Thursday, 4 June 2009

சிங்களம் 2 தமிழ்...வலை நண்பர்களே,
சில தமிழ் வார்த்தைகளையும் அதற்குரிய சிங்கள வார்த்தைகளையும் தருகிறேன்.

முதல்ல வாசிங்க.
அப்புறம் பாருங்க சிங்களம் எவ்வளவு ஈஸின்னு...
:-)செளபாக்கியம் - செளபாக்கிய
பெயர்(நாமம்) - நம
சத்தம் - ஷத்த
அம்மா - அம்மே
காலம் - காலய
வியாபாரம் - வியாபார
ஆடம்பரம் - ஆடம்பரய
ஆச்சிரமம் - ஆசிரமய
உலகம் - லோகய
கடை - கடய
தமிழ் - தெமல
சிரமதானம் - ஷ்ரமதான
ஆசை - ஆசாவ
வீதி - வீதிய
சபை - சபாவஎன்ன சிங்களம் ஈஸியா இருந்துச்சா???
ஏன் ஈஸியா இருக்காது, தமிழ் வார்த்தையில ஒரு எழுத்தை மட்டும் மாத்தி வச்சா ???
:-)


என்ன தான் சொன்னாலும் சிங்களத்துல இருந்து தான் தமிழன் வார்த்தைகளை(யும்) சுட்டான் என்பதற்கு இது ஒன்றே சாட்சி என்று நம் சகோதர சிங்கள மக்கள் கூறிக் கொள்வதாக உளவுத்துறை அறிக்கை விட்டுருக்கு...
என்ன செய்ய ???
வழக்கம் போல இதையும் நம்புவோம்...சிட்டுவேஷன் சாங் கேளுங்க...

எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ???


அன்புடன்,
சிங்களம் 2 தமிழ்...SocialTwist Tell-a-Friend

63 . பின்னூட்டங்கள்:

பழமைபேசி on 4 June 2009 at 20:08 said...

இஃகிஃகி!

....பனையூரான்...... on 4 June 2009 at 20:32 said...

எமது செம்மொழியோடு எதை ஒப்பிடுவது என்ற விவஸ்தை இல்லையா???

vinoth gowtham on 4 June 2009 at 20:35 said...

என்னங்க சிங்களம் மொழியோடு தமிழை..
இருந்தாலும் தெரிஞ்சிக்கிட்டேன்..:))

ஆ.முத்துராமலிங்கம் on 4 June 2009 at 21:00 said...

ஏங்க இந்த நேரத்துல சிங்களமா கத்து தரரீங்க.... அதுல வேர சிச்சுவேசன் சாங்கு வேர..!!

வால்பையன் on 4 June 2009 at 21:25 said...

சிங்களம் ஆரிய மொழியான சமஸ்கிருதத்தை ஒத்து வருது!

பார்பனர்களுக்கு அதனால் தான் அவுங்க மேல பிரியமா?

thevanmayam on 4 June 2009 at 22:06 said...

Sinhalam derived from Indian Language !!!

thevanmayam on 4 June 2009 at 22:07 said...

I will comment in the morning.
My tamilfont erred!

sakthi on 4 June 2009 at 22:24 said...

சமஸ்கிருதக் கலப்பு
சிங்களத்தில் அவ்வளவு தான்....

இத்தனை ஒற்றுமையான வார்த்தைகளை

வைத்துகொண்டு ஏன் மொழியின்

பெயரால் படுகொலைகளை

நிகழ்த்தவேண்டும்....

அ.மு.செய்யது on 4 June 2009 at 22:50 said...

பயனுள்ள பதிவு.

இலங்கையில் சிங்கள வேடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எஞ்சிய நம் தமிழர்கள் நிச்சயம் கற்று கொள்ள வேண்டியிருக்கும் வேத்தியன்.

நசரேயன் on 4 June 2009 at 23:51 said...

இஃகிஃகி!

அபுஅஃப்ஸர் on 5 June 2009 at 00:44 said...

இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மொழிகளின் கலவையாகவே இதுவும் இருக்கு. நாம் தமிழில் பயன்படுத்தும் மொழியான தாடி, நபர், அலமாரி, இப்படி நிறைய அராபிம் மொழியிலும் இருக்கு

வேத்தியன் 123.... சிங்களத்தில் பதிவுபோடுவீர்களா

Keith Kumarasamy on 5 June 2009 at 00:44 said...

அ.மு. செய்யது.. ///இலங்கையில் சிங்கள வேடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எஞ்சிய நம் தமிழர்கள் நிச்சயம் கற்று கொள்ள வேண்டியிருக்கும் வேத்தியன்.///

அப்படீன்னா அங்க இருக்கிற தமிழர்கள் யாரும் உயிரோடவே இருக்காமல் செத்து ஒழிஞ்சிருக்கணும் என்று அர்த்தமா??

இராகவன் நைஜிரியா on 5 June 2009 at 01:23 said...
This comment has been removed by the author.
இராகவன் நைஜிரியா on 5 June 2009 at 01:25 said...

மொழி என்பதே நமது உணர்ச்சிகளை தெரிவிக்கும் ஒரு வடிவம்.

பக்கத்து பக்கத்தில் இருக்கும் நாடுகளில் ஒற்றுமை இருப்பது சகஜம்தான்.

ஆ.ஞானசேகரன் on 5 June 2009 at 06:37 said...

ம்ம்ம் நல்லா இருக்கே

ஆதவா on 5 June 2009 at 08:16 said...

நீங்கள் கொடுத்திருக்கும் சில வார்த்தைகள் தமிழே அல்ல. அவை சமஸ்கிருதம்... அதுசரி, எதுன்னாலும் தமிழ்மேல குறை சொல்ற சிங்களவன் இருந்தா நாம என்னதான் பண்ணமுடியும்?

சிங்களத்தின் ஸ்க்ரிப்ட் கன்னட, தெலுகு ஸ்க்ரிப்டைப் போன்றே இருக்கும். எனக்கு விளங்காத ஒன்று அதுதான்..
ஏறக்குறைய ஹிந்தி ஸ்க்ரிப்ட் அதுசார்ந்த எல்லா மொழிகளிலும் உண்டு.
கன்னட , தெலுங்கு நாட்டுக்கு அடுத்து, மலையாளம் தமிழ் இரண்டும் ஒரேமாதிரியான ஸ்க்ரிப்ட்... அதுக்கும் கீழேதான் சிங்களம் இருக்கிறது.. அதெப்படி தமிழோடு ஒத்து இருக்கவில்லை??

எனக்கு மொழியாராய்ச்சி ரொம்ப பிடிக்கும்.. ஆனால் செய்வதில்லை!!! ஹிஹி.

அதுசரி, உங்களுக்கு சிங்களம் தெரியுமா?

வேத்தியன் on 5 June 2009 at 09:35 said...

பழமைபேசி said...
இஃகிஃகி!//

வாங்க அண்ணா...
:-)

வேத்தியன் on 5 June 2009 at 09:36 said...

....பனையூரான்...... said...
எமது செம்மொழியோடு எதை ஒப்பிடுவது என்ற விவஸ்தை இல்லையா???//

நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க அண்ணா...
நான் இந்த இரண்டு மொழிகளையும் ஒப்பிடும் அளவுக்கு அறிவில்லாதவன் அல்ல..
தமிழைப்போய்...

ச்சும்மா ஒரு நையாண்டிக்காக பண்ணியது தான்..
கோபப்பட வேண்டாம்...

வேத்தியன் on 5 June 2009 at 09:37 said...

vinoth gowtham said...
என்னங்க சிங்களம் மொழியோடு தமிழை..
இருந்தாலும் தெரிஞ்சிக்கிட்டேன்..:))//

ஒப்பிடவில்லை...
ச்சும்மா ஒரு ஒற்றுமைத் திறனை விளக்கவே இது..
அவ்வளவு தான்...

வருகைக்கு நன்றிங்க...

வேத்தியன் on 5 June 2009 at 09:38 said...

ஆ.முத்துராமலிங்கம் said...
ஏங்க இந்த நேரத்துல சிங்களமா கத்து தரரீங்க.... அதுல வேர சிச்சுவேசன் சாங்கு வேர..!!//

ச்சும்மா ஒரு எபெக்ட்டுக்கு தான்...
ஹா ஹா...

நல்லா இருந்துச்சா???
:-)

நன்றிங்க...

வேத்தியன் on 5 June 2009 at 09:39 said...

வால்பையன் said...
சிங்களம் ஆரிய மொழியான சமஸ்கிருதத்தை ஒத்து வருது!

பார்பனர்களுக்கு அதனால் தான் அவுங்க மேல பிரியமா?//

யாருக்குங்க தெரியும்???

நன்றிங்க...

வேத்தியன் on 5 June 2009 at 09:41 said...

thevanmayam said...
Sinhalam derived from Indian Language !!!//

of course...
but, will they agree this statement???
:-)

thanks 4 commenting...

வேத்தியன் on 5 June 2009 at 10:02 said...

sakthi said...
சமஸ்கிருதக் கலப்பு
சிங்களத்தில் அவ்வளவு தான்....

இத்தனை ஒற்றுமையான வார்த்தைகளை

வைத்துகொண்டு ஏன் மொழியின்

பெயரால் படுகொலைகளை

நிகழ்த்தவேண்டும்....//

சரியான கேள்வி தான்...

என்ன செய்வது???

வேத்தியன் on 5 June 2009 at 10:03 said...

அ.மு.செய்யது said...
பயனுள்ள பதிவு.

இலங்கையில் சிங்கள வேடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எஞ்சிய நம் தமிழர்கள் நிச்சயம் கற்று கொள்ள வேண்டியிருக்கும் வேத்தியன்.//

அவர்கள் ஏற்கனவே சிங்களம் தெரிந்தவர்கள் தான்...

உயிரோடு வாழ்வதற்காக தான் இதெல்லாம்...

வேத்தியன் on 5 June 2009 at 10:04 said...

நசரேயன் said...
இஃகிஃகி!//

வாங்கண்ணே...
வணக்கம்...

வேத்தியன் on 5 June 2009 at 10:05 said...

அபுஅஃப்ஸர் said...
இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மொழிகளின் கலவையாகவே இதுவும் இருக்கு. நாம் தமிழில் பயன்படுத்தும் மொழியான தாடி, நபர், அலமாரி, இப்படி நிறைய அராபிம் மொழியிலும் இருக்கு

வேத்தியன் 123.... சிங்களத்தில் பதிவுபோடுவீர்களா//

அது தான் அடுத்த டார்கெட்...
மத்தது சில ஆங்கில வார்த்தைகளுக்கும் தரேன்...

:-)

வேத்தியன் on 5 June 2009 at 10:05 said...

இராகவன் நைஜிரியா said...
மொழி என்பதே நமது உணர்ச்சிகளை தெரிவிக்கும் ஒரு வடிவம்.

பக்கத்து பக்கத்தில் இருக்கும் நாடுகளில் ஒற்றுமை இருப்பது சகஜம்தான்.//

சகஜம் தான்...
அவ்வளவு ஒற்றுமைகளையும் வைத்துக் கொண்டு ஏன் இப்படி???

வேத்தியன் on 5 June 2009 at 10:06 said...

ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம் நல்லா இருக்கே//

மிக்க நன்றிங்க...

வேத்தியன் on 5 June 2009 at 10:07 said...

ஆதவா said...
நீங்கள் கொடுத்திருக்கும் சில வார்த்தைகள் தமிழே அல்ல. அவை சமஸ்கிருதம்... அதுசரி, எதுன்னாலும் தமிழ்மேல குறை சொல்ற சிங்களவன் இருந்தா நாம என்னதான் பண்ணமுடியும்?

சிங்களத்தின் ஸ்க்ரிப்ட் கன்னட, தெலுகு ஸ்க்ரிப்டைப் போன்றே இருக்கும். எனக்கு விளங்காத ஒன்று அதுதான்..
ஏறக்குறைய ஹிந்தி ஸ்க்ரிப்ட் அதுசார்ந்த எல்லா மொழிகளிலும் உண்டு.
கன்னட , தெலுங்கு நாட்டுக்கு அடுத்து, மலையாளம் தமிழ் இரண்டும் ஒரேமாதிரியான ஸ்க்ரிப்ட்... அதுக்கும் கீழேதான் சிங்களம் இருக்கிறது.. அதெப்படி தமிழோடு ஒத்து இருக்கவில்லை??

எனக்கு மொழியாராய்ச்சி ரொம்ப பிடிக்கும்.. ஆனால் செய்வதில்லை!!! ஹிஹி.

அதுசரி, உங்களுக்கு சிங்களம் தெரியுமா?//

ஆமாங்க அவைகளில் சில தமிழே அல்ல...
எனினும் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சொற்கள் தானே...
அதனால் தான் தந்தேன்...

சிங்களம் தெரியாமல் இவ்வளவு காலம் இலங்கையில் வாழ முடியுமா???
:-)

Anbu on 5 June 2009 at 10:31 said...

நல்லா இருக்கு தல..

நையாண்டி நைனா on 5 June 2009 at 10:49 said...

நெறைய சொல்லி கொடுங்கோ..
அப்பாலிக்கா வாறன்

பனையூரான் on 5 June 2009 at 11:02 said...

மேலும் நன்றிகள் வலைப்பூவை தொடர்பவர் ஆகியமைக்கு. நானும் உங்கள் வலைப்பூவின் தொடர்வோரில் ஒருவன்

vanathy said...

நீங்கள் தெரிவித்திருக்கிற வார்த்தைகளில் சில சமஸ்கிரிதம் என்றாலும் தமிழ் வார்த்தைகளும் உள்ளன,அம்மா,கடை இன்னும் சில.

சிங்களத்தில் பெரும்பாலான வார்த்தைகள் பாளி,சமஸ்கிரிதம்,தமிழ் மொழிகளில் இருந்து வந்தவை.
சிங்களம் ஒரு முழுமையான எழுத்து மொழியாக ஒன்பதாம் பத்தாம் நூற்றாண்டில்தான் உருவெடுத்தது.
அதன் முன்பு பௌத்த துறவிகள் பாளி மற்றும் தமிழில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள்.
ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப் பட்ட மகாவம்சம் பாளி மொழியில்தான் எழுதப் பட்டது.
பண்டைய இலங்கைத் தமிழர்கள் பௌத்த மதத்தை சேர்ந்தவர்களாகவும் இருந்தனர்.
பின்னர் ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் சைவம் திரும்பவும் தமிழ் நாட்டில் எழுச்சி பெற்ற போது அதன் தாக்கம் ஈழத்தில்லும் ஏற்பட்டு தமிழர்கள் திரும்பவும் சைவத்துக்கு திரும்பினார்கள்.

பேச்சு சிங்களத்தில் பல தமிழ் வார்த்தைகள் உள்ளன.அவை தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து வந்தவை.
குறிப்பாக உறவு முறைகளைக் குறிக்கும் சிங்கள சொற்கள் பல தமிழில் இருந்து வந்தவை.உதாரணம் ,அம்மே ,அக்கா,நங்கி -தங்கை ,மாமா
அத்துடன் நீர்கொழும்பில் பேசும் சிங்களத்தில் பல தமிழ் வார்த்தைகள் உள்ளன மூன்று நான்கு தலைமுறைக்கு முன்பு அவர்கள் தமிழர்களாக இருந்து இப்போது சிங்களவர்களாக மாறியதால் இந்த தொடர்பு.
எழுத்து சிங்களத்தில் பாளி,சமஸ்கிருத சொற்கள் உள்ளன.
அது பௌத்த மத தொடர்பு காரணமாக வந்தது.

கண்டி அரசுக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் நடந்த ஒப்பந்தத்தில் கண்டி அரசன் தமிழ் மொழியில்தான் கையொப்பம் இட்டிருந்தான்.

ஆம்,சிங்கள ஸ்கிரிப்ட் கன்னட தெலுங்கு ஸ்கிரிப்ட் மாதிரிதான்.
அவை தமிழ் பிராமியை ஒத்தவை.
தமிழ் எழுத்துக்கள் பல நூற்றாண்டுகளாக மாற்றம் அடைந்து வந்துள்ளன
பழைய தமிழ் கல்வெட்டுக்கள் தமிழ் பிராமியில்தான் உள்ளன.
ஸ்கிரிப்ட்டுக்கும் மொழிக்கும் ஒரு சம்பந்தம்மும் இல்லை.
ஒரு மொழியின் ஒலி வடிவத்தை எழுத்தில் காட்டுவதுதான் ஸ்க்ரிப்ட் ,அவ்வளவே.
தாய்லாந்தில் பேசப்படும் தாய் மொழியின் எழுத்து வடிவம் தமிழ் பிராமி ,கன்னட தெலுங்கு எழுத்துக்கள் மாதிரித்தான் ,ஆனால் இந்த மொழிக்கும் கன்னடத்துக்கும் சம்பந்தம் இல்லை.
தமிழையும் ரோமன் எழுத்திலோ அல்லது சீன எழுத்திலோ எழுதலாம் ஆனால் அதன் அர்த்தம் இவை எல்லாம் ஒரே மாதிரியான மொழிகள் என்பதல்ல.
-vanathy

வேத்தியன் on 5 June 2009 at 11:33 said...

Anbu said...
நல்லா இருக்கு தல..//

நன்றிப்பா...

வேத்தியன் on 5 June 2009 at 11:34 said...

நையாண்டி நைனா said...
நெறைய சொல்லி கொடுங்கோ..
அப்பாலிக்கா வாறன்//

வேலையை முடிச்சுட்டு வந்தா போதும்...
கடை 24 மணிநேரம் திறந்தே இருக்கும்...

வேத்தியன் on 5 June 2009 at 11:35 said...

பனையூரான் said...
மேலும் நன்றிகள் வலைப்பூவை தொடர்பவர் ஆகியமைக்கு. நானும் உங்கள் வலைப்பூவின் தொடர்வோரில் ஒருவன்//

இலங்கையில் வலைப்பூ மேய்ப்பவர்களை தேடிக்கொண்டிருக்கிறேன்..
நீங்கள் எழுதுவது கண்டு மகிழ்ச்சியே..

வேத்தியன் on 5 June 2009 at 11:36 said...

@ vanathy...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

முனைவர்.இரா.குணசீலன் on 5 June 2009 at 11:52 said...

அருமையான பதிவு,
தேவையான பதிவு,
வாழ்த்துக்கள்.
இன்று தினமணியில் கூட சிங்களத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்த கட்டுரை வெளிவந்திருக்கிறது.

வேத்தியன் on 5 June 2009 at 11:58 said...

முனைவர்.இரா.குணசீலன் said...
அருமையான பதிவு,
தேவையான பதிவு,
வாழ்த்துக்கள்.
இன்று தினமணியில் கூட சிங்களத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்த கட்டுரை வெளிவந்திருக்கிறது.//

மிக்க நன்றி...

கலையரசன் on 5 June 2009 at 12:01 said...

இனிமே நம்மாளுங்க அங்க சிங்களம்தான் பேசனுமுன்னு சொல்லாம சொல்லுறீங்கலோ?

முனைவர்.இரா.குணசீலன் on 5 June 2009 at 12:02 said...

சிங்களம் இலங்கைத் தீவில் பேசப்பட்டதை கி.மு. 2000-த்துடன் இணைக்கலாம். அப்போது அம்மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை; பேச்சு வழக்கில் மட்டுமே அம்மொழி இருந்தது. அந்தப் பேச்சு வழக்கோ ஆதிகால திராவிட இன மொழிக் குடும்பத்தில் பிறந்தது. அப்படிப் பிறந்தனவே தமிழ், சிங்கள மொழிகள்'' என்கிறார். மொழியியல் அறிஞர் ஆக்ஸிமோரன்

புல்லட் பாண்டி on 5 June 2009 at 12:09 said...

பிறகென்ன? அப்பிடியே ஒரு சிங்களப்பிள்ளைய பாத்து கலியாணம் பண்ணிக்கொண்டாப்ுபோச்சு.. நல்லா சிங்கள ஆராய்ச்சி பண்ணுறீங்க... சப்போட்டா இருப்பாங்க... ஏதாவது கலவரம் வந்தாக்கூ ட மாமிண்ட குசினிக்க ஓடிப்போய ஒளிச்சுக்கலாம்... ;)

நட்புடன் ஜமால் on 5 June 2009 at 12:42 said...

ஜிச்சுவேஜன் ஜாங்

ஜூப்பருங்க.

மொழிகள் எதுவாகிலும் கற்று கொள்ளுதல் நலமே.


பகிர்வுக்கு நன்றி வேத்தியரே!

கார்த்திகைப் பாண்டியன் on 5 June 2009 at 16:04 said...

ஒன்னும் சொல்றதுக்கு இல்லை..நடத்துங்க

Anonymous said...

இங்கே பல சிங்கள எதிர்ப்பு வாதங்களையும் கருத்துக்களையும் பின்னூட்டங்களில் காணக்கூடியதாகவுள்ளது.

சிங்களம் மனித மொழிகளுள் ஒன்றாக இன்று உள்ளது. அந்த மொழியைத் தாய் மொழியாகப் பேசும் இனவெறி பிடித்தவர்களே கெட்டவர்கள் ஆவர். ஒரு மனித மொழியைப் பழிப்பதால் பயன் தான் என்ன? மேலும் அச் செயலின் மூலம் சிங்கள இன வெறியர்களின் எண்ணம் போன்றே தமிழர் சிலரின் எண்ணங்களும் இன வெறி கொண்டதாக மாற்றம் பெறும். இன வெறியானது அழிவுக்கே மேன் மேலும் வழி வகுக்கும். வலைப்பதிவாளரே இன ரீதியான எதிர்ப்பு வாசகம் கொண்ட பின்னூட்டங்களை ஏன் நீர் அகற்றிவிடக் கூடாது???!!!

வானதியின் பின்னூட்டம் ஒரு அறிவுப் பேழை. நன்றி வானதி.

வேத்தியன் on 5 June 2009 at 17:50 said...

கலையரசன் said...
இனிமே நம்மாளுங்க அங்க சிங்களம்தான் பேசனுமுன்னு சொல்லாம சொல்லுறீங்கலோ?//

இல்லையே...

இது ச்சும்மா உல்லுலாயிக்கு...

:-)

வேத்தியன் on 5 June 2009 at 17:51 said...

முனைவர்.இரா.குணசீலன் said...
சிங்களம் இலங்கைத் தீவில் பேசப்பட்டதை கி.மு. 2000-த்துடன் இணைக்கலாம். அப்போது அம்மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை; பேச்சு வழக்கில் மட்டுமே அம்மொழி இருந்தது. அந்தப் பேச்சு வழக்கோ ஆதிகால திராவிட இன மொழிக் குடும்பத்தில் பிறந்தது. அப்படிப் பிறந்தனவே தமிழ், சிங்கள மொழிகள்'' என்கிறார். மொழியியல் அறிஞர் ஆக்ஸிமோரன்//

கருத்துக்கு மிக்க நன்றி..
தெரிந்து கொண்டேன்...

வேத்தியன் on 5 June 2009 at 17:52 said...

புல்லட் பாண்டி said...
பிறகென்ன? அப்பிடியே ஒரு சிங்களப்பிள்ளைய பாத்து கலியாணம் பண்ணிக்கொண்டாப்ுபோச்சு.. நல்லா சிங்கள ஆராய்ச்சி பண்ணுறீங்க... சப்போட்டா இருப்பாங்க... ஏதாவது கலவரம் வந்தாக்கூ ட மாமிண்ட குசினிக்க ஓடிப்போய ஒளிச்சுக்கலாம்... ;)//

ஆஹா...

வேணாமய்யா...
தமிழே போதும்...
ஏற்கனவே பாத்து வச்சிருக்கிறதுக்கு என்னத்த சொல்றது நான்???
:-)

வேத்தியன் on 5 June 2009 at 17:52 said...

நட்புடன் ஜமால் said...
ஜிச்சுவேஜன் ஜாங்

ஜூப்பருங்க.

மொழிகள் எதுவாகிலும் கற்று கொள்ளுதல் நலமே.


பகிர்வுக்கு நன்றி வேத்தியரே!//

மிக்க நன்றிங்க...
:-)

வேத்தியன் on 5 June 2009 at 17:53 said...

நானே 50...
:-)

வேத்தியன் on 5 June 2009 at 17:53 said...

கார்த்திகைப் பாண்டியன் said...
ஒன்னும் சொல்றதுக்கு இல்லை..நடத்துங்க//

ஓகே...
தாங்க்ஸ்...
:-)

Sathish! on 5 June 2009 at 20:22 said...

///ங்களத்தின் ஸ்க்ரிப்ட் கன்னட, தெலுகு ஸ்க்ரிப்டைப் போன்றே இருக்கும். எனக்கு விளங்காத ஒன்று அதுதான்..
ஏறக்குறைய ஹிந்தி ஸ்க்ரிப்ட் அதுசார்ந்த எல்லா மொழிகளிலும் உண்டு.
கன்னட , தெலுங்கு நாட்டுக்கு அடுத்து, மலையாளம் தமிழ் இரண்டும் ஒரேமாதிரியான ஸ்க்ரிப்ட்... அதுக்கும் கீழேதான் சிங்களம் இருக்கிறது.. அதெப்படி தமிழோடு ஒத்து இருக்கவில்லை??//

Sinhala Script is similar to Oriya script..

Sinhaleese and Orisa people have similar culture and histroical relationships.. refer wikipedia..

தீப்பெட்டி on 5 June 2009 at 21:02 said...

சிங்களத்துல சமஸ்கிருத வாடை ..

வேத்தியன் on 6 June 2009 at 07:45 said...

Sathish! said...
///ங்களத்தின் ஸ்க்ரிப்ட் கன்னட, தெலுகு ஸ்க்ரிப்டைப் போன்றே இருக்கும். எனக்கு விளங்காத ஒன்று அதுதான்..
ஏறக்குறைய ஹிந்தி ஸ்க்ரிப்ட் அதுசார்ந்த எல்லா மொழிகளிலும் உண்டு.
கன்னட , தெலுங்கு நாட்டுக்கு அடுத்து, மலையாளம் தமிழ் இரண்டும் ஒரேமாதிரியான ஸ்க்ரிப்ட்... அதுக்கும் கீழேதான் சிங்களம் இருக்கிறது.. அதெப்படி தமிழோடு ஒத்து இருக்கவில்லை??//

Sinhala Script is similar to Oriya script..

Sinhaleese and Orisa people have similar culture and histroical relationships.. refer wikipedia..//

thanks for letting us know these details Sathish...

வேத்தியன் on 6 June 2009 at 07:47 said...

தீப்பெட்டி said...
சிங்களத்துல சமஸ்கிருத வாடை ..//

ஆமாங்க...

நன்றி...

S.A. நவாஸுதீன் on 6 June 2009 at 11:39 said...

சிங்களம் ஆரிய மொழியான சமஸ்கிருதத்தை ஒத்து வருது!

பார்பனர்களுக்கு அதனால் தான் அவுங்க மேல பிரியமா?

ரிப்பீட்டேய்

கடைக்குட்டி on 7 June 2009 at 10:33 said...

ப்ச்.. :-(

sankarfilms on 7 June 2009 at 14:10 said...

பயனுள்ள பதிவு.

அமிர்தவர்ஷினி on 7 June 2009 at 16:14 said...

i second vanathi's comment.... in tamil we use so many words that a re derived from dutch and portuguese..... it doesn't mean we nicked those words... and they can't blame us for that as well..... they become tamil words by getting used times and times again.... how many of us can speak tamil without adding a single word in English????????? the normal every day words such as car, train, bus.... they are not Tamil words.... Can English people blame us for that?? or will you let them to blame us??????? i beleive that the Tamil word 'kochchikkai' is originally a sinhale word... (i hope!)different languages in a country will have some words that are similar.....i think we should learn to accept that... rathar than finding fault in everything....

சுரேஷ் குமார் on 8 June 2009 at 15:38 said...

இந்த இடுகை,
சிங்களம் 2 தமிழா..?
தமிழ் 2 சிங்களமா....?

Poornima Saravana kumar on 10 June 2009 at 09:18 said...

நல்ல மொழி!!

Anonymous said...

:-)

என்.கே.அஷோக்பரன் on 14 July 2009 at 19:05 said...

சிங்களம் எனப்படுவது சமஸ்கிருதத்தையும் திராவிடத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு கலவை. ஹிந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளை அறிந்தவர்களுக்கு சிங்களம் கற்பதொன்றும் பெரிய விடயமேயில்லை.

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.