வலையுலகம் பக்கம் தலைவைத்தே படுக்க இயலவில்லை.
சக பதிவர்களின் பதிவுகள் எல்லாவற்ரையும் முழுவதுமாக படிக்க இயலாவிட்டாலும் ஏதோ அவசர அவசரமாக படித்து முடித்தேன்.
பின்னூட்டம் போட மறந்துவிட்டேன்.
மன்னிக்கவும்... :-)
வேலை வேலைன்னு சொன்னா போதுமா??
என்னா வேலைன்னு சொல்ல வேணாம்???
இந்த கமிங் ஜூலையில தான் என்னோட காலேஜ் தொடக்கம்.
அட்மிஷன் சம்பந்தமான வேலைகள், விசா சம்பந்தமான வேலைகள்ன்னு ஒரே பிஸி...
அது தான் காரணம்...
ஒருமாதிரியா வேலைகள் எல்லாம் முடிஞ்சுதுங்க..
இனி கொண்டாட்டம் தான்...
ரொம்ப குஷியா நாளைக்கு ஒரு பதிவு போட்டுட்டுருந்த என்னைப் போய் இந்த வேலைகள் எல்லாம் கெடுத்து பதிவுகள் வாசிக்கக் கூட முடியாத சூழுலுக்கு கொண்டு போய் விட்டுருச்சு... :-(
எங்கடா இவன் தொல்லை குறைஞ்சு போச்சுனு யாரும் சந்தோஷப்பட வேண்டாம்..
வேலை முடிஞ்சு எழுந்திட்டேன்...
இதோ வரேன்... :-)
இப்பிடில்லாம் 10 நாளா ஒரு பதிவும் எழுதாம, வாசிக்காம இருந்ததேயில்லப்பா...
என்னா கஷ்டமா இருக்கு... :-)
விசா எடுக்கப் போன போது ஒரு சம்பவம்...
அப்ளிகேஷன் செண்டர் உள்ளே யாரும் மொபைல் பாவிக்கக் கூடாதுன்னு முன்னாலேயே எழுதிப் போட்டாருக்காங்க...
நாம யாரு??
ஸ்கூலுல ஆசிரியர் சொல்லியே கேக்கலை..
இவிங்க சொல்லியா கேக்கப் போறோம்???
உள்ள இருந்த போது நண்பன் ஒருவன் மொபைல்ல கூப்பிட்டான்..
எடுத்து பேசிட்டு இருந்த போது ஒருத்தன் வந்து வேணாம்ன்னான்..
வச்சிட்டேன்...
எனக்கு பக்கத்துல ஒரு “ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” ரக ஃபிகர்...
அவங்க மொபைல் கூட சிணுங்க எடுத்து பேசினாங்க...
ஒருத்தன் வந்து வேணாம்ன்னு சொல்லல !!!
முதல்ல எனக்கு தடுத்தவனைப் பார்த்தா அவன் ஒரு ஓரமா நின்னு சைட்டிங்...
அவனுக்கு மேல கோபமா வந்தாலும்.........
என்னை மாதிரித் தானே அவனும் இருப்பான்னு நெனைச்சு மனசை கட்டுப் படுத்திகிட்டேன்....
:-)
இனி வழமைப் போலவே பதிவுகள் வரும்..
பின்னூட்டங்கள் வரும்..
வெகு சீக்கிரமா 100வது பதிவும் வரப்போகுது...
செஞ்சரி பதிவு போட ஆவலா இருக்கேன்...
:-)
அன்புடன்,
27 . பின்னூட்டங்கள்:
//வெகு சீக்கிரமா 100வது பதிவும் வரப்போகுது...
செஞ்சரி பதிவு போட ஆவலா இருக்கேன்...//
வாங்க வேத்தியன்
100 வது பதிவுக்கு காத்திருக்கின்றோம்
வாழ்த்துகள்
ஒரே! வேலை தானே?
தலை வச்சியா - அதெல்லாம் தப்பு
என்னை மாதிரித் தானே அவனும் இருப்பான்னு நெனைச்சு மனசை கட்டுப் படுத்திகிட்டேன்\\
ஆஹா!
அருமைப்பா!
100க்கு இப்பவே வாழ்த்துகள்
அடிச்சு ஆடுங்க பாஸ்...
100 பதிவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!
இனி வழமைப் போலவே பதிவுகள் வரும்..
பின்னூட்டங்கள் வரும்..
வெகு சீக்கிரமா 100வது பதிவும் வரப்போகுது...
செஞ்சரி பதிவு போட ஆவலா இருக்கேன்...//
ஆயிரம் பதிவு போட்ட அபூர்வ பதிவர் என்று பெயர் வாங்க வாழ்த்துக்கள்!
விசா எடுத்தாச்சா?
ஓகே!!
இந்தியாவுக்கு அன்புடன் அழைக்கிறேன்!!
என்ன படிப்பு ..என்ன விசா பாஸ்..
அட்மிஷன் சம்பந்தமான வேலைகள், விசா சம்பந்தமான வேலைகள்ன்னு ஒரே பிஸி...அது தான் காரணம்...
ஒருமாதிரியா வேலைகள் எல்லாம் முடிஞ்சுதுங்க..
வாழ்த்துக்கள்.
எனக்கு பக்கத்துல ஒரு “ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” ரக ஃபிகர்...அவங்க மொபைல் கூட சிணுங்க எடுத்து பேசினாங்க...ஒருத்தன் வந்து வேணாம்ன்னு சொல்லல !!!முதல்ல எனக்கு தடுத்தவனைப் பார்த்தா அவன் ஒரு ஓரமா நின்னு சைட்டிங்...
அவனுக்கு மேல கோபமா வந்தாலும்.........என்னை மாதிரித் தானே
ஹா ஹா ஹா சூப்பர்.
நூறாவது பதிவிற்கு இப்பவே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
வாங்க வேத்தியன்
100 வது பதிவுக்கு காத்திருக்கின்றோம்
வாழ்த்துகள்
///thevanmayam on 13 June 2009 11:54 said...
விசா எடுத்தாச்சா?
ஓகே!!
இந்தியாவுக்கு அன்புடன் அழைக்கிறேன்!!//
இந்தியாவுக்குதான் வரீங்களா மிக்க மகிழ்ச்சி! நானும் அன்புடன் அழைக்கிறேன்!!
வருக வருக!
வாத்தியார் சொல்லியே கேட்க்கலை...
பரவாயில்லையே அப்படியும் உருப்பட்டு காலேஜ் வரை போயாச்சு..
பெண்ணுக்கு முன்னுரிமை கொடுப்பதில் ஆணுக்கு நிகர் ஆண் தான்ப்பா.....
கல்லூரியுலகிற்கு காலடியெடுத்து வைக்கிறீர்கள்.
நல்லா என்சாய் பண்ணுங்க..திரும்ப வராது இந்த காலம்.
அ.மு.செய்யது said...
கல்லூரியுலகிற்கு காலடியெடுத்து வைக்கிறீர்கள்.
நல்லா என்சாய் பண்ணுங்க..திரும்ப வராது இந்த காலம்.
கொஞ்சம் படிக்கவும் சொல்லுங்க செய்யது.
வாங்க... இந்தியாவில் படிக்க வரும் உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்...
அண்ணா...
கலக்கு கலக்கு...
:)))
100வது பதிவிற்கு இப்பவே வாழ்த்துகள்..
100வது பதிவிற்கு இப்பவே வாழ்த்துகள்..
100 பதிவு சிறக்க வாழ்த்துக்கள்!
எங்கடா இவன் தொல்லை குறைஞ்சு போச்சுனு யாரும் சந்தோஷப்பட வேண்டாம்..
வேலை முடிஞ்சு எழுந்திட்டேன்...
இதோ வரேன்... :-)
///////////
அய்யயோ அய்யயோ ...
வாழ்த்துக்கள் தம்பி.
//எனக்கு பக்கத்துல ஒரு “ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” ரக ஃபிகர்...அவங்க மொபைல் கூட சிணுங்க எடுத்து பேசினாங்க...ஒருத்தன் வந்து வேணாம்ன்னு சொல்லல !!!முதல்ல எனக்கு தடுத்தவனைப் பார்த்தா அவன் ஒரு ஓரமா நின்னு சைட்டிங்...
அவனுக்கு மேல கோபமா வந்தாலும்.........என்னை மாதிரித் தானே//
அதானே கோபப்பட்டு இருப்பீங்களோன்னு பயந்துட்டேன், இது அகில உலக ஆம்பிள பசங்க எடுத்த முடிவு, சாரி..சபதம்னு சொல்லலாம், C0NGRATS வாழ்வில் மென்மேலும் முன்னேற!!
ஒ.. அப்படியா.. சீக்கிரம் பதிவு பட்டைய கிளப்பட்டும்
வாங்க..வாங்க வாங்க.. வாங்க வேத்தி..
கோவை தங்களை இனிதே வரவேற்கிறது..
100 க்கு அட்வான்சுடு வாழ்த்துக்கள்..
ரொம்ப சந்தோசம் ஐ ஆம் பேக் ;)
கோவைக்கா..வாங்க வாங்க .
நிறைய எழுதி கலக்குங்க வேத்தியன்
Post a Comment