Wednesday 31 December 2008

2009 வந்தாச்சு !!!

0 . பின்னூட்டங்கள்
முதல்ல எல்லோருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிச்சுக்கிறேன் !

அப்பிடி இப்பிடின்னு ஒருமாதிரி 2008 முடிஞ்சு, 2009 வந்திருச்சுப்பான்னு எல்லாரும் சந்தோஷமா இருப்பாங்கன்னு புரியுது.... அப்பிடித்தானே???

இந்த கடந்துபோன 2008ல மறக்க முடியாத பல விஷயங்கள் நடந்திருக்கு. பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பிய கமல்ஹாஸனின் 'தசாவதாரம்' வெளியாகி வெற்றி பெற்றது முதல் அதிகமானோரின் விருப்பின் பேரில் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக Barack Obama தெரிவானது வரை பல விஷயங்கள் !!!

*முதல்முதல்ல கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளில் 'Review' முறை அறிமுகமாச்சு.
*பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியாகவிருந்த பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதும், முஷாரப் ஜனாதிபதிப்பதவி கைமாறியதும்.
*Euro 2008 கால்பந்து தொடரில் ஸ்பெயின் சாம்பியனானது.
*ஒலிம்பிக் போட்டிகள் மிக கோலகலமாக நடந்து முடிந்தது.
*வல்லரசு நாடான அமெரிக்காவின் பொருளாதாரம் நிலைகுலைந்து தடுமாறியதும், இதனால் ஏனைய நாடுகளின் பொருளாதார நிலைகுலைவும்.

இப்படி எத்தனையோ பல சந்தோஷமானதும், துக்கமானதுமான நிகழ்வுகள் நடந்த இந்த 2008 இன்றோடு முடிவடைகிறது.
நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் அப்பிடின்னு சொல்லி வரப்போற 2009ம் ஆண்டை சந்தோஷமா வரவேற்போம். இந்த 2009ம் ஆண்டு எல்லோருக்கும் நல்லதா அமையனும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன் !
வரப்போற எல்லா நல்லது கெட்டதையும் தாண்டி இந்த வருஷத்தை நல்லதா மாத்திக்கிற வித்தை அவனவன் கையில தான் இருக்கு... ஆமாவா இல்லையா ???


எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!
2009 வந்தாச்சு !!!SocialTwist Tell-a-Friend

Friday 19 December 2008

பணவீக்கம் - நகைச்சுவைப் படங்கள்...

6 . பின்னூட்டங்கள்
பணவீக்கம் ஏறிக்கொண்டே போகும் இந்த காலத்துக்கு ஏற்ற படங்கள் இவை...
நண்பன் மின்னஞ்சலில் அனுப்பியது.
சற்று நகைச்சுவையாக இருக்கும். பார்த்து மகிழுங்கள் !!!














பணவீக்கம் - நகைச்சுவைப் படங்கள்...SocialTwist Tell-a-Friend

Monday 8 December 2008

இப்படியும் படம் பிடிக்கலாமா ???

6 . பின்னூட்டங்கள்
நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பிய படங்கள் இவை...
சரியான கோணத்தில் (Angle) எடுக்கப்பட்டதால் வித்தியாசமானதாக தோன்றுகிறது....
பார்த்து ரசிங்கப்பா !











கண்ணா இது எப்படி இருக்கு ???
இப்படியும் படம் பிடிக்கலாமா ???SocialTwist Tell-a-Friend

Sunday 7 December 2008

"தமிழை"த் தமிழாய் உச்சரிப்போம் !

7 . பின்னூட்டங்கள்
வார்த்தைப் பிரயோகங்களை மிக மோசமாகக் கையாளும் இன்றைய காலத்தில் தமது தாய்மொழியைக் கூட சரியாகச் சொல்லத் தெரியாத பலர் உளர்.

உதாரணமாக வெளிநாடுகளில் பல காலமாக வாழும் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தாய்மொழியைக் கற்பிப்பதில் தயக்கம் காட்டுவது ஏனோ தெரியவில்லை. தாய்மொழியை எழுதக் கற்பிக்காவிடினும் பரவாயில்லை, ஒழுங்காகப் பேசுவதற்காவது கற்றுக் கொடுக்கலாம் ! பிள்ளைகளுக்கு 'அம்மா' எனும் வார்த்தையைக் கூட ஒழுங்காகச் சொல்லக் கற்றுக் கொடுப்பதில்லை. நீண்டகாலம் வெளிநாட்டிலிருந்து விட்டு தாய்நாட்டுக்குத் திரும்பும் நம்மவர்கள் தமது பிள்ளைகள் தடுமாறி தடுமாறித் தமிழ் கதைப்பதையும் ஆங்கிலத்தில் அதிகம் பேசுவதையும் ஒரு நாகரிகமாகக் கருதுகிறார்களோ தெரியவில்லை !!!
நமது தாய்மொழியான தமிழுக்கு இப்படியொரு அவலநிலை தேவையா ???

மேலும், சந்தர்ப்பவசத்தினால் சில சமயங்களில் நமது மொழியை ஆங்கிலத்தில் தட்டச்சு (Type) செய்ய வேண்டிய நிலைமை வந்தால் கூட அதிகமானோர் 'TAMIL' என தட்டச்சு செய்கின்றனர். ஆனால் அது தவறாகும். 'THAMIZH' என்பதே சரியான முறையாகும்.இப்படிக் காணப்பட்டால் தான் வேற்று மொழியைச் சேர்ந்தவர்கள் கூட தமிழை 'தமிழா'ய் உச்சரிப்பர்.
பல தமிழர்களே தமிழை 'தமிலா'ய் உச்சரிக்கும் பொழுது நாம் வேற்று மொழிக் காரர்களைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன ஆகிவிடப் போகின்றது ???
எனது இந்தப் பதிவைப் படித்த பின்னர் ஒருவராவது திருந்துவாராயின், அதுவே இந்த பதிவிற்கும் தமிழுக்கும் கிடைக்கும் பெரிய விளைவாகும்...

அனைவரும் திருந்துவோம் ! தமிழைத் தமிழாய்ப் பேசுவோம் !
"தமிழை"த் தமிழாய் உச்சரிப்போம் !SocialTwist Tell-a-Friend
 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.