Thursday, 16 October 2008

வகுப்பில் இனியவை !


சீரிய இளம் தென்றல்
வருடி - வெண்
உடையணிந்து
பேரூந்திலேறி
காட்சிகள் பலகண்டு
காட்டி
பயமறியாமல்
மணி ஒலித்ததும்
கேட்காமல்
காலாற நடந்து
வகுப்பறை - அகம்
சென்று ஆசனம்
செய்து
முடியிழந்தோனின்
முடிவற்ற வெடிகள்
கேட்டு - வெட்டு
வினாக்கள் பல
வினவி விடை
இல்லாது மணி
ஒலிக்க - நெட்டை
கொக்கு வந்து
நீலாம்பரி வசனம்
பேசி - உறக்கம் தனை
வரவழைக்க
செய்யாத ஒப்படை
பல செய்தேன்
என தலையாட்டி
வையத்தின் பொய்
எல்லாம் வாயில்
வரவழைத்து
ஐயகோ ! கேட்காதா
ஒசையுடன் மணி என
கடிகாரம் பார்த்து
விநாடிகளை வடம்
கொண்டிழுத்து விரட்டிவிட
மாமனிதன் உயிரியல்
அடுத்துவர
கொப்பியை எடுத்து
நான் ஓட
தெரியாத விடயத்தை
புத்தகம் தனில் கண்டு
அவன் உரைக்க
அதைப்பார்த்து நாம்
நகைக்க ,
என் உறவினர் கடல்
என அவன் தொடங்க
வாழ்த்துப்பாவாக
எமை காத்த பாவாக
கல்லூரி கீதம்
ஒலிக்க
போதுமடா சாமி - இவர்
அலுவை என
வீடு நோக்கி ஓடினேன்...
இரண்டரை வருடமாய் பெற்ற
இன்பம் - இனியவை
வாழ்வில் இனி இல்லை.
கண்ணீருடன்
நினைக்கின்றேன்
இனியவை வராதா ???
வகுப்பில் இனியவை !SocialTwist Tell-a-Friend

5 . பின்னூட்டங்கள்:

Anonymous said...

wowwho wrote this???????

Anonymous said...

y man? i wrote this :)

Anonymous said...

hmmm cool

Nimal on 2 January 2009 at 21:31 said...

//முடியிழந்தோனின்
முடிவற்ற வெடிகள்
கேட்டு//

இது பா'வில் தொடங்கி ரா'வில் முடியும் ஆசிரியரா?

//நெட்டை
கொக்கு வந்து
நீலாம்பரி வசனம்//

இது சே'யில் தொடங்கி கே'யில் முடிபவரா?

வேத்தியன் on 2 January 2009 at 21:40 said...

ஆமாங்ண்ணா...
சரியா கண்டுபிடிச்சிட்டீங்களே !!!
அவங்களே தான்.
முன்னனுபவம் பேசுதோ???

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.