தற்போது உலகம் வேகமாக நகர்கிறது.
தினமும் தலைக்கு மேல் வேலை.
கணவன், மனைவி முகத்தை ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதென்பது குறைந்து வருகிறது.
குடும்பத்திலுள்ள அனைவரும் ஒன்றாக இருந்து உணவு உட்கொள்வதென்பது குறைந்து வருகிறது.
அனைவருக்கும் அளவுக் கதிகமான வேலை.
இதனால் மிஞ்சுவது என்ன??
தலையிடும், மன உளைச்சலும் தான்...
இங்கு மன உளைச்சலை வென்று எவ்வாறு சந்தோஷமாக இருக்கலாம் என்பது பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்.
மன உளைச்சலை எதிர்கொள்வது என்பது இலகுவான ஒன்று அல்ல.
மன உளைச்சல் என்பது தற்போதைய உலகில் எல்லோரும் அனுபவிப்பது தான்..
ஆனால் பிரச்சினை என்னவென்றால் யாரும் அதை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்ள நினைக்காதது தான்...
இதனால் மனதின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகுமே ஒழிய ஒருபோதும் குறைய வாய்ப்பேயில்லை...
”நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்” என இன்னொருவரிடம் சொன்னால் எங்கே அவர் நம்மை தப்பாக புரிந்து கொண்டு விடுவாரோ என்று வெட்கப்பட்டே பலர் அது பற்றி வெளிப்படுத்துவது கிடையாது...
உங்களுடைய மனதின் தாக்கத்தைக் குறைக்க இலகுவான வழிகளே அதிகமாக இருக்கின்றன...
அவை என்னவென்று பார்க்கலாம்...
மனதுவிட்டு பேசுதல் :
மன உளைச்சலை மனதுக்குள்ளேயே வைத்து பூட்டி விடுவதால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை.
இன்னொருவரிடம் பேச வேண்டும். அவர் சக நண்பராக இருக்கலாம், மனைவியாக இருக்கலாம், நலன் விரும்பியாக இருக்கலாம்..
அவருடன் மனம்விட்டு பேசுவதால் உங்களுக்கு மனதின் பாரம் சற்று இறங்குவதை நீங்களாகவே உணர்வீர்கள்.
சிலவேளை நீங்கள் விஷயத்தை பகிர்ந்து கொண்டவர் அந்தப் பிரச்சினைக்கு தகுந்த தீர்வையும் சொல்வார்...
எதையும் வெளிக்காட்டாமல் இருந்தால் மன உளைச்சல் அதிகமாகி நாளடைவில் தற்கொலைக்குக் கூட முயல்வர்...
இதைச் சொல்லும் போது மிகுந்த மனவேதனை..
என்னுடன் முதலாம் வகுப்பிலிருந்து உயர்தரம் வரை படித்த என்னுடைய நண்பன் ஒரு மாதத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டான்..
வெளியில் நான் மகிழ்ச்சியாக இருப்பது போல நடித்தாலும் இன்னும் என்னுள் அந்த சோகமும் அது தந்த தாக்கமும் மறையவே இல்லையென்பது தான் உண்மை.
அவனுக்கு என்ன பிரச்சினை இருந்திருந்தால்ம் அதை எம்முடன் பகிர்ந்து கொண்டிருந்தால் நாம் நம்மாலான உதவிகளைச் செய்து அல்லது தீர்வுகளை சொல்லியிருப்போம்.
அதை விட்டுவிட்டு தற்கொலை செய்வதென்பது மிகுந்த கோழைத்தனம்.
ஆகவே வாய் திறந்து பேச வேண்டும்.
அதுவே பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்...
சத்துள்ள உணவு உட்கொள்ளல் :
மன உளைச்சலுக்கும் உணவுக்கும் என்ன சம்பந்தம் என்று பார்க்கிறீர்களா???
சம்பந்தம் இருக்கிறது.
சாதாரணமாக நாம் உணவு உட்கொள்ளாமல் இருக்கும் போது ஏதாவது ஒரு வேலையை தெளிவாக செய்ய முடிகிறதா??
முடிவதில்லை தானே???
சாதாரண ஒரு வேலையையே தெளிவாக செய்ய முடிவதில்லையென்றால் மன உளைச்சலுக்குக் காரணமான பிரச்சினைக்கு தெளிவாக ஒரு முடிவு காண்பது என்பது கனவிலும் சாத்தியமில்லை..
முதலில் வேளா வேளைக்கு சாப்பிட்டு உடலை திடமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் மனதை தாக்கும் ஒரு பிரச்சினைக்கு தெளிவாக ஒரு தீர்வு காணலாம்...
தினமும் உடற்பயிற்சி செய்தல் :
அதிகமாக தொப்பையாக இருப்பவர்களிடமும் அதிகமாக மெல்லியதாக இருப்பவர்களிடமும் தன்னம்பிக்கை குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. (முன்பு படித்தது தான். எங்கு என்பது ஞாபகமில்லை..)
ஆகவே மனதை திடமாக வைத்துக் கொள்ள முதலில் உடலை திடமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஏதாவது விளையாட்டில் தினமும் ஈடுபட வேண்டும்.
அல்லது தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
அப்போது நமது உடல் சுறுசுறுப்பாக இயங்குவதோடு இரத்த ஓட்டம் சீராக இருப்பதால் மனதுக்கும் ஒரு தெம்பு கிடைப்பதை நீங்களாகவே உணர்வீர்கள்...
மனது புத்துணர்ச்சியுடன் காணப்பட்டால் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் என்பது இலகுவாக சாத்தியமாகும் அல்லவா ???
அத்துடன் தினமும் குறைந்தது ஆறு மணிநேர நித்திரையும் அவசியம்.
நித்திரைக் குழப்பமும் மன அமைதியின்மைக்கு காரணமாக இருக்கும்...
தியானம் :
”நமது மனம் சரியில்லை. ஒரே பிரச்சினை” என்று நாம் பலரிடம் சொன்னால் உடனே அவர்கள் நமக்கு சொல்வது தியானம் செய்யுங்கள் என்று தான்...
தியானம் தான் இலகுவான வழி என்றும் சொல்வார்கள்..
உண்மை என்ன தெரியுமா???
தியானம் என்பது தேவையேயில்லாத ஒன்று..
யாருக்கு ???
மேற்கூறிய வழிகளை செவ்வனே செய்து வரும் ஒருவருக்கு...
அந்த இலகுவான வழிகளை எல்லாம் விட்டுவிட்டு மனக் குழப்பத்துடன் தியானம் செய்தால் மிகுந்த கஷ்டமாகிவிடும்.
யோசித்துப் பாருங்கள்.
தியானம் மேற்கொள்ள முதலில் தேவையானது நிம்மதியான மனம்.
அது இல்லையென்று தானே பிரச்சினையே..
அங்கே இருந்து எங்கு நாம் தியானம் மேல் கவனம் செலுத்துவது ??
:-)
அதற்காக தியானம் செய்ய வேண்டாம் என்று நான் யாருக்கும் சொல்லப் போவதில்லை..
மேற்கூறிய வழிகளை முதலில் செய்து தெளிவான மனதௌ முதலில் பெறுங்கள்.
பிறகு ஒரு அமைதியான இடத்தில் இருந்து கண்களை மூடி தியானம் மேற்கொள்ளலாம்...
மருத்துவ ஆலோசனை :
மேற்கூறிய இலகுவான வழிகள் மூலம் அமைதி பெறாத ஒருவர் அடுத்து செய்ய வேண்டியது ஒரு மன நல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது தான்...
மருந்துகள் மூலம் இதை குணப்படுத்த முடியாது..
எப்படி சிகிச்சை அளிப்பது என்பது அவர்களுக்கு தெரியும்..
அவர்களின் மூலம் சிறந்த பயன் பெறலாம்...
அன்புடன்,
50 . பின்னூட்டங்கள்:
நல்ல பயனுள்ள பதிவு..
ரொம்ப எளிமையான வழி....மனதுக்குப் பிடித்த இசை கேட்பது!!!!
இந்தப் பதிவுக்குப் பூங்கொத்து!
உபயோகமான பதிவுதான்..
Thank you..
நல்ல அலசல் வேத்தியன்
உங்களின் நண்பரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
அருமையான பதிவு...வேத்தியன்
நல்லதொரு பதிவு.
தீப்பெட்டி said...
நல்ல பயனுள்ள பதிவு..//
நன்றி...
அன்புடன் அருணா said...
ரொம்ப எளிமையான வழி....மனதுக்குப் பிடித்த இசை கேட்பது!!!!
இந்தப் பதிவுக்குப் பூங்கொத்து!//
பூங்கொத்துக்கு மிக்க நன்றி அருணா...
லோகு said...
உபயோகமான பதிவுதான்..
Thank you..//
நன்றி லோகு...
S.A. நவாஸுதீன் said...
நல்ல அலசல் வேத்தியன்
உங்களின் நண்பரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்//
நன்றி நண்பரே...
அத்திரி said...
அருமையான பதிவு...வேத்தியன்//
நன்றி நன்றி...
துபாய் ராஜா said...
நல்லதொரு பதிவு.//
நன்றி ராஜா...
நல்ல கட்டுரை தியானம் செய்யக்கூடாது என்பதும் உண்மைதான். தியானத்தில் உட்கார்ந்தால் பழைய நினைவுகள்தான் நம்மிடம் தோன்றும். எந்த பிரச்னையும் இல்லாதவர்களுக்குத்தான் தியானம் வசப்படும். அடுத்தவர்களிடம் பிரச்னையை சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் யார் சார் நாம் சொல்வதை கேட்க தயாராக இருக்கிறார்கள். அதனால் நான் கடைபிடிக்கும் வழி. தினமும் உள்ளத்தில் தோன்றுவதை டைரியாக எழுதுகிறேன். டைரி எழுதியபிறகு புத்துணர்ச்சி கிடைக்கிறது. நண்பர்கள் இந்த முறையை கடைபிடிக்கலாம்.
நன்றி
தேன் தமிழ் பாலா
பாலா said...
நல்ல கட்டுரை தியானம் செய்யக்கூடாது என்பதும் உண்மைதான். தியானத்தில் உட்கார்ந்தால் பழைய நினைவுகள்தான் நம்மிடம் தோன்றும். எந்த பிரச்னையும் இல்லாதவர்களுக்குத்தான் தியானம் வசப்படும். அடுத்தவர்களிடம் பிரச்னையை சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் யார் சார் நாம் சொல்வதை கேட்க தயாராக இருக்கிறார்கள். அதனால் நான் கடைபிடிக்கும் வழி. தினமும் உள்ளத்தில் தோன்றுவதை டைரியாக எழுதுகிறேன். டைரி எழுதியபிறகு புத்துணர்ச்சி கிடைக்கிறது. நண்பர்கள் இந்த முறையை கடைபிடிக்கலாம்.
நன்றி
தேன் தமிழ் பாலா//
வாங்க பாலா..
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...
நாம் சொல்வதை கேட்க ஒருவராவது வர மாட்டாரா??
:-)
நீங்கள் சொல்வதும் சிறந்த முறை தான்..
நன்றி...
நல்ல பயனுள்ள பதிவு..
Suresh Kumar said...
நல்ல பயனுள்ள பதிவு..//
thanks Suresh...
தற்காலத்திற்கு தேவையான பதிவு. எது மன உளைச்சல் என்பது தெரியாமலே பலர் அவதி படுகின்றனர். அனேகமாக அது இல்லாதவர்களே இல்லை என கூறலாம். பதிவிற்கு நன்றி.
காலத்திற்கேற்ற பயனுள்ள பதிவு நண்பா
வேத்தியன்!!
நல்ல பதிவு!!பூங்கொத்தெல்லாம் வாங்கிட்டீங்க!!!
ரொம்ப நல்லா சொல்லிட்டு வந்தீங்க......
///மேற்கூறிய இலகுவான வழிகள் மூலம் அமைதி பெறாத ஒருவர் அடுத்து செய்ய வேண்டியது ஒரு மன நல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது தான்...////
இங்க இடிச்சிட்டீங்களே...இடிச்சிட்டீங்களே....(மன நோயாளர்கள் வேதனைப் படப் போகிறார்கள்......ஹி......ஹி......சும்மா.......)
அப்படியே எங்க ஏரியாவுக்குள்ளும் வாரீங்களா???.....
medicines will not erase sadness but will help to control depression and make the person functional
அடடே வேத்தியசுவாமிகள் அருளுரை வழங்கியிருக்கிறார்கள்..அனைவரும் கேட்டு பயன் பெறுங்கள்... ஹிஹி!
நிகழ்காலத்தில் இல்லாமல் எதிர்காலத்தை அல்லது இறந்தகாலத்தைப் பற்றி கவலைப்படுவது மன உளைச்சலுக்கு முக்கிய காரணம்.,
மன உளைச்சல் என்பது தற்போதைய உலகில் எல்லோரும் அனுபவிப்பது தான்..ஆனால் பிரச்சினை என்னவென்றால் யாரும் அதை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்ள நினைக்காதது தான்...இதனால் மனதின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகுமே ஒழிய ஒருபோதும் குறைய வாய்ப்பேயில்லை...”
உண்மை வேத்தியரே....
அருமையான பதிவு
வாழ்த்துக்கள்....
தமிழ்நாட்டுத்தமிழன். said...
தற்காலத்திற்கு தேவையான பதிவு. எது மன உளைச்சல் என்பது தெரியாமலே பலர் அவதி படுகின்றனர். அனேகமாக அது இல்லாதவர்களே இல்லை என கூறலாம். பதிவிற்கு நன்றி.//
நன்றிங்க...
ஆ.ஞானசேகரன் said...
காலத்திற்கேற்ற பயனுள்ள பதிவு நண்பா//
மிக்க நன்றி...
thevanmayam said...
வேத்தியன்!!
நல்ல பதிவு!!பூங்கொத்தெல்லாம் வாங்கிட்டீங்க!!!//
வாங்க தேவா..
ஆமா மகிழ்ச்சி தான்..
:-)
சப்ராஸ் அபூ பக்கர் said...
ரொம்ப நல்லா சொல்லிட்டு வந்தீங்க......
///மேற்கூறிய இலகுவான வழிகள் மூலம் அமைதி பெறாத ஒருவர் அடுத்து செய்ய வேண்டியது ஒரு மன நல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது தான்...////
இங்க இடிச்சிட்டீங்களே...இடிச்சிட்டீங்களே....(மன நோயாளர்கள் வேதனைப் படப் போகிறார்கள்......ஹி......ஹி......சும்மா.......)
அப்படியே எங்க ஏரியாவுக்குள்ளும் வாரீங்களா???.....//
வாங்க சப்ராஸ்...
நன்றி..
கண்டிப்பா வரேனே...
Dr.Rudhran said...
medicines will not erase sadness but will help to control depression and make the person functional//
மிக்க நன்றி...
புல்லட் பாண்டி said...
அடடே வேத்தியசுவாமிகள் அருளுரை வழங்கியிருக்கிறார்கள்..அனைவரும் கேட்டு பயன் பெறுங்கள்... ஹிஹி!//
வாங்க புல்லட்...
ஆஹா உங்க குசும்பை என்னட்டையேவா காட்டுறது???
:-)
நிகழ்காலத்தில்... said...
நிகழ்காலத்தில் இல்லாமல் எதிர்காலத்தை அல்லது இறந்தகாலத்தைப் பற்றி கவலைப்படுவது மன உளைச்சலுக்கு முக்கிய காரணம்.,//
உங்க பெயரை வைத்தே ஒரு விளக்கமா??
:-)
நன்றிங்க...
sakthi said...
மன உளைச்சல் என்பது தற்போதைய உலகில் எல்லோரும் அனுபவிப்பது தான்..ஆனால் பிரச்சினை என்னவென்றால் யாரும் அதை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்ள நினைக்காதது தான்...இதனால் மனதின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகுமே ஒழிய ஒருபோதும் குறைய வாய்ப்பேயில்லை...”
உண்மை வேத்தியரே....
அருமையான பதிவு
வாழ்த்துக்கள்....//
நன்றி நன்றி...
எனக்கு கோவம் வந்தால், ஒரு பேப்பரை எடுத்து, எல்லாவற்றையும் கட கட என எழுதிய பின், கிழித்துப் போடுவேன்.
வேலை அதிகம் எண்டு டென்ஷன் அல்லது களைப்பு என்றால், ஒரு நீச்சல் அல்லது Jogging போவேன்.
உறவுகள் இழப்பு பற்றி என்றால் என்னிடம் கேளுங்கள் நன்கு சொல்லுவேன்.
அவர்கள் இல்லை எண்டு நினைக்க வேண்டாம். அவர்கள் பற்றி எதுவுமே நினைக்க வேண்டாம். எங்கோ இருக்கிறார்கள் எண்டு மட்டும் நினைங்கோ.
அழுகை வந்தால், shower இன் கிழ் போய் நில்லுங்கோ. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவியல்.
கொஞ்சம் வில் பவர் வேண்டும்.
மேற் கூறியவை ஒன்றும் எங்கோ வாசித்ததோ கேட்டதோ இல்லை. அனுபவத்தில் சொல்லுகிறேன்.
சிறு பிள்ளைப் பேச்சு சபையில் எடுபடாது எண்டு நினையாது ஒரு தடவை Try பண்ணுங்கோ.
Lastly, make sure you smile the min you leave your room / house no matter what.
//ஆனால் பிரச்சினை என்னவென்றால் யாரும் அதை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்ள நினைக்காதது தான்...இதனால் மனதின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகுமே ஒழிய ஒருபோதும் குறைய வாய்ப்பேயில்லை...”
//
I disagree abit with the above statement.
ஒரு உதாரணம். என் உறவினர் ஒருவர் இறந்தது பற்றி ஒரு சில நண்பர்களிடம் பகிர்ந்த போது, பிறகு ஒரு மாசத்துக்கு என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவர்கள் சோகம் ஆனார்கள். ஏன்டா சொன்னான் எண்டு இருந்தது. எனக்கு முன் சிரித்து கதைப்பதே தவறு என்று எண்ணி, சிரித்து கூட
கதைப்பதில்லை.
பிறகு இன்னுமொரு இழப்பிற்கு நான் யாருக்கும் சொல்லாமல் இருந்தேன். என்னைப் பார்க்கும் போது எவரும் சோக முகம் காட்டவில்லை. எனக்கும் நண்பர்களுடன் இருப்பது சுகமானதாக இருந்தது.
கவலை வந்தால் இருக்கத்தானே இருக்கு, shower, swimming and jogging.
I would say talk to your parents or siblings or cousins even.
I do go under depression, and I try those above things. Doc medicines will put you sleep and you wont get nightmares. I rest your brain. For a Psychiatrist you are just another person. So, talk to you family. If no family talk to your relatives or only one best friend but ensure that he or she does not tell that to any. If few get to know it, then they all gonna look at you sadly and that is gonna depress you.
Btw, I went for disaster relief program here. They thought 2 essential things that we should not do.
1 - Saying that you understand what he / she is undergoing. (You can say if you have experienced it on your own. If not you SHOULD NOT say that)
2 - NEVER say that everything is gonna be fine.
(How on the earth people could say everything gonna be fine when ppl lose their beloved ppl)
Anyways, Good article.
P.S:- நண்பரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
@ Triumph...
thanks for coming and commenting...
//ஆகவே வாய் திறந்து பேச வேண்டும்.
அதுவே பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்...//
அதற்கு ப்ளாகும் ஒரு நல்ல தீர்வு.
பயனுள்ள உளவியல் பதிவு வேத்தி....
அ.மு.செய்யது said...
//ஆகவே வாய் திறந்து பேச வேண்டும்.
அதுவே பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்...//
அதற்கு ப்ளாகும் ஒரு நல்ல தீர்வு.
பயனுள்ள உளவியல் பதிவு வேத்தி....//
மிக்க நன்றி செய்யது...
மிகவும் பயனுள்ள பதிவு.....இதற்கு நேரம் இருக்கனுமே படிக்க... எல்லாம் காலக் கொடுமை...
எளிய வழிமுறைகளும் கூறியிருக்கீங்க....
நண்பரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்....
காலத்திற்கேற்ற தேவையான,
அருமையான பதிவு.
நன்றி..நன்றி...
நல்ல பதிவு !!
தமிழரசி said...
மிகவும் பயனுள்ள பதிவு.....இதற்கு நேரம் இருக்கனுமே படிக்க... எல்லாம் காலக் கொடுமை...
எளிய வழிமுறைகளும் கூறியிருக்கீங்க....
நண்பரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்....//
நன்றிங்க...
Thomas Ruban said...
காலத்திற்கேற்ற தேவையான,
அருமையான பதிவு.
நன்றி..நன்றி...//
நன்றி...
ஜீவன் said...
நல்ல பதிவு !!//
மிக்க நன்றி அண்ணா...
சரி மனோதத்துவ மருத்துவரே
லக்கிலுக்கின் சாதனையைத் தொடர்ந்து...
நசரேயன் said...
சரி மனோதத்துவ மருத்துவரே//
:-)
நன்றி...
தமிழ்நெஞ்சம் said...
லக்கிலுக்கின் சாதனையைத் தொடர்ந்து...//
நன்றி...
வரேன்...
அவசரமான உலகத்திலே
ஆணும் பெண்ணும் வேலை
போகும் அவசரத்திலே
சந்தோசத்தை தொலைத்து
சங்கடத்தை பெற்றுவிட்ட வேளையிலே இது ஓர் சங்கடம் தீர் நிவாரணி.
raj said...
அவசரமான உலகத்திலே
ஆணும் பெண்ணும் வேலை
போகும் அவசரத்திலே
சந்தோசத்தை தொலைத்து
சங்கடத்தை பெற்றுவிட்ட வேளையிலே இது ஓர் சங்கடம் தீர் நிவாரணி.//
நன்றி ராஜ்...
கோபம் வரும் போதெல்லாம் விசு ஒரு படத்துல "கோதாவரி! தண்ணி கொடு டீ! " என்று தன் மனைவியான கமலா காமேஷிடம் சொல்லுவார்.அதே பாலிசி தான் நம்மளுதும். ஆனா என்ன தண்ணி கொண்டு வந்து கொடுக்க கோதவரியைப் போன்ற கேரக்ட்டர் இன்னும் வராததால் நானே டாஸ்மாக் போயி குடித்துக் கொள்கிறேன்.
இங்கிலீஷ்காரன் said...
கோபம் வரும் போதெல்லாம் விசு ஒரு படத்துல "கோதாவரி! தண்ணி கொடு டீ! " என்று தன் மனைவியான கமலா காமேஷிடம் சொல்லுவார்.அதே பாலிசி தான் நம்மளுதும். ஆனா என்ன தண்ணி கொண்டு வந்து கொடுக்க கோதவரியைப் போன்ற கேரக்ட்டர் இன்னும் வராததால் நானே டாஸ்மாக் போயி குடித்துக் கொள்கிறேன்.//
அட..
நீங்க தான் ரியல் குடிகாரன்..
ச்சீ இங்கிலீஷ்காரன்...
:-)
Post a Comment