Wednesday, 24 June 2009

100வது பதிவு - கொழுப்பு !!!

51 . பின்னூட்டங்கள்
வணக்கம் நண்பர்களே...

இது எனது 100வது பதிவு. இதுவரை காலமும் நான் எழுதிய ஆக்கங்களுக்கு எனக்கு ஊக்கம் அளித்து என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல...

இன்னும் அதிக பதிவுகள் எழுத் என்றும் உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறேன்...

________________________________________________________________________

இன்று நண்பர் கார்த்திகைப்பாண்டியனின் தங்கைக்கு திருமணம் என்று கூறியிருந்தார்...

புதுமணத் தம்பதிகளுக்கு எனது இதயபூர்வமான திருமணநாள் நல்வாழ்த்துகள் !!!

________________________________________________________________


கொழுப்பால நமது மக்கள் அதிகம் கஷ்டப்படுறாங்கப்பா...
அதிகமா கொழுப்புச் சத்து நிறைந்த உணவுப் பண்டங்களை சாப்பிட்டுவிட்டு பின்பு தொப்பையைக் குறைக்க காலையில எழும்பி ஓடுறது...
அதுமட்டுமில்லாம இப்போ எல்லா வீடுகளிலும் சகலருக்கும் இலவச இணைப்பா சக்கரை வியாதி வேற வந்து சேருது...
So, சாப்பிடுறத பாத்து கவனமா சாப்பிட்டு நோயில்லாம சந்தோஷமா வாழனும்..
என்ன நான் சொல்றது ??
:-)

உண்மையில எல்லோருக்கும் கொழுப்புச் சத்து அவசியம்.
போசணை அகத்துறிஞ்சல் (Nutrient absorption), நரம்பு கணத்தாக்கம் கடத்தல், கலமென்சவ்வின் (Cell membrane) நிலையைப் பேணல் போன்ற காரணங்களுக்காக நமது உடலில் கொழுப்பு அவசியமாகிறது.

ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுன்னு ஒளவையார் சும்மாவா சொல்லி வச்சாரு ??
அளவுக்கு மிஞ்சிய கொழுப்பினால் எடை அதிகரிப்பு, இதய நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம்...
அதனால அளவோடு கொழுப்பு இருக்கணும்..
இல்லைன்னா காலையில பீச் ஓரத்துல தான் ஓடனும்...
:-)


தேவையான கொழுப்புகள்

ஒற்றை நிரம்பாத கொழுப்புகள் (Monounsaturated Fats)


ஒற்றை நிரம்பாத கொழுப்புகள் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கவும், தாழ் அடர்த்தி லிப்போபுரோட்டீனைக் கரைக்கவும் (LDL - Low Density Lipoprotein) உதவும்.
அதேவேளை HDL எனப்படும் உயர் அடர்த்தி லிப்போபுரோட்டீனை அதிகளவில் உற்பத்தி செய்ய உதவும். (HDL - High Density Lipoprotein).

நிலக்கடலை, பாதம்பருப்பு, கனோலா எண்ணை, ஒலிவ் எண்ணை ஆகியவற்றில் இவ்வகை கொழுப்புகள் அதிகமுண்டு.
இவை உடல் எடை குறைவுக்கு அதிகம் உதவும்...


பன்மை நிரம்பாத கொழுப்புகள் (Polyunsaturated Fats)இவ்வகை கொழுப்புகளும் LDLஐக் குறைக்க உதவும்.

இவை கடலுணவு, சல்மொன் மற்றும் மீன் எண்ணை, சோளம், சோயா, சூரியகாந்தி எண்ணை ஆகியவற்றில் அதிகமுண்டு.

ஓமெகா 3 கொழுப்பமிலங்கள் இந்த வகையைச் சார்ந்தது தான்...


தேவையற்ற கொழுப்புகள்

நிரம்பிய கொழுப்புகள் (Saturated Fats)நிரம்பிய கொழுப்புகள் உடலுக்கு தீங்கானது.
இவை இரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிப்பதுடன், LDLஇன் அளவையும் அதிகரிக்கும்.

இவை அதிகமாக விலங்குணவுகளில் குறிப்பாக இறைச்சி, பாலுற்பத்திப் பொருட்கள், முட்டைகள், கடலுணவு ஆகியவற்றில் காணப்படும்.
சில தாவர உணவுகளிலும் இருக்கும்.
குறிப்பாக பால்ம் எண்ணை, தேங்காய் எண்ணை ஆகியவற்றில் காணப்படும்.


Trans Fatsஅதிக காலம் பழுதடையாமல் இருக்க எண்ணையை நீர்மயப்படுத்தும் தொழிநுட்பம் விஞ்ஞானிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் உருவானது தான் இவ்வகை கொழுப்பமிலங்கள்.
இது சற்று சிக்கலான தொழிநுட்பமாகும்.

இவ்வகை கொழுப்புகள் அதிகமாக வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படும் உணவு வகைகளில் தான் இருக்கும்.
முக்கியமாக அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவு வகைகள், வறுக்கப்பட்ட உணவு வகைகள் ஆகியவற்றில் அதிகமாக இருக்கும்.
மைக்ரோவேவ் பொப்கோர்ன், French Fries என்று சொல்லப்படும் கிழங்குப் பொரியல் ஆகியவை இந்த கொழுப்பு அடங்கிய உணவுகளுக்கு சிறந்த உதாரணங்கள்.

ஆகவே சிறந்த உணவு வகைகளை உண்டு நலமாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
:-)

அன்புடன்,
100வது பதிவு - கொழுப்பு !!!SocialTwist Tell-a-Friend

Sunday, 21 June 2009

மன உளைச்சலுக்கு என்ன தான் தீர்வு ???

50 . பின்னூட்டங்கள்

தற்போது உலகம் வேகமாக நகர்கிறது.
தினமும் தலைக்கு மேல் வேலை.
கணவன், மனைவி முகத்தை ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதென்பது குறைந்து வருகிறது.
குடும்பத்திலுள்ள அனைவரும் ஒன்றாக இருந்து உணவு உட்கொள்வதென்பது குறைந்து வருகிறது.
அனைவருக்கும் அளவுக் கதிகமான வேலை.
இதனால் மிஞ்சுவது என்ன??
தலையிடும், மன உளைச்சலும் தான்...


இங்கு மன உளைச்சலை வென்று எவ்வாறு சந்தோஷமாக இருக்கலாம் என்பது பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்.
மன உளைச்சலை எதிர்கொள்வது என்பது இலகுவான ஒன்று அல்ல.


மன உளைச்சல் என்பது தற்போதைய உலகில் எல்லோரும் அனுபவிப்பது தான்..
ஆனால் பிரச்சினை என்னவென்றால் யாரும் அதை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்ள நினைக்காதது தான்...
இதனால் மனதின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகுமே ஒழிய ஒருபோதும் குறைய வாய்ப்பேயில்லை...
”நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்” என இன்னொருவரிடம் சொன்னால் எங்கே அவர் நம்மை தப்பாக புரிந்து கொண்டு விடுவாரோ என்று வெட்கப்பட்டே பலர் அது பற்றி வெளிப்படுத்துவது கிடையாது...


உங்களுடைய மனதின் தாக்கத்தைக் குறைக்க இலகுவான வழிகளே அதிகமாக இருக்கின்றன...
அவை என்னவென்று பார்க்கலாம்...


மனதுவிட்டு பேசுதல் :
மன உளைச்சலை மனதுக்குள்ளேயே வைத்து பூட்டி விடுவதால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை.
இன்னொருவரிடம் பேச வேண்டும். அவர் சக நண்பராக இருக்கலாம், மனைவியாக இருக்கலாம், நலன் விரும்பியாக இருக்கலாம்..
அவருடன் மனம்விட்டு பேசுவதால் உங்களுக்கு மனதின் பாரம் சற்று இறங்குவதை நீங்களாகவே உணர்வீர்கள்.
சிலவேளை நீங்கள் விஷயத்தை பகிர்ந்து கொண்டவர் அந்தப் பிரச்சினைக்கு தகுந்த தீர்வையும் சொல்வார்...
எதையும் வெளிக்காட்டாமல் இருந்தால் மன உளைச்சல் அதிகமாகி நாளடைவில் தற்கொலைக்குக் கூட முயல்வர்...

இதைச் சொல்லும் போது மிகுந்த மனவேதனை..
என்னுடன் முதலாம் வகுப்பிலிருந்து உயர்தரம் வரை படித்த என்னுடைய நண்பன் ஒரு மாதத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டான்..
வெளியில் நான் மகிழ்ச்சியாக இருப்பது போல நடித்தாலும் இன்னும் என்னுள் அந்த சோகமும் அது தந்த தாக்கமும் மறையவே இல்லையென்பது தான் உண்மை.

அவனுக்கு என்ன பிரச்சினை இருந்திருந்தால்ம் அதை எம்முடன் பகிர்ந்து கொண்டிருந்தால் நாம் நம்மாலான உதவிகளைச் செய்து அல்லது தீர்வுகளை சொல்லியிருப்போம்.
அதை விட்டுவிட்டு தற்கொலை செய்வதென்பது மிகுந்த கோழைத்தனம்.

ஆகவே வாய் திறந்து பேச வேண்டும்.
அதுவே பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்...


சத்துள்ள உணவு உட்கொள்ளல் :
மன உளைச்சலுக்கும் உணவுக்கும் என்ன சம்பந்தம் என்று பார்க்கிறீர்களா???
சம்பந்தம் இருக்கிறது.
சாதாரணமாக நாம் உணவு உட்கொள்ளாமல் இருக்கும் போது ஏதாவது ஒரு வேலையை தெளிவாக செய்ய முடிகிறதா??
முடிவதில்லை தானே???
சாதாரண ஒரு வேலையையே தெளிவாக செய்ய முடிவதில்லையென்றால் மன உளைச்சலுக்குக் காரணமான பிரச்சினைக்கு தெளிவாக ஒரு முடிவு காண்பது என்பது கனவிலும் சாத்தியமில்லை..

முதலில் வேளா வேளைக்கு சாப்பிட்டு உடலை திடமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் மனதை தாக்கும் ஒரு பிரச்சினைக்கு தெளிவாக ஒரு தீர்வு காணலாம்...


தினமும் உடற்பயிற்சி செய்தல் :
அதிகமாக தொப்பையாக இருப்பவர்களிடமும் அதிகமாக மெல்லியதாக இருப்பவர்களிடமும் தன்னம்பிக்கை குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. (முன்பு படித்தது தான். எங்கு என்பது ஞாபகமில்லை..)
ஆகவே மனதை திடமாக வைத்துக் கொள்ள முதலில் உடலை திடமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஏதாவது விளையாட்டில் தினமும் ஈடுபட வேண்டும்.
அல்லது தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
அப்போது நமது உடல் சுறுசுறுப்பாக இயங்குவதோடு இரத்த ஓட்டம் சீராக இருப்பதால் மனதுக்கும் ஒரு தெம்பு கிடைப்பதை நீங்களாகவே உணர்வீர்கள்...
மனது புத்துணர்ச்சியுடன் காணப்பட்டால் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் என்பது இலகுவாக சாத்தியமாகும் அல்லவா ???

அத்துடன் தினமும் குறைந்தது ஆறு மணிநேர நித்திரையும் அவசியம்.
நித்திரைக் குழப்பமும் மன அமைதியின்மைக்கு காரணமாக இருக்கும்...


தியானம் :
”நமது மனம் சரியில்லை. ஒரே பிரச்சினை” என்று நாம் பலரிடம் சொன்னால் உடனே அவர்கள் நமக்கு சொல்வது தியானம் செய்யுங்கள் என்று தான்...
தியானம் தான் இலகுவான வழி என்றும் சொல்வார்கள்..

உண்மை என்ன தெரியுமா???
தியானம் என்பது தேவையேயில்லாத ஒன்று..
யாருக்கு ???
மேற்கூறிய வழிகளை செவ்வனே செய்து வரும் ஒருவருக்கு...

அந்த இலகுவான வழிகளை எல்லாம் விட்டுவிட்டு மனக் குழப்பத்துடன் தியானம் செய்தால் மிகுந்த கஷ்டமாகிவிடும்.
யோசித்துப் பாருங்கள்.
தியானம் மேற்கொள்ள முதலில் தேவையானது நிம்மதியான மனம்.
அது இல்லையென்று தானே பிரச்சினையே..
அங்கே இருந்து எங்கு நாம் தியானம் மேல் கவனம் செலுத்துவது ??
:-)

அதற்காக தியானம் செய்ய வேண்டாம் என்று நான் யாருக்கும் சொல்லப் போவதில்லை..
மேற்கூறிய வழிகளை முதலில் செய்து தெளிவான மனதௌ முதலில் பெறுங்கள்.
பிறகு ஒரு அமைதியான இடத்தில் இருந்து கண்களை மூடி தியானம் மேற்கொள்ளலாம்...


மருத்துவ ஆலோசனை :
மேற்கூறிய இலகுவான வழிகள் மூலம் அமைதி பெறாத ஒருவர் அடுத்து செய்ய வேண்டியது ஒரு மன நல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது தான்...

மருந்துகள் மூலம் இதை குணப்படுத்த முடியாது..
எப்படி சிகிச்சை அளிப்பது என்பது அவர்களுக்கு தெரியும்..
அவர்களின் மூலம் சிறந்த பயன் பெறலாம்...


அன்புடன்,
மன உளைச்சலுக்கு என்ன தான் தீர்வு ???SocialTwist Tell-a-Friend

Thursday, 18 June 2009

எடை கூடிய நாயை வளர்த்ததற்கு உரிமையாளருக்கு தடை !!!

14 . பின்னூட்டங்கள்
தனது வளர்ப்பு பிராணியான நாயின் உடல்நலத்தை சரியாக கவனிக்காமல் விட்டதால் நாயின் உடல் எடை கூடியதன் விளைவாக உரிமையாளருக்கு அதற்கு மேல் பிராணிகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது நடந்தது இங்கிலாந்தில்...Border Collie இனத்தைச் சேர்ந்த Taz...


ஐந்தே வயதான Taz எனப்படும் இந்த நாயானது border collie இனத்தை சார்ந்தது.
இந்த வளர்ப்பு நாயின் சொந்தக்காரர் 63 வயதான ronald West என்பவர்.
நாயின் உடல்நலத்தைப் பற்றி சிந்திக்காமல் உணவுமுறையை பழக்கியதால் அந்த நாயின் உடல் எடை இருக்க வேண்டிய அளவிற்கு இருமடங்காக இருந்தது.


தகவல் அறிந்தவுடனே Brighton and Hove City Councilஆல் பொறுப்பெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது.
அப்போது நாயின் எடை 88 றாத்தலாக இருந்ததாம்.


இதனால் Ronald West குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவர் அடுத்த 12 மாதங்களுக்கு எந்த ஒரு வளர்ப்பு பிராணியையும் வளர்க்க முடியாது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


யாரோ ஒருவர் கொடுத்த தகவலின் படி மிருக நல அதிகாரிகள் Brightonஇலுள்ள Westஇன் வீட்டுக்கு சென்றுள்ளனர்.


”நான் ஒரு வளர்ப்புப் பிராணி விரும்பி எனவும் தனது நாயுக்கு சிறந்ததை தர வேண்டும் என முடிவு செய்து செயற்பட்டதன் விளைவே இது” எனவும் West கூறியுள்ளார்.


தற்போது Tazஇன் எடை 58 றாத்தலாக குறைந்துள்ளதாம்.
முதலில் தொடர்ந்து 10 நிமிடம் கூட ஓட முடியாமலிருந்த Taz தற்போது ஒரு மணிநேரம் வரை ஒடுகிறதாம்...


தற்போது Taz வளர்ப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாம்..
ஆனால் Westஇடம் அல்ல... :-)
Councilக்கு West அபராதமாக £1,477 செலுத்த வேண்டும்.


நம்ம நாடுகள்ல எல்லாம் மிருகங்களை வதை செய்தால் என்ன நடக்கும் தெரியுமா????
தெரியாதா????
விடை
|
|
|
|
|
|
ஒன்னுமே நடக்காது...
:-(

வருத்தம் தான்...


அன்புடன்,
எடை கூடிய நாயை வளர்த்ததற்கு உரிமையாளருக்கு தடை !!!SocialTwist Tell-a-Friend

Wednesday, 17 June 2009

மணற் சிற்பங்கள்...

40 . பின்னூட்டங்கள்அன்புடன்,
மணற் சிற்பங்கள்...SocialTwist Tell-a-Friend

Sunday, 14 June 2009

தமிழ் பதிவர்களின் அலெக்ஸா தரவரிசை...

38 . பின்னூட்டங்கள்
சிறிது நாட்கள் வேலைகளுக்குப் பிறகு ப்ளாக் பக்கம் வந்தா ஏதோ அலெக்ஸா ரேங்கிங்ன்னு பேச்சு அடிப்பட்டது...

சரி நாமளும் பாக்கலாம்ன்னு சொல்லி போனா அங்கே ஒட்டு மொத்த தளங்களினது கணக்கு வழக்கும் இருக்கு...

நாம விடுவோமா???
நம்ம பதிவர்களின் தரவரிசையையும் அறிந்தேன்..
அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்...

இதிலுள்ள தகவல்கள் 14/06/2009 காலை 11 மணியிலிருந்து பகல் 2 மணிக்குள் நான் பார்வையிட்டவை...
ஆகவே இப்போது தகவல் மாறியிருந்தால் மன்னிக்கவும்...

நான் பெயர் குறிப்பிட மறந்த பதிவுலக நண்பர்கள் மன்னிக்கவும்...
உங்கள் தளத்தின் தகவல்களை ”http://www.alexa.com/siteinfo/உங்கள் தள முகவரி” என்ற முகவரியினூடு பார்வையிடலாம்...

பதிவர்களின் வலைப்பூவின் பெயரையே குறிப்பிட்டுள்ளேன்...
வலைப்பூ பெயர்களிலேயே தொடுப்பும் இருக்கிறது.
அதை க்ளிக்கி அலெக்ஸா பக்கம் சென்று பார்க்கலாம்...முதல் 200,000க்குள் நண்பர் தேவாவின் வலைப்பூ இருப்பது மிக்க மகிழ்ச்சி...

அன்புடன்,
தமிழ் பதிவர்களின் அலெக்ஸா தரவரிசை...SocialTwist Tell-a-Friend

Saturday, 13 June 2009

என்ன செய்யட்டும் ???

27 . பின்னூட்டங்கள்
கடந்த ஒரு வார காலமாக ஒரே வேலை...வலையுலகம் பக்கம் தலைவைத்தே படுக்க இயலவில்லை.
சக பதிவர்களின் பதிவுகள் எல்லாவற்ரையும் முழுவதுமாக படிக்க இயலாவிட்டாலும் ஏதோ அவசர அவசரமாக படித்து முடித்தேன்.
பின்னூட்டம் போட மறந்துவிட்டேன்.
மன்னிக்கவும்... :-)வேலை வேலைன்னு சொன்னா போதுமா??
என்னா வேலைன்னு சொல்ல வேணாம்???
இந்த கமிங் ஜூலையில தான் என்னோட காலேஜ் தொடக்கம்.
அட்மிஷன் சம்பந்தமான வேலைகள், விசா சம்பந்தமான வேலைகள்ன்னு ஒரே பிஸி...
அது தான் காரணம்...ஒருமாதிரியா வேலைகள் எல்லாம் முடிஞ்சுதுங்க..
இனி கொண்டாட்டம் தான்...
ரொம்ப குஷியா நாளைக்கு ஒரு பதிவு போட்டுட்டுருந்த என்னைப் போய் இந்த வேலைகள் எல்லாம் கெடுத்து பதிவுகள் வாசிக்கக் கூட முடியாத சூழுலுக்கு கொண்டு போய் விட்டுருச்சு... :-(எங்கடா இவன் தொல்லை குறைஞ்சு போச்சுனு யாரும் சந்தோஷப்பட வேண்டாம்..
வேலை முடிஞ்சு எழுந்திட்டேன்...
இதோ வரேன்... :-)இப்பிடில்லாம் 10 நாளா ஒரு பதிவும் எழுதாம, வாசிக்காம இருந்ததேயில்லப்பா...
என்னா கஷ்டமா இருக்கு... :-)விசா எடுக்கப் போன போது ஒரு சம்பவம்...
அப்ளிகேஷன் செண்டர் உள்ளே யாரும் மொபைல் பாவிக்கக் கூடாதுன்னு முன்னாலேயே எழுதிப் போட்டாருக்காங்க...
நாம யாரு??
ஸ்கூலுல ஆசிரியர் சொல்லியே கேக்கலை..
இவிங்க சொல்லியா கேக்கப் போறோம்???


உள்ள இருந்த போது நண்பன் ஒருவன் மொபைல்ல கூப்பிட்டான்..
எடுத்து பேசிட்டு இருந்த போது ஒருத்தன் வந்து வேணாம்ன்னான்..
வச்சிட்டேன்...


எனக்கு பக்கத்துல ஒரு “ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” ரக ஃபிகர்...
அவங்க மொபைல் கூட சிணுங்க எடுத்து பேசினாங்க...
ஒருத்தன் வந்து வேணாம்ன்னு சொல்லல !!!
முதல்ல எனக்கு தடுத்தவனைப் பார்த்தா அவன் ஒரு ஓரமா நின்னு சைட்டிங்...அவனுக்கு மேல கோபமா வந்தாலும்.........
என்னை மாதிரித் தானே அவனும் இருப்பான்னு நெனைச்சு மனசை கட்டுப் படுத்திகிட்டேன்....
:-)


இனி வழமைப் போலவே பதிவுகள் வரும்..
பின்னூட்டங்கள் வரும்..
வெகு சீக்கிரமா 100வது பதிவும் வரப்போகுது...
செஞ்சரி பதிவு போட ஆவலா இருக்கேன்...
:-)


அன்புடன்,
என்ன செய்யட்டும் ???SocialTwist Tell-a-Friend

Thursday, 4 June 2009

சிங்களம் 2 தமிழ்...

63 . பின்னூட்டங்கள்

வலை நண்பர்களே,
சில தமிழ் வார்த்தைகளையும் அதற்குரிய சிங்கள வார்த்தைகளையும் தருகிறேன்.

முதல்ல வாசிங்க.
அப்புறம் பாருங்க சிங்களம் எவ்வளவு ஈஸின்னு...
:-)செளபாக்கியம் - செளபாக்கிய
பெயர்(நாமம்) - நம
சத்தம் - ஷத்த
அம்மா - அம்மே
காலம் - காலய
வியாபாரம் - வியாபார
ஆடம்பரம் - ஆடம்பரய
ஆச்சிரமம் - ஆசிரமய
உலகம் - லோகய
கடை - கடய
தமிழ் - தெமல
சிரமதானம் - ஷ்ரமதான
ஆசை - ஆசாவ
வீதி - வீதிய
சபை - சபாவஎன்ன சிங்களம் ஈஸியா இருந்துச்சா???
ஏன் ஈஸியா இருக்காது, தமிழ் வார்த்தையில ஒரு எழுத்தை மட்டும் மாத்தி வச்சா ???
:-)


என்ன தான் சொன்னாலும் சிங்களத்துல இருந்து தான் தமிழன் வார்த்தைகளை(யும்) சுட்டான் என்பதற்கு இது ஒன்றே சாட்சி என்று நம் சகோதர சிங்கள மக்கள் கூறிக் கொள்வதாக உளவுத்துறை அறிக்கை விட்டுருக்கு...
என்ன செய்ய ???
வழக்கம் போல இதையும் நம்புவோம்...சிட்டுவேஷன் சாங் கேளுங்க...

எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ???


அன்புடன்,
சிங்களம் 2 தமிழ்...SocialTwist Tell-a-Friend

Monday, 1 June 2009

டைட்டானிக் விபத்தில் பிழைத்த கடைசி நபரும் மரணம் !

44 . பின்னூட்டங்கள்
டைட்டானிக் கப்பல் பெரும் விபத்து நிகழ்ந்த நேரத்தில் அந்தக் கப்பலில் இருந்து உயிர்தப்பியவர்கள் பயணம் செய்தவர்களோடு ஒப்பிடும் போது வெகு சிலர் மட்டுமே.


அப்படி உயிர்தப்பியவர்களில் பலர் மரணித்துவிட்டனர்.
உயிருடன் இருந்தவர் Millvina Dean.
அவரும் தனது 97வது வயதில் மரணமாகி இருக்கிறார்.


உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த அவர் கடந்த சனிக்கிழமை காலையில் இங்கிலாந்தின் Southampton நகரில் உயிரிழந்திருக்கிறாராம்.
டைட்டானிக் கப்பலில் அவர் பயணம் செய்யும் போது அவருக்கு வயது 9 வாரங்கள் மட்டுமே...
டைட்டானிக் விபத்து நடந்தது 1912ல்.Millvina DeanMillvina என்று அழைக்கப்படும் Elizabeth Gladys Dean 1912ஆம் ஆண்டு, ஃபெப்ரவரி 2ம் திகதி பிறந்தார்.
பிறந்து 2 மாதங்களில் பெற்றோருடன் டைட்டானிக் கப்பலில் பயணம் செய்திருக்கிறார்.
அமெரிக்காவில் குடும்பத்தோடு Kansas மாகாணத்துக்கு பயணிக்கும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


விபத்து நகழ்ந்த நேரத்தில் Millvinaவின் தந்தை Mr.Dean தனது மனைவி, மகள், மகன் ஆகியோரை கப்பலின் மேற்தளத்துக்கு கொண்டு சென்று விட்டுவிட்டார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் தப்பிக்க Dean விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார்.


அதன் பிறகு இங்கிலாந்து வந்து வாழ்ந்து வந்தார் Millvina.
கடந்த சனிக்கிழமை தனது 97வது வயதில் உயிரிழந்து இருக்கிறார் Millvina.
ஆக டைட்டானிக் கப்பல் விபத்தில் இருந்து உயிர்தப்பியவர்களில் கடைசி நபரும் தற்போது உயிரிழந்திருக்கிறார்...


அன்புடன்,
டைட்டானிக் விபத்தில் பிழைத்த கடைசி நபரும் மரணம் !SocialTwist Tell-a-Friend
 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.