Wednesday 24 June 2009

100வது பதிவு - கொழுப்பு !!!


வணக்கம் நண்பர்களே...

இது எனது 100வது பதிவு. இதுவரை காலமும் நான் எழுதிய ஆக்கங்களுக்கு எனக்கு ஊக்கம் அளித்து என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல...

இன்னும் அதிக பதிவுகள் எழுத் என்றும் உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறேன்...

________________________________________________________________________

இன்று நண்பர் கார்த்திகைப்பாண்டியனின் தங்கைக்கு திருமணம் என்று கூறியிருந்தார்...

புதுமணத் தம்பதிகளுக்கு எனது இதயபூர்வமான திருமணநாள் நல்வாழ்த்துகள் !!!

________________________________________________________________


கொழுப்பால நமது மக்கள் அதிகம் கஷ்டப்படுறாங்கப்பா...
அதிகமா கொழுப்புச் சத்து நிறைந்த உணவுப் பண்டங்களை சாப்பிட்டுவிட்டு பின்பு தொப்பையைக் குறைக்க காலையில எழும்பி ஓடுறது...
அதுமட்டுமில்லாம இப்போ எல்லா வீடுகளிலும் சகலருக்கும் இலவச இணைப்பா சக்கரை வியாதி வேற வந்து சேருது...
So, சாப்பிடுறத பாத்து கவனமா சாப்பிட்டு நோயில்லாம சந்தோஷமா வாழனும்..
என்ன நான் சொல்றது ??
:-)

உண்மையில எல்லோருக்கும் கொழுப்புச் சத்து அவசியம்.
போசணை அகத்துறிஞ்சல் (Nutrient absorption), நரம்பு கணத்தாக்கம் கடத்தல், கலமென்சவ்வின் (Cell membrane) நிலையைப் பேணல் போன்ற காரணங்களுக்காக நமது உடலில் கொழுப்பு அவசியமாகிறது.

ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுன்னு ஒளவையார் சும்மாவா சொல்லி வச்சாரு ??
அளவுக்கு மிஞ்சிய கொழுப்பினால் எடை அதிகரிப்பு, இதய நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம்...
அதனால அளவோடு கொழுப்பு இருக்கணும்..
இல்லைன்னா காலையில பீச் ஓரத்துல தான் ஓடனும்...
:-)


தேவையான கொழுப்புகள்

ஒற்றை நிரம்பாத கொழுப்புகள் (Monounsaturated Fats)


ஒற்றை நிரம்பாத கொழுப்புகள் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கவும், தாழ் அடர்த்தி லிப்போபுரோட்டீனைக் கரைக்கவும் (LDL - Low Density Lipoprotein) உதவும்.
அதேவேளை HDL எனப்படும் உயர் அடர்த்தி லிப்போபுரோட்டீனை அதிகளவில் உற்பத்தி செய்ய உதவும். (HDL - High Density Lipoprotein).

நிலக்கடலை, பாதம்பருப்பு, கனோலா எண்ணை, ஒலிவ் எண்ணை ஆகியவற்றில் இவ்வகை கொழுப்புகள் அதிகமுண்டு.
இவை உடல் எடை குறைவுக்கு அதிகம் உதவும்...


பன்மை நிரம்பாத கொழுப்புகள் (Polyunsaturated Fats)



இவ்வகை கொழுப்புகளும் LDLஐக் குறைக்க உதவும்.

இவை கடலுணவு, சல்மொன் மற்றும் மீன் எண்ணை, சோளம், சோயா, சூரியகாந்தி எண்ணை ஆகியவற்றில் அதிகமுண்டு.

ஓமெகா 3 கொழுப்பமிலங்கள் இந்த வகையைச் சார்ந்தது தான்...


தேவையற்ற கொழுப்புகள்

நிரம்பிய கொழுப்புகள் (Saturated Fats)



நிரம்பிய கொழுப்புகள் உடலுக்கு தீங்கானது.
இவை இரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிப்பதுடன், LDLஇன் அளவையும் அதிகரிக்கும்.

இவை அதிகமாக விலங்குணவுகளில் குறிப்பாக இறைச்சி, பாலுற்பத்திப் பொருட்கள், முட்டைகள், கடலுணவு ஆகியவற்றில் காணப்படும்.
சில தாவர உணவுகளிலும் இருக்கும்.
குறிப்பாக பால்ம் எண்ணை, தேங்காய் எண்ணை ஆகியவற்றில் காணப்படும்.


Trans Fats



அதிக காலம் பழுதடையாமல் இருக்க எண்ணையை நீர்மயப்படுத்தும் தொழிநுட்பம் விஞ்ஞானிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் உருவானது தான் இவ்வகை கொழுப்பமிலங்கள்.
இது சற்று சிக்கலான தொழிநுட்பமாகும்.

இவ்வகை கொழுப்புகள் அதிகமாக வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படும் உணவு வகைகளில் தான் இருக்கும்.
முக்கியமாக அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவு வகைகள், வறுக்கப்பட்ட உணவு வகைகள் ஆகியவற்றில் அதிகமாக இருக்கும்.
மைக்ரோவேவ் பொப்கோர்ன், French Fries என்று சொல்லப்படும் கிழங்குப் பொரியல் ஆகியவை இந்த கொழுப்பு அடங்கிய உணவுகளுக்கு சிறந்த உதாரணங்கள்.

ஆகவே சிறந்த உணவு வகைகளை உண்டு நலமாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
:-)

அன்புடன்,
100வது பதிவு - கொழுப்பு !!!SocialTwist Tell-a-Friend

51 . பின்னூட்டங்கள்:

துளசி கோபால் on 24 June 2009 at 19:22 said...

இந்த நூறு இன்னும் பல நூறாகணுமுன்னு மனமார வாழ்த்துகின்றேன்.

கிரி on 24 June 2009 at 19:29 said...

வாழ்த்துக்கள் வேத்தியன்

Nimal on 24 June 2009 at 19:46 said...

"வேத்தியனுக்கு" இன்னொரு வேத்தியனின் வாழ்த்துகள்...!

லோகு on 24 June 2009 at 20:00 said...

Congratulations for 100th post....


You r rocking... keep rocking..

வால்பையன் on 24 June 2009 at 20:06 said...

நூறுக்கு வாழ்த்து!
கொழுப்பை ஏத்தியதற்கு நன்றி!

வேத்தியன் on 24 June 2009 at 20:16 said...

துளசி கோபால் said...
இந்த நூறு இன்னும் பல நூறாகணுமுன்னு மனமார வாழ்த்துகின்றேன்.//

மிக்க நன்றிங்க...

வேத்தியன் on 24 June 2009 at 20:16 said...

கிரி said...
வாழ்த்துக்கள் வேத்தியன்//

நன்றி கிரி...

வேத்தியன் on 24 June 2009 at 20:17 said...

நிமல்-NiMaL said...
"வேத்தியனுக்கு" இன்னொரு வேத்தியனின் வாழ்த்துகள்...!//

மிக்க நன்றி நிமல்...
:-)

Arasi Raj on 24 June 2009 at 20:17 said...

படத்தை பார்த்தாலே பசிக்குதே....

வாழ்த்துக்கள் வேத்தியன்...கலக்கி போடுங்க

வேத்தியன் on 24 June 2009 at 20:18 said...

லோகு said...
Congratulations for 100th post....


You r rocking... keep rocking..//

Thanks dude...

வேத்தியன் on 24 June 2009 at 20:19 said...

வால்பையன் said...
நூறுக்கு வாழ்த்து!
கொழுப்பை ஏத்தியதற்கு நன்றி!//

நன்றி வால்ஸ்...

வேத்தியன் on 24 June 2009 at 20:19 said...

நிலாவும் அம்மாவும் said...
படத்தை பார்த்தாலே பசிக்குதே....

வாழ்த்துக்கள் வேத்தியன்...கலக்கி போடுங்க//

:-)
நன்றிங்க...

தேவன் மாயம் on 24 June 2009 at 20:28 said...

வேத்தியன் பல நூறு பதிவுகள் இட்டு புகழ்பெற வாழ்த்துகிறேன்!!

வழிப்போக்கன் on 24 June 2009 at 20:41 said...

all the best !!!

கலையரசன் on 24 June 2009 at 20:57 said...

100க்கு வாழ்த்தும், 200க்கு பூங்கொத்தும்!!

தீப்பெட்டி on 24 June 2009 at 20:57 said...

பல நூறாய் பெருக வாழ்த்துகள்..

அப்புறம் உங்க கொழுப்ப பாத்த பிறகு நானும் என் கொழுப்ப குறைக்க முயற்சிக்கிறேன்

:))

துபாய் ராஜா on 24 June 2009 at 21:01 said...

செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்.

பலநூறு பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.

அன்புடன் அருணா on 24 June 2009 at 21:15 said...

100க்கு பூங்கொத்து!!!

அப்துல்மாலிக் on 24 June 2009 at 21:32 said...

செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள் வேத்தியன்

நல்லா நிறைய நல்லதா எழுதுங்கப்பூ

ப்ரியமுடன் வசந்த் on 24 June 2009 at 21:36 said...

வேத்தியன் 100* நாட் அவுட்

டபுள் ட்ரிபில் செஞ்சுரிகள் அடிக்க வாழ்த்துக்கள்

Anonymous said...

நல்ல பணிகள் தொடரட்டும் ......
நல்ல பாதைகள் திறக்கட்டும் .......
இறைவனுக்கே எல்லா புகழும் .

sakthi on 24 June 2009 at 21:51 said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வேத்தியரே...

sakthi on 24 June 2009 at 21:52 said...

.அதுமட்டுமில்லாம இப்போ எல்லா வீடுகளிலும் சகலருக்கும் இலவச இணைப்பா சக்கரை வியாதி வேற வந்து சேருது..

நிஜம் தான் வேத்தியரே...

sakthi on 24 June 2009 at 21:53 said...

நல்ல மருத்துவ பதிவுகளா போடறீங்க

அருமை மிக அருமை வேத்தியரே....

SUREஷ்(பழனியிலிருந்து) on 24 June 2009 at 21:59 said...

மியாண்டட் மாதிரி 100ல் 100 தல..,

சென்ஷி on 24 June 2009 at 22:04 said...

முதலில் நூறுக்கு வாழ்த்துக்கள்!

பதிவு கலக்கல் :))

மயாதி on 24 June 2009 at 22:07 said...

நல்ல பதிவு
நூறுக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

இந்த நூறு இன்னும் பல நூறாகணுமுன்னு மனமார வாழ்த்துகின்றேன்.
--kadayam anand

Tech Shankar on 25 June 2009 at 01:45 said...

Congrats for century. I am expecting more centuries from your Pen @ Keyboard. (:

நசரேயன் on 25 June 2009 at 03:31 said...

வாழ்த்துக்கள் மென்மேலும் வளர

நட்புடன் ஜமால் on 25 June 2009 at 05:15 said...

வாழ்த்துகள் வேத்தியன்!


கொழுப்பு பற்றிய தகவல்களுக்கு நன்றி

Anonymous said...

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...மனதில் பதித்துக் கொள்ளவேண்டிய பதிவும் கூட....

Anbu on 25 June 2009 at 09:44 said...

100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்

Anbu on 25 June 2009 at 09:45 said...

உனக்கு மிகவும் பயனுள்ள பதிவு

வேத்தியன் on 25 June 2009 at 09:56 said...

வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி...

தமிழ் அமுதன் on 25 June 2009 at 10:07 said...

வாழ்த்துக்கள்!!!100 க்கு நீங்க வேத்தியரா? வைத்தியரா?;;))

குடந்தை அன்புமணி on 25 June 2009 at 10:22 said...

100வது பதிவு கொழுப்பு! அப்படின்னோன உங்களுக்குத்தான் கொழுப்போன்னு நினைச்சிட்டேன். ஹி ஹி... சும்மாச்சுக்கும்! வாழ்த்துகள் வேத்தியன்! இன்னும் நூறு பல்லாயிரம் என பதிவுகள் நீளட்டும்...

காலை முதல் இரவு வரை தின்று தீர்த்துவிட்டு அதிகாலையில் நடப்பவர்களை பற்றி என்ன சொல்ல...

குடந்தை அன்புமணி on 25 June 2009 at 10:24 said...

சிறுகதை போட்டிக்கான கதை
கவிதை படிக்கலாம் வாங்க!

Rajeswari on 25 June 2009 at 10:26 said...

100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் வேத்தியன்..

கொழுப்பு- பயனுள்ள பதிவு..

சி தயாளன் on 25 June 2009 at 10:51 said...

வாழ்த்துகள்...:-)

ஆ.ஞானசேகரன் on 25 June 2009 at 11:17 said...

முதலில் நூறாவது பதிவுக்கும்... இன்னும் நூறுகள் பதிவுக்கும் வாழ்த்துகள் வேத்தியன்,, நல்ல பதிவு நல்ல பகிர்வு வாழ்த்துகளுடன்
ஆ.ஞானசேகரன்

S.A. நவாஸுதீன் on 25 June 2009 at 11:43 said...

நூறுக்கு வாழ்த்துக்கள் வே(வை)த்தியன். இன்னும் நல்லா கொழு கொழுன்னு வளருங்க. இதுபோல இன்னும் நிறைய நல்லா எழுதுங்கன்னு சொல்ல வந்தேன்

♫சோம்பேறி♫ on 25 June 2009 at 12:01 said...

கொழுப்பு பற்றிய தகவல் அருமை. தேங்காயை துருவி அல்லது அப்படியே சாப்பிட்டால் நல்ல கொழுப்பு. அதையே அடுப்பில் வைத்து சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

புதுமணத் தம்பதிகளுக்கு எனது இதயபூர்வமான திருமணநாள் நல்வாழ்த்துகளும் கூட !!!

நூறாவது பதிவுக்கு உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வேத்தியன். கலக்குங்க..

Anonymous said...

வாழ்த்துகள் வேத்தியன்

Admin on 25 June 2009 at 12:55 said...

என்னும் பல நூறு பதிவுகளுக்க் வாழ்த்துக்கள்...

இப்போ உணவால மட்டும் இல்ல வேற (............................) கொழுப்பேறி அலையிரான்களே கொழும்பில.

வேத்தியன் on 25 June 2009 at 14:33 said...

அனைவருக்கும் நன்றிகள்...

யாழினி on 25 June 2009 at 15:27 said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வேத்தியன்!

सुREஷ் कुMAர் on 25 June 2009 at 22:27 said...

ஹேய் வேத்தியன்..
100 க்கு வாழ்த்துக்கள்..

முன்புபோல் சரியா தொடரமுடியாமைக்கு சாரிபா..
விரைவில் சரிஆகிவிடும்னு நினைக்கிறேன்..

வேத்தியன் on 26 June 2009 at 08:14 said...

யாழினி said...
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வேத்தியன்!//

நன்றி யாழினி...

வேத்தியன் on 26 June 2009 at 08:15 said...

சுரேஷ் குமார் said...
ஹேய் வேத்தியன்..
100 க்கு வாழ்த்துக்கள்..

முன்புபோல் சரியா தொடரமுடியாமைக்கு சாரிபா..
விரைவில் சரிஆகிவிடும்னு நினைக்கிறேன்..//

நன்றி நண்பா...

அதுக்கென்ன..
பரவாயில்லை..

mal Ramanathan said...

நண்ப,
மன்னிக்கவும் நீண்ட நாட்களாக உனது பதிவுகளை பார்வையிட முடியவில்லை
நூறு பதிவுகள் வாழ்த்துக்கள்!!

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.