அதைப்பத்தி நம்மளுக்கு என்ன??? நாம கதையைப் பாக்கலாம்...
நீண்ட காலமா கடவுளை வணங்கி, கடவுளுக்கு மேல அசைக்க முடியாத நம்பிக்கை உள்ள ஒருத்தன் கலிபோர்னியாவின் கடற்கரையோரமா நடந்து போயிட்டிருந்தானாம்.திடீர்னு சத்தமா இதை சொன்னானாம் : "கடவுளே ! எனக்கு ஒரு வரம் தா ???". அப்போ வானத்திலுள்ள மேகமெல்லாம் திரண்டு அசரீரி மாதிரி ஒரு சத்தம் கேட்டுச்சாம் "நீண்ட காலமா நீ என்னை நம்பிக்கையோட வணங்கி வரதால நான் உனக்கு ஒரு வரம் தரேன். என்ன வரம் வேண்டும்னு கேளு". அவன் கேட்டான் "ஹவாய்க்கு ஒரு பாலம் கட்டித்தந்தா, நான் எனக்கு தேவையான் நேரம் காரில் ட்ரைவ் பண்ணிக்கிட்டு போகலாம் !".
கடவுள் சொன்னார் "இதுக்கு பசுபிக்கின் அடியை தொட வேண்டி வரும், அது மட்டுமில்லாம கொன்கிரீட்,இரும்புன்னு சரியான செலவு வேற.அதை என்னால செய்ய முடிஞ்சாலும், அதுக்கு ரொம்ப நேரம் தேவை ! நீ கேட்பது நடக்கக் கூடியதாக எனக்கு தோனலை.. கொஞ்சம் யோசிச்சு லாஜிக்கா ஏதாவது கேளு".
அவன் ரொம்ப நேரம் யோசிச்சுட்டு கடைசியா கேட்டானாம் "கடவுளே ! எனக்கு பெண்களின் மனசை புரிஞ்சுக்கிற சக்தியை கொடு. அவங்க எதுக்கு Feel பண்றாங்க, அமைதியா இருக்கிறப்போ என்ன யோசிக்கிறாங்க, ஏன் அழுறாங்க, அவங்க 'nothing'ன்னு சொல்றதுக்கு அர்த்தம் என்ன, அவங்களை நான் எப்பிடி சந்தோஷமா வச்சுக்கிறது... இதை எல்லாம் தெரிஞ்சுக்கிறதுக்கு எனக்கு சக்தியை கொடு !". கடவுள் ஒரு ஆழ்ந்த மூச்சு விட்டுட்டு கேட்டாராம் "உனக்கு அந்த பாலத்தில் என்னென்ன வசதி வேணும்னு சொல்லு !!!"
கடவுளின் Reaction ஒருவேளை இப்பிடி இருந்திருக்குமோ???
கடவுளுக்கே இந்த கதியா??? இது என்னோட சொந்த படைப்பு இல்லை.
So பிடிக்காதவங்க மன்னிச்சுருங்க.
பிடிச்சவங்க பின்னூட்டம் போடுங்க...

8 . பின்னூட்டங்கள்:
கலக்கிறீங்க... போங்கப்பா???? குறும்பு... தொடர்ந்தும் பல பதிவுகள் படைக்க வாழ்த்துக்கள் நண்பரே!
//மெல்போர்ன் கமல் said...
கலக்கிறீங்க... போங்கப்பா???? குறும்பு... தொடர்ந்தும் பல பதிவுகள் படைக்க வாழ்த்துக்கள் நண்பரே!\\
நன்றி நன்றி...
இது உங்களுடைய படைப்பா ???
இதற்க்கு முதல் நான் இதனை குமுதத்தில் வாசித்துள்ளேன்
// Anonymous said...
இது உங்களுடைய படைப்பா ???
இதற்க்கு முதல் நான் இதனை குமுதத்தில் வாசித்துள்ளேன்//
தெரியலீங்க...
என்னோட கதையை சுட்டு போட்டுட்டாங்க போல :)))
மன்னிச்சிட்டேன் வேத்தியன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
// குடுகுடுப்பை said...
மன்னிச்சிட்டேன் வேத்தியன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
:)))
வாழ்த்துக்கள்! :-o)
// பழமைபேசி said...
வாழ்த்துக்கள்! :-o)//
நன்றி நன்றி...
Post a Comment