Tuesday 31 March 2009

ஷில்பா ஷெட்டிக்கு கண்ணாளமா ???

48 . பின்னூட்டங்கள்
பாலிவுட் ஆசை நாயகி, பிக் பிரதர் புகழ் ஷிபா ஷெட்டியின் திருமண நாள் நிச்சயிக்கப்பட்டு விட்டதாம்ல...

இந்த வருஷத்துல அக்டோபர்ல கஎட்டி மேளம் கொட்ட போறாங்களாம்...
என்ன கொடுமை சரவணந் இதுந்னு புலம்ப விட்டுருவாங்க போல இருக்கே...

இந்தியாவுல அக்டோபர்ல சம்பிரதாயமுறைப்படி கண்ணாளம் நடக்குதாம்ன்னு நம்ம உளவுத்துறை செய்தி வெளியிட்டிருக்கு...
:-(

மச்சான் பெயரு ராஜ் குந்த்ரா.. (அது சரி, கல்யாணமானா இனி அக்கா தானே??? :-) )
எனக்கு தெரிஞ்சு நான் 8,9 படிக்கும் போது நம்ம க்ளாஸ்ல ரொம்ப பேர் காதலிச்ச புள்ள இவங்க தான்...
அவங்களுக்கு கல்யாணம்ன்னதும் பதறிப்போயிட்டேன் நான்..
நானும் தான் லவ் பண்ணேன்... :-)
(ஆஹா உனக்கெல்லாம் இது ரொம்ப ஓவர்டா வேத்தி...)

இந்த ரெண்டு பேரும் கடந்த ரெண்டு வருஷமா லவ் பண்ணுறாங்களாம்...

ஆனா கடந்த 22ம் திகதி இறந்த இங்கிலாந்து நடிகையும், தன்னோடு பிக் பிரதர் நிகழ்ச்சியில் பங்கேற்றவருமான ஜேட் கூடிக்கு மரியாதை செய்யும் விதமாக இன்னும் உத்தியோகபூர்வமாக அறிக்கை விடவில்லையாம்...



இங்கிலாந்தில் Waybridgeஇல் 5 மில்லியன் பவுன்ட்ஸில் ஒரு வீடு வாங்கியிருக்கிறார்களாம்..
வீடு 7 அறைகளுடன் பிரமாதமாக இருக்காம்ல....

மாப்ளே துபாய்ல இயங்குற மதிப்பு மிக்க கற்கள் விற்பனை செய்யுற பிஸினஸ் பாக்குற பணக்காரராம்...
உஸ்ஸ்ஸ்ஸ்....

ஐ.பி.எல் ராகஸ்தான் ரோயல்ஸ் அணியை வாங்கும் ஷில்பாவின் முயற்சிக்கு ஓகே சொல்லியும் இருக்குறாராம்ல...
ஷில்பாவுக்கு வயசு 33. மாப்ளேக்கு 34.

30+ல இருக்குற ரெண்டும் கண்ணாளம் பண்ணிட்டு நூறு வருசம் நல்லா வாழட்டும்ன்னு ஷில்பா காதலர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளி சொல்லிகிறோம் நாம...
:-)

அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
வர்ட்டாஆஆஆ...
டாட்டா..
பை பை...
.
ஷில்பா ஷெட்டிக்கு கண்ணாளமா ???SocialTwist Tell-a-Friend

ஜப்பானின் தோட்ட அமைப்புகள்...

34 . பின்னூட்டங்கள்
தற்போது உலகில் சூழல் மாசடைதல் பற்றி எல்லோரிடத்திலும் விழிப்பு வந்துள்ளது...
அதனால் மரம் வளர்ப்பு,தோட்டச் செய்கையில் பலருக்கு ஆசையும் வந்துள்ளது...

இங்கே ஜப்பான் நாட்டின் வித்தியாசமான தோட்ட அமைப்பு முறைகள் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன்...
ஜப்பான் நாட்டின் தோட்ட முறைகள் மிகவும் பிரசித்தமானது.
ஜப்பான் நாட்டிலுள்ள தோட்டங்கள் மேலைத்தேய தோட்டங்களைப் போலிருக்காது...
ஒரு தோட்டம் செய்யும் இடத்தை முழுவதுமாக நிரப்பி அந்த இடம் முழுவதும் பூச்செடிகள், மரங்கள் என வளர்ந்திருக்கும்...

ஜப்பான் தோட்டங்களின் ஸ்டைல்களில் Natural Gardensஉடன் பலரும் பழகியிருப்பர்..
ஆனால் மற்ற ஸ்டைல்களில் அவ்வளவு பழக்கம் இருக்காது...

ஜப்பான் தோட்ட அமைப்புகளில் மனதை ஒருமுகப் படுத்தும் தன்மையை அதிகம் வரவழைக்கக் கூடியதாக இருக்குமாம்...
இங்கே 5 வகையான ஜப்பான் தோட்ட அமைப்புகளிப் பார்க்கலாம்...

1. Flat Sea Gardens

பெயரில் sea என வருவதால் இந்த தோட்டத்தில் நீர் அபாயம் எதுவும் இருப்பதில்லை...
இந்த வகையான தோட்டங்களில் நீர்த்தன்மை குறைவு..
மரங்களும் சிறிய அளவிலேயே இருக்கும்...
இந்த வகியான தோட்டங்களில் பின்னனிச் சூழலாக இருப்பது கறுப்பு பைன் மரங்களாகும்...

பெயரில் sea என இருப்பதன் காரணம், இதில் உள்ள மண் ஆனது கடலில்
இதில் கல்லை சுற்றியுள்ள மண்ணானது கடலில்
அலைகளைப் போல காணப்படுகிறது
...

அலையைப் போல வளைந்து நெளிந்து இருக்குமாம்...

மற்ற தோட்டங்களைப் போலவே இதிலும் சில இடங்களில் இளைப்பாறுவதற்காக இருக்கைகள் போடப்பட்டிருக்கும்...

2. Strolling Pond Gardens
பெயருக்கு ஏற்றது போல இதில் மத்தியில் ஒரு குளம் இருக்கும்...
குளத்தைச் சுற்றி மரங்கள் இருக்கும்...
சுற்றியுள்ள பாதைகள் கிளைகளாக பிரிந்து பல இடங்களில், இளைப்பாற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்...

சாதாரண தோட்டங்களைப் போலவே இந்த தோட்டத்திலும் மரங்கள் அதிகமாக இருக்குமாம்...

இயற்கையான தோட்டங்கள போலல்லாது, இதில் சிறு பாலங்கள்,கற்கள் என மனிதனால் செய்யப்பட்ட பொருட்களும் இருக்கும்...



3. Natural Gardens

இது தான் ஜப்பான் தோட்ட முறைகளில் மிகவும் எளிதானது...
இதில் அரிதாகவே பொருட்கள் இருக்குமாம்.. (பாலம்,கற்கள்,சிலைகள்)

இது பார்ப்பதற்கு காடு போல தோன்றும்...
இதன் வடிவமைப்பாளர்கள் இது மனதிற்கு மிகவும் அமைதியை தருவதாக நம்புகிறார்களாம்...

இது முழுதுமாக மரங்களால் நிரப்பப்பட்டிருக்கும் தோட்டங்கள்..
மூங்கில்,பன்னங்கள் என மரங்களில் வகைப்பாடுகள் இருக்கும்...
மரங்கள் அடர்த்தியாக இருப்பதால் நிழலாக இருக்குமாம்..
பச்சைப் பசேலாக காணப்படும்.

இந்த தோட்டங்கள் மனதிற்கு அமைதியை தரும் வண்ணம் தான் அமைக்கப்பட்டிருக்கும்...

4. Tea Gardens
சென் துறவிகள் (Zen Monks) ஜப்பானுக்கு கொண்டுவரப்பட்ட காலத்தில் தியான நேரத்தில் தூக்கத்தைக் குறைப்பதற்காகொரு வகையான சக்தியேற்றிய தேநீர் குடிக்கும் பழக்கம் இருந்ததாம்...
அந்த தேவைக்காக உருவாக்கப்பட்ட தோட்ட முறை தான் இது...

இந்த வகையான தோட்டங்கள் அமைதியை கொண்டுவரக்கூடிய ஒரு அமைப்பு முறையில் காணப்படுமாம்...
மத்தியில் சம்பிரதாய Tea House இருக்குமாம்...

மத்தியில் இருக்கும் டீ ஹவுஸை சுற்றி ஆட்கள் இருக்கும் வகையில் அமைப்பு காணப்படுமாம்...

இந்த முறையிலான தோட்டங்கள் சம்பிரதாய தேவைகளுக்கு மட்டுமே ஆக்கப்படும்...

5. Paradise Gardens
இது 6வது நூற்றாண்டில் சீனர்களால் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டதாம்...
இதன் காரணமாக இந்த வகையான தோட்டங்களில் ஆரம்ப காலங்களில் சீன ஆதிக்கம் அதிகமாக இருந்தது...

இது குளங்கள், தாமரைத் தடாகங்கள் என அழகாக இருக்குமாம்...

இதில் ஒரு குளத்துக்கு நடுவில் தீவு போல ஒரு சிறு நீர்ப்பரப்பு இருக்குமாம்...

இது ஜப்பானில் ஜூடோ புத்த மார்க்கம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அமைக்கப் பட்டது..
மிக சிறிய அளவிலேயே இருக்கின்றது...

அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
வர்ட்டாஆஆஆ...
டாட்டா..
பை பை...
.
ஜப்பானின் தோட்ட அமைப்புகள்...SocialTwist Tell-a-Friend

Monday 30 March 2009

National Geographicஇன் வருடத்தின் சிறந்த படங்கள்...

48 . பின்னூட்டங்கள்
National Geographic's Best Pictures of the year என தலைப்பிட்டு நண்பன் அனுப்பிய மின்னஞ்சல் கிடைத்தது..
ஒவ்வொரு படமும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்..
நீங்களும் பாருங்கள்..
படத்தில் க்ளிக்கி பெரிய படமாக பாருங்கள்...






















எப்பிடி இருக்கு ஒவ்வொன்றும் ???

அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
வர்ட்டாஆஆஆ...
டாட்டா..
பை பை...
.
National Geographicஇன் வருடத்தின் சிறந்த படங்கள்...SocialTwist Tell-a-Friend

Sunday 29 March 2009

எரிவாயுவும் சீனியும் கலந்தால் என்ன நடக்கும் ???

50 . பின்னூட்டங்கள்
எரிவாயுவுக்கும் சீனிக்கும் ஏதாவது தாக்கமுண்டா என்று வதந்தி இருந்து வருகிறது...

ஒருவேளை நீங்க யாருடைய காரில் உள்ள எரிவாயு தாங்கியில் (Gas Tank) சீனியை உள்ளே செலுத்தினால் அது காரை செயலிழக்க செய்து விடும் என்று பரவலாக ஒரு வதந்தி இருந்து கொண்டே இருக்கிறது...

சீனி எரிவாயுவுடன் தாக்கமுற்று ஒரு அரைத் திண்ம நிலைமையை அடையுமாம்...
இதனால் காரின் எரிபொருள் தொகுதி முற்றிலுமாக செயலிழந்து போகுமாம்...

ஆனால் இது உண்மையில்லை...

சீனி எரிவாயுவுடன் கரையாது...
கரைந்தால் / கலந்தால் தானே தாக்கமுற???
எனவே தாக்கமும் இல்லை...



எரிவாயு தாங்கியில் மண் போட்டாலும் இதே நிலைமை தான்..
அது எரிபொருள் தொகுதியை செயலிழக்க செய்யாது..
ஃபில்டரை மட்டுமே செயலிழக்க செய்யும்..
ஆனால் அதுவும் நிச்சயமாக நடக்கும்ன்னு இல்லையாம்...

உங்களுக்கு யாருடைய காரையாவது செயலிழக்க செய்யனுமா???
என்ன செய்யனும்ன்னும் ஐடியா தராங்க இந்த நல்ல மனுசங்க...

எரிபொருள் தாங்கியில நீர் விடனுமாம்...
அப்போ என்ன நடக்கும்???
வாயி நிலையிலுள்ள எரிபொருள் (திரவ/வாயு) நீரின் மேல் மிதக்கும்...
காரணம் எரிபொருள் நீரை விட அடர்த்தி குறைவு...

தாங்கியில நீர் விட்டா என்ன நடக்கும்ன்னா எரிபொருள் போக வேண்டிய இடத்துல நீர் போகும்..
எரிபொருள் தொகுதியே செயலிழக்கும்...
பெரிய பாதிப்பு தான் போங்க...

வெரி சிம்பிள் இல்ல???
:-)

தகவல்கள் http://www.howstuffworks.comஇல் இருந்து பெறப்பட்டன...

அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
வர்ட்டாஆஆஆ...
டாட்டா..
பை பை...
எரிவாயுவும் சீனியும் கலந்தால் என்ன நடக்கும் ???SocialTwist Tell-a-Friend

Friday 27 March 2009

சந்தோஷமான சுற்றுலாவும் கேவலமான கேள்வியும்...

39 . பின்னூட்டங்கள்
இந்த விஷயம் பத்தி ரொம்ப நாளா எழுதனும்ன்னு நினைச்சுட்டே இருந்தேன்...
நடுவுல மறந்துட்டேன்..
இப்ப தான் மறுபடியும் ஞாபகம் வந்துச்சு..
அதான் எழுதிரலாம்ன்னு கிளம்பியாச்சு...

நாங்க நண்பர்கள் எல்லாம் ஒரு சுற்றுலா சென்றோம்...
சுற்றுலா முடிஞ்சு இப்போ ரெண்டு மாசம் முடிஞ்சு போச்சு...
இலங்கையின் மத்திய பகுதியில் மலை சார்ந்த இடங்கள் உண்டு..
அதனால மத்திய மலைநாடுன்னு சொல்லுவாங்க.

தேயிலைத் தோட்டங்களும், நீர்வீழ்ச்சிகளும் பார்க்க அருமையாக இருக்கும்...

பாக்குறதுக்கு ரொம்ப அழகான இடங்கள் இருக்கு...
அப்பிடி ஒரு அழகான இடம் தான் நாங்க போனது..
இடம் ஹற்றன் (Hatton) நகரம்...

நாங்க போனதுக்கு அடுத்த நாள் ஹற்றனுக்கு அடுத்த நகரத்தில் ஜனாதிபதியின் பேச்சு இருக்குதாம்..
அந்த விஷயம் எங்களுக்கு தெரியாது..
தெரிஞ்சிருந்தா நாங்க அந்த இடத்துக்கு சுற்றுலா போயிருக்கவே மாட்டோம்ல...
அதன் காரணமாக அங்க ஒரே பாதுகாப்பு அதிகாரிகள் குவிக்கப் பட்டிருந்தார்கள்...
பொலீஸ் மற்றும் படையினர்ன்னு ஒரே பாதுகாப்பு தான் போங்க...
:-)

அப்போ நாங்க ஹற்றன் நகரத்துக்கு உள்ளே நுழையும் போது ஒரு இடத்துல நம்மை நிறுத்தினாங்க பொலீஸ்...
சரின்னு ஒவ்வொருத்தரினதும் அடையாள அட்டையை வாங்கி பாத்துட்டு "நாளைக்கு அடுத்த டவுன்ல ஜனாதிபதியின் கூட்டம் இருக்கு, அதனால நீங்க இங்க தங்கக் கூடாது"ன்னான்...
நேரம் பின்னேரம். திரும்பி வரவும் முடியாது...

சரின்னு உயர் அதிகாரிகிட்ட பேசி முடிவெடுக்கலாம்ன்னு சொல்லிட்டு காவல் நிலையத்துக்கு வரச் சொன்னான்...
சரின்னு போனோம்..
அங்க ஒருத்தன், இவனால தான் பிரச்சினையே எனக்கு...
எங்க எல்லோரினதும் அடையாள அட்டையை தரச் சொல்லி, வாங்கிப் படிச்சுட்டுருந்தான் அவன்...

எமது நண்பர் குழாமில் ஒரு பிராமணப் பையனும் இருக்கான்..
ஆனா நாம எப்போதும் ஜாதி, மதம்ன்னு பாக்குறதே இல்லை..
அவனும் அப்பிடி எல்லாம் பாக்குறதே இல்லை..
அது தான் நட்பு..
ஜாதி, மதம் பாக்குறது இல்லைல...

அவனோட ஐ.டி பாத்ததும் அவனைப் பாத்து கேட்டான் அந்த ஆளு, "நீ பேசாம கோயில்ல பூசை பண்ணிட்டு இருக்க வேண்டியது தானே, உனக்கு என்னத்துக்கு இந்த ட்ரிப் எல்லாம்???"...
இந்த கேள்வி கேட்டதும் எனக்கு கோபம் தலைக்கேறி விட்டது...
இவ்வளத்துக்கும் சுற்றுலா போன எமது நண்பர் குழாமில் இந்து,முஸ்லிம்,கிறிஸ்தவன்னு எல்லாருமே இருக்குறோம்...

அந்த கேள்வி கேட்ட முட்டாள் இவ்வளத்துக்கும் பொலீஸோ, படை அங்கத்தவனோ கிடையாது...
அவன் ஒரு ஊர்காவல் அதிகாரி..
அதுவும் அவன் ஒரு தமிழன்...
ஆனா எமது நாட்டுல தான் சட்டம் எல்லாம் கிடையாதுல்ல...
எதிர்த்து கேள்வி கேட்டா உள்ள தூக்கி போடுவாங்க..
பயம் வேற...

அந்த ஆளைப் பார்த்தால் பத்தாம் வகுப்பு கூட தேறியிருக்க மாட்டான் என்பது தெளிவாக புரிந்தது நமக்கு..
ஏன் அந்த கேவலமான கேள்வி கேக்கணும்ன்னு தோனிச்சு அவனுக்கு???
ஜாதி, மத வெறி பிடிச்சவனா அவன்???
இன்று கூட அவன் முகம் நினைச்சா எரிச்சல் தான் வருகிறது எனக்கு...
ஏன் பிராமணன் என்றால் கோயிலில் பூசை மட்டும் தான் பண்ண வேண்டுமா???
உல்லாசமாக ஒரு சுற்றுலா செல்ல முடியாதா???
கேவலமான பிறவி....

அவன் ஏன் அப்பிடி ஒரு கேள்வியைக் கேட்டாங்கிறது எனக்கு புரியவே இல்லை...
நான் என்ன சொல்ல வரேங்கிறதை சரியாக வார்த்தைகளில் கொண்டுவர முடியவில்லை..
ஆனாலும் வாசிக்கும் உங்களுக்கு என்ன சொல்ல வரேங்கிறது புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்...

நாயை கழுவி நடு வீட்டுல வச்சாலும் அதனுடைய புத்தி மாறாதுங்கிற மாதிரி தான் அந்த ஆளும்...
உரிய ஆளுக்கு உரிய பதவி வழங்கப் பட வேண்டும்...
அப்போ தான் அதுக்குரிய மரியாதை கிடைக்கும்...

அவனை விட உயர் அதிகாரி எல்லாம் நமக்கு தெரியும்..
அந்த விஷயம் தெரிஞ்ச உடனே போட்டிருந்த காட்சட்டை நனையாத குறையாக எம்மை அனுப்பி வைத்தான் அந்த ஆளு...
(ஏன் காட்சட்டை நனையும்ன்னு எல்லாம் கேள்வி கேக்கக் கூடாது என்னை... ஓகே??) :-)

அந்த கேவலமான பிறவியை சந்தித்தது தவிர சுற்றுலா நன்றாக அமைந்தது எமக்கு...
இலங்கையின் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக மத்திய மலைநாடு இருக்கின்றது...
அங்கே எடுத்த இரண்டு படங்களைப் பாருங்கள், உங்களுக்கே புரியும் எவ்வளவு அழகு என்று...


சந்தோஷமான சுற்றுலாவும் கேவலமான கேள்வியும்...SocialTwist Tell-a-Friend

Wednesday 25 March 2009

டான்ஸ் ஆட முதலில் எது கட்டாயம் ???

111 . பின்னூட்டங்கள்
டான்ஸ் மாஸ்டர் : டான்ஸ் ஆட ரொம்ப முக்கியம் என்னான்னு தெரியுமா???

மாணவன் : தெரியும் சார்...

மாஸ்டர் : எங்க சொல்லு பாக்கலாம்...

மாணவன் : கெமிஸ்ட்ரி தான் பர்ஸ்ட்டா முக்கியம்...

மாஸ்டர் : இங்க நாங்க கெமிஸ்ட்ரி எல்லாம் சொல்லிக் குடுக்குறதில்லப்பா...

மாணவன் : அது தெரிஞ்சு தான் இங்க சேர முன்னமே ஒரு நல்ல கெமிஸ்ட்ரி க்ளாசா பாத்து சேந்தாச்சு சார்...
:-)))))

செய்தி : இனிமே யாராவது டான்ஸ் ஷோவுக்கு ஜட்ஜா வரவங்க இப்பிடி கெமிஸ்ட்ரி, ஃபிசிக்ஸ்ன்னு பேச்ச எடுத்தாங்க இத விட மொக்கையான பதிவை எல்லாம் வேத்தியனிடமிருந்து சந்திக்க வேண்டி ஏற்படும்ம்
எச்சரிக்கிறேன்...
(இந்த இடத்துல வேத்தி கோவமா இருக்குறானாம்...)

அது சரி, படிக்கிற எங்களுக்கு தானே தெரியும், கெமிஸ்ட்ரி எல்லாம் எவ்வளவு படிச்சாலும் மண்டையில நிக்காதுன்னு..
அவங்க பாட்டுக்கு வந்து சும்மா சொல்லிட்டு போயிடுவாங்க...
இனிமே சொல்லி பாக்கட்டும் கெமிஸ்ட்ரின்னு...
நடக்குறதே வேற...

-----------------------------------------------------------------------

இந்த கதை எனக்கு மெயிலில் வந்தது...
இலகுவான ஆங்கிலத்தில் தான் உள்ளது..
தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்...

There once was a little boy who had a bad temper. His Father gave him a bag of nails and told him that every time he lost his temper, he must hammer a nail into the back of the fence.

The first day the boy had driven 37 nails into the fence. Over the next few weeks, as he learned to control his anger, the number of nails hammered daily gradually dwindled down. He discovered it was easier to hold his temper than to drive those nails into the fence.. Finally the day came when the boy didn't lose his temper at all.

He told his father about it and the father suggested that the boy now pull out one nail for each day that he was able to hold his temper.

The days passed and the young boy was finally able to tell his father that all the nails were gone.

The father took his son by the hand and led him to the fence. He said,
"You have done well, my son, but look at the holes in the fence. The fence will never be the same. When you say things in anger, they leave a scar just like this one. You can put a knife in a man and draw it out. But It won't matter how many times you say I'm sorry, the wound will still be there. A verbal wound is as bad as a physical one. Remember that friends are very rare jewels, indeed. They make you smile and encourage you to succeed. They lend an ear, they share words of praise and they always want to open their hearts to us."

இது தான் கதை...
கீழே இப்பிடி இருந்துச்சு...

Please forgive me if I have ever left a 'hole' in your fence.

இதை நானும் எனது நண்பர்களுக்கு சொல்லிக்கிறேன்...


அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
வர்ட்டாஆஆஆ...
டாட்டா..
பை பை...
டான்ஸ் ஆட முதலில் எது கட்டாயம் ???SocialTwist Tell-a-Friend

நட்பு வாரம், ஜென் கவிதைகள் மற்றும் ரசித்துப் படித்த பதிவு...

71 . பின்னூட்டங்கள்
இது தேசிய நட்பு வாரம்ன்னு சொல்லிட்டு ("தேசிய"வா அல்லது "சர்வதேச"வான்னு தெரியல, மெயில்ல "National Friendship Week"ன்னு இருந்திச்சு) சில பல மெயில்கள் வந்துச்சு...
உண்மையான்னு தெரியல...

நேத்து நான் போட்ட பதிவுல இருந்த படங்கள் திங்களன்று வந்தவை...

------------------------------------------------------------------------

எல்லாரும் கவிதை, கதைன்னு எழுதுறாங்கன்னு நாம எழுதின "கண்ணாடி இதயம்"ங்கிற கவிதை (அதெல்லாம் கவிதையான்னு நெனைக்கிறவக கோவத்தை அடக்குக...) எனக்கே ஒருமாதிரியாத் தான் இருக்கு...
என்ன இருக்கு அதுல???
(இது வேத்தியின் மைன்ட் வொய்ஸ்...)

ஆனாலும் ஒன்னுங்க...
ஒன்னு ரொம்ப நல்லா எழுதினா பின்னூட்டங்கள் வந்து குவியும், பதிவை வாழ்த்தி...
அப்பிடில்லைன்னா ரொம்ப மொக்கையா எழுதினாலும் பின்னூட்டங்கள் வந்து குவியும், பதிவை வாழ்த்துறோம்ங்கிற பெயரில், திட்டி...
இது அனுபவம்...
:-)))
அதுலயும் ஒரு சந்தோஷம் தான்...
நான் போட்ட பதிவுகளிலேயே அதிக பின்னூட்டங்கள் பெற்ற பதிவு அந்த கவிதை தான்...
ஹிஹி...

சரின்னு சொல்லிட்டு முன்பு எப்பிடியோ என் கையில் கிடைத்த ஒரு கவிதைப் புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன்...
புத்தகம் - "பெயரற்ற யாத்ரீகன்" (ஜென் கவிதைகள்)...
ஜென் கவிதைகளில் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லவும்...
அதில் படித்து முடித்த சில பக்கங்களில் பிடித்தவை...

ஒரு மனிதன் -
ஒரே ஒரு மனிதன்.

உடன் ஒரு ஈ -

ஒன்றே ஒன்று,

பிரமாண்டமான

வரவேற்பறையில்.


ஆற்றின் மேல்
பளபளக்கும் நிலவு ;

ஊசியிலை மரங்களில்

காற்றின் பெருமூச்சு ;

நீளும் இரவு முழுவதும்

சாந்தமாய் விழித்திருப்பது

எதற்காக ?

யாருக்காக ?


------------------------------------------------------------------------

சமீபத்தில் நான் மிகவும் ரசித்து படித்த பதிவு...
நீங்களும் ஒரு தடவை கண்டிப்பாக படிக்க வேண்டும்...
பதிவு எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே தருகிறேன்...
இந்த தொடுப்பை பதிவரிடம் அனுமதி பெறாமலே தருகிறேன்...
ஜீவன் அண்ணா மன்னிக்க வேண்டும்...

நான் ஹிந்து! நீ முஸ்லீம்! நாம் யார்?

-------------------------------------------------------------------------

இந்தப் படத்தைப் பாத்து என்ன நெனைக்கிறீங்கன்னும் சொல்லிட்டு போங்க...

நட்பு வாரம், ஜென் கவிதைகள் மற்றும் ரசித்துப் படித்த பதிவு...SocialTwist Tell-a-Friend

Tuesday 24 March 2009

நட்புக்கு சமர்ப்பணம் !!!

61 . பின்னூட்டங்கள்
நட்பும் நண்பர்களும் எப்போதுமே சந்தோஷம் தான்...

நமக்கு ஏதும் பிரச்சனைன்னா உடனே சொல்லனும்ன்னு தோண்றது நண்பர்கள்கிட்ட தானே ???

சந்தோஷமான நேரத்துல பக்கத்துலயிருந்து கூடி கும்மாளமடிக்கிறது மட்டுமில்ல நட்பு...
நண்பன் ஏதாவது ஆபத்துல இருக்கிறான்னா உடனே ஓடிப்போய் உதவுறவன் தான் உண்மையான நண்பன்...

நட்பு சம்பந்தமான சில படங்கள் கிடைத்தது...
அவற்றைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமாயிடுச்சு மனசு...
நீங்களும் பார்த்து ரசிங்க...
படத்துல க்ளிக்கி பெரிய படமா பாருங்க...
படம் முக்கியமில்லை, அதிலுள்ள செய்தி தான் முக்கியம்...
என்ன சரிதானே ???
:-)

இந்த பதிவை பதிவுலகம், பாடசாலை, விடுமிம் என்று எனது சகல நண்பர்களுக்குமாக சமர்ப்பிக்கிறேன்...

நட்புக்கு சமர்ப்பணம் !!!SocialTwist Tell-a-Friend

Monday 23 March 2009

ஆய்வுகூடத்தில் இரத்தம் !!!

39 . பின்னூட்டங்கள்
விஞ்ஞானிகள் ஆய்வுகூடத்தில் இரத்தம் செயற்கையாக செய்வதற்கு வழி கண்டுபிடித்துள்ளார்கள்...

முதிராத நிலையிலுள்ள மனித பரம்பரைக் கலங்களை (STEM Cells, சரியான தொழினுட்ப வார்த்தை தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லவும்...) பயன்படுத்தி தட்டுப்பாடில்லாத அளவுக்கு இரத்தம், அதுவும் தொற்று இல்லாத இரத்தம் வழங்க முடியும் என்று கண்டு பிடித்துள்ளார்களாம்...

இதன் காரணமாக அவசர இரத்த மாற்றுகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் இரத்தம் வழங்க முடியும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது...

SNBTS என்று சொல்லப்படும் Scottish National Blood Transfusion Serviceஆனது இங்கிலாந்தின் தேசிய உடல்நல சேவைகள் குழுமத்துடன் (National Health Services, England) சேர்ந்து பணியாற்றிய இந்த செய்முறைத் திட்டமானது 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது...

National Blood Service for England and North Walesஇலுள்ள ஒரு பெண்மணி இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளார்...
"negotiations on the joint research project were at an advanced stage and that legal, rather than scientific, issues were holding up the announcement.".

Wellcome Trustஇனுடைய பேச்சாளர் இவ்வாறு கூறியுள்ளார்...
"complicated legal issues were still being ironed out between all the parties involved but that an announcement was likely to be made in the coming week."...

எப்பிடின்னாலும் இன்னும் சில நாட்களில் இதற்கான உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கலாம்...

இது பற்றிய செய்தி ஆங்கிலத்தில் வந்துள்ளது.
தகவல்களை விரிவாக அறிந்து கொள்ள கீழேயுள்ள தொடுப்பை க்ளிக்கவும்...

http://uk.news.yahoo.com/4/20090323/tuk-scientists-bid-to-create-blood-in-la-dba1618.html

அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
வர்ட்டாஆஆஆ...
டாட்டா..
பை பை...
ஆய்வுகூடத்தில் இரத்தம் !!!SocialTwist Tell-a-Friend

Sunday 22 March 2009

ஃபாலோவர்ஸ் கட்ஜெட் பிரச்சனை...

61 . பின்னூட்டங்கள்
கொஞ்ச நாளைக்கு முன்னால தான் ஜமால் அண்ணன் இந்த பிரச்சனை பத்தி சொல்லி இருந்தார்...
அவரோட பதிவு படிக்க இங்கே க்ளிக்குங்க...

இப்போ மேட்டர் என்னான்னா அதற்கான தீர்வு கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது...
(அட, கண்டு பிடிச்சது நாந்தானுங்க... :-) )...

உங்கள் ப்ளாக்கர் கணக்கில் நீங்க உள்நுழைந்ததும் முதல்ல வருவது உங்க டாஷ்போர்ட்.
அதுல "Language"ன்னு ஒரு செலக்ஷன் பார் இருக்கு..

அதுல நீங்க "English"ன்னு செலக்ட் பண்ணியிருந்தீங்கண்ணா உங்க டாஷ்போர்ட் மற்றும் மற்ற மற்ற பக்கங்கள் எல்லாம் ஆங்கிலத்துலயே இருக்கும்...
ஒருவேளை அதுல நீங்க "தமிழ்"ன்னு செலக்ட் பண்ணியிருந்தீங்கண்ணா உங்க டாஷ்போர்ட் மற்றும் மற்ற மற்ற பக்கங்கள் எல்லாம் தமிழ்ல தான் இருக்கும்..
இது தான் முதல் விஷயம்...

இப்போ டாஷ்போர்ட்ல "Settings"ல (மைப்புகள்) "Formatting"ன்னு (வடிவமைத்தல்) ஒரு பார் இருக்கும்...
அதுலயும் மொழிகள் தேர்வு செய்யக் கூடிய ஒரு செலக்ஷன் லிஸ்ட் இருக்கும்.
இதுல நீங்க தேர்வு செய்யுற மொழி தான் பிரச்சனை..
இதுல நீங்க "தமிழ்"ன்னு தேர்வு செஞ்சிருந்தீங்கண்ணா, ஒவ்வொரு பதிவுக்கு கீழும் "Post a Comment"ன்னு ஆங்கிலத்துல இருக்குறது "கருத்துரையிடுக"ன்னு தமிழ்ல மாறும்..
அதிகமா தமிழ்ல எழுதுற நாம எல்லாம் இந்த செலக்ஷன் லிஸ்ட்ல "தமிழ்"ன்னு செலக்ட் பண்ணியிருப்போம்..

இப்போ ஃபாலோவர்ஸ் கட்ஜெட்டை நீங்க திரும்ப பெற செய்ய வேண்டியதெல்லாம் "Formatting"ல (வடிவமைப்புகள்) இருக்குற மொழி தேர்வு செய்யும் லிஸ்ட்ல "English"ன்னு தேர்வு செஞ்சிருங்க...
பிறகு பாருங்க..
உங்க ஃபாலோவர்ஸ் கட்ஜெட் திரும்ப கிடைச்சுடும்..

பிரச்சனைக்கான காரணம் :
கூகிள் அமைப்புகள், வடிவமைப்புகள்ன்னு எல்லாத்தையும் தமிழ்ல வழங்கும் போதிலும் ஃபாலோவர்ஸ் கட்ஜெட்டை இன்னும் தமிழ் மொழிக்கேற்ப தயாரிக்கவில்லை...
கொஞ்ச நாளைக்கு முன் வரை இருந்த கட்ஜெட் அமைப்பை மாற்றி இப்போ கொஞ்ச வித்தியாசமா இருக்கு ஃபாலோவர்ஸ் கட்ஜெட்...
அது தான் பிரச்சனை...

ஆக இந்த பிரச்சனை இருக்கிறவங்க நான் மேல சொன்னா மாதிரி செய்யுங்க..
பிரச்சனை தீரும்..
அப்பிடியும் தீரலைன்னா நகைச்சுவை நடிகர் டாக்டர்.விஜய் கிட்ட சொல்லிப் பாக்கலாம்..
ஏதாச்சும் தீர்வு சொல்லுவாரா இருக்கலாம்..
:-)

சரி, கண்டுபிடிச்சதுக்காக ஒரு ஓட்டை குத்திட்டு போங்க மாப்ஸு...

அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
வர்ட்டாஆஆஆ...
டாட்டா..
பை பை...
:-)
ஃபாலோவர்ஸ் கட்ஜெட் பிரச்சனை...SocialTwist Tell-a-Friend

பட்டாம்பூச்சி விருது !!!

37 . பின்னூட்டங்கள்



நம்மளையும் நம்பி இன்னிக்கு பட்டாம்பூச்சி விருது குடுத்திருக்காங்க ஹரிணி அம்மா !!!
விருது சம்பந்தமான பதிவு வாசிக்க இங்கே க்ளிக்குங்க...
அவங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...

என்னோட சேர்த்து விருது வாங்கின ஆதவா மற்றும் அன்புமணி அவங்களுக்கும் என்னோட வாழ்த்துகள்...

வாங்கினவங்க மூனு பேருக்கு குடுக்கணுமாம்ல...
நாம எல்லாம் ஒரு விருது குடுத்தா அதை யாரு வாங்குவாங்க ???
அப்பிடியும் நம்மளையும் நம்பி வாங்கினா அவங்களுக்கு நெம்பப் பெரிய மனசு தான்..
ஹிஹி...

சரி, நாம ஏதோ முற்பிறவியில செஞ்ச புண்ணியத்தால வாங்கியாச்சு...
வாங்கினதை அப்பிடியேவா வச்சுகிட்டு இருக்கிறது ???
குடுப்போம்...

யாருக்கு குடுக்கலாம்ன்னு நெனைச்சப்போ சட்டுனு மனசுல பட்டவங்க இவங்க தான்...

நண்பர் ஷீ-நிசி - ஷீ-நிசி கவிதைகள்.
கவிதையால, சொல்ல வந்ததை அப்பிடியே விளக்கி விடுவார்...
நான் நேத்து எழுதின முதல் கவிதை அவர் பால் ஈர்க்கப்பட்டு எழுதினது தான்..
(அது எல்லாம் ஒரு கவிதைன்னு வரவங்களுக்கு வேற இன்னொரு பதிவுல வாய்ப்பு அளிக்கப்படும்.. :-) )

நண்பர் கார்த்திகைப் பாண்டியன் - பொன்னியின் செல்வன்.
சமீப காலமாக தான் இவரது பதிவுகள் படிக்கிறேன்..
அருமையாக எழுதுவார்..
என்னைப் போலவே நகைச்சுவை நடிகர் விஜய் மீதி அன்புள்ளம் கொண்டவர்...
மதுரைகாரன்னு சொல்லிக்கிறதுல இவருக்கு ரொம்பப் பெருமையாம்ல...
:-)

நண்பர் கமல் - தமிழ் மதுரம்.
ஈழத்து மண்வாசனையுடன் கூடிய படைப்புகள் இவரது எழுத்திலுள்ள சிறப்பம்சம்...
நகைச்சுவை,அரசியல்,இலக்கியம்ன்னு படைப்புகளில் வித்தியாசம் காட்டுவார்...
குரல் பதிவு போடுவதில் வல்லவர்...
:-)


சரி ஒருமாதிரி மூனு பேரை தேடிப்பிடிச்சாச்சு...
மேல இருக்குற அந்த படத்தை உங்க வலைப்பக்கத்துல போடுங்க...
குடுத்தவனுக்கு நன்றியுடன்... (அதான் எனக்கு தாங்க... ஆஹா... :-) )
முடிஞ்சா என்னோட வலைப் பக்கத்துக்கு ஒரு தொடுப்பையும் குடுக்கலாம்...
:-)

நீங்களும் மூனு பேருக்கு குடுக்கணும்...

அனைவருக்கும் இந்த சின்னப் பையனின் வாழ்த்துகள் !!!
:-)

---------------------------------------------------------------------------

மத்தது இன்னொரு விஷயம்...
சிலரின் வலைப் பக்கத்துலயிருந்த Followers Gadget பிரச்சினை கண்டுபிடித்துவிட்டேன்...

அது சம்பந்தமான விளக்கமான பதிவு இன்னைக்கு பின்னேரம் வரும்..
பிரச்சினை உள்ளவர்கள் வந்து பார்க்கவும்...
பட்டாம்பூச்சி விருது !!!SocialTwist Tell-a-Friend

Friday 20 March 2009

"கண்ணாடி இதயம்"

163 . பின்னூட்டங்கள்



ண்ணாடி ம்


காத்திருந்த நேரமெல்லாம்
வரவில்லை ;
வந்தாய்
விலகிப் போகும் நேரத்தில்...

நான் னக்காய் எழுதிய
மடல்களை எல்லாம் தூக்கிப் -
போட்டாய் குப்பைகளென்று ;
இன்று என்னையே தூக்கிப்
போட்டு விட்டாய் குப்பையென்று...

உன்னோடு நான் இருந்த சில காலம்
இருந்தேன் சந்தோஷமாக ;
இன்று உன்னோடு இல்லை நான்
ஆனாலும் இருக்கிறேன் சந்தோஷமாக
உன் நினைவுகளோடு...

"உன்னை எனக்கு பிடிக்கவில்லை"
என்று சொன்னாய் நீ
நொறுங்கிப் போனதோ
என் கண்ணாடி இதயம் ;
அறிவாயா பெண்ணே ???

உன்னை நேசித்தேன் அன்று ;
நேசிக்கிறேன் இன்று ;
நேசிப்பேன் நாளை ;
உன்னோடு நானில்லை எனினும்...

நம் பிரிவுக்கு பதில்
காலம் தான் சொல்லும்...


இது தாங்க நான் எழுதிய முதல் கவிதை...
சற்று அப்பிடி இப்பிடி இருந்தாலும் சகிச்சுக்கிங்க...
என்னா பண்றதுங்க, என்கிட்ட மாட்டினது உங்க விதி...
:-)


இந்த கவிதை (???) உங்களுக்கு பிடிச்சிருந்தா தமிழ்மணம்,தமிழிஷ்ல ஒரு ஓட்டை குத்துங்க...
கவிதை பிடிக்கலைனா என்ன பண்றதுன்னு யோசிக்காதீங்க...
பிடிக்கலைன்னாலும் ஒரு ஓட்டைப் குத்திட்டு போங்க மாப்ஸ்...
நான் பொழைச்சு போறேனே...
:-)
"கண்ணாடி இதயம்"SocialTwist Tell-a-Friend

Thursday 19 March 2009

"என்னை வச்சு காமெடி, கீமடி பண்ணல்லியே ???" - விஜய்

58 . பின்னூட்டங்கள்
விஜய் பிரஸ் மீட்டுல கத்துனதப் பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்...

தெரியாதவங்க இந்த பதிவு பாத்து தெரிஞ்சுக்கிங்க...
பதிவை படிக்க இங்கே க்ளிக்குங்க...

இப்போ இன்னொரு செம ஹாட்டான மேட்டர் கையில கிடைச்சிருக்குங்க...
சந்தேகப்படாதீங்க கண்டிப்பா அதுவும் விஜய் பத்தினது தான்...
அதுவும் வீடியோ...

லிங்க் எல்லாம் குடுத்து உங்களை கஷ்டப்படுத்த எனக்கு விருப்பமில்லீங்க...
அதான் வீடியோவையே குடுத்துரலாம்ன்னு முடிவு...
ஏதாவது நக்கல், நையாண்டின்னா வரிஞ்சு கட்டிட்டு முன்னுக்கு நிற்பான் இந்த வேத்தியன்...

நண்பன் தான் மின்னஞ்சலில் அனுப்பினான்.
அதனால நண்பனுக்கும் இதை ஆக்கிய படைப்பாளிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
இதை ஆக்கியவருக்கு எவ்ளோ கடுப்பு விஜய் மேலங்கிறத நினைக்கயில சிரிப்பு தான் வருது...

தம்பி விஜய் ! நீ வாழ்க, நின் கோபம் வாழ்க !!!
வளர்க உங்கள் நகைச்சுவைப் பணி !!!





கண்டிப்பா உங்க உங்க கருத்தைச் சொல்லிட்டு போங்க மாப்ஸ்...
அப்பிடியே ஓட்டையும் மறந்துடாதீங்க...
:-)
"என்னை வச்சு காமெடி, கீமடி பண்ணல்லியே ???" - விஜய்SocialTwist Tell-a-Friend

நூலகம்.நெட் - ஒரு புத்தாக்க முயற்சி !

8 . பின்னூட்டங்கள்
நூலகம்.நெட்டின் திட்டம், ஈழத்து எழுத்தாவணங்களை மின்னூலாக்குவதாகும்...

நோக்கம் : ஈழத்து எழுத்தாவணங்களை அடுத்த தலைமுறைகளுக்கும் கிடைக்கக் கூடியதாக ஆவணப்படுத்தி, அவற்றை வாசிப்பதற்கும் உசாத்துணைப் பாவனைக்கும் இலகுவில் பெறக்கூடியதாக இணையத்தில் வெளியிடல்.

ஈழத்திலுள்ள எழுத்தாளர்கள் இவ்வளவு காலமும் எழுதிய எழுத்துகளை மின்னூலாக இங்கே பெற முடியும்.

நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், பிரசுரங்கள், ஆய்வேடுகள் என ஆவண ஏடுகள் இலகுவாக தேர்ந்து எடுக்கக் கூடிய வகையில் பிரிக்கப்பட்டுள்ளன.

ஈழத்தில் பல காலமாக எழுதப்பட்ட எழுத்துகள் ஒரே இடத்தில் மின்னூலாக கிடைக்கிறது என்றால் சும்மாவா ???
கதைகள், கவிதைகள், கட்டுரைகள், இதர படைப்புகள் என்று பிரிவுகள் வாரியாக கிடைக்கும்...

கீழேயுள்ள தொடுப்பில சொடுக்கி நீங்கள் நூலகம்.நெட்டுக்கு சென்று பாருங்கள்...

நூலகம்.நெட் செல்ல இங்கே சொடுக்குங்கள்...
நூலகம்.நெட் - ஒரு புத்தாக்க முயற்சி !SocialTwist Tell-a-Friend

Wednesday 18 March 2009

இரண்டாம் கையால் புகைப்பது எப்பிடி தெரியுமா ?

25 . பின்னூட்டங்கள்
முதல்ல பாஸிவ் ஸ்மோக்கிங் (Passive Smoking/Second Hand Smoking) என்றால் என்னான்னு சொல்லிடுறேன்...

சிகரட் பிடிப்பவர்களை பாத்திருப்பீங்க... (நீங்களும் புடிச்சிருப்பீங்க... :-) )
அவன் Active Smoker. அவனுக்கு பக்கத்துல இருந்து வேடிக்கை பாக்கிறவன் Passive Smoker...
ஏன்னா Active Smokerவிட்ற புகையையும் சிகரெட்ல இருந்து வர்ற புகையையும் சேர்த்து பிடிக்கிறதால தான் இவன் Second Hand Smokerன்னு அழைக்கப்புடுறான்...
அதாவது ஒரு வீட்ல கணவன்/அப்பா சிகரெட் புடிக்கிறதா இருந்தா கண்டிப்பா மனைவி/பிள்ளைகள் Passive Smokerஆ இருப்பாங்க... (அது அவங்க தப்பில்லை...)
இவ்ளோ தான் மேட்டர்... என்ன புரிஞ்சுதா ???



ஒரு சிகரெட் புடிக்கிற சந்தர்ப்பத்தை மனசுல நினைச்சுக்கோங்க...
சிகரெட் பிடிக்கும் Active Smoker ஆனவன், சிகரெட்ல இருந்து ஃபில்டர்க்குள்ளால உறிஞ்சி எடுக்குற புகையை மாத்திரமே உள்ளே எடுப்பான்.
ஆனா அவனுக்கு பக்கத்துல இருக்கிற Passive Smoker ஆனவன் சிகரெட் நுனியில இருந்து வர்ற புகை + Active Smoker விட்ற புகை ஆகியதை உள்ளே எடுக்கும் பாவப்பட்ட நிலைக்கு ஆளாகி விடுவான்...

Active Smoker ஆனவன் புகையை உறிஞ்சி எடுக்கும் போது நல்ல ஒக்சிஜன் செறிவோடு தான் உள்ளே எடுப்பான். அதனால சிகரெட்ல இருக்குற 200க்கும் மேற்பட்ட நச்சு மூலக்கூறுகள்ல சில பிரிந்தழிந்து தான் உள்ளே வரும்.
ஆனா Passive Smoker ஆனவன் சிகரெட் நுனியில இருந்து வர்ற புகையை உள்ளே எடுக்குறதால ஒக்சிஜன் செறிவு குறைவா தான் வரும். அதனால சிகரெட்ல இருக்குற சகல மூலக்கூறுகளும் உள்ளே வரும். அத்துடன், Active Smoker விட்ற புகையை உள்ளே எடுக்குறதால அவனோட காபன்டைஒக்சைடு (CO2), கிருமிகள் எல்லாம் சேர்ந்து தான் இவன் உள்ளே எடுப்பான்...

Second Hand Smokingஐ எவ்வாறு தவிர்ப்பது ???

நீங்க சிகரெட் பிடிக்காம இருந்தாலும் சிகரெட் பிடிப்பவர் பக்கத்துல போகாதீங்க... அப்பிடி பார்ட்டி எதுலயும் பக்கத்துல இருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் வந்தாலும் காற்று அடிக்கும் திசைக்கு எதிர் திசையிலேயே இருக்க முயற்சி செய்யுங்க...

நண்பர்கள் ஒன்னா இருக்கும் போது சிகரெட் பிடிப்பவனுக்கு "சிகரெட் பிடிக்காதே"ன்னு அறிவுரை சொன்னா கண்டிப்பா கேக்க மாட்டாங்க... அதனால "குறைஞ்சது புகையை என்னோட பக்கம் ஊதாம மத்த பக்கமா பாத்து ஊது"ன்னு சொல்லிருங்க...

இவ்ளோ தான் இப்போதைக்கு டிப்ஸ்...
இன்னும் ஏதாவது தோனிச்சுனா பின்னூட்டத்துல சொல்றேனே...
டாக்டர் தேவாகிட்ட இதுக்கு டிப்ஸ் சொல்லிடுங்கன்னு அவர்கிட்டேயே இந்த மேட்டரை விட்டுரலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்...
:-)

ஒருத்தன் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாதவனா இருந்தாலும் சிகரெட் பிடிக்கிறவனுக்கு பக்கத்துல இருந்தா Active Smokerக்கு வர்ற அதே பிரச்சினைகள் உங்களுக்கும் வரும் !



சராசரியாக ஒரு சிகரெட் பிடிக்கும் போது வாழ்நாட்களில் 14 நிமிடங்கள் குறையுமாம்...

இப்போ புரிஞ்சிருக்குமே தலைப்பு !!!
சும்மா ஒரு எஃபெக்ட்டுக்கு தான் மொழிபெயர்ப்பு எல்லாம்...
:-)

இது பத்தி மேலதிகமா வாசிக்க கீழே ஒவ்வொரு த்லைப்புலயும் லிங்க் கொடுத்திருக்கேன்...
கண்டிப்பா வாசிச்சுப் பாருங்க...
தகவல்கள் www.howstuffworks.comஇல் இருந்து பெறப்பட்டன.

Secondhand Smoke Overview

What is Secondhand Smoke?

The Health Effects of Secondhand Smoke

How to Avoid Secondhand Smoke

இந்த படைப்பு பிடிச்சிருந்தா ஒரு ஓட்டை குத்திட்டு போங்க மாப்ஸ்...


Smoking Causes Cancer
இரண்டாம் கையால் புகைப்பது எப்பிடி தெரியுமா ?SocialTwist Tell-a-Friend

Tuesday 17 March 2009

"வில்லு" தோல்வியும் விஜய் கோவமும்...

42 . பின்னூட்டங்கள்
இளைய தளபதி, டாக்டர்.விஜய் நடித்து சமீபத்தில வெளியான"வில்லு" திரைப்படம் தோல்வி என்பது எல்லோரும் அறிந்ததே...

அது தொடர்பாக நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு (???) கோவமாக சத்தம் போட்டுள்ளார்...

தேவையில்லாத கோவம், ஆவேசம் இதுன்னு நம்ம ஊர்ல பேசிக்கிறாங்கப்பா தம்பி விஜய்...
இல்லாத சத்தம் உங்களுக்கு எங்க இருந்து தான் கேட்டுச்சோ தெரியல...
அதுல என்ன விசேஷம்ன்னா, வழக்கமா ரொம்ப சாது மாதிரி இருக்குறவரு (காட்டிக்கிறவரு ???) இதுல கோவப்படுறாராம்ல ???
ஏதும் நுண்ணரசியல் இருக்குமோ ???
:-)

ஏதாச்சும் யோகா க்ளாஸ் ட்ரை பண்ணி பாக்கலாமே தம்பி விஜய் ???
என்ன பண்றது ? தொடர் தோல்விகளை தாங்கிக்க முடியல் போல...
:-)

நான் எதுவும் அஜீத் சப்போர்ட்டர் இல்லைங்க மாப்ஸ் விஜய்க்கு எதிரா எழுத...

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது !!!


நீங்களும் பாருங்க அந்த வீடியோ காட்சியை...


"வில்லு" தோல்வியும் விஜய் கோவமும்...SocialTwist Tell-a-Friend

கீ பர்த்டே எங்களுக்கு இல்லையா ???

31 . பின்னூட்டங்கள்
பொதுவா 21வது பிறந்த நாளை எல்லோரும் விமரிசையாக கொண்டாடுவாங்க...
அதாங்க கீ பர்த்டே...

திஸ் இஸ் மைன்ட் வொய்ஸ் : தமிழ்ல மாத்தினா அவ்ளோ நல்லா இருக்காதில்ல ??? "திறப்பு பிறந்தநாள்..." அவ்ளோ நல்லா இல்லடா வேத்தியா.. கீ பர்த்டேன்னே போட்டுடு...

நண்பனுக்கு கிட்டத்துல தான் 21 ஆச்சு...
வெகு விமரிசையாக பிறந்தநாள் கொண்டாடப் பட்டது...
மொதல்ல "கீ பர்த்டே" எதுக்கு கொண்டாடுறாங்கன்னே எனக்கு தெரியாது..
அறிஞ்சவங்க சொல்லிட்டு போங்க...



நேத்து தான் நண்பன் சொன்னான், கீ பர்த்டேங்கிறது பெண்களுக்கு தான்.. நம்மளுக்கு இல்லைன்னு...
காரணம் தான் நக்கல்...

"கீ பர்த்டேங்கிறது பொண்ணுங்களுக்கு தான்.. அது எதுக்கு வந்துச்சினா பொண்ணுங்க 21 வயசு வந்ததும் யூ ஆர் ஒன் யுவர் ஓவ்ன்னு கீயை (அதாவது திறப்பை...) அவங்க கையில குடுத்துருவாங்கடா... இதே பழக்கம் தான் கண்ணாளம் ஆனதும் அங்கயும் போய் கீ அவங்க கையிலயே இருக்கணும்ன்னு எதிர்ப்பாக்கிறாங்க போல... (இது எல்லோருக்கும் இல்ல... தொப்பி பொருந்துறவங்க போட்டுக்கலாம்...)"...
இது தான் அவன் சொன்ன காரணம்...

அடுத்தது தான் நம்மளுக்கு ஏன் 21 கீ பர்த்டே இல்லைன்னு சொன்னானே...

"மச்சி, நாம எல்லாம் யாரு??? 15வது வயசிலயே வீட்டுல அப்பாகிட்ட இருந்து பலவந்தமா திறப்பை பறிச்சவங்க... அப்ப நமக்கு கீ பர்த்டே 15வது வயிசிலயே முடிஞ்சிரும்... அதுக்குப் பிறகு என்னடா 21ன்னுல கீ பர்த்டே, கு பர்த்டே எல்லாம் நமக்கு ???"
எப்பிடி காரணம் ???

நேத்து தான் கீ பர்த்டேக்கு இப்பிடி ஒரு அர்த்தம் இருக்குன்னு தெரிஞ்சுது எனக்கு...

என்னடா உலகம் இது ???
கீ பர்த்டேயும் நம்மளை விட்டு போயிடுச்சா ???
:-)
கீ பர்த்டே எங்களுக்கு இல்லையா ???SocialTwist Tell-a-Friend

Monday 16 March 2009

சபாஷ் ! சரியான போட்டி ...

35 . பின்னூட்டங்கள்
சரியான போட்டி எது தெரியுமா ???
இது தான்...
பாருங்க...

இது மும்பையின் ஒரு பிஸியான பாதையில் (Bandra Road) ஜெட் எயார்வேய்ஸ் (Jet Airways) போட்ட விளம்பரப் பலகை.


அடுத்து என்ன நடந்தது ???


கொஞ்ச நாட்கள் கழித்து...


கடைசியாக...
இது தான் பன்ச்... :-)


சபாஷ் ! சரியான போட்டி ...SocialTwist Tell-a-Friend

Sunday 15 March 2009

தமிழர் இசைக்கருவிகள்...

40 . பின்னூட்டங்கள்
இப்போ நம் மத்தியில் எவ்வளவோ இசைக்கருவிகள் பரந்து வந்துவிட்டன...
எவ்வளவு தான் வந்தாலும் நம் தமிழர் கலாச்சாரத்தையும் அதன் பின்னணியையும் பிரதிபலிப்பன நம் இசைக் கருவிகள் தானே ???

அவை பற்றி எழுத நினைத்ததன் பலன் தான் இந்தப் பதிவு...
இதில் குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் தமிழர் கலாச்சாரத்தோடு தற்போது தொடர்புடையவை எனினும், தமிழரால் கண்டுபிடிக்கப்பட்டதா என்பது சிறிது சந்தேகம் தான்...
விஷயம் அறிந்தவர்கள் கூறவும்...
அந்தந்த இசைக் கருவிகள் பற்றி விஷயமுள்ள தொடுப்புக் கொடுத்துள்ளேன்...
(தொடுப்பு கொடுத்த இசைக் கருவிகள் ஊதா நிறத்தால் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது)
வாசித்து அறிக...

பிரதானமாக இசைக்கருவிகளை நான்கு வகையாக பிரிப்பர்...
அவையாவன :
1. தோற் கருவிகள்
2. துளைக் கருவிகள்
3. நரம்புக் கருவிகள்
4. கஞ்சக் கருவிகள்

தோற் கருவிகள்...
விலங்குத் தோலை பயன்படுத்தி செய்யப்படும் இசை கருவிகள் இவற்றில் அடங்கும்...

பொரும்பறை
சிறுபறை
பேரிகை
படகம்
இடக்கை
உடுக்கை
மத்தளம்
சல்லிகை
காடிகை
திமிலை
குடமுழா
தக்கை
கணப்பறை
தமடூகம்
தண்ணுமை
தடாரி
அந்தரி
முழவு
சந்திர வலையம்
மொந்தை
பாகம்
கஞ்சிரா
ஜெண்டை
பஞ்சமுக வாத்தியம்
கிரிக்கட்டி
உபாங்கம்
துடி
நாளிகைப்பறை
உறுமி மேளம்
தவில்
மிருதங்கம்
பஞ்சறை மேளம்
பறை

துளைக் கருவிகள்...
இவை காற்றினால் உந்தப்பட்டு இயக்கப்படும். சுவாசத்தின் தன்மைக்கு ஏற்றவாறு இவைகளில் நாதம் எழுகின்றது...

புல்லாங்குழல்
முகவீணை

மகுடி
சங்கு
தாரை
கொம்பு
எக்காளை

நாதஸ்வரம்
ஒத்து


நரம்புக் கருவிகள்...
சுருதிக்கு அடிப்படையாக விளங்கும் வாத்தியங்கள் இவை...

யாழ்
வீணை
தம்புரா
கோட்டு வாத்தியம்


கஞ்சக் கருவிகள்...
இவை அனேகமாக உலோகம் கொண்டு ஆக்கப்பட்ட இசைக் கருவிகளாகும்...

சேமக்கலம்
ஜாலரா
கடம்
ஜலதரங்கம்
முகர்சிங்
கொத்துமணி


உங்கள் கருத்துகளைக் கூறி விட்டுச் செல்லவும்...
தமிழர் இசைக்கருவிகள்...SocialTwist Tell-a-Friend

மைக்ரோவேவ் பாப்கார்ன் நச்சுத்தன்மையானதா ???

23 . பின்னூட்டங்கள்
நுண்ணலை அடுப்பில் (மைக்ரோவேவ் ஒவன்) சமைக்கப்பட்ட சோளப்பொரி (பாப்கார்ன்) நச்சுத்தன்மையுடன் காணப்படுமா என்பது பற்றி வாசிச்சேன்...
முக்கியமான விஷயம்...
அதான் இந்தப் பதிவு...
நீங்களும் வாசிச்சுப் பாருங்களேன்...



மைக்ரோவேவ் பாப்கார்னுக்கு ஒரு கெமிக்கல் பயன்படுத்துவாங்களாம்...
அந்த கெமிக்கலுக்கு பெயர் "Diacetyl". இது பொதுவாக பட்டர்,பால் சம்பந்தப்பட்ட உணவுகளுக்கு பாவிக்கப்படுமாம்...
குறிப்பாக செயற்கையாக பட்டர் சுவையை (Butter Flavour) ஏற்படுத்த இது பயன்படும்...

இந்த Diacetyl பயன்படுத்தி உணவு செய்யும் தொழிற்சாலைகளிலுள்ள தொழிலாளர்கள் ஒரு வகையான நோய்க்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த நோய் வந்ததால் மூச்சு இலகுவாக எடுக்குவும்,விடவும் முடியாது...
அதன் மருத்துவப் பெயர் - "bronchiolitis obliterans".

இது பத்தி மேலதீகமா வாசிக்க, இங்க ஒவ்வொரு தலைப்புலயும் லிங்க் கொடுத்திருக்கேன்...
ஆங்கிலத்தில் தான் உள்ளது...
கட்டாயமா வாசிங்க...

Is Microwave Popcorn Toxic ?

Risks for Consumers of Microwave Popcorn...

கட்டாயமா பகிரப்பட வேண்டும்ன்னு நெனைச்சேன்...
அதான் பகிர்ந்தேன்...
:-)
மைக்ரோவேவ் பாப்கார்ன் நச்சுத்தன்மையானதா ???SocialTwist Tell-a-Friend

Saturday 14 March 2009

வாழ்க்கையின் எட்டு நிலைகள்...

30 . பின்னூட்டங்கள்

நிலை 1 : கண்காணிப்பும் ஆராய்வும்...
இந்த முதல் நிலையில் எல்லோரும் கண்காணிக்கிறதுல முழுமூச்சா ஈடுபடுவாங்க...
பொதுவா எல்லாரும் இந்த நிலையை குழந்தை பருவத்துலயிருந்து வாலிப பருவம் வரை செய்வாங்க...
இந்த நிலையில கண்காணிக்கிறது தான் மனசுல ஆழமா பதியும்...

நிலை 2 : ஒன்றை தெளிவாக காணுதல்...
முதல் நிலையில் கண்காணித்ததை வைத்து ஒரு முடிவு எடுத்து அதை நோக்கி பாதையை வகுத்தல்...

நிலை 3 : வேலை செய்தல்...
இரண்டாம் நிலையில் எடுத்த முடிவுகளை வைத்து வாழ்க்கைப் பாதையை அமைத்து படித்து முடித்து வேலைக்கு செல்லும் நிலை...
இந்த நிலையில் உங்களதும் குடும்பத்தினதும் பொறுப்புகளை சுமக்க முன்வரவேண்டி ஏற்படும்...

நிலை 4 : முன்னேறுதல்...
செய்யத் தொடங்கிய வேலையில் முன்னேற வேண்டும், பதவியுயர்வு பெற வேண்டும் என நினைப்பதெல்லாம் இந்த நிலை தான்...

நிலை 5 : நிபுணர் ஆகுதல்...
ஒரு வேலையில் சிறந்து விளங்குபவரை "நிபுணர்" என அழைப்பர்.
அது போல செய்யும் வேலையில் சிறப்புத்தேர்ச்சி அடைந்து விளங்க வேண்டும்...
அதன் மூலம் வேலையில் அதிக வாய்ப்புகளை தேடலாம்...

நிலை 6 : எல்லைகளை கடந்து செல்லல்...
செய்யும் வேலையில் சிறந்து விளங்கி அந்தந்த காலங்களில் வரும் தடைகளையும் சவால்களையும் தாண்டி முன்னேற வேண்டும்...
முடிந்தளவு முயற்சி இதற்கு அவசியம்...

நிலை 7 : கடைசிக்கு முதல் நிலை...
இந்த நிலையை ஆங்கிலத்தில் Life Calling என அழைப்பர்...
கற்றது, சம்பாதித்தது எல்லாவற்றையும் வைத்து வாழ்க்கையை அனுபவித்தல்...
இந்த நிலையில் மரணம் கூட ஏற்படும்...

நிலை 8 : மீண்டும் உருவாதல்...
இது மயிர்க்கொட்டி உருமாறி வண்ணத்துப்பூச்சியாக மாறுவதைப் போன்றது...
அது போல வாழ்க்கை மாற்றம் என்று கூட சொல்லலாம்...
ஒரு புதிய சமுதாயம் உருவாக வாய்ப்புக் கொடுத்தல்...

பாட்ஷாவுல ஒரு பாட்டு... (வரிகள் சரியாக ஞாபகம் இல்லை... :-) )
"எட்டு எட்டா மனுச வாழ்வைப் பிரிச்சுக் கோ,
அதுல எந்த எட்டுல இப்ப இருக்க தெரிஞ்சுக் கோ"

இது தான் எல்லோருடைய வாழ்க்கையின் நியதியும்...
வாழ்க்கையின் எட்டு நிலைகள்...SocialTwist Tell-a-Friend
 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.