Wednesday 28 January 2009

இதுதான் புதிய கீதாசாரம்

8 . பின்னூட்டங்கள்
இதுதாங்க புதிய கீதாசாரம்.
உடனே இது ஏதோ 'கீதா' பத்தினதுன்னு நினைக்க வேணாங்க...
:-)
மின்னஞ்சலில் வந்த சரக்கு.
எதை நீ படித்தாய்
மறந்து போவதற்கு

எதை நீ புரிந்துகொண்டாய்
பரிட்சையில் கேள்விகள் புரிவதற்கு

என்று நீ ஒழுங்காக கல்லூரி வந்தாய்
வருகை கணக்கு குறையாமல் இருப்பதற்கு

எந்த ஃபிகரை நீ காதலித்தாயோ
அவளிடமே நீ செருப்படி வாங்குவாய்

எந்த ஃபிகரை நீ மகா மட்டமாக திட்டுவாயோ
அவளிடமிருந்தே காதல் கடிதம் பெறுவாய்

எந்த ஃபிகர் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ
அது நாளை மற்றொருவனுடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடுகிறது

இதுவே கல்லூரி நியதியும்
ஃபிகர்களின் குணாம்சமும்.

--------------------------------------------------------------------------------------------------

இது அறியாமை
:

சிறிய காலமாகவே ஆதிக்கம் செலுத்திவரும் இணையம்,மின்னஞ்சல் பத்தி அவ்வளவா யாருக்கும் தெரியாதுன்னு நினைக்கிறேன்...
ஏன்னா, எனக்குத் தெரிஞ்சு கொஞ்சம் வயசானவங்கெல்லாம் கணனி பத்தி பேசும்போதெல்லாம் மின்னஞ்சல் அனுப்புறதுக்கு 'எனக்கு ஒரு internet அனுப்புங்க'ன்னும் இணையத்தில் உலாவும் போது 'நான் இப்ப emailல இருக்கேன்'ன்னும் சொல்லுறத கேட்டிருக்கேன்...
ஏன் இது??? இது இணையம் பத்தியும் மின்னஞ்சல் பத்தியும் அவங்களோட அறியாமைன்னு சொல்லுறதா??? அல்லது இது அடிப்படைல வேற காரணம் இருக்கா???

ஒருமுறை எனது நண்பன் ஒருவனின் வீட்டுக்கு சென்றிருந்த போது அவனின் தந்தை அவரின் நண்பரோடு கதைத்த உரையாடல் இது :
'முன்னேல்லாம் நாம ஏதாவது லெட்டர் எழுதுறதுன்னா கையால எழுதினோம். ஆனா இப்போல்லாம் சின்ன ஃபோன் நம்பர் எழுதுறதுக்கும் கம்பியூட்டர் முன்னாடி போய் உக்கார்ந்திர்ரானுங்க...'
இதுக்கும் காரணம் என்ன???
வேலையை இலகுவாக கொஞ்சம் சாதனங்களை பாவிச்சு செய்யுறதை அவங்க விரும்புறாங்க இல்லயா???

இந்த விஷயம் சம்பந்தமா பின்னூட்டங்களை எதிர்ப்பார்க்கிறேன்...
விளங்கினவங்க சொல்லுங்க...
இதுதான் புதிய கீதாசாரம்SocialTwist Tell-a-Friend

Tuesday 20 January 2009

திருமணமான பெண்களின் நிலை இதுதானா???

21 . பின்னூட்டங்கள்

இந்தப் படம் எனக்கு மின்னஞ்சலில் வந்தது.
படத்தைப் பார்த்ததும் கோபமும் சிரிப்பும் கலந்த ஒரு உணர்வு தான் வரும். ஆனா யாரும் என் மேல கோபப்படாதீங்க. :-)))
இதுக்கு நான் காரணமில்லீங்க...
என்ன பண்ணுறது??? சொன்னாலும் சொல்லலைனாலும் இன்னைக்கு திருமணமான பெண்களின் நிலை இப்படித் தான் பல வீடுகளில் இருக்கின்றது.
இதற்கு யார் காரணம்???

பல வீடுகளில் இதையும் விட அதிகமான வேலைகளுடன் தான் பெண்கள் தினமும் தங்களது நாட்களை கடக்கிறார்கள்.
நாகரிகம் நமக்கு கற்றுத் தந்தது இது தானா???
இதப்பத்தி எனக்கு ஒன்னும் பெருசா எழுதத் தெரியலீங்க... ஏன்னா நமக்கு 20 வயசு தான் ஆவுதுங்க :-)
ஆனா ஏதோ எழுதனும்ன்னு நினைச்சேன்... அதான் இந்தப் பதிவு...

நிலைமை மாற வேண்டும் !!!
திருமணமான பெண்களின் நிலை இதுதானா???SocialTwist Tell-a-Friend

Monday 19 January 2009

செல்க பைக்கில் நிதானத்துடன்...

10 . பின்னூட்டங்கள்
இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது.
ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்ன்னு சொல்லுவாங்க...
இது ஸ்வீடன் நாட்டுல நடந்த சம்பவம். ஹொண்டா ரைடர்ல வந்தவரு கிட்டத்தட்ட 250 km/hல வந்திருக்காரு. வேகம் ரொம்ப அதிகம்ங்கிறதால ப்ரேக் போடக் கூட நேரம் இல்லையாம். கார் மெதுவா தான் வந்திருக்கு. ஹொண்டா ரைடர்ல கார்கூட மோதி அடுத்த கணம் அவரும் அவரோட பைக்கும் காருக்குள்ள இருந்திச்சாம்... காருக்குள்ள 2 பேர் இருந்திருக்காங்க. விபத்து நடந்ததும் அவங்களும் பைக் காரருமாக மொத்தம் மூனு பேர் அந்த இடத்திலேயே போயிட்டாங்களாம்...
இது சம்பந்தமா Stockholm மோட்டார்சைக்கிள் கண்காட்சியில ஸ்வீடன் பொலீஸின் விபத்துத் தடுப்புப் பிரிவு நடாத்திய ஃக்ராபிக் டெமான்ஸ்ரேஷன்ல காட்டப்பட்ட படங்கள் தான் இது...

இதுல மோட்டார்சைக்கிள் தெரியுதா???
இப்போ தெரியுதுங்களா???
இந்த பதிவைப் பாத்து யாராவது திருந்துவாங்களாயிருந்தா, அதுதான் இந்தப் பதிவின் மூலம் கிடைக்கும் பெரிய பலனா இருக்குமுங்க...
யாராவது ரொம்ப ஸ்பீடா வண்டி ஓட்டுற உங்க நண்பர்களுக்கும் இது பத்தி சொல்லுங்க...
இது சம்பந்தமா எனக்கு ஒன்னு தோனுது...

'செல்க பைக்கில் நிதானத்துடன்,

அன்றேல் விளையும் மோசமான மரணம்'

இது புதுக்குறள்னும் வச்சுக்கலாம்... என்ன நான் சொல்றது???

Speed Thrills, But Kills...
செல்க பைக்கில் நிதானத்துடன்...SocialTwist Tell-a-Friend

Sunday 18 January 2009

சினமா க்ளைமாக்ஸ் !!!

6 . பின்னூட்டங்கள்
ஃபாலிவுட்
ஷாருக் தான் பேட்ஸ்மேன். கடைசி ஃபாலில் 10 ரன் தேவை. அவரு அதை எப்பிடி அடிப்பாருன்னு பாக்கலாம் வாங்க...
ஃபோவ்லர் (Bowler) ஃபாலை போட 'டான்' அதை மூனாவது ஆளுக்கு அடிக்கிறாரு (3rd man :D ). ஃபோல் பவுன்ட்ரி லைனுக்கு போக, 'டான்' 3 ரன் ஓடுறாரு, ஃபீல்டர் பந்தை எறிய அது ஓவர் த்ரோவ் ஆக 'டான்' இன்னும் 3 ரன் ஓடுறாரு, அங்கிருந்த ஃபீல்டர் திருப்பி எறிய அதுவும் ஓவர் த்ரோவ் ஆகி பவுன்ட்ரிக்கு போக இன்னும் 4 ரன்கள் கிடைக்க 'டான்' வென்றிடுறாரு.
பாக்ரெளன்ட்ல 'வந்தே மாதரம்' கேக்குது ...


டாலிவுட்
சீரஞ்சீவி தான் பேட்ஸ்மேன். இனி நாங்க இவரை 'சீரு'ன்னு கூப்பிடலாம் ஓகே... அதே மாதிரி நிலைமையை இவரு எப்பிடி கையாளுறாருன்னு பாக்கலாம் வாங்க...
ஃபோவ்லர் போடுறாரு.'சீரு' ஓங்கி அடிக்கிறாரு. பந்து பவுன்ட்ரி லைனையும் தாண்டி ரொம்ப தூரம் போய் விழுது. நடுவர்கள் (Umpires) வேற வழியில்லாம 12 ரன் குடுக்கிறாங்க... 'சீரு' வென்றிடுறாரு...

கோலிவுட்

நம்ம சூப்பர்ஸ்டார் தான் பேட்ஸ்மேன். அதே நிலைமை. இது தான் க்ளைமாக்ஸ்...
போவ்லர் பந்தை போட நம்ம சூப்பர்ஸ்டார் ஓங்கி அடிக்க பந்து அடி தாங்க முடியாம 2 துண்டா உடைஞ்சு ஒரு துண்டு சிக்ஸருக்கும் ஒரு துண்டு பவுன்ட்ரிக்கும் போயிடுது.
பாக்ரெளன்ட்ல 'என் கிட்ட மோதாதே' கேக்குது.
சூப்பர்ஸ்டார் ஜெயிக்கிறாரு...

பி.கு : அதிகமா ஆங்கில வார்த்தைகள் உபயோகப்பட்டிருக்கு.எல்லாம் ஒரு தமாஷுக்குத் தான்...
தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்...
சினமா க்ளைமாக்ஸ் !!!SocialTwist Tell-a-Friend

Thursday 15 January 2009

திரைவிமர்சனம் - படிக்காதவன்

19 . பின்னூட்டங்கள்

இன்று தான் தனுஷ் உடைய 'படிக்காதவன்' படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
அதையும் பார்த்தேன். (இப்ப எல்லாம் செய்யுற பாவத்துக்கு உடனே தண்டனை கிடைச்சுடுமாம் இல்ல... நேத்து நான் என்ன பாவம் செஞ்சேனோ??? இதை இன்னைக்கு பார்த்துட்டேனே... )

சரி; 'சூப்பர்ஸ்டார்' நடிச்சு பெரிய வெற்றி பெற்ற படம்ங்கிறதால போனேன். 'சிலம்பாட்டம்' போன போது டிக்கட் நண்பன் உபயம்.. இதுக்கு டிக்கட் என்னோடது...
ரொம்ப கவலையா இருக்கு :(((

ஒரு படத்துக்கு எப்படி விமர்சனம் எழுதுறதுன்னு எனக்கு தெரியாது.நான் என் மனசுல பட்டதை எழுதுறேன்.. ஓகே???

இந்தப் படத்தை முழுசா பார்த்து முடிக்கிறதுங்கிறது ரொம்ப கஷ்டமான விஷயம்.இவ்வளவு நாளும் படத்துல ஒரு வில்லன் மட்டும் இருந்தான்.படத்துல கதைன்னு ஒன்னு இல்லைன்னாலும் படத்தை விளங்கக்கூடியதாயிருந்திச்சு.
இந்தப்படத்துல 3/4 வில்லன்கள்... எவன் வில்லன், எவன் நல்லவன்ன்னு தெரியவேயில்ல... ஒருத்தனோட ஒருத்தன் மாறி மாறி சண்டை பிடிக்கிறான். ஆனா எதுக்காக சண்டை பிடிக்கிறான்னு பார்க்கிறவங்களுக்கு புரிஞ்சேயிருக்காது.

ஹீரோ தனுஷ் வீட்டுல எல்லாரும் படிச்சவங்க ( நம்ம ஹீரோ 'படிக்காதவன்' ஹிஹி ) இவரு படிக்கலங்கிறதால அப்பாக்கு இவரை பிடிக்காது. அப்பாவுக்கு பிடிக்காத ஹீரோ தான் கடைசில ஜெயிப்பாருங்கிறது தமிழ் சினமா ஃபார்முலா போல ! ) அதனால எப்பவும் வீட்டுல சண்டை. அம்மா இவருக்கு சப்போர்ட்டாம்...

ஒருமுறை தனுஷோட அண்ணிக்கு ஆஃபீஸ்ல பிரச்சினையாம். அப்போ வில்லன் கோஷ்டியை ஒரு கடைக்கு கூப்பிட்டு தனுஷ் கிட்ட சொல்லி அடிக்கிற சீன் ஏற்கனவே ஏதோ படத்துல வந்ததுங்கிறது மட்டும் தெரியுது. ஆனா என்ன படம்ங்கிறது நினைவுக்கு வரல, தெரிஞ்சவங்க சொல்லுங்க.
வேலை எதுவும் இல்லாம சும்மா ஊர்சுற்றித் திரியும் இவருக்கு கல்யாணம் பண்ணி வைக்க தனுஷோட மாமியின் மகளான ஆர்த்தியை பேசுறாங்க.அது இவருக்கு பிடிக்கலயாம். அப்போ ஃப்ரென்ட்ஸோட அட்வைஸ்படி தமன்னாவை காதலிக்க ஆரம்பிக்கிறார். மெதுவா அப்பிடியே கதை நகருது.

இதுக்குப்பிறகு இரண்டாவது பாதியில தான் கதையே மாறிப்போயிடுது. பயங்கர சண்டை. பழைய காலத்துல மன்னர்கள் போர் புரியமுன் வீரர்கள் முன்னே போவதுபோல இதுல மெயின் வில்லன்கள் சண்டை பிடிக்க முன் அவனுங்களோட கையாட்கள் சண்டை போட்டு விழுறானுங்க. மெயின் வில்லன்கள் வாயால சண்டை போட்டுட்டு போயிருவாங்களாம். இவனுங்க எல்லாம் வில்லன்களாம். தாங்க முடியல இந்த கொடுமையை !!!

ஹீரோயின் தமன்னா எதிர்ப்பார்த்தபடியே வில்லனோட மகள் !
வழக்கம் போலவே ஹீரோயினுக்கு நடிக்கவே வாய்ப்பு இல்லை :)
இதுக்குப்பிறகு சொல்லவ வேணும் மீதிக்கதையை ??? சொல்லுறதுன்னாலும் நமக்கு ஞாபகத்துல இல்ல ! நித்திரையாயிட்டேன் :)))

விவேக் சம்பந்தப்பட்ட காமெடி ஸ்கிரிப்ட் டைரக்டரே எழுதினது போல. காமெடி கதைக்கு ஒத்துழைக்கவே இல்லை.
பாடல்களும் ஸ்பெஷலா இல்ல.
'படிக்காதவன்' (Remake) பெருத்த ஏமாற்றம்...
இந்தப்படம் யாருக்காவது நல்லா இருந்துச்சுன்னா காரணத்தை சொல்லுங்க...
திரைவிமர்சனம் - படிக்காதவன்SocialTwist Tell-a-Friend

Friday 9 January 2009

கடவுளுக்கே இந்த நிலைமையா ?

8 . பின்னூட்டங்கள்
இது எனக்கு நண்பன் மின்னஞ்சலில் அனுப்பியது. இதன் மூலமானது ஆங்கிலத்தில் இருந்ததாக இருக்க வேண்டும்.ஏன்னா, இதில வரும் இடமெல்லாம் அமெரிக்காவிலுள்ள இடங்களாகும்..
அதைப்பத்தி நம்மளுக்கு என்ன??? நாம கதையைப் பாக்கலாம்...

நீண்ட காலமா கடவுளை வணங்கி, கடவுளுக்கு மேல அசைக்க முடியாத நம்பிக்கை உள்ள ஒருத்தன்
கலிபோர்னியாவின் கடற்கரையோரமா நடந்து போயிட்டிருந்தானாம்.திடீர்னு சத்தமா இதை சொன்னானாம் : "கடவுளே ! எனக்கு ஒரு வரம் தா ???". அப்போ வானத்திலுள்ள மேகமெல்லாம் திரண்டு அசரீரி மாதிரி ஒரு சத்தம் கேட்டுச்சாம் "நீண்ட காலமா நீ என்னை நம்பிக்கையோட வணங்கி வரதால நான் உனக்கு ஒரு வரம் தரேன். என்ன வரம் வேண்டும்னு கேளு". அவன் கேட்டான் "ஹவாய்க்கு ஒரு பாலம் கட்டித்தந்தா, நான் எனக்கு தேவையான் நேரம் காரில் ட்ரைவ் பண்ணிக்கிட்டு போகலாம் !".

கடவுள் சொன்னார் "இதுக்கு பசுபிக்கின் அடியை தொட வேண்டி வரும், அது மட்டுமில்லாம கொன்கிரீட்,இரும்புன்னு சரியான செலவு வேற.அதை என்னால செய்ய முடிஞ்சாலும், அதுக்கு ரொம்ப நேரம் தேவை ! நீ கேட்பது நடக்கக் கூடியதாக எனக்கு தோனலை.. கொஞ்சம் யோசிச்சு லாஜிக்கா ஏதாவது கேளு".


அவன் ரொம்ப நேரம் யோசிச்சுட்டு கடைசியா கேட்டானாம் "கடவுளே ! எனக்கு பெண்களின் மனசை புரிஞ்சுக்கிற சக்தியை கொடு. அவங்க எதுக்கு Feel பண்றாங்க, அமைதியா இருக்கிறப்போ என்ன யோசிக்கிறாங்க, ஏன் அழுறாங்க, அவங்க 'nothing'ன்னு சொல்றதுக்கு அர்த்தம் என்ன, அவங்களை நான் எப்பிடி சந்தோஷமா வச்சுக்கிறது... இதை எல்லாம் தெரிஞ்சுக்கிறதுக்கு எனக்கு சக்தியை கொடு !". கடவுள் ஒரு ஆழ்ந்த மூச்சு விட்டுட்டு கேட்டாராம் "உனக்கு அந்த பாலத்தில் என்னென்ன வசதி வேணும்னு சொல்லு !!!"

கடவுளின் Reaction ஒருவேளை இப்பிடி இருந்திருக்குமோ???

கடவுளுக்கே இந்த கதியா??? இது என்னோட சொந்த படைப்பு இல்லை.
So பிடிக்காதவங்க மன்னிச்சுருங்க.

பிடிச்சவங்க பின்னூட்டம் போடுங்க...
கடவுளுக்கே இந்த நிலைமையா ?SocialTwist Tell-a-Friend

Thursday 8 January 2009

கஜினிக்காக மாறிய அமீர்கான் !!!

1 . பின்னூட்டங்கள்
தமிழில் சூர்யா நடித்து வெளிவந்த 'கஜினி' திரைப்படம் தற்போது ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் ஹிந்தியிலும் வெளியிடப்பட்டுள்ளது.
படம் நல்ல வசூலை வாரியிறைப்பதாக நம் உளவுத்துறை தகவலும் அனுப்பியுள்ளது :)))

தமிழ் கஜினியில் சூர்யாவின் உடற்கட்டமைப்பை பார்த்து மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.அந்தளவுக்கு தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் சூர்யா.

அதே போல ஹிந்தியிலும் ஹீரோவான அமீர் கான் இப்படத்திற்காக தனது உடலை கட்டுக்கோப்பாக கொண்டுவந்துள்ளார் என்பதே உண்மை...
இந்தப் படத்திற்காக அவர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டுள்ளார் என்பதை கீழேயுள்ள இந்தப் படங்களைப் பாருங்கள்.
உங்களுக்கே புரியும்...
கஜினிக்காக மாறிய அமீர்கான் !!!SocialTwist Tell-a-Friend

Wednesday 7 January 2009

நான் விரும்பும் இசைப்புயல்...

0 . பின்னூட்டங்கள்

முதல்ல அவருக்கு வாழ்த்துகளை சொல்லிக்கொள்கிறேன்...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !!!


இசைன்னு வந்தவுடனேயே ரஹ்மான் பேரைச் சொல்லும் பலரில் நானும் ஒருவன். சின்ன வயசுல பாட்டு கேட்கத் தொடங்கியதிலிருந்தே ரஹ்மான் பாட்டுன்னா எனக்கு தனிப் பிரியம் தான். அதுக்காக மற்ற இசையமைப்பாளர்களை பிடிக்காதுன்னு அர்த்தமில்லை.எத்தனை பேரைப் பிடித்தாலும், ஒருவருக்கு தனித்துவம் உண்டல்லவா??? அது தான் இது...
ரஹ்மான் பாட்டு டீ.வீ.யிலோ ரேடியோவிலோ போகுதுன்ன சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் விட்டுட்டு வந்து பார்ப்பேன். அந்தளவுக்கு அலாதிப்பிரியம் ரஹ்மான் பாட்டு மேல்...
நேற்று அவரின் பிறந்த நாளன்று இந்தப் பதிவைப் பதிய இயலாமல் போனது வருத்தம் தான்...

அவரைபத்தி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். (தெரிஞ்சிருக்கணும் !!!)
தமிழராய் பிறந்து இன்று ஆங்கிலப் படத்திற்க்கு இசையமைக்கும் அளவுக்கு உயர்ந்திருப்பது நம்ம எல்லாருக்கும் பெரிய வெற்றி அப்படின்னு தான் நான் உணர்கிறேன்....
1966 ஜனவரி 6ம் திகதி பிறந்தார்.
முதல்ல திலீப் குமார்ந்னு இந்து மதத்துல இருந்து ரஹ்மான் எனும் பெயரோட முஸ்லிம் மதத்தை தழுவினார். அது தனக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்குதுன்னு அவரே பலமுறை சொல்லி இருக்கிறார்.
1992ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளரானார்.தற்போது தமிழ்,மலையாளம்,தெலுங்கு,ஹிந்தின்னு பல மொழிகள்ல படம் பண்ணியிருக்கிறார்.
அது தவிர பல ஆல்பங்களும் வெளியிட்டிருக்கிறார்.
அவரைப் பத்தி மேலதிக தகவல்களுக்கு கீழேயுள்ள இந்த இணைப்புகளில் சொடுக்குங்கள்.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D

http://www.arrfans.com/

http://www.arrahman.com/
நான் விரும்பும் இசைப்புயல்...SocialTwist Tell-a-Friend

Tuesday 6 January 2009

அகதியின் புலம்பல்

4 . பின்னூட்டங்கள்
இது எனது நண்பனின் படைப்பு....
நன்றாக இருந்தது...
நீங்களும் படித்துப் பாருங்களேன் !

உயிர் வலி அறிந்து
உளம் ஆற
உறுதி கொண்டு
உண்மையே பேசி
பழிச்சொல் பல கேட்டு
கானல் நீராய்
கனவுகள் யாவும் கலைய
மண் குதிரை மேல்
சவாரி செய்து
மணல் புயல் எதிர்கொண்டு
மேற்குலகம் செல்வதற்கு
எம் பொருள் இழந்து
ஊர் இழந்து
உறவு இழந்து
ஊன் இழந்து
உறக்கம் இழந்து
உயிர் மட்டும்
இழக்காது
அன்பை உண்டு
கண்ணீரைக்குடித்து
உணர்வொன்றே மூச்சாய்
வருமா விடியல்
எமக்கென்று
முகாமில் ஓர்
விடியல்
அகதியாய் நான்
இன்று...
அகதியின் புலம்பல்SocialTwist Tell-a-Friend

Monday 5 January 2009

கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் !

3 . பின்னூட்டங்கள்
இந்த கீழுள்ள படத்தில் ஒரு குறிப்பிட்ட வெள்ளைப் புள்ளியைப் பார்க்கும் போது மற்றைய புள்ளிகள் எல்லாம் கறுப்பு நிறத்தில் உள்ளது போலத் தோற்றும்.
ஆனால் அந்தப் புள்ளியைப் பார்க்கும் போது அது வெள்ளை நிறமாகவே தோன்றும் !!!

பரிசோதித்துப் பாருங்க !


எப்பிடி இருக்கு இந்த விளையாட்டு ???
எல்லாம் ஒரு தோற்றப்பாடு, மாயைன்னு இப்ப புரியுதா ???

'கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்'ன்னு சும்மாவா பாடி வச்சாங்க ???
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் !SocialTwist Tell-a-Friend

Sunday 4 January 2009

திரைவிமர்சனம் - சிலம்பாட்டம்

4 . பின்னூட்டங்கள்

அண்மையில் சிலம்பாட்டம்ன்னு ஒரு படம் பார்க்க வாய்ப்பு கிடைச்சுது.
( ஓசி டிக்கட் :))) ).

ஏற்கனவே பல பேர் இதப்பத்தி பிரிச்சி மேஞ்சிருந்தாலும் என்னால எதுவும் பேசாம இருக்க முடியல...

சரி சிம்புவோட படம்ன்னு போய் உட்கார்ந்தா......
அந்தாளு சிங்கிள் ஆக்டிங்கு குடுத்தாலே அந்தப் படத்த நாம கஷ்டப்பட்டு தான் பார்த்து முடிக்கணும். இதுக்குள்ள இந்தப் படத்துல தலைவருக்கு டபுள் ஆக்டிங்காமாங்ங்ங் !!! தாங்க முடியலப்பா அந்த கொடுமையை....

படத்துல அவரோட முதல் அவதாரம் (???) ஒரு கோயில் பூசாரியா காட்டியிருக்காங்க. ரொம்ப நல்லவரா அந்த வேஷத்துல நடிச்சிருக்கது நம்பக்கூடிய மாதிரி இல்ல... (அவரப்பத்தி தெரியும்ல்ல நம்மளுக்கு !)

சிம்புவுக்கு அப்பா காரக்டர்ல நடிக்க வேண்டிய பிரபு, அவருக்கு அண்ணணாவந்து பெரிய காமெடி பண்ணியிருக்காரு ! (என்ன கொடுமை சரவணன் இது???)

முதல் பாதியில ஹீரோயினா வர்ற சானா கான் வாங்கின சம்பளத்துக்கு ரொம்பவே (ஆ)பாசமா நடிச்சிருக்காங்க... பாவம் அந்தப் புள்ளைக்கு யாராவது புதுத்துணி வாங்கிக் குடுங்கப்பா !
சிம்புவோட ரெண்டாவது ஜோடி சினேகாவோட நடிப்பும் சொல்லிகிற மாதிரி இல்ல. (ஏ புள்ள சினேகா, நீ ரொம்ப மாறீட்டம்மா !!!)
படத்துல ரொம்ப முக்கியமான விஷயம் : ரெண்டாவது சிம்பு ரொம்ப கோவக்காரராமாங்ங்ங் !!! தாங்க முடியல இவங்க கற்பனைய...
இத காரணமா வச்சே இரண்டாவது பாதில ஏராளமான சண்டைக்காட்சிகள் !
ஆனா ஒரே ஒரு சிலம்பு சண்டை தான் இருக்கு. பேரு மட்டும் சிலம்பாட்டம் !

வழக்கமா படத்தோட கதையையும் தாண்டி சிம்புவோட டான்ஸ் நன்னா இருக்கும்.படம் பார்க்கப்போகும் போதே நண்பன் சொன்னான் படத்துல சிம்பு ஆடுறது பாக்யராஜ் ஸ்டைல்ல (அதாங்க Exercise பண்ணுறது) இருக்குடான்னு.. நான் தான் நம்பல. பார்த்தா பிறகு தான் விளங்கிச்சு உயிர் காப்பான் தோழன்னு !(உண்மைய சொன்னான்ல அதான்.. இந்த இடத்துல நீங்க சிரிக்கனும்ங்கோ)

முக்கியமா படத்துல ஜோக்ஸப்பத்தி எழுதியே ஆவனும்ங்க. ஜோக்ஸப் பார்த்துட்டு ஒருகணம் எஸ்.ஜே.சூர்யா தான் இந்த படத்தோட டைரக்டரோன்னு நினைச்சுட்டேன். அந்தளவுக்கு இரட்டை அர்த்த வசனங்கள் ! இதுல இவரு அஜீத்துக்கு சப்போர்ட்டு பண்ணி டயலாக் பேசுறாராமாங்ங்...

தலையெழுத்துன்னு பார்த்து முடிச்சேன் இந்த படத்தை...
கடைசியா படத்தப்பத்தி ஒரு லைன்ல சொல்றதுன்னா

சிலம்பாட்டம் : "சண்டைல படம் கொஞ்சம் குறைவா இருக்குங்க !!!"

இந்தப்படத்த பார்த்த யாருக்காவது படம் நல்லா இருக்குன்னு தோனிச்சுன்னா அதுக்கான காரணத்தை சொல்லவும்...
பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.
திரைவிமர்சனம் - சிலம்பாட்டம்SocialTwist Tell-a-Friend

Thursday 1 January 2009

குலாப் ஜாமூன் :)))

8 . பின்னூட்டங்கள்
2009ம் ஆண்டு பிறந்ததற்கு அடையாளமாக போட்ட பட்டாசுகளின் சல்பர் நாற்றம் கூட இன்னும் பல ஊர்களில் போயிருக்க மாட்டாது.

ஒருமாதிரி 2009 வந்திருச்சுன்னு சந்தோஷமா இருக்கு. அந்த சந்தோஷத்துடன் உங்களுக்கு ஒரு நகைச்சுவையான விஷயத்தை சொல்ல ஆசைப்படுறேன்.....
அண்மையில் என் வீட்டுக்கு வந்திருந்தவர் தனக்கு நடந்த ஒரு அனுபவத்தை எனக்கு சொன்னார். அது ரொம்ப காமெடியான அனுபவம் !

80களில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிப்போகும் வழக்கம் பிரபலமாகியிருந்தது. அவரும் அப்பிடித்தான் எங்கேயோ போவதற்காக சிலகாலம் இந்தியாவில் இருக்கும் போது நடந்தது தான் இந்த மாபெரும் காமெடி !

ஒருநாள் காலையில் வழமைப்போல் பசியெடுக்க, சாப்பிடுவதற்காக ஒரு கடைக்கு இவரும் இவரின் நண்பருமாக ( நண்பர் பாவம் ! ) சென்றனராம்.
வழமையாக சாப்பிடும் அயிட்டங்களை தவிர்த்து புதுசா ஏதாவது சாப்பிடலாம்ன்னு சொல்லி Menu cardஐ பார்க்கும் போது புதுசா ஒரு அயிட்டம் அவர் கண்ணில் பட்டதாம். அது பேரு................ "குலாப் ஜாமூன்" !

அப்போ அதை சாப்பிடலாம்ன்னு அவருக்கும் நண்பருக்கும்ன்னு சொல்லி 2 குலாப் ஜாமூன் ஆர்டர் பண்ணிட்டு காத்திருந்தா..... பத்து நிமிஷத்துல வந்ததோ Ice-cream கிண்ணத்துல சிறிய உருண்டை ! அது தான் குலாப் ஜாமூன்னு பாவம் அவங்களுக்கு தெரியலயாம்.
அப்புறம் என்ன பண்ணுவது ? அகோரப் பசி வேறு ! அதை சாப்பிட்டு முடிச்சுட்டு பில்லை கட்டீட்டு ஒரே ஓட்டமா அடுத்த கடைக்கு போய் என்ன சாப்பிட்டுருப்பாங்கன்னு நினைக்கிறீங்க ?

எல்லாம் வழமையான இட்லியும் சாம்பாரும் தான் !
இந்த கதையை சொல்லி முடிச்சுட்டு அவர் சொன்ன அறிவுரை :
'எப்பவும் அகோரப் பசியிருக்கும் போது புதுசா எதையும் try பண்ணப்படாது'

இந்த காமெடியான கதையை சொல்லும் போது அவர் முகத்தில் ஒரு ஏமாற்றம் தெரிந்தது !!!
நமக்கு காமெடி, அந்த நேரத்தில் அவருக்கு எப்பிடி இருந்திருக்கும் ?
இதில் இன்னொரு பெரிய காமெடி என்னான்னா, ஆர்டர் செய்தது நம்மவர் தான்.
இவருடன் சென்ற நண்பர் பாவம் !
எள்ளுடன் சேர்ந்து எலிப்புழுக்கையும் காய்ந்த கதை தான் !
குலாப் ஜாமூன் :)))SocialTwist Tell-a-Friend
 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.