Saturday, 30 May 2009

Captcha - சிறு விளக்கம்...

60 . பின்னூட்டங்கள்
அதிகமான தளங்களில் நாம் நம்மை பதிவு செய்யும் பொழுது (Register) அந்த பக்கத்தை பூர்த்தி செய்வதற்கு முன் உறுதிப்படுத்த சில சொற்கள் அடங்கிய ஒரு படத்தைப் பார்த்து அதிலுள்ள எழுத்துக்களையோ அல்லது எண்களையோ தட்டச்சுவோம் அல்லவா????
அது தான் Captcha.


Captcha என்பது இணையம் வழியாகவோ அல்லது நேரடியாகவோ ஒரு கணனியுடன் தொடர்பு கொள்ளப் பயன்படும் ஒரு சொற்கள் சார்ந்த புகுதல் உள்ளீடாகும்.
ஒரு மனிதனால் தொடர்பு கொள்ளப்படுகின்றதா அல்லது ஒரு தானியங்கி வழியாக தொடர்பு கொள்ளப்படுகின்றதா என தெரிந்து கொள்ளும் முகமாக இதை பயன்படுத்துகிறார்கள்.
தானியங்கிகளின் செயல்களை தடை செய்யும் முகமாகவே இது நடைமுறைபடுத்தப்படுகிறது.




Captchaவின் பொதுவான வடிவமாக எழுத்துகள் அல்லது எண்கள் அடங்கிய ஒரு சிறு படத்தைப் பார்த்து பாவனையாளர் அதை டைப் பண்ன வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் சில தளங்களில் நாம் Audio Captchaகளையும் பார்த்திருப்போம்...
ஏனெனில் இவை அமெரிக்கா, மற்றும் பிற ஆங்கில நாட்டு வல்லுனர்களால் நிறுவப்படுவதால் அவர்களின் வசனநடை தெரிந்தவர்களால் மட்டுமே அதை எதிர்கொள்ள முடியும்.
என்னைப் போன்ற Broken English கேஸ்களுக்கெல்லாம் அது லாயக்கில்லை.. :-)
‘Captcha' என்ற சொல் ‘Capture' என்ற சொல்லிலிருந்து வந்தது.


இந்த முறை முதன்முதலில் 2000ஆம் ஆண்டில் Carnegie Mellon Universityயின் Luis von Ahn, Manuel Blum, Nicholas J. Hopper என்பவர்களாலும் அப்போது IBMல் இருந்த John Langford என்பவராலும் அறிமுகப்படுத்தப்பட்டது.


இவ்வளவு காலமும் சாதாரண Captchaவாக இருந்த இந்த முறை இப்போது reCaptcha என அழைக்கப்படுகிறது.
reCaptcha எனப்படுவது, அதே Carnegie Mellon Universityஆல் விருத்தி செய்யப்பட்ட முறையாகும்.
அதாவது இந்த முறையால் பண்டைய புத்தகங்களை கணனி மயமாக்கும் முயற்சி நடைபெறுகிறது.


தற்போதைக்கு சில பழைய புத்தகங்களும் New York Timesஇன் சஞ்சிகைகளும் கணனி மயமாக்கப்பட்டு வருகிறதாம்.
இதில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல் விளைவு.
பழைய புத்தகங்களை பாதுகாப்பதும் இணைய மோசடியை தடுப்பதும் ஒரே நேரத்தில் நடக்கிறது.


Captcha தேவைப்படும் தளங்களுக்கு இந்த reCaptcha சொற்கள் அடங்கிய Captchaகளை வழங்குகிறது.
உதாரணமாக ஒரு புத்தகத்தில் ‘jeyhd' என்ற சொல் இருந்தால் அந்த சொல்லை அப்பிடியே ஸ்கேன் செய்து அந்தப் படத்திற்குறிய இலக்கத்தை அந்த இடத்தில் கொடுத்துவிட்டு அந்த படத்தை Captchaவாக வெளியிடுவார்கள்.
அந்த குறிப்பிட்ட Captchaவை பாவிக்கும் 90 சதவீதமானவர்கள் அதை சரியாகவே அடிப்பார்கள்.
ஆக அதிகமானவர்களால் அடிக்கப்பட்ட சொல்லை தானாகவே அந்த புத்தகத்தின் கணனி வடிவத்தில் சேர்த்து விடுகிறதாம் அவர்களின் மென்பொருள்.
இதன்மூலம் ஒருநாளைக்கு சராசரியாக 160 புத்தகங்களை கணனி மயமாக்குகிறார்களாம். :-)


இந்த முறையைப் பற்றி தெரியாத காலத்திலேயே அதாவது 1997இல் Internet bots எனப்படும் தானியங்கிகள் மூலம் தங்கள் முகவரிகளை தேடற் பொறிகளில் (Search engines) இணைக்காமல் இருப்பதற்காக Andrei Broder, Martin Abadi, Krishna Bharat, Mark Lillibridge என்பவர்களால் பயன்படுத்தப்பட்டது.


ஆரம்ப காலங்களில் இருந்த Captcha இவ்வாறு தான் இருக்கும்.

ஆரம்ப கால Captchas.


பின்பு இதை கண்டுபிடிக்கும் வகையில் மென்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டனவாம்.
அதற்குப்பிறகு சாதாரண optical character recognition (OCR) மென்பொருட்களால் கண்டுபிடிக்க முடியாத வகையில் தற்போது பாவனையிலுள்ள Captcha அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது பாவனையிலுள்ள reCaptchas.


தற்போது பிரபலமான தளங்களாகிய Facebook, Gmail, Yahoo, MSN, Twitter, StumbleUpon ஆகியவை இந்த reCaptcha முறையை பாவித்து வருகின்றன.


reCaptcha பற்றிய மேலதிக விபரங்களுக்கு (இந்த கட்டுரையை படித்து முடித்துவிட்டு...) இங்கே செல்லவும்.


இந்த முறையைப் பயன்படுத்தி தமிழ் தளங்களில் தமிழ் சொற்களாலான Captchaகளை பயன்படுத்தினால் என்னாகும் என்று யோசித்துப் பார்த்தேன்.
ஒன்னும் தோன்றவில்லை..


உங்களுக்கு ஏதாச்சும் தோன்றினால் அதை பின்னூட்டமாக தெரிவிக்கலாமே...
:-)


அன்புடன்,
Captcha - சிறு விளக்கம்...SocialTwist Tell-a-Friend

Wednesday, 27 May 2009

பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்திகைப்பாண்டியன் !!!

40 . பின்னூட்டங்கள்
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நண்பர் கார்த்திகைப்பாண்டியனுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்...





இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா !!!



நீங்களும் உங்கள் வாழ்த்துகளைச் சொல்லுங்க மக்கள்ஸ்..
:-)
பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்திகைப்பாண்டியன் !!!SocialTwist Tell-a-Friend

Sunday, 24 May 2009

குழந்தைத் தொழிலாளர்கள் - சில படங்கள் !!!

49 . பின்னூட்டங்கள்
சகல நாடுகளிலும் சகல இடங்களிலும் எவ்வளவு சட்டங்கள் இருந்தும் எவ்வளவு பேர் எதிர்க்குரல் கொடுத்தும் முற்றாக ஒழிக்க முடியாத சில விடயங்களில் இதுவும் ஒன்று... “குழந்தைத் தொழிலாளர்கள்

இந்தப் படங்கள் அனைத்தும் எனக்கு மின்னஞ்சலில் வந்தவை...
இந்த உண்மையான படங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும், இதற்கு உடனடியாக இல்லையாயினும் எப்போதாவது ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காகத் தருகிறேன்...
ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கவிதையாகவே நான் பார்க்கிறேன்...
அதுவும் அந்த முதலாவது படமும் கடைசி இரு படங்களும் மிகவும் உருக்கம்...
அவர்கள் முகத்தில் தெரியும் அந்த ஏக்கம்..
விபரிக்க வார்த்தைகளேயில்லை...



















என்று தான் ஒழியுமோ இந்த அவலம் ???

குழந்தைத் தொழிலாளர்கள் - சில படங்கள் !!!SocialTwist Tell-a-Friend

Thursday, 21 May 2009

என்னடா உலகமிது ???

65 . பின்னூட்டங்கள்
நம்ம நாட்டுல என்னவென்னவோ எல்லாம் நடக்குதுப்பா...
வெற்றித் தளபதி அதிபர் ரா___ஷ போர் எல்லாம் முடிந்துவிட்டது என்று அறிவித்து விட்டாராம்ல...
என்ன கொடும ரா___ஷ இது ???
(இதை சென்னை 28 படத்துல பிரேம்ஜி ஸ்டைல்ல வாசிங்கப்பா...)

இனி நம்ம சமத்துவ இலங்கையில சிறுபாண்மைன்னு ஒன்னே இல்லையாம்ல...
அடேங்கப்பா...
ஏன்யா உங்களுக்கு இப்பிடி ஒரு அறிக்கையை 30 வருஷத்துக்கு முன்னமே விடனும்ன்னு தோனலையா???
அப்பாவி மக்களாவது பிழைச்சிருப்பாங்கல்ல???
செஞ்சு முடிக்க வேண்டிய அநியாயங்களையெல்லாம் செஞ்சு முடிச்சுட்டு இப்ப விடுறாங்களாம்ல அறிக்கை..
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரத்துக்கா இந்த அறிக்கை ???

இலங்கை தொலைக்காட்சிகள் அனைத்திலும் நேற்றும், நேற்றைக்கு முந்தைய நாளும் ஒரே காட்சிகள் தான்..
அது தான் தசாவதாரம் படத்தின் பார்ட் - 2வாம்...
என்னா மேக்கப் ??
சும்மா சொல்லக் கூடாது சிங்கள சகோதரர்களை..
இல்லாத ஒன்னை இருக்குனு காட்டுறதுல தனித் திறமை தான்யா உங்களுக்கு...
தசாவதாரம் பார்ட் - 2வின் ஒரு சின்ன பிட் இங்கே க்ளிக்குங்க...

கடந்த மூனு நாளா நம்ம நாட்டுல ஒரே ஆர்ப்பாட்டம் தான்..
1996ல இலங்கை உலகக் கிண்ண இறுதிப் போட்டியில வென்ற போது கூட இந்தளவுக்கு நம் சகோதரர்கள் சந்தோஷப்பட்டிருப்பார்களா என்பது சந்தேகம் தான் நமக்கு...
என்னா குதூகலம் ???

வீதி எங்கும் வண்டிகளில் கும்பல் கும்பலாக சந்தோஷ பேரணி...
வாத்தியங்கள், இசையுடன்...
அதுல என்ன பெரிய காமடின்னா, நான் அந்தப் பக்கத்தால போயிட்டிருந்த போது வாத்தியத்தில் வாசிக்கப் பட்ட பாடல் “அடி என்னாடி ராக்கம்மா...” எனும் தமிழ்ப் பாடல் தான்..
ஏன்யா இவ்வளவு செய்யத் தெரிஞ்ச உங்களுக்கு தமிழ்ப் பாட்டு இல்லாம பேரனியையும் நடத்த தெரிஞ்சுருக்கணும்ல???
ஓ அதுதான் அன்னையில இருந்து ஜனாதிபதி சொல்லீட்டார்ல.. இனிமே நம்ம நாட்டுல சிறுபாண்மைன்னு ஒன்னு இல்லைன்னு..
ஒருவேளை அதா இருக்கலாம்...

இவ்வளவு காலமும் இலங்கை அரசு சொல்லி வந்த உண்மைகளைப் போலவே இப்போதும் ஒரு பெரிய உண்மையை சொல்லியிருக்காங்க...
அது என்ன உண்மைன்னு கேக்கக் கூடாது..
அதுக்கு தான் தசாவதாரம் பார்ட் - 2 பிட் இமேஜ் தந்துருக்கிறேன்ல...
:-)

நான் குடியிருக்கும் தெருவில் இந்த சந்தோஷத்தை கொண்டாடும் முகமாக ஒரு குடும்பத்தினர் நேற்று தைப்பொங்கலுக்கு நாம் வீட்டுக்கு முன் பானை வைத்து பொங்குவது போன்று பாற்சோறு செஞ்சாங்கப்பா...
ஆஹா என்ன ஒரு கருமாந்திர காட்சி.. ச்சீ கண்கொள்ளா காட்சி அது ...
பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் உயிரிழந்து அரசுக்கு கிடைத்த இந்த வெற்றியை (???) வீட்டுக்கு முன் பானை வைத்து பாற்சோறு செய்து கொண்டாடும் அளவுக்கு இருக்கு இதுங்களோட மனநிலை...
(நிறைய எழுதத் தோனுது.. முடியல.. அவ்வளத்தையும் எழுதினா சென்சார் போர்டுக்கு தான் போகும்...)

வெற்றியை கொண்டாடும் முகமாக நேற்று அரசாங்க விடுமுறை...
நாளையும் வெற்றிவாகை சூடிய படையினருக்கு மரியாதை செய்வதற்காக கொழும்பிலுள்ள பாடசாலைகள் எல்லாம் க்ளோஸ்டு...
இதே வெற்றி வாகை சூடிய (???) படையினர் தான் இரண்டு வருட காலத்துக்கு முன் ஐ.நா.வின் அமைதிப் படை குழுவில் சென்று அங்கு கற்பழிப்பு குற்றத்தில் பிடிபட்டு நொந்து நூடுல்ஸாகி திரும்ப இலங்கை வந்தார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும் நண்பர்களே...
ச்சீ அது இலங்கை படை வீரர்கள் இல்லை.. அவர்கள் மாதிரி வேஷம் போட்ட வேறு சதிகாரர்களாம்ல...
இது அரசு தரப்பு உண்மை... இலங்கை அரசு சொன்னால் அது உண்மையாத் தான் இருக்கும் ...
:-)

சொல்லப் போனா எவ்வளவோ வருது..
ஆனா எவ்வளத்த தான் சொல்லுறது ???
நக்கீரன்ல வந்துள்ள அட்டைப்பட கிராபிக்ஸ் படம் உண்மைன்னு இவங்களுக்கு தெரிய வரும் நேரம் வெகு தொலைவில் இல்லைங்கிறது மட்டும் உண்மை...
அப்போ பார்ப்போம் ரியல் தசாவதார ஹீரோவை...
அதுவரை காத்திருப்போம் நாம் !!!
என்னடா உலகமிது ???SocialTwist Tell-a-Friend

Tuesday, 19 May 2009

என்னா அதிர்ஷ்டம் ???

25 . பின்னூட்டங்கள்
6000 அடி உயரத்திலிருந்து பாரசூட் இல்லாமல் குதித்து உயிரோடு இருக்கிறார் ஒரு skydiver.
ஆச்சரியமாக இல்லை???

இங்கிலாந்தின் Tamworth, Staffordshireஐச் சேர்ந்த James Boole என்பவரே இவ்வாறு அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியவர்...
இவர் நிலத்தை அடைய சற்று முன்னரே தனது பாரசூட்டை விரித்துள்ளாஅராம்...
சற்று முன்னென்றால் எவ்வளவு நேரம்???
அது தான் ஆச்சரியம் சாமி... நிலத்தை அடைய 2 செக்கண்ட்ஸுக்கு முன் !!!



James Boole



இந்த நபர் ஒரு பிள்ளைக்கு அப்பா.
ஒரு டீ.வி. விவரணச் சித்திரத்துக்காக இன்னொரு Skydiverஐ படம் பிடிக்க சென்றுள்ளார்.

கூட பறந்தவர் தவறாக சிக்னல் கொடுத்ததால் பனி மிகுந்த ஒரு மலையின் உச்சியை அடைய 2 செக்கண்ட்ஸுக்கு முன்னரே தனது பாரசூட்டை விரித்துள்ளாராம்...
6000 அடியிலிருந்து பறக்கத் தொடங்கியிருக்கிறார்கள் இவர்கள்.
மலையின் உச்சியை வந்தடையும் போது இவரின் கதி 100 mph !!!

James Booleஇன் பின்பகுதி, விலா என்புகள், பற்கள் என்பவற்றுக்கு சிறிது சேதம் ஏற்பட்டிருக்கிறதாம்...

இந்த படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்ததாம்.
விபத்து நடந்த உடனே மொஸ்கோவிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்களாம்...
இங்கிலாந்துக்கு திரும்ப முதல் கொஞ்சம் உடல்நிலையை தேற்றிவிட்டு செல்வதற்காக ரஷ்யாவில் தங்கியிருக்கிறாராம் இவர்...

இவர் ஒரு மெக்கானிக்கல் எஞ்ஜினியர்.
இவர் கடந்த 12 வருட காலமாக பாரசூட்டில் பறந்து பழக்கம் உள்ளவர்.
2000க்கும் மேற்பட்ட தடவைகள் பறந்து அனுபவம் உள்ளவர்...

அவனவன் சைக்கிள் மோதியே எமன்கூட ஐக்கியமாயிடுறானுங்க...
இந்தாளு என்னான்னா அலேக்கா பறந்து வந்தும் அதுவும் பாரசூட் இல்லாம பறந்து வந்து சின்ன விபத்தோட தப்பிச்சிருக்காரு...

என்ன கொடுமை இது சரவணன் ???
:-)
என்னா அதிர்ஷ்டம் ???SocialTwist Tell-a-Friend

Friday, 15 May 2009

திரைப்பார்வை - “சர்வம்”...

53 . பின்னூட்டங்கள்


தயாரிப்பு : K.கருணாமூர்த்தி, C.அருண்பாண்டியன்.
இசை : யுவன்ஷங்கர்ராஜா.
ஒளிப்பதிவு : நீரவ்ஷா.
படத்தொகுப்பு : ஸ்ரீகர் பிரசாத்.
பாடல்வரிகள் : பா.விஜய்.
கதை, இயக்கம் : விஷ்ணுவர்தன்.

ஹீரோ ஆர்யா, ஒரு ஆர்க்கிடெக்ட்.
படம் தொடங்கியதுமே ஆர்யாவுக்கு ஒரு பாட்டு, இளையராஜா பாடுகிறார்.
என்ன கொடுமையோ ??
சம்பந்தமே இல்லாமல் ஒரு பாட்டு.

கார் ரேஸிங் போட்டியில் ஹீரோயின் த்ரிஷாவைக் காண்கிறார் ஹீரோ.
கண்டதும் காதல் வர ஹீரோயினை துரத்துகிறார்.
த்ரிஷா ஒரு Pediatric Surgeon. த்ரிஷா சேவை செய்யும் மருத்துவமனைக்கு சென்று த்ரிஷாவை சந்திக்கிறார்.

ஒருநாள் த்ரிஷாவை காதலிப்பதாக சொல்லிவிடுகிறார்.
வழக்கம்போல ஹீரோயின் கொஞ்சம் இழுத்துப்பிடிக்கிறார், அப்புறம் ஓகே சொல்லிவிடுகிறார்.

ஆர்யா, த்ரிஷா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் கொஞ்சம் ரசிக்கும்படியாக இருக்கு.
ஆர்யாவும், த்ரிஷாவும் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும் போது வீதியில் ஒரு கம்பத்தில் மாட்டிக் கொண்டிருந்த பட்டம் அறுந்து கீழேவிழ அதிலுள்ள நூல் த்ரிஷாவின் கழுத்தை இறுக்கி த்ரிஷா பலியாகிறாராம்.

மருத்துவமனைக்கு த்ரிஷாவைக் கொண்டுபோயும் காப்பாற்ற முடியவில்லை.
அப்போது இருதய சத்திரசிகிச்சைக்காக வரும் நோயாளிக்கு த்ரிஷாவின் இதயம் பொருத்தப்படுகிறது.

த்ரிஷாவின் இதயம் பொருத்தப்பட்ட சிறுவன் இமான், அவன் அப்பா நெளஷாட் (இவர்களின் உண்மையான பெயர்கள் தெரியவில்லை).
இந்த நெளஷாட் ஒருமுறை தன் வண்டியால் ஒரு பெண், ஒரு குழந்தையை இடித்து கொன்றுவிடுகிறார்.
அந்த பெண்ணின் கணவன் தான் வில்லன்.
தன் குழந்தையை பிரிந்து தான் கஷ்டப்படும் வலியை நெளஷாட்டும் உணர வேண்டும் என்பதற்காக இமானை கொல்ல வேண்டும் என தேடுகிறான் வில்லன்.

தன் காதலியின் இதயம் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்ற உண்மையை அறியும் ஆர்யா இமானை தேடி சென்று கண்டுபிடித்து விடுகிறாராம்.
ஆர்யாவுக்கு இமானை கொல்ல ஒருத்தன் அலைந்து கொண்டு இருப்பது தெரிந்து விட இமானை தன்னோடு அழைத்துக் கொண்டு போய் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்.
கடைசியில் வில்லன் இமானை கொல்கிறானா அல்லது ஆர்யா இமானை காப்பாற்றுகிறாரா என்பது தான் மீதிக் கதை.

கதை ஏற்கனவே பலமுறை பார்த்த மாதிரி இருந்தாலும் ஆர்யா, த்ரிஷா ரொமான்ஸ் காட்சிகள் புதுமையாக இருக்கு.
ஆர்யா சிறப்பாக நடித்திருக்கிறார்.
வழக்கம் போல ஹீரோயினுக்கு நடிக்க வாய்ப்பேயில்லை.

பெரிய கூட்டணியோடு தனக்கு வந்த “ரோபோ” பட வாய்ப்பை இந்தப் படத்துக்காக மறுத்த ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா சிறப்பாக தன் பங்கை செய்திருக்கிறார்.
அருமையான லொகேஷன்ஸ்.

படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
பாடல்கள் பார்க்கும் படியாக செய்திருக்கிறார்.

யுவன் இசையில் பாடல்கள் மோசமாக இல்லை.
“சிறகுகள் வந்தது...” பாடல் அருமையாக இருந்தது.
பாடல் வரிகள் மனதில் ஒட்டவில்லை.
ஆனால் என்ன சொன்னாலும் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் யுவன்.
பின்னணி இசை படத்திற்கு ஒரு பலம் என்று சொல்ல வேண்டும்.

முழுப் படத்திலும் எங்கும் சலிப்புத் தட்டவேயில்லை.
திரைக்கதையை அதற்கேற்ற விதமாக அமைத்த இயக்குனர் விஷ்ணுவர்தனை பாராட்ட வேண்டும்.

கலை இயக்குனர் யார் என்று தெரியவில்லை.
அருமையான ரசனை அவருக்கு..
செட்கள் எல்லாம் அருமை...

மொத்தத்தில் “சர்வம்” சகலமும் நிறைந்த படம்.
ரொமான்ஸ், சண்டை, செண்டிமென்ட், நகைச்சுவை எல்லாம் அளவாக இருக்கிறது.

தியேட்டரில் போய் பாக்கலாம்.
.
திரைப்பார்வை - “சர்வம்”...SocialTwist Tell-a-Friend

Monday, 11 May 2009

கேள்வியும் பதிலும்...

40 . பின்னூட்டங்கள்
இது ஒரு தொடர் பதிவு...

ஆரம்பித்த பெருமைக்குரியவர் நிலாவும் அம்மாவும்.

இதுவரை தொடர்ந்தவர்கள்...


மற்றும் என்னை அழைத்த நண்பர் தேவா.

இதோ கேள்விகளும் பதில்களும்...

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எனது நிஜப் பெயர் இதுவல்ல.
நான் படித்த பாடசாலை வேத்தியர் கல்லூரி, கொழும்பு. (Royal College, Colombo.)
ஆக என் பெயரை “வேத்தியன்” என வைத்து கொண்டேன்...
பாடசாலை சம்பந்தப்பட்டவை யாருக்கு பிடிக்காமல் போகும்???
ஆக எனக்கு என் பெயர் ரொம்பப் பிடிக்கும்...

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

பொதுவாக எதற்கும் நான் அழுவதில்லை. அழுது நேரத்தை வீணாக்காமல் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் சிறந்தது என்று கருதுபவன் நான்...
ஆனால் 4 நாட்களுக்கு முன் விஜய் டீ.வியில் பிரேமின் நடனத்தை பார்த்து சிறிது கண்கலங்கி விட்டேன்...

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ம்... என்ன சொல்வது ???
சரி இருந்துட்டுப் போகட்டும், என் கையெழுத்து எனக்குப் பிடிக்கும்...

4.பிடித்த மதிய உணவு என்ன?

நான் வெஜிடேரியன்...
அம்மா கையால் எது சமைத்தாலும் அது எனக்கு நன்றாகத் தான் இருக்கும்...
சோறு, முளைத்த பயற்றம்பயிறு கறி, கத்தரிக்காய் கறி, சாம்பார், பாயாசம்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அந்த இடத்துல நல்லா பேசினா உடனே அவர் என் நண்பர்...

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடலில் குளிக்கவே அதிகம் விரும்புவேன்...
அலைகளோடு விளையாடும் அந்த அனுபவம் ஒவ்வொரு தடவையும் பிடிக்கும்...

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகம், அணிந்துள்ள ஆடையும் அதை அணிந்துள்ள விதமும்...

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்சது - இன்னொருவருக்கு சற்றும் யோசிக்காமல் உதவும் குணம் கொஞ்சமாவது உண்டு எனக்கு...

பிடிக்காதது - முன்கோபம்...

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இப்போ தான் 20...
திருமண அழைப்பிதழ் ஒவ்வொருவரின் வீடு தேடி வரும் !!! :-)

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

என் வலையுலக நண்பர்கள் பக்கத்தில் இல்லையென்பது வருத்தம் தான்...

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

கறுப்பு கலர் டெனிம், கறுப்பு கலர் டீ-ஷேர்ட்...

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

ஒன்றும் பார்க்கவில்லை...
இசைப்புயலின் புயலிசையில் “தென்மேற்குப் பருவக்காற்று...” - படம் - கருத்தம்மா...

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

பிடித்த நிறமான கறுப்பாக மாறவே விருப்பம்...

14.பிடித்த மணம்?

Play Boy சென்ட்டின் அசத்தலான மணம்... :-)

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

அபுஅஃப்ஸர்
புதிய பதிவர்களையும் அன்போடு நடத்துபவர்...
நல்ல எழுத்தாளர்...

அ.மு.செய்யது
நல்ல சிந்தனையாளர்...
புதியவர்களை ஊக்கப்படுத்துவதில் இவரும் ஒருவர்...

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

அவரது கவிதைகள் பொதுவாகப் பிடிக்கும். அதுவும் இந்தக் கவிதை ரொம்பப் பிடிக்கும்...


17. பிடித்த விளையாட்டு?

கால்பந்து

18.கண்ணாடி அணிபவரா?

கடந்த இரண்டு வருடமாக அணிகிறேன்...

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

யதார்த்தமான எல்லா படங்களும் ரொம்பப் பிடிக்கும்...
நகைச்சுவைப் படங்களும் பிடிக்கும்...

20.கடைசியாகப் பார்த்த படம்?

ஆனந்த தாண்டவம்...

21.பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம்...

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

Oliver Twist - by : Charles Dickens...

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது மாற்றி விடுவேன்...

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் - அமைதியான இரவு நேரத்தில் ஒலிக்கும் புல்லாங்குழலின் இசை (அது சத்தம் அல்ல, இசை...)

பிடிக்காத சத்தம் - வாகனங்களிலிருந்து வரும் எல்லா சத்தங்களும்...
பேரரசு படங்களில் வரும் வில்லன்கள் போடும் “ஏ”, “ஓ” சத்தங்களும் பிடிக்காது... :-)

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

இலங்கையை விட்டு நான் சென்றது என்றால் நயினாதீவு... :-)

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

கொஞ்சம் சுருதி, தாள, லய நயத்தோடு பாட்டு பாடத் தெரியும்...
மிருதங்கம் மற்றும் Drums வாசிப்பேன்...

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நம்பிக்கைத் துரோகம்...

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

முன்னர் சொன்னது போல முன்கோபம்...

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஹவாய் தீவுகள்...
இது வரை சென்றது கிடையாது.. ஒரு நாள் செல்வேன்...

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

மற்றவர் புகழும் அளவுக்கு இல்லையென்றாலும் மற்றவர் மதிக்கும் அளவுக்கு பெற்றவர்களின் மதிப்பு குறையாமல் இருக்க வேண்டும்...

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

என்னத்தச் சொல்ல...
திரும்பவும் சொல்றேன்... இப்போ தான் 20...
இன்னும் 10 வருஷம் போனாலும் எனக்கு 20 தான்... ஏன்னா சொன்னத மாத்திச் சொல்ற பழக்கம் எனக்கு கிடையாதுல்ல... :-)

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுமளவுக்கு இன்னும் எதையும் பெரிதாக சாதிக்கவில்லை...
அந்தளவுக்கு அனுபவமும் கிடையாது...

இந்தத் தொடர் பதிவுக்கு நான் அழைப்பவர்கள், எனது நண்பர்கள்...

1. அபுஅஃப்ஸர் - என் உயிரே



வந்து எழுதி அசத்துங்க நண்பர்களே !!!
கேள்வியும் பதிலும்...SocialTwist Tell-a-Friend

Saturday, 9 May 2009

அன்னையர் தின வாழ்த்துகள் !!!

17 . பின்னூட்டங்கள்
ஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது...


இன்று சகல அன்னையருக்கும் வேத்தியனின் அன்னையர் தின வாழ்த்துகள் !!!









அன்னையர் தின வாழ்த்துகள் !!!SocialTwist Tell-a-Friend

பிரேம்கோபால் நடனம் - இது தான் உண்மை !!!

28 . பின்னூட்டங்கள்
பிரபல இந்தியத் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ”உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” என்னும் நிகழ்ச்சியில் அரையிறுதி போட்டியில் பிரேம்கோபால் என்னும் போட்டியாளர் நடத்திய நடன காட்சி...

இது தான் உண்மை...

நடனம் மூலம் உண்மையை விளக்கிய பிரேம்கோபாலுக்கு வாழ்த்துகள் !!!

பிரேம்கோபால் நடனம் - இது தான் உண்மை !!!SocialTwist Tell-a-Friend

Wednesday, 6 May 2009

ஏன் சுவிஸ் வங்கி ???

17 . பின்னூட்டங்கள்
நம்மள்ல பலரும் படத்துல பார்த்தோ, புத்தகத்துல வாசிச்சோ, அல்லது செய்திகள்ல கேட்டோ சுவிஸ் வங்கிகள், அவற்றில் கணக்குகள் பற்றி ஒரு அபிப்பிராயம் வைத்திருப்போம்...
சொல்லப்போனால், நாமளும் சுவிஸ் வங்கியில் ஒரு கணக்கு வைத்துக் கொண்டால் பெருமையாக இருக்குமே என்று நினைப்பவர்களும் உள்ளனர்.
:-)

பெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகள், முன்னால் கணவன்/மனைவிகளிடமிருந்து தனது சொத்துகளை பாதுகாக்க நினைக்கும் பிரபலங்கள், குற்றவாளிகள் போன்றோர் மட்டுமே சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் அது தப்பு !
சுவிஸ் வங்கியில் யார் வேண்டுமானாலும் கணக்கு வைத்துக் கொள்ள முடியும், பணமிருந்தால் !
:-)

நிலையில்லாத அரசு ஆட்சி நடத்தும் நாட்டில் வசிப்பவர்கள் முக்கியமாக இங்கே கணக்கு வைத்துக் கொள்கிறார்கள்.
ஏனென்றால் அரசு கவிழ்ந்து நாடு வங்குரோத்து நிலைமையை அடைந்தாலும் தமது பணம் கவனமாக இருக்குமல்லவா ???


சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துக் கொள்வதால் உள்ள நன்மைகள்...



1. இரகசியத்தன்மை (Privacy)
ஒரு மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையில் என்ன உறவுமுறை இருக்குமோ அதே மாதிரியான இரகசியத்தன்மை பேணப்படும்.
கணக்கு உரிமையாளரின் முன்னனுமதியின்றி கணக்கு பற்றிய தகவல்களை இன்னொருவருக்கு வழங்குவதை சுவிஸ் நாட்டு சட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

ஒரு சில சந்தர்ப்பங்களில் மாத்திரமே கணக்கு பற்றிய தகவல்களை வழங்க முடியும். அவை :
* குற்றச் செயல்கள்.
* போதைப் பொருள் கடத்தல்/ வணிகம் செய்தல்.

கணக்கு உரிமையாளரின் அனுமதியின்றி தகவல்களை வெளியிட்டால் அரசால் என்ன தண்டனை வழங்கப்படும் தெரியுமா ???
6 மாத சிறைத் தண்டனை + அபராதம் - 50000 ஸ்விஸ் ஃப்ராங்க்ஸ். (கிட்டத்தட்ட 2186000 இந்திய ரூபாய்கள் - தகவலுக்கு நன்றி : http://www.x-rates.com)

2. குறைந்த அபாயத்தன்மை (Low Risk)
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ள இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.
அதாவது யாராவது முற்றிலும் வங்குரோத்து நிலமையை அடைய நேரிடும் சந்தர்ப்பம் இருந்தாலும் சுவிஸ் வங்கியில் இருக்கும் பணம் பாதுகாப்பாகவே இருக்கும்.
அத்தோடு சுவிஸ் நாடானது பலமான பொருளாதார பின்னணியைக் கொண்டுள்ளது.
அத்தோடு 1505ம் ஆண்டுக்குப் பின் எந்தவொரு நாட்டுடனும் போர் புரிந்ததே கிடையாது.

சுவிஸ் வங்கியாளர்களுக்கு எப்பிடி, எவ்வளவு, எதில் முதலீடு செய்தால் எப்பிடி, எவ்வளவு இலாபம் கிடைக்கும் என்று நன்றாக அறிவுறுத்தப்பட்டுள்ளார்களாம்...

கணக்கு உரிமையாளர் பாதுகாப்பு பற்றிய விதிமுறைகள் எல்லாம் SBA எனப்படும் Swiss Bankers Associationஇன் Depositor Protection Agreementஆல் நிர்ணயிக்கப்படும்.
இந்த விதிமுறைகள் அடங்கிய தொகுப்பு உரிமையாளருக்கு மேலும் பாதுகாப்பு சேர்க்கும் விதத்தில் 2004ம் ஆண்டில் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது.

சுவிஸ் ஃப்ராங்க் உலகின் முதலான பணங்களில் ஒன்றாக கொள்ளப்படுகிறது. காரணம், சமீபத்தில் அதன் பணவீக்க சதவீதம் 0.



சுவிஸ் வங்கியில் கணக்கு ஒன்றை ஆரம்பித்தலும், பாவித்தலும்...

சுவிஸ் விதிகளின்படி சுவிஸ் வாசிகள் அல்லாத வெளிநாட்டவர் ஒருவர் கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதற்கு குறைந்தது 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். மற்றும்படி வேறு ஒன்றும் முக்கியமாக நிபந்தனைகள் கிடையாது...

உங்கள் கணக்கில் பணம் எந்த நாட்டு நாணயமாகவும் இருக்கலாம்.
பலர் சுவிஸ் ஃப்ராங்க், அமெரிக்க டொலர், யூரோ, ஸ்டேர்லிங் பவுண் என வைத்துக் கொள்வர்.
கணக்கு ஆரம்பிக்க குறைந்த தொகை இதுதான் என எதுவும் கிடையாது.
ஆனால் கணக்கு ஒன்றை ஆரம்பித்ததும் குறைந்தது இவ்வளவு பேண வேண்டும் என உண்டு.

வங்கியையும், கணக்கு வகையையும் தெரிதல்...
எந்த வகையான முதலீடு செய்கிறோம், எவ்வளவு முதலீடு செய்கிறோம் என்பதை வைத்து வங்கியை தெரிய வேண்டும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்கள் கணக்கு பற்றிய இரகசியத்தன்மையை வெளியிட நீங்கள் விரும்பாவிட்டால் உங்கள் நாட்டில் கிளை இல்லாத சுவிஸ் வங்கியை தெரிவு செய்ய வேண்டுமாம்.
ஏனெனில் வங்கிகள் அமைந்துள்ள நாட்டு சட்டங்களுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும் !

வட்டி ஈட்டுதல்...
உங்களுடைய கணக்கை சுவிஸ் ஃப்ராங்கில் பேணினால் உங்களுக்கு வட்டி கிடைக்கும். ஆனால், அந்த நாட்டு விதிகளின்படி வரி செலுத்தவே அது தீர்ந்து விடும்.
ஆக, சுவிஸில் வாழாத கணக்காளர்கள் அமெரிக்க டொலர், யூரொ, ஸ்டேர்லிங் பவுண் என வெளிநாட்டு நாணயமாக வைத்துக் கொள்வர்.
இதன்போது உங்கள் பணம் சர்வதேச பணச் சந்தையில் புழக்கத்தில் விடப்பட்டு அதன்மூலம் வட்டி ஈட்டலாம்...

ஆனால் இனி சிறிது தகவல்கள் தேவைக்கேற்ப வெளியிடப்படுமாமே...
தேவாவின் இந்த பதிவை படித்துப் பாருங்க...
தலைப்பில் சொடுக்கவும்...

_______________________________________________________________

எப்பிடில்லாம் கஷ்டப்பட்டு ஒரு மனுஷன் பணம் சம்பாதிச்சு வரி கட்டுறான்...
அதயெல்லாம் இந்த அரசியல்வாதிகள் கொள்ளையடிச்சு எவ்வளவு ஈஸியா பதுக்கிடுறானுங்க...
என்ன கொடுமை சரவணன் இது ???
ஏன் சுவிஸ் வங்கி ???SocialTwist Tell-a-Friend

Monday, 4 May 2009

டூயட் பற்றிய பாலுமகேந்திராவின் ஆதங்கம்...

28 . பின்னூட்டங்கள்
இன்று நண்பர் அபுஅஃப்ஸருக்கு அறுவை சிகிச்சை என நண்பர் நவாஸுதீன்
கூறியிருந்தார்.
அபு விரைவில் குணமடைந்து வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்...

________________________________________________________________

சென்னையில் சத்யம் திரையரங்கில் நேற்று “அங்காடித்தெரு” திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.

“அங்காடித்தெரு” திரைப்படத்தின் இயக்குனர் “வெயி” எனும் வெற்றிப்படம் தந்த வசந்தபாலன்.
தயாரிப்பு - ஐங்கரன் இன்டர்நஷனல்.
ஹீரோ - மகேஷ்.
ஹீரோயின் - அஞ்சலி.
இசை - ஜி.வி.பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனி.

யதார்த்தமாக படமெடுக்கிறேன் பேர்வழின்னு சொல்லிட்டு வர்ற சில இயக்குனர்கள் கூட வெளிநாட்டில் டூயட் ஷூட் பண்ண தயங்குவதில்லை.
படத்தில் கதைன்னு ஒன்னு இருக்கோ இல்லையோ நாயகனும் நாயகியும் சந்தோஷமாக ஆடிப்பாடும் டூயட் இல்லாமல் படமே இல்லையென்ற நிலமைக்கு வந்துவிட்டது நம் தமிழ் சினமா...



இது தொடர்பாக இந்த பாடல் வெளியீட்டு விழாவில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் பாலுமகேந்திரா...
அவர் கூறிய கருத்துகள்...

தமிழ் சினிமா தற்போது மாற்றம் கண்டு வருகிறது. ஆனால் இந்த டூயட் என்னும் விஷயம் மட்டும் இன்னும் மாறாமல் அப்பிடியே இருக்கிறது.
இந்த டூயட் பாடல்கள் எரிச்சலை உண்டுபண்ணுகிறது.
டீ.வியில் இந்த டூயட் பாடல்கள் ஒளிபரப்பப்படும் போது ஒலியைக் குறைத்துவிட்டு பார்த்தால் போதை ஏறிய இரண்டு குரங்குக் குட்டிகள் ஆடுவது போல தோன்றுகிறது.

இதை மற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் “முள்ளும் மலரும்” படத்தில் பின்னணி இசையாக அமைத்து தருமாறு மகேந்திரனிடம் கேட்டேன், அவரும் ஒப்புக் கொண்டார்.
வழக்கமாக காதலர்கள் என்ன செய்வார்கள் என்று காண்பித்தால் மட்டும் போதுமானது.

நான் எனது படங்களில் காதல் காட்சிகளை எவ்வாறு எடுப்பேனோ அது போலவே “அங்காடித்தெரு” படத்தில் வசந்தபாலனும் செய்துள்ளார்.
“வெயில்” எனும் அவரின் முதல் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
“அங்காடித்தெரு” படமும் எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக அமையும் என நம்புகிறேன் ” என தெரிவித்தார்.

_______________________________________________________________

முக்கியம்


படத்தை க்ளிக்கி பெரிய படமாக பார்க்கவும்...
டூயட் பற்றிய பாலுமகேந்திராவின் ஆதங்கம்...SocialTwist Tell-a-Friend
 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.