இது எனது 100வது பதிவு. இதுவரை காலமும் நான் எழுதிய ஆக்கங்களுக்கு எனக்கு ஊக்கம் அளித்து என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல...
இன்னும் அதிக பதிவுகள் எழுத் என்றும் உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறேன்...
________________________________________________________________________
இன்று நண்பர் கார்த்திகைப்பாண்டியனின் தங்கைக்கு திருமணம் என்று கூறியிருந்தார்...
புதுமணத் தம்பதிகளுக்கு எனது இதயபூர்வமான திருமணநாள் நல்வாழ்த்துகள் !!!
________________________________________________________________
கொழுப்பால நமது மக்கள் அதிகம் கஷ்டப்படுறாங்கப்பா...
அதிகமா கொழுப்புச் சத்து நிறைந்த உணவுப் பண்டங்களை சாப்பிட்டுவிட்டு பின்பு தொப்பையைக் குறைக்க காலையில எழும்பி ஓடுறது...
அதுமட்டுமில்லாம இப்போ எல்லா வீடுகளிலும் சகலருக்கும் இலவச இணைப்பா சக்கரை வியாதி வேற வந்து சேருது...
So, சாப்பிடுறத பாத்து கவனமா சாப்பிட்டு நோயில்லாம சந்தோஷமா வாழனும்..
என்ன நான் சொல்றது ??
:-)
உண்மையில எல்லோருக்கும் கொழுப்புச் சத்து அவசியம்.
போசணை அகத்துறிஞ்சல் (Nutrient absorption), நரம்பு கணத்தாக்கம் கடத்தல், கலமென்சவ்வின் (Cell membrane) நிலையைப் பேணல் போன்ற காரணங்களுக்காக நமது உடலில் கொழுப்பு அவசியமாகிறது.
ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுன்னு ஒளவையார் சும்மாவா சொல்லி வச்சாரு ??
அளவுக்கு மிஞ்சிய கொழுப்பினால் எடை அதிகரிப்பு, இதய நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம்...
அதனால அளவோடு கொழுப்பு இருக்கணும்..
இல்லைன்னா காலையில பீச் ஓரத்துல தான் ஓடனும்...
:-)
தேவையான கொழுப்புகள்
ஒற்றை நிரம்பாத கொழுப்புகள் (Monounsaturated Fats)
ஒற்றை நிரம்பாத கொழுப்புகள் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கவும், தாழ் அடர்த்தி லிப்போபுரோட்டீனைக் கரைக்கவும் (LDL - Low Density Lipoprotein) உதவும்.
அதேவேளை HDL எனப்படும் உயர் அடர்த்தி லிப்போபுரோட்டீனை அதிகளவில் உற்பத்தி செய்ய உதவும். (HDL - High Density Lipoprotein).
நிலக்கடலை, பாதம்பருப்பு, கனோலா எண்ணை, ஒலிவ் எண்ணை ஆகியவற்றில் இவ்வகை கொழுப்புகள் அதிகமுண்டு.
இவை உடல் எடை குறைவுக்கு அதிகம் உதவும்...
பன்மை நிரம்பாத கொழுப்புகள் (Polyunsaturated Fats)
இவ்வகை கொழுப்புகளும் LDLஐக் குறைக்க உதவும்.
இவை கடலுணவு, சல்மொன் மற்றும் மீன் எண்ணை, சோளம், சோயா, சூரியகாந்தி எண்ணை ஆகியவற்றில் அதிகமுண்டு.
ஓமெகா 3 கொழுப்பமிலங்கள் இந்த வகையைச் சார்ந்தது தான்...
தேவையற்ற கொழுப்புகள்
நிரம்பிய கொழுப்புகள் (Saturated Fats)

நிரம்பிய கொழுப்புகள் உடலுக்கு தீங்கானது.
இவை இரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிப்பதுடன், LDLஇன் அளவையும் அதிகரிக்கும்.
இவை அதிகமாக விலங்குணவுகளில் குறிப்பாக இறைச்சி, பாலுற்பத்திப் பொருட்கள், முட்டைகள், கடலுணவு ஆகியவற்றில் காணப்படும்.
சில தாவர உணவுகளிலும் இருக்கும்.
குறிப்பாக பால்ம் எண்ணை, தேங்காய் எண்ணை ஆகியவற்றில் காணப்படும்.
Trans Fats

அதிக காலம் பழுதடையாமல் இருக்க எண்ணையை நீர்மயப்படுத்தும் தொழிநுட்பம் விஞ்ஞானிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் உருவானது தான் இவ்வகை கொழுப்பமிலங்கள்.
இது சற்று சிக்கலான தொழிநுட்பமாகும்.
இவ்வகை கொழுப்புகள் அதிகமாக வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படும் உணவு வகைகளில் தான் இருக்கும்.
முக்கியமாக அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவு வகைகள், வறுக்கப்பட்ட உணவு வகைகள் ஆகியவற்றில் அதிகமாக இருக்கும்.
மைக்ரோவேவ் பொப்கோர்ன், French Fries என்று சொல்லப்படும் கிழங்குப் பொரியல் ஆகியவை இந்த கொழுப்பு அடங்கிய உணவுகளுக்கு சிறந்த உதாரணங்கள்.
ஆகவே சிறந்த உணவு வகைகளை உண்டு நலமாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
:-)
அன்புடன்,
