இந்த விஷயம் பத்தி ரொம்ப நாளா எழுதனும்ன்னு நினைச்சுட்டே இருந்தேன்...
நடுவுல மறந்துட்டேன்..
இப்ப தான் மறுபடியும் ஞாபகம் வந்துச்சு..
அதான் எழுதிரலாம்ன்னு கிளம்பியாச்சு...
நாங்க நண்பர்கள் எல்லாம் ஒரு சுற்றுலா சென்றோம்...
சுற்றுலா முடிஞ்சு இப்போ ரெண்டு மாசம் முடிஞ்சு போச்சு...
இலங்கையின் மத்திய பகுதியில் மலை சார்ந்த இடங்கள் உண்டு..
அதனால மத்திய மலைநாடுன்னு சொல்லுவாங்க.
தேயிலைத் தோட்டங்களும், நீர்வீழ்ச்சிகளும் பார்க்க அருமையாக இருக்கும்...
பாக்குறதுக்கு ரொம்ப அழகான இடங்கள் இருக்கு...
அப்பிடி ஒரு அழகான இடம் தான் நாங்க போனது..
இடம் ஹற்றன் (Hatton) நகரம்...
நாங்க போனதுக்கு அடுத்த நாள் ஹற்றனுக்கு அடுத்த நகரத்தில் ஜனாதிபதியின் பேச்சு இருக்குதாம்..
அந்த விஷயம் எங்களுக்கு தெரியாது..
தெரிஞ்சிருந்தா நாங்க அந்த இடத்துக்கு சுற்றுலா போயிருக்கவே மாட்டோம்ல...
அதன் காரணமாக அங்க ஒரே பாதுகாப்பு அதிகாரிகள் குவிக்கப் பட்டிருந்தார்கள்...
பொலீஸ் மற்றும் படையினர்ன்னு ஒரே பாதுகாப்பு தான் போங்க...
:-)
அப்போ நாங்க ஹற்றன் நகரத்துக்கு உள்ளே நுழையும் போது ஒரு இடத்துல நம்மை நிறுத்தினாங்க பொலீஸ்...
சரின்னு ஒவ்வொருத்தரினதும் அடையாள அட்டையை வாங்கி பாத்துட்டு "நாளைக்கு அடுத்த டவுன்ல ஜனாதிபதியின் கூட்டம் இருக்கு, அதனால நீங்க இங்க தங்கக் கூடாது"ன்னான்...
நேரம் பின்னேரம். திரும்பி வரவும் முடியாது...
சரின்னு உயர் அதிகாரிகிட்ட பேசி முடிவெடுக்கலாம்ன்னு சொல்லிட்டு காவல் நிலையத்துக்கு வரச் சொன்னான்...
சரின்னு போனோம்..
அங்க ஒருத்தன், இவனால தான் பிரச்சினையே எனக்கு...
எங்க எல்லோரினதும் அடையாள அட்டையை தரச்
சொல்லி, வாங்கிப் படிச்சுட்டுருந்தான் அவன்...
எமது நண்பர் குழாமில் ஒரு பிராமணப் பையனும் இருக்கான்..
ஆனா நாம எப்போதும் ஜாதி, மதம்ன்னு பாக்குறதே இல்லை..
அவனும் அப்பிடி எல்லாம் பாக்குறதே இல்லை..
அது தான் நட்பு..
ஜாதி, மதம் பாக்குறது இல்லைல...
அவனோட ஐ.டி பாத்ததும் அவனைப் பாத்து கேட்டான் அந்த ஆளு, "நீ பேசாம கோயில்ல பூசை பண்ணிட்டு இருக்க வேண்டியது தானே, உனக்கு என்னத்துக்கு இந்த ட்ரிப் எல்லாம்???"...
இந்த கேள்வி கேட்டதும் எனக்கு கோபம் தலைக்கேறி விட்டது...
இவ்வளத்துக்கும் சுற்றுலா போன எமது நண்பர் குழாமில் இந்து,முஸ்லிம்,கிறிஸ்தவன்னு எல்லாருமே இருக்குறோம்...
அந்த கேள்வி கேட்ட முட்டாள் இவ்வளத்துக்கும் பொலீஸோ, படை அங்கத்தவனோ கிடையாது...
அவன் ஒரு ஊர்காவல் அதிகாரி..
அதுவும் அவன் ஒரு தமிழன்...
ஆனா எமது நாட்டுல தான் சட்டம் எல்லாம் கிடையாதுல்ல...
எதிர்த்து கேள்வி கேட்டா உள்ள தூக்கி போடுவாங்க..
பயம் வேற...
அந்த ஆளைப்
பார்த்தால் பத்தாம் வகுப்பு கூட தேறியிருக்க
மாட்டான் என்பது தெளிவாக புரிந்தது நமக்கு..
ஏன் அந்த கேவலமான கேள்வி கேக்கணும்ன்னு தோனிச்சு அவனுக்கு???
ஜாதி, மத வெறி பிடிச்சவனா அவன்???
இன்று கூட அவன் முகம் நினைச்சா எரிச்சல் தான் வருகிறது எனக்கு...
ஏன் பிராமணன் என்றால் கோயிலில் பூசை மட்டும் தான் பண்ண வேண்டுமா???
உல்லாசமாக ஒரு சுற்றுலா செல்ல முடியாதா???
கேவலமான பிறவி....
அவன் ஏன் அப்பிடி ஒரு கேள்வியைக் கேட்டாங்கிறது எனக்கு புரியவே இல்லை...
நான் என்ன சொல்ல வரேங்கிறதை சரியாக வார்த்தைகளில் கொண்டுவர முடியவில்லை..
ஆனாலும் வாசிக்கும் உங்களுக்கு என்ன சொல்ல வரேங்கிறது புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்...
நாயை கழுவி நடு வீட்டுல வச்சாலும் அதனுடைய புத்தி மாறாதுங்கிற மாதிரி தான் அந்த ஆளும்...
உரிய ஆளுக்கு உரிய பதவி வழங்கப் பட வேண்டும்...
அப்போ தான் அதுக்குரிய மரியாதை கிடைக்கும்...
அவனை விட உயர் அதிகாரி எல்லாம் நமக்கு தெரியும்..
அந்த விஷயம் தெரிஞ்ச உடனே போட்டிருந்த காட்சட்டை நனையாத குறையாக எம்மை அனுப்பி வைத்தான் அந்த ஆளு...
(ஏன் காட்சட்டை நனையும்ன்னு எல்லாம் கேள்வி கேக்கக் கூடாது என்னை... ஓகே??) :-)
அந்த கேவலமான பிறவியை சந்தித்தது தவிர சுற்றுலா நன்றாக அமைந்தது எமக்கு...
இலங்கையின் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக மத்திய மலைநாடு இருக்கின்றது...
அங்கே எடுத்த இரண்டு படங்களைப் பாருங்கள், உங்களுக்கே புரியும் எவ்வளவு அழகு என்று...
