ஒவ்வொன்றும் ஒருவகை..
நாம் எதையாவது இன்னொருவருக்கு எந்த பிரதியுபகாரமும் கருதாமல் செய்வது தானமாகும்.
சில தானங்களை பார்க்கலாம்..
இரத்த தானம் - இரத்தம் வழங்குதல்.
இரண்ய தானம் - பொருள் வழங்குதல்.
அன்ன தானம் - உணவு வழங்குதல்.
வஸ்திர தானம் - உடை வழங்குதல்.
உறுப்பு தானம் - உடலிலுள்ள ஏதாவது உறுப்பை வழங்குதல்.
வாகன தானம் - வாகனம் வழங்குதல்.
இப்படி தானங்கள் பல வகை..
நாம் எதை இன்னொருவருக்கு எதையும் எதிர்பாராமல் கொடுத்தாலும் அது தானமென்றே கொள்ளப்படும்.
இப்போது நான் சொல்ல வந்தது சிலருக்கு புது விடயமாக இருக்கலாம்..
ஒரு பெண்ணை பிள்ளையாகப் பெற்று அவளை வளர்த்து பின் ஒரு ஆணுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்களும் ஒரு தானம் செய்கிறார்கள்..
அது தான் கன்னிகாதானம் !!!
ஆம்..
யோசித்துப் பாருங்கள்..
பெண்ணை பிள்ளையாகப் பெற்று வளர்த்து பின் திருமணம் வரை சென்று நடத்தி முடிக்கும் பெற்றோர்கள், தன் மகள் நலமாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறென்ன எதிர்ப்பார்ப்பர் ????
ஆகவே அதுவும் ஒரு தானம்..
ஒரு பெண்ணை இன்னொருவருக்கு தானமாக கொடுப்பதால் அது கன்னிகாதானம்.. ( கன்னி + தானம் = கன்னிகாதானம் )
இதுவே ஒரு ஆணை பிள்ளையாகப் பெற்று வளர்த்து திருமணம் நடத்தி வைக்கும் பொழுது இன்னொருவரிடமிருந்து அவரின் பிள்ளையை ( மகளை ) தானமாகப் பெறுகின்றனர்.
ஆக அது பொறுப்பு..
இதன் மூலம் சொல்ல வருவது என்னவென்றால் மகளைப் பெற்று விட்டோமே என்று ஏங்கித் தவிக்கும் பெற்றோர்கள் ஏராளம் இந்தக் காலத்தில்..
அவர்களுக்குரிய தகவல் தான் இது..
அவர்கள் தங்கள் மகளை திருமணம் நடத்தி வைத்து கன்னிகாதானம் செய்வதால் அவர்களைன் பாவ புண்ணிய கணக்கில் புண்ணியமே சேர்கிறது..
மகனைப் பெற்று திருமணம் நடத்தி வைக்கும் பொழுது இன்னொருவரிடமிருந்து கன்னியை ( பெண்ணை ) தானமாகப் பெறுவதால் பொறுப்பே அதிகரிக்கிறது..
அது புரியாமல் பெண்ணைப் பெற்று விட்டோமே என்று ஏங்கும் பெற்றோர்களும், ஆணைப் பெற்று விட்டோமே என்று சந்தோஷப்படும் பெற்றோர்களுமாய் மாறி நடக்கிறது தற்பொழுது...
இந்த தகவல் நான் அண்மையில் கேட்டுத் தெரிந்து கொண்டது..
யாருக்கும் மாற்றுக் கருத்து இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்...
__________________________________________________________________
ஒரு செய்தி...
வரும் திங்கள் முதல் எனக்கு கல்லூரி ஆரம்பமாகிறது.
அதனால் அதற்குரிய வேலைகளில் ஈடுபட்டிருந்த காரணத்தால் நண்பர்களின் பதிவுகளை படிக்கவோ, பின்னூட்டமிடவோ இயலவில்லை..
இன்னும் சில நாட்களில் திரும்பவும் வழமைப் போல் இல்லையெனினும் படித்து பின்னூட்டமிடும் அளவுக்காவது நேரமிருக்கும் என்று நம்புகிறேன்..
அப்போது கட்டாயமாக வருவேன்...
நண்பர்கள் அனைவரும் மண்ணித்துக் கொள்ளவும்...
அன்புடன்,
26 . பின்னூட்டங்கள்:
நல்லா படிங்க பாஸ்
இப்ப அதுதான் உங்கள் பொறுப்பு ...
//நல்லா படிங்க பாஸ்
இப்ப அதுதான் உங்கள் பொறுப்பு ...//
கன்னா பின்னா ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்
(கன்னிகா)தானம் வாங்கிறதெல்லாம் நாங்க பாத்துகிறோம்.
போய் ஒழுங்கா படிங்க பாஸு...
//அவர்கள் தங்கள் மகளை திருமணம் நடத்தி வைத்து கன்னிகாதானம் செய்வதால் அவர்களைன் பாவ புண்ணிய கணக்கில் புண்ணியமே சேர்கிறது..//
தானம் செய்த பொருள்களையும், யாருக்கு கொடுத்தோம் என்பதையும் மறந்தவிட வேண்டும் என்கிறார்கள்.
பாவம் பசங்க !
:)
//அவர்கள் தங்கள் மகளை திருமணம் நடத்தி வைத்து கன்னிகாதானம் செய்வதால் அவர்களைன் பாவ புண்ணிய கணக்கில் புண்ணியமே சேர்கிறது..//
யருக்கு புண்ணியம் கணக்கில் போகின்றது. கொடுபவருக்கா? பெருபவருக்கா?
அப்பறம் நல்ல போயி படிங்க பாஸ் வாழ்த்துகள்
கோவி.கண்ணன் அவர்களின் பின்னூட்டம் சாதரணமானது அல்ல. அர்த்தம் பொதிந்தது. உணர்வுள்ளவர்கள் உணரவேண்டும். படிப்பில் கவனம் செலுத்துங்கள் வேத்தியன்! அப்பப்ப வலைக்கும் வாருங்கள்!
படிப்பில் கவனம் கூடுதலாக இருக்கட்டும் வேத்தியன்
உங்க படம் அருமை,
படிப்புதான் முதலில்,
அப்புறம் பிளாக்கலாம்...
உங்கள் விளக்கம் அருமை.
ஆமா அந்த போட்டோவுல இருக்கற மாடல் யாரு ??
“கன்னிகாதானம்” இதைப்பற்றி தப்பா புரிஞ்சிகிட்டு விளக்கம் கொடுத்து இருக்கீங்க.
நீங்க மேலே குறிப்பிட்ட மற்றைய அனைத்து தானமும் கொடுத்தவருக்கும்,வாங்கியவருக்கும் எந்தவித உறவும் பிற்பாடு இருக்காது, அது போலத்தான் இந்த கன்னிகா தானமும்?
தானம் என்பது இலவசமாக கொடுப்பது, அப்படித்தான் இந்த கன்னிகாதானமுமா?
தானம் பெற்றவர் தனக்கு தேவையில்லையென்றால் அந்த தானப் பொருளை என்னவேண்டுமென்றாலும் செய்யலாம், அதுபோலத்தானா இந்த கன்னிகாதானம்?
மற்றைய தானங்கள் சிந்திக்கும் சக்தியற்றது, அதுபோன்றதுதான் இந்த கன்னிகாதானமுமா?
முற்காலத்தில் பெண்கள் ஆண்களை சார்ந்தே வாழவேண்டிய கட்டாயம் இருந்தது. இப்பொழுதும் அப்படியா?
பெண்களையும் மனிதர்களாக மதியுங்கள்... அவர்களை தானம் வழங்க அவர்களின் பெற்றோர்களுக்கு என்ன உரிமை உள்ளது?
இது எனக்கு புதிய விஷயம் தான் வேத்தியன்..
இனிமே தானம் கொடுக்குற ஆளுங்க கிட்ட பல்ல பிடிச்சு பாக்காம இருந்தா சரி..
// கலையரசன் said...
உங்க படம் அருமை//
பதிவுலகின் அடுத்த ஹீரோ!..
என்னது திடீர்னு கல்யாணம் பத்தி பதிவு... வேத்தியனுக்கு கல்யாண கலை வந்துடுச்சு..
வேத்தியன் ரகசிய திருமணம் ன்னு வதந்திய கிளப்பிடலாமா??
நீங்க ஆர்செனல் ஃபேனுனு தெரியுது பாஸூ....
ஆர்செனலுக்கும் ச்செல்ஸிக்கும் சோடி போட்டுக்குவமா சோடி...??
வேத்தியன் வருக!!
என்னது திடீர்னு கல்யாணம் பத்தி பதிவு... வேத்தியனுக்கு கல்யாண கலை வந்துடுச்சு..
வேத்தியன் ரகசிய திருமணம் ன்னு வதந்திய கிளப்பிடலாமா??///
இருக்கலாம்!!
முகப்பில் படம் வேற!!!
பதிவும் போடுங்க!! இதெல்லாம் ஒரு தடையா?
கல்லூரி திறந்தா பதிவு போடகூடாதுன்னு சட்டமா என்ன?
பின்னூட்டம் போடலைன்னாலும் பரவாயில்லப்பு பதிவு போடுங்க
கோவைக்கு அன்புடன் வரவேற்கிறேன் வேத்தியன்..
STUDENT means STUDY...
So take care of your study well
வித்தியாசமான பதிவு...
ஆமா கோவைக்கா படிக்க வர்றீங்க வேத்தியரே...
வாழ்த்துக்கள்
எங்கள் அழகான கோவை நகரத்திற்கு
வருக வருக என தங்களை வரவேற்கிறேன்.....
கேவலமான ஒரு பார்பணிய ஆணாதிக்க சிந்தனைய எழுதிட்டு அதுக்கு மாற்று கருத்து கேக்குறிங்களே பாஸ்!
கன்னிகாதானம்னா பொண்ணு கொடுக்குறதில்ல, பொண்ண கன்னிதன்மையோட கொடுக்குறது, அப்படி வாங்குற பையன் கன்னிதன்மையோட இருப்பானான்னு கேட்டா பதில் இருக்காது!
தானம் கொடுப்பதற்குப் பெண் என்ன ஒரு பொருளா? பெண்ணுரிமை, பெண்விடுதலை பற்றிப் பேசும் இந்த நவயுகத்தில் கன்னிகாதானம் எனப் பெண்ணை தானமாக வழங்குவது ஏற்றுக்கொள்ளத் தக்கதா என வினா எழுகிறது?
சாத்திரம், சம்பிரதாயமெனச் செய்வது உண்டு, அவை காரணமறியாச் சாத்திரங்களாக இருப்பது மேல் - அஃதன்றி பெண்ணை தானங்கொடுத்தல் புண்ணியம் போன்ற அடிப்படையாதாரமற்ற கருத்துக்கள் ஏற்பதற்கில்லை.
நீங்கள் கருத்தைச் சொன்னதற்கான காரணத்தில் பிழையில்லை. பெண்பிள்ளைகளைப் பெற்றவர்கள் அதைக் குறையென நினைக்கக்கூடாது என்பது தான் இப்பதிவை எழுதிய உங்கள் எண்ணம் - ஆனால் சொல்லப்பட்ட கருத்தில் முழுமையாக என்க்கு உடன்பாடில்லை.
கன்னிகாதானத்தை வெறும் சம்பிரதாயமாக பின்பற்றாலாமன்றி - அதுவும் எம் சம்பிரதாயங்கள் அழியக்கூடாது என்பதற்காக - மாறாக கன்னிகாதானத்தை நியாயப்படுத்துவதன் மூலம் பெண்ணையும் தானங்கொடுக்கும் பொருளாக எண்ணுவது தவறு.
ஒரு சின்ன சந்தேகம் - தாங்கள் இவ்வலைப்பதிவை creative commons மூலம் license செய்திருக்கிறீர்கள் - ஆக இது யாரும் நகல் செய்வதற்கான உரிமையை வழங்குகிறது, அதேவேளை copyscape மூலம் நகல் எடுக்கக்கூடாது என்கிறீர்கள் - இதுல எது சரி எது பிழை!
கன்னிகாதானம் பத்தி எழுதியிருக்க...
சீக்கிரம் டும் டும் டும்ம்ம்மா???
கையெழுத்து நல்லா இருக்குபா!!!
வாழ்த்துக்கள்!
இந்த கன்னிகாதானம் பற்றி..முன்னோர்கள் கூறி இருந்தாலும் தற்கால இளையவர்கள் விரும்புவதில்லை. சடங்கு சம்பிரதாயங்களை மதிப்பதில்லை. உங்கள் அனுமதி யுடன் இதை பிரதி பண்ணலாமா? உங்கள் பதிவுக்கு நன்றி . கல்வி அலையாத செல்வம் கல்வியில் கவனம் செலுத்தி ,மேல் நிலை செல்ல என் வாழ்த்துக்கள். l
புதுமையான விடயம் நன்றாக உள்ளது. இனியாவது பெண்ணை பெற்றவர்கள் சந்தோஷப்படட்டும். வாழ்த்துக்கள் வேத்தியன்!
@ நிலாமதி..
நீங்கள் இதை பதிவாக போடுவது எனக்கு மகிழ்ச்சியே...
தாராளமாக போடுங்கள்.
:-)
Post a Comment