம்
கொண்டிழுத்து விரட்டிவிட
மாமனிதன் உயிரியல்
அடுத்துவர
கொப்பியை எடுத்து
நான் ஓட
தெரியாத விடயத்தை
புத்தகம் தனில் கண்டு
அவன் உரைக்க
அதைப்பார்த்து நாம்
நகைக்க ,
என் உறவினர் கடல்
என அவன் தொடங்க
வாழ்த்துப்பாவாக
எமை காத்த பாவாக
கல்லூரி கீதம்
ஒலிக்க
போதுமடா சாமி - இவர்
அலுவை என
வீடு நோக்கி ஓடினேன்...
இரண்டரை வருடமாய் பெற்ற
இன்பம் - இனியவை
வாழ்வில் இனி இல்லை.
கண்ணீருடன்
நினைக்கின்றேன்
இனியவை வராதா ???
வகுப்பில் இனியவை !SocialTwist Tell-a-Friend

மீண்டும் வேத்தியன் !

0 . பின்னூட்டங்கள்
நண்பர்களே !
வலைப்பதிவு ஆர்வலர்களே !

பரீட்சை காரணமாக நீண்ட நாட்களாக வலைப்பதிவு செய்யாமல் இருந்தேன்.
தற்போது பரீட்சைகள் எல்லாம் முடிந்து விட்டன. So தற்போது நான் ஒரு சுதந்திரப்பறவை !

இனி வழமைப்போல் பதிவுகள் தொடரும் !

I'm back !
மீண்டும் வேத்தியன் !SocialTwist Tell-a-Friend
 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.