வரவேற்பளித்து
வணக்கம் சொல்லி
சொன்னதற்க்கு
பதில் பல கூறி
சம்பந்தப்பட்டும்
படாமலும்
தெளிவாய் இருந்தும்
இல்லாதவனாய்
நடிப்பா இல்லை
நகைப்பா என்று
அறிந்தும் அறியாமலும்
மணி ஒலிக்குமுன்
வருவான்
இவன்
இடைவேளையிலும்
இருப்பான்.
வணிகம் படித்த போதிலும்
வண்ணத்துப்பூச்சி
பிடித்தான்
தொடர்மாடிதனில்
குடியிருந்தான்
நீரின் பயன் மூன்று
கேட்டிடுவான்
நங்கையர் தாய்தனை
தொலைபேசி தனில்
அழைத்து
கூறிடுவான்
முப்பயன்கள்
ஒன்று குடிப்பதற்கு
இரண்டு குளிப்பதற்கு
மூன்று கு.... கழுவுவதற்கு (?)
கறுப்பியுடன் (Metho)காதல் கொண்டான்
அது ஆணா பெண்ணா
யாமறியோம்
பாடிடும் வேளை தனில்
பேய் உண்ட
பலாக்கனியாய்
வந்து
பழ - பலான மொழி கூறி
மானமிழப்பான்
அது உண்டா இவனுக்கு
இழப்பதற்க்கு
சிரிப்பு போலீஸ்
இவன்
பெயரில் இருவருளர்
ஒருவன்
விஞ்ஞானி
எம்மவன் மெய்ஞ்ஞானி
கிளிப்பிள்ளை என்று
அழைத்தனர் இவனை
கிளி என்கிறோம்
இன்று
எமைப்பிடித்த ஏழரையா?
ஆறடி கோமாளியா?
யாமறியோம் பராபரமே !!!!
