தனது வளர்ப்பு பிராணியான நாயின் உடல்நலத்தை சரியாக கவனிக்காமல் விட்டதால் நாயின் உடல் எடை கூடியதன் விளைவாக உரிமையாளருக்கு அதற்கு மேல் பிராணிகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது நடந்தது இங்கிலாந்தில்...
Border Collie இனத்தைச் சேர்ந்த Taz...
ஐந்தே வயதான Taz எனப்படும் இந்த நாயானது border collie இனத்தை சார்ந்தது.
இந்த வளர்ப்பு நாயின் சொந்தக்காரர் 63 வயதான ronald West என்பவர்.
நாயின் உடல்நலத்தைப் பற்றி சிந்திக்காமல் உணவுமுறையை பழக்கியதால் அந்த நாயின் உடல் எடை இருக்க வேண்டிய அளவிற்கு இருமடங்காக இருந்தது.
தகவல் அறிந்தவுடனே Brighton and Hove City Councilஆல் பொறுப்பெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது.
அப்போது நாயின் எடை 88 றாத்தலாக இருந்ததாம்.
இதனால் Ronald West குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவர் அடுத்த 12 மாதங்களுக்கு எந்த ஒரு வளர்ப்பு பிராணியையும் வளர்க்க முடியாது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
யாரோ ஒருவர் கொடுத்த தகவலின் படி மிருக நல அதிகாரிகள் Brightonஇலுள்ள Westஇன் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
”நான் ஒரு வளர்ப்புப் பிராணி விரும்பி எனவும் தனது நாயுக்கு சிறந்ததை தர வேண்டும் என முடிவு செய்து செயற்பட்டதன் விளைவே இது” எனவும் West கூறியுள்ளார்.
தற்போது Tazஇன் எடை 58 றாத்தலாக குறைந்துள்ளதாம்.
முதலில் தொடர்ந்து 10 நிமிடம் கூட ஓட முடியாமலிருந்த Taz தற்போது ஒரு மணிநேரம் வரை ஒடுகிறதாம்...
தற்போது Taz வளர்ப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாம்..
ஆனால் Westஇடம் அல்ல... :-)
Councilக்கு West அபராதமாக £1,477 செலுத்த வேண்டும்.
நம்ம நாடுகள்ல எல்லாம் மிருகங்களை வதை செய்தால் என்ன நடக்கும் தெரியுமா????
தெரியாதா????
விடை
|
|
|
|
|
|
ஒன்னுமே நடக்காது...
:-(
வருத்தம் தான்...
அன்புடன்,
14 . பின்னூட்டங்கள்:
வீட்டிலுள்ள வயதுக்கு வந்த பிள்ளைகளை எல்லாம் வெளியே துரத்தி விடுவார்கள்.
செல்லப்பிராணிகளுக்கான ஃபிட்னஸ் சென்டர்கள் குறித்தும் உடல் எடை குறித்தும் அதிகம் கவலைப்படுவார்கள் இந்த மேலை நாட்டினர்.
மனிதாபிமானம் மிகவும் ஜாஸ்தி அங்கே (மனிதர்கள் மேல் அல்லாது ...)
நமது நாட்டில் மனிதர்களையே அனாதையாக விட்டு விடுகிறார்கள்.
நாம் எங்கே? அவர்கள் எங்கே?
நட்புடன் ஜமால் said...
மனிதாபிமானம் மிகவும் ஜாஸ்தி அங்கே (மனிதர்கள் மேல் அல்லாது ...)
//
ரிப்பீட்டே ....கொஞ்சம் ஓவெரா தான் இருக்கு போலியே
தனது வளர்ப்பு பிராணியான நாயின் உடல்நலத்தை சரியாக கவனிக்காமல் விட்டதால் நாயின் உடல் எடை கூடியதன் விளைவாக உரிமையாளருக்கு அதற்கு மேல் பிராணிகள் வளர்க்க தடை.
நாய்படாத பாடுன்னு வருத்தப் பட்டிருப்பார்
போலி மனிதாபிமானிகள் இவர்கள்.
எடை கூடிய தங்கமணியை வளர்ப்பவர்களுக்கு விடுதலை கிடைக்குமா?
ஜெயில்ல போட்டாலும் பரவாயில்லை
(ரங்கமணிகளை தான்)
ஹிஹிஹி! எங்கய்யா புடிக்கிறீங்க உப்பிடி மாட்டர்கள? செம காமடிதான் போங்க... அதுசரி அந்த பைன் காசு யாருக்கு போகும்?
எப்படியெல்லாம் தட போடுறானுங்க?
இதேபோல் எலி வளர்த்தாலும் உண்டா...
எப்படியெல்லாம் தட போடுறானுங்க?
இதேபோல் எலி வளர்த்தாலும் உண்டா...
நம்ம நாடுகள்ல எல்லாம் மிருகங்களை வதை செய்தால் என்ன நடக்கும் தெரியுமா????தெரியாதா????விடை||||||ஒன்னுமே நடக்காது...:-(
வருத்தம் தான்...
well said
இங்க மனுசங்க உடல் நிலைய கவனிக்கவே ஆளுங்களும் சட்டமும் இல்ல..
இதுல வளர்ப்பு பிராணிக்கு வேறா!..
நம்ம நாடுகள்ல எல்லாம் மிருகங்களை வதை செய்தால் என்ன நடக்கும் தெரியுமா????
தெரியாதா????
விடை
|
|
|
|
|
|
ஒன்னுமே நடக்காது...
:-(
இங்கே குழந்தைகளையே ஒழுங்க வளர்க்க தெரியலைன்னு வாங்கி கட்டிட்டு இருக்கோம்....
தற்போது Taz வளர்ப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாம்..ஆனால் Westஇடம் அல்ல... :-)Councilக்கு West அபராதமாக £1,477 செலுத்த வேண்டும்
இது தான் காமெடி
Post a Comment