Saturday, 28 February 2009

பாட்டி சமையலும் லாப்டாப்பும் !

65 . பின்னூட்டங்கள்
தொழினுட்பம் வளர்ந்ததும் வளர்ந்திச்சு...
அதுக்காக இப்பிடியா பாட்டி சமையலுக்கு அதை பாவிக்கிறது???

அடுத்த முறை நான் லாப்டாப் வாங்கினா அது "LENOVO" தாங்க...
:-)


பாட்டி சமையலும் லாப்டாப்பும் !SocialTwist Tell-a-Friend

Friday, 27 February 2009

தமிழக அரசின் "கலைமாமணி விருதுகள்"...

22 . பின்னூட்டங்கள்
தமிழ அரசு வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்றான "கலைமாமணி விருது"க்கான இந்த ஆண்டின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கையின் பிரபல பத்திரிக்கையொன்றில் வெளியான செய்தியொன்றின் ஒரு பகுதியை இங்கு தருகிறேன்...

அசின், நயன்தாரா, ஐஸ்வர்யா ரஜினி உட்பட 71 பேருக்கு கலைமாமணி விருதுகள் (தமிழக அரசு அறிவிப்பு)

சென்னை : தமிழ் நடிகைகள் அசின், நயந்தாரா, மீரா ஜாஸ்மின், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர்கள் பரத், சுந்தர்.சி உட்பட 71 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
என்று அந்த செய்தி தொடர்ந்து செல்கிறது.

கலைமாமணி விருது பெறும் மற்றும் சிலர் விபரமும் அங்கு குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் :

அபிராமி ராமனாதன் - திரைப்பட தயாரிப்பாளர்.
சேரன் - திரைப்பட இயக்குனர்.

சுந்தர்.சி - நடிகர்.

பசுபதி - குணச்சித்திர நடிகர்.

ஷோபனா - குணச்சித்திர நடிகை.
வையாபுரி - நகைச்சுவை நடிகர்.

சரோஜாதேவி - பழம்பெரும் நடிகை.

"வேதம்புதிது" கண்ணன் - வசனகர்த்தா.
ஹாரிஸ் ஜெயராஜ் - இசையமைப்பாளர்.

இதுல எந்த பிரச்சினையும் இல்ல....
இப்போ என்னோட கேள்வியெல்லாம் என்னான்னா, ஒரு விருது குடுக்க முதல்ல அந்த விருதுக்கு அவர் தகுதியுடையவரான்னு நல்லா யோசிக்கணும் இல்லைங்களா????

சமீபத்துல நடிகர் விஜய்க்கு கெளரவ டாக்டர் பட்டம் எம்.ஜி.ஆர் பல்கைக்கழகத்தால் வழங்கப்பட்டது நாம் எல்லோரும் அறிந்ததே....
டாக்டர் பட்டம் என்பது இவ்வளவு காலமும் மதிப்பு மிக்க ஒன்றாக கருதப்பட்டு வந்தது...
வாழ்நாளிலே பல சவால்களை எதிர்கொண்டு சாதித்தவர்களுக்கு அல்லவா அது வழங்கப்பட வேண்டும்???
அந்தளவுக்கு நடிகர் விஜய் என்னாத்த சாதிச்சார்ன்னு எனக்கு தெரியாதுங்க...
இதச் சொல்றதுனால நான் விஜய் எதிர்ப்பாளன்னு அர்த்தமில்ல...
:)

நாம திரும்பி விசயத்துக்கு வரலாம்...
இந்த முறையும் தமிழக அரசு விருதுக்கு தேர்வு செய்தவர்கள் பத்தியும் எனக்கு ஒரு அதிருப்தி தான்...
ஏன்னா அசின், நயன்தாரா, பரத், மீரா ஜாஸ்மின், சுந்தர்.சி எல்லோரும் விருது பெறும் அளவுக்கு சாதித்தவர்களா என்பது தாங்க என்னோட கேள்வி...

சரோஜாதேவிக்கு வழங்கப்படும் விருதப் பத்தி எந்த கேள்வியும் இல்ல...
அந்தளவுக்கு நடிக்கிறதுக்கும் அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் இவங்களுக்கு அனுபவம் இல்ல...

இன்னொரு விசயம்.
சமீபத்தில் மண்ணுலகை விட்டு நீங்கிய இணையற்ற நடிகர் நாகேஷுக்கு ஒரு விருதும் கொடுக்கப்படவில்லையா???
நகைச்சுவைக்கென்று தனக்கென ஒரு வரலாறையே எழுதியவர் அவர்...
இன்று இருக்கும் பல நடிகர்களுக்கு ஒரு ரோல் மாடல்...
இப்படிப்பட்ட ஒரு கலைஞருக்கு ஒரு மரியாதை செய்யும் விதமாகவேனும் ஒரு விருது அறிவிக்கப் படவில்லையா???
எம்.என்.நம்பியாரையும் மறந்துட்டாங்களா ???

அடுத்து ஐஸ்வர்யா ரஜினி...
ரஜினி ஒரு பெரிய நடிகர். அதுல மாற்று கருத்து இல்லை.
ஆனா அவரின் மகள் ஐஸ்வர்யா என்னாத்த செய்தார்???
விருது பெறும் அளவுக்கு பெரிய கலைஞரா என்பது என்னோட கேள்விங்க...

இந்தப் பதிவு என்னுடைய எதிர்ப்பு அல்ல...
விருது வழங்கப்படுபவர்கள் பற்றிய என்னுடைய ஆதங்கம் !!!
இதில் ஏதாவது பிழை இருந்தால் சொல்லுங்கள்...
தமிழக அரசின் "கலைமாமணி விருதுகள்"...SocialTwist Tell-a-Friend

Thursday, 26 February 2009

"கனாக் காணும் காலங்கள்" - என்ன வித்தியாசம் ???

22 . பின்னூட்டங்கள்
ஒவ்வொரு மனிதனும் தன்னோட வாழ்க்கையில மறக்க முடியாத பல அனுபவங்கள் பள்ளியில் இருக்கும் போது ஏற்பட்டது தான்...
மாணவனாக இருந்த அந்த பசுமையான நாட்களை ஒரு மனிதன் எவ்வளவு காலம் சென்றாலும் மறக்க மாட்டான்.

அந்த பள்ளி வாழ்க்கையில ஏற்படுகிற சின்னச் சின்ன சந்தோஷங்கள், துக்கங்கள், ஏமாற்றங்கள், முதல் காதல் (அட, வந்தது தானே ???), நகைச்சுவையான சம்பவங்கள் எல்லாம் அந்தந்த வயதில் அவனை ஒரு பக்குவ நிலைக்கு இட்டுச் செல்லும்.

ஒரு சிறுவனாக நாம் பள்ளியில் சேர்ந்ததிலிருந்து பள்ளியிலிருந்து விலகும் வரையும் உள்ள அந்த காலப்பகுதியில் நம்மில் எவ்வளவு மாற்றங்கள் ???

சரி நாம விசயத்துக்கு வருவோம்...

இன்று நான் என்னோட பள்ளியில் இருந்து லீவிங் சர்டிபிகட் வாங்கிட்டேன்.
(அடுத்து யுனிவர்சிட்டி தான். ஐ நானும் பெரியாள் ஆயிட்டேனே...).
லீவிங் வாங்கிட்டு அப்பிடியே நடந்து வந்திட்டிருக்கும் போது பள்ளியில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை யோசிச்சுட்டே வந்தேன்.
அப்போ எனக்கு ஞாபகம் வந்தது தான் இந்த "கனாக் காணும் காலங்கள்".
(எனக்கு என்னென்னா நடந்துச்சுனு சொல்லி அறுக்க விரும்பலைங்க...)

சின்ன வயசிலயிருந்தே எனக்கு தொலைக்காட்சி நாடகங்கள்ன்னா பிடிக்கவே பிடிக்காது. (நமக்கு ஸ்போர்ட்ஸ் தாங்க...).
ஒரு வீட்டை மையப்படுத்தி அங்கு நடக்கும் பிரச்சினைகளை காட்டுறோம் பேர்வழின்னு பெண்களை அழவிட்டு அந்த டெலிட்ராமா டைரக்டர்ஸ் நம்மைப் போட்டு ஆட்டிப் படைச்சுட்டாங்க...

அப்பிடி சின்ன வயசிலயிருந்தே அந்த மாதிரியான நாடகங்களை பாத்து பிடிக்காமப் போனதாலோ என்னவோ, இன்று வரை நாடகங்கள் பாக்கணும்ன்னு எனக்கு ஒரு ஆசை வந்ததே கிடையாது.

ஆனா ஒரு மாசம் முன்னாடி டி.வி பார்த்துட்டிருக்கும் போது தற்செயலா விஜய் டி.வியில ஒளிபரப்பப்படும் "கனாக் காணும் காலங்கள்"ங்கிற நாடகம் பார்த்தேன்.
என்னவோ ஒரு வித்தியாசம் உணர்ந்தேன்.நாம் வழமையாக பார்க்கும் நாடகங்களுக்கும் இதுக்கும் என்னவோ ஒரு வித்தியாசம் இருக்கில்ல ???
யோசிச்சு பார்த்தப்போ, இவ்வளவு காலமும் நாம பார்த்துட்டிருந்த நாடகங்கள் இன்டோர்ல ஷூட் பண்ணது (அதாவது ஒரு வீட்டுக்குள்ளேயோ, ஏதாவ்து செட்டுக்குள்ளேயோ ஷூட் பண்ணது).
ஆனா கனாக் காணும் காலங்கள் அவுட்டோர்ல ஷூட் பண்றாங்க.
அது தான் அந்த நாடகத்தின் ரசிக்கும் படியுள்ள தன்மைக்கு காரணம்ன்னு நான் நினைக்கிறேன்.

எனக்கு ஷூட்டிங் பத்தி அதிகமா தெரியாது.
ஆனா "கானாக் காணும் காலங்கள்" ஒரு வித்தியாசமான நாடகம்ன்னு மட்டும் நன்னா தெரியுதுங்க...
விசயம் தெரிஞ்சவங்க சொல்லவும்...

இந்த நாடகத்தில் வரும் விசயங்கள் எல்லாம் என்னோட பள்ளி வாழ்க்கையில நடந்ததை அப்பிடியே ஞாபகப் படுத்துகிறது...
இந்த நாடகத்தைப் பார்த்தாவது மற்ற டைரக்டர்ஸ் அது மாதிரி நாடகம் எடுக்கணும்ங்கிறது (அதாவது அவுட்டோர் ஷூட்டிங்) என்னோட ஆசை....

ஆனா என்னத்தைச் சொன்னாலும் இப்போ பிரபலமான சேனல்களில் ஒளிபரப்பப்படும் வழமையான நாடகங்களை பாக்கிறதுக்கின்னே ஒரு கூட்டம் இருக்கில்லே ???
இந்த மாதிரியான ரசிகர் கூட்டம் இருக்கிற வரை அந்த மாதிரியான டைரக்டர்களும் இருந்திட்டே தான் இருப்பாங்க...

மாற்றம் தேவை !!!
உங்கள் கருத்தைச் சொல்லவும்...
"கனாக் காணும் காலங்கள்" - என்ன வித்தியாசம் ???SocialTwist Tell-a-Friend

Tuesday, 24 February 2009

வழக்கொழிந்த தமிழ் சொற்கள்.

67 . பின்னூட்டங்கள்
திரும்பவும் மாட்டிக்கிட்டேன் தமிழ்த்துளி தேவா சாரிடம் (அவ்வ்வ்வ்வ்வ்)...
சரி பரவாயில்ல, நம்ம தமிழ் பத்தி நாமளே எழுதலைன்னா வேற யாரு எழுதறதுன்னு சொல்லிட்டு (ஏற்கனவே தயாரா வச்சிருந்த) சொற்களை இங்க போட்டுரலாம்ன்னு தான் இந்த பதிவு !

இப்போவே நம்ம கண்முன்னுக்கே சில தமிழ் சொற்கள் வழக்கொழிந்து வரும் காலம் இது.
காரணம் ஆங்கில மோகமா அல்லது தமிழ் மேல் வெறுப்பா (இருக்காது, இருக்கவும் முடியாது !) ???
எனக்குப் புரியவில்லை !!!

சரி நாம நமக்கான வேலையைப் பாக்கலாம்...
அங்க இங்கன்னு தேடி ஒரு 25 வழக்கொழிந்த சொற்களை தேடிப்பிடிச்சிருக்கேன்...
அவற்றை இங்கே தருகிறேன்..
சில சொற்களுக்கு எனக்கு ஒரு அர்த்தம் தான் தெரியும். வேற ஏதாவது அர்த்தம் இருந்துச்சுனா சொல்லுங்க... (எந்த வார்த்தைக்கும் ஏடாகூடமா ஏதும் அர்த்தம் இருக்காதுன்னு நெனைக்கிறேன் ! :-) )

மடம் - அறியாமை, முனிவர் வாழுமிடம்.

காதம் - 10 மைல் தூரம் (அகராதியில் - 7.5 நாழிகைவழி).

கொப்பம் - யானை பிடிக்க வெட்டிய பெரிய குழி.

தடாகம் - குளம், சிறு நீர்ப்பரப்பு.

அங்காடி - கடைத்தெரு, சந்தை.

சாளரம் - ஜன்னல்.

கூறை - கல்யாண ஆடை, புத்தாடை.

மஞ்சாடி - இரண்டு குன்றிமணி எடையுடையது, மரவகை.

புசித்தல் - உண்ணுதல், சாப்பிடுதல்.

மந்தி - பெண்குரங்கு.

ஞாலம் - பூமி, வித்தை.

இறுங்கு - சோளம்.

குல்லகம் - வறுமை.

பீடிப்பு - துன்பம்.

சாலிகை - கவசம்.

பொலிசை - இலாபம்.

நாண் - வெட்கம், கயிறு.

தக்கடை - தராசு.

கொள்ளம் - குழைவான சேறு.

ஏதிலார் - அன்னியர், அன்பில்லாதார், பகைவர்.

நுகும்பு
- குருத்து, ஓலை.

பதாதி - காலாட்படை.

துமிதம் - நீர்த்துளி.

சமஷ்டி - தொகுதி.

நல்குரவு - வறுமை.

கோபம் எனும் சொல்லுக்கு சிலபேர் "கடுப்பு"ன்னு (உதாரணமா 'கோபத்தைக் கிளப்பாத'ன்னு சொல்றதுக்கு 'கடுப்பைக் கிளப்பாத'ன்னு சொல்றாங்க !) சொல்றாங்களே, அப்போ "கோபம்" வழக்கொழிந்து வரும் சொல்லாயிடுமா ???
அப்போ "வழக்கொழிந்து வரும் தமிழ் சொற்கள்"ன்னு ஒரு தொடர் பதிவ ஆரம்பிச்சிரலாமா ???
:-)

சரி ரெண்டு பேரைக் கோர்த்து விடனுமேன்னு யோசிச்சுட்டு இருக்கிறப்போ, சட்டுனு ஞாபகம் வந்தது இவங்க தான்...

1. கமல் - தமிழ் மதுரம்

2. ஆதவா - குழந்தை ஓவியம்

எப்பிடி நம்ம சொற்கள் ???
புடிச்சிருந்தா அப்பிடியே தமிழ்மணத்திலயும், தமிழிஷ்லயும் ஒரு ஓட்டு போடுறது...
:-)
வழக்கொழிந்த தமிழ் சொற்கள்.SocialTwist Tell-a-Friend

Monday, 23 February 2009

ஒஸ்கார் விருதுகள் 2009 - முடிவுகள்.

21 . பின்னூட்டங்கள்

எல்லோராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 2009ம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் நேற்று இரவு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழங்கப்பட்டன.
இது 81வது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவாகும்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "Slumdog Millionaire" திரைப்படம் பின்வரும் விருதுகள் பெற்றது.

1. Film Editing

2. Sound Mixing

3. Cinematography

4. Writing (Adapted Screenplay)

5. Music (Score)

6. Music (Song)

7. Directing

8. Best Picture

பரிந்துரைக்கப்பட்ட 10 விருதுகளில் 8 விருதுகளை அள்ளியது "Slumdog Millionaire".

ஏ.ஆர்.ஆருக்கு 2 விருதுகள்


ஒரே தடவையில் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஒஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்த தருணம் தமிழராகிய நாம் பெருமைப் பட்டுக்கொள்ள வேண்டிய தருணமாகும்.

சிறந்த Sound Editingக்கான விருது "The Dark Knight" திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.


ஒவ்வொரு விருதுக்குமான வெற்றியாளர்களை தெரிந்துகொள்ள 'இங்கே' சொடுக்குங்கள்.

Congratulations A.R.RAHMAN !!!
ஒஸ்கார் விருதுகள் 2009 - முடிவுகள்.SocialTwist Tell-a-Friend

Saturday, 21 February 2009

என்னைக் கவர்ந்தவர்கள் !!!

31 . பின்னூட்டங்கள்
காலையில பல்லு விளக்கிட்டு அம்மா தந்த தேநீரைக் குடிச்சிட்டு சும்மா இருந்திருக்கணும். அத விட்டுட்டு நம்ம தமிழ்த்துளி எழுதும் தேவா சார் இன்னும் "கொஞ்சம் தேநீர்" தருவார்ன்னு எதிர்பார்த்து போனா எனக்கு கிடைச்சது இன்னொரு பதிவு போட வாய்ப்பு....
அதோட விளைவு தான் இது.

"என்னைக் கவர்ந்தவர்கள் !!!"ன்னுற தலைப்புல நான் எனக்குப் புடிச்ச ரெண்டு பேரப் பத்தி எழுதனும்ன்னு நெனைக்கறேன்...
எழுதிடுவோம். நமக்கு என்ன ???

1. சுப்பிரமணிய பாரதியார்தன் சொந்த வாழ்க்கைக்கு எவ்வளவு துன்பங்களும் துயரங்களும் வந்த போதிலும் தமிழ் மீது கொண்டிருந்த அதீத பற்று காரணமாக அவற்றையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு தமிழுக்காகவே தொண்டாற்றிய கவிதைத்தமிழன் பாரதியார்.
சாதிகள், பெண்களுக்கெதிரான செயற்பாடுகள் பற்றி தனது கவிதைத்தமிழ் மூலம் சொல்லி அவற்றுகு தீர்வு கண்டவர்.
பாரதியார் பற்றி இன்னும் வாசிக்க 'இங்கே' சொடுக்குங்கள்.


2. சே குவேராஅமெரிக்கா என்னும் வல்லரசு நாட்டுக்கு பக்கத்திலே உள்ள கியுபா எனும் ஒரு சிறிய நாட்டின் மேல் பற்று கொண்டவர்.
மருத்துவம் படித்துக் கொண்டிருந்த போது இலத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றுக்கு பயணங்கள் போயிருந்த போது அங்கு நிலவிய வறுமையின் மூலம் பாதிக்கப்பட்டு புரட்சி மூலம் அதற்கு தீர்வு கண்டவர். மார்க்சியத்தில் ஈடுபாடு கொண்டவர்.
சே குவேரா பற்றி இன்னும் வாசிக்க 'இங்கே' சொடுக்குங்கள்.


”விதிமுறைப்படி நீங்க குறைந்த பட்சம் 2 பேரை அழைக்கணும்” ன்னு இருந்ததால நாமளும் நம்ம பங்குக்கு ரெண்டு பேரை அழைக்கணும்ல....
ரெண்டு பேரை கூப்பிட்டு விட்டா போச்சு...

நான் கூப்பிட்டு விடுவது...

1. மெல்போர்ன் கமல் - தமிழ் மதுரம்

2. பழமைபேசி - பழமைபேசி

என்னா பண்றதுங்க ?
நம்மளுக்கு தெரிஞ்சவங்க இவங்க தானே ...
:-)
என்னைக் கவர்ந்தவர்கள் !!!SocialTwist Tell-a-Friend

Friday, 20 February 2009

ஒஸ்கார் விருதுகள் 2009 !!!

23 . பின்னூட்டங்கள்
எல்லோராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆண்டின் ஒஸ்கார் விருதுகள் நாளைமறுநாள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.
வழமையாக இது பெரிய, திரைப்படத்துறை சார்ந்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் என்ற கண்ணோட்டத்திலேயே இவ்வளவு காலமும் எமது மக்களால் நோக்கப்பட்டு வந்தது.ஆனால் இந்த முறை அப்படியல்ல என்பதை எம்மால் உணர முடிகிறது அல்லவா ???
ஏ.ஆர்.ரஹ்மான் எனும் அற்புத இசையமைப்பாளர், அதுவும் அவர் ஒரு தமிழர், இன்னும் சொல்லப்போனால் பல்லாயிரக் கணக்கான இசைவிரும்பிகளின் இதயத்தில் இடம் கொண்ட அற்புத மனிதர் அவ்விருதுக்கு முன்மொழியப்பட்டிருப்பது என்பது சாதாரண விடயமல்ல.

என்னைப் பொறுத்தவரை ஏ.ஆர்.ஆர் என்பவரை வேறு ஒருவராக பிரித்து பார்க்கவே முடியாது. நான் தமிழ் திரைப்பட இசையை எப்போ ரசிக்கத் தொடங்கினேனோ, அப்போதிலிருந்து ஏ.ஆர்.ஆர் பாடல்கள் என்றால் தனிப் பிரியம் தான்....அப்படிப்பட்ட ஒரு தீவிர ஏ.ஆர்.ஆர் ரசிகனான எனக்கும் என்னைப்போன்ற பலருக்கும் இந்த ஆண்டு ஒஸ்கார் விருதுகள் என்பது மறக்க முடியாதது.
சந்தேகமே இல்லை. கண்டிப்பாக கிடைக்கும்.

சொன்னால் என்ன???
சின்ன வயசிலிருந்து நீண்ட காலமாக எனக்கிருந்த ஆசை, ரஹ்மானின் இசைக்குழுவில் நானும் இடம்பெற வேண்டுமென்பது. ஆனால் கோட் இஸ் கிரேட். இன்று வரை ரஹ்மான் இசை நன்றாகவே இருக்கிறது நான் போய் சேராததால்...

திரும்ப மேட்டருக்கு வருவோம்...
நாளைமறுநாளான ஃபெப்ரவரி 22ம் திகதி 2009ம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் அறிவிக்கப்படவுள்ளன.

SLUMDOG MILLIONAIRE திரைப்படத்திற்கு பின்வரும் விருதுகளுக்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

1. ACHIEVEMENT IN CINEMATOGRAPHY

2. ACHIEVEMENT IN DIRECTING


3. ACHIEVEMENT IN FILM EDITING


4. ACHIEVEMENT IN MUSIC WRITTEN FOR MOTION PICTURES (ORIGINAL SCORE)


5. ACHIEVEMENT IN MUSIC WRITTEN FOR MOTION PICTURES (ORIGINAL SONG)


6. ACHIEVEMENT IN MUSIC WRITTEN FOR MOTION PICTURES (ORIGINAL SONG)


7. BEST MOTION PICTURE OF THE YEAR


8. ACHIEVEMENT IN SOUND EDITING


9. ACHIEVEMENT IN SOUND MIXING


10. ADAPTED SCREENPLAY


இதில் இசைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. (கண்டிப்பாக கிடைக்கும் !!!)

ஒஸ்கார் விருதுகள் பற்றி அறிய இந்த தளத்துக்கு போய்ப்பாருங்கள்.

http://www.oscar.com - Click Here

இந்த ஆண்டு ஒஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள திரைப்படங்கள் பற்றி அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பில் சொடுக்குங்கள்.

Click Here to see the Nominee List for The Oscar Awards 2009.

SLUMDOG MILLIONAIRE திரைப்படத்துக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள விருதுகள் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

ஒஸ்கார் விருதுகள் ஏ.ஆர்.ஆருக்கு கிடைத்து விட்டது என்ற இனிப்பான செய்தியை அறிய நாளைமறுநாள் இரவு வரை காத்திருப்போம்...GOOD LUCK A.R.RAHMAN !!!
ஒஸ்கார் விருதுகள் 2009 !!!SocialTwist Tell-a-Friend

Wednesday, 18 February 2009

பிலியர்ட்ஸ் விளையாடிய கோழி !!!

35 . பின்னூட்டங்கள்
ஏதோ நம்மளால முடியாததை இந்தக் கோழி செஞ்சுதேன்னு சந்தோஷப் பட்டுக்க வேண்டியது தான்...
----------------------------------------------------------------------------------------------------

அப்பிடியே வளர்ந்து வரும் தொழினுட்பத்தால் விளைந்ததை நகைச்சுவையாக தரும் இந்த படங்களையும் பாருங்களேன்...
படங்களை க்ளிக்கி பெருசா பாருங்க...

பிலியர்ட்ஸ் விளையாடிய கோழி !!!SocialTwist Tell-a-Friend

Tuesday, 17 February 2009

காதல் பற்றிய நியுட்டனின் விதிகள் என்ன ???

26 . பின்னூட்டங்கள்


எப்ப நியுட்டன் என்பவரின் விதிகளை நாம் பள்ளியில படிக்கத் தொடங்கினோமோ, அப்போதிலயிருந்து அந்த விதிகளை வித்தியாசமாக, அந்தந்த நேரங்களுக்கு தகுந்தபடி மாற்றி மாற்றி விளையாடுவது என்பது ஒரு பொழுதுபோக்காகவே இருந்துவருகிறது.
இந்த பதிவும் அது சம்பந்தமான ஒன்று தான்...
நியுட்டன் அந்த மூன்று விதிகளையும் எழுதும் போது அவர் சற்று ரொமான்டிக் மூடில இருந்திருந்தா அந்த மூன்று விதிகளும் எப்பிடி வந்திருக்கும் என்பது சற்று நகைச்சுவையாக...

இது எனக்கு நண்பனிடமிருந்து மின்னஞ்சலில் வந்தது.
இது நகைச்சுவைக்காக மட்டுமே...
நியுட்டனை எந்த வம்புக்கும் இழுக்கவில்லை !!!
:-)

பொதுவான விதி :

காதலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. அது ஒரு பெண்ணிலிருந்து இன்னொரு பெண்ணுக்கு சில பல செலவுகளுடன் மாற்றப்பட மட்டுமே முடியும்.

முதலாவது விதி :

வெளியிலயிருந்து காதலியோட அப்பா அல்லது அண்ணன் வந்து காதலனோட காலை உடைக்கும் வரைக்கும் காதலன் மேல காதலிக்கு இருக்குற காதலும் காதலி மேல காதலனுக்கு இருக்குற காதலும் தொடர்ந்து அப்பிடியே இருக்கும்.

இரண்டாவது விதி :

காதலன் மேல காதலிக்கு இருக்குற காதலானது காதலனின் பாங்க் பாலன்ஸ்க்கு நேர்விகித சமனாகும். காதலியின் திசையானது பாங்க் பாலன்ஸின் இன்க்ரீமென்ட் அல்லது டிக்ரீமென்டில் தங்கியிருக்கும்.

மூன்றாவது விதி :

காதலன் காதலி கிட்ட தன் காதலை சொல்லும் போதிருந்த விசையானது, காதலி காதலனுக்கு அறையும் போதிருக்கும் விசைக்கு சமமானதும் எதிரானதுமாக இருக்கும்.

-------------------------------------------------------------------------------------------------

சிரிக்க சிந்திக்க...

ஒரு கடையின் ஓனர் தன் தொழிலாளியிடம் கேட்கிறார் "குமார், எங்கே சொல்லு பாக்கலாம், 1000 ரூபாய்க்கு எத்தனை பூச்சியம் ?".
குமாரின் பதில் : "ஐயா மூனு பூச்சியமுங்க ஐயா...".

ஓனர் திரும்ப கேட்கிறார் "அப்ப சொல்லு பாக்கலாம், நாலாஆஆஆஆயிரத்துக்கு எத்தினை பூச்சியம் வரும் ?".
குமார் : "அப்புறமா யோசிச்சு சொல்றேன் மொதலாளி. இப்ப நிறையா வேலை இருக்கு...".
காதல் பற்றிய நியுட்டனின் விதிகள் என்ன ???SocialTwist Tell-a-Friend

Monday, 16 February 2009

சின்ன குழந்தை ரம் (RUM) பாட்டிலோடு !!!

20 . பின்னூட்டங்கள்
ஒரு வயது கூட ஆகாத சின்ன குழந்தை ஒரு ரம் (RUM) பாட்டிலுக்கருகில் இருந்தால் என்ன சொல்றதுங்க ???
அதுவும் லுக்கப் பார்த்தா ஒரு விதமாத் தான் இருக்குது...
ஒருவேளை அடிச்சிருக்குமோ ???
நீங்களே படத்தைப் பார்த்து சொல்லுங்க...


அப்பிடியே இந்தப் படத்தப் பத்தி என்ன நினைக்கிறீங்கன்னும் சொல்லுங்க...


இவரு எல்லாம் ஒரு போலீஸ் ???ீவர் ஒருவேளை 'சிரிப்பு போலீஸாக' இருப்பாரோ ???


எப்ப அமெரிக்க அதிபர் பதவிக்கு ஒபாமான்னு ஒருத்தரை போட்டிக்கு நிறுத்தினாங்களோ, அப்போதிலிருந்து அவரு மேல இருக்குற மோகம் நாளுக்கு நாள் கூடிக்கிட்டே போகுது...
இந்தப் படங்களைப் பாருங்க..

இந்தப் படங்களை ஏற்கனவே ஒரு பதிவரின் வலைப்பூவில் பார்த்திருக்கிறேன்.
இப்ப தான் எனக்கு மின்னஞ்சலில் வந்தது.
சும்ம ஒரு தமாசுக்காக தான் திரும்பப் போடுறேன்.. ஓகே ???
யாரும் எனக்கு மேல உரிமை கோரி வழக்கு எல்லாம் போட மாட்டீங்களே ???
:-)சின்ன குழந்தை ரம் (RUM) பாட்டிலோடு !!!SocialTwist Tell-a-Friend

Saturday, 14 February 2009

கண்டுபிடியுங்கள் ஒன்பது பேரையும் !!!

17 . பின்னூட்டங்கள்
கீழேயுள்ள இந்தப் படத்துல ஒன்பது மனிதர்கள் இருக்காங்க...

முடியுமானதை கண்டுபிடிச்சு உங்க பார்வைத்திறனை அளந்து கொள்ளுங்க.

படத்தை க்ளிக்கி பெருசா பாருங்க. அப்ப தான் ஈஸியா கண்டுபிடிக்கலாம்...

எங்க, சட்டு புட்டுனு கண்டுபிடிச்சு பம்பர் பரிசை அள்ளுங்க பாக்கலாம்...

படம் மின்னஞ்சலில் வந்தது.


-------------------------------------------------------------------------------------------------

காதலர் தினத்துல பதிவு போட்டுட்டு, காதலப் பத்தி ஏதும் எழுதலைன்னா எப்பிடி???
அது தான்.. ஏதோ நம்மளால முடிஞ்சளவுக்கு ஒரு கவிதை... (யப்பா, ஏதும் கிண்டலடிக்கக் கூடாது ஓகே ???)

காதல் பரிசு

உன் நினைவுப் பரிசு எதற்கு ???
உன் நினைவே பரிசு எனக்கு ...


எப்பிடி நம்ம கவிதையெல்லாம்???
:-)
கண்டுபிடியுங்கள் ஒன்பது பேரையும் !!!SocialTwist Tell-a-Friend

Tuesday, 10 February 2009

பில் கேட்ஸும் சாஃப்ட்வேர் காரும் !

17 . பின்னூட்டங்கள்

சாஃப்ட்வேர் தல (???) பில் கேட்ஸின் கம்பனி ஒரு காரை செலுத்துவதற்கான சாஃப்ட்வேர் ஒன்றைத் தயாரித்தது. அத ஒரு காருக்கு இன்ஸ்டால் பண்ணி அந்தக் காரை டெஸ்ட் ட்ரைவுக்கு தல பில் எடுத்துட்டுப் போனாராம். அந்த நேரம் பார்த்து எதிர்ல ஒரு பெரிய லாறி ஒன்னு வந்துச்சாம்...

உடனே தல பில் ப்ரேக் போட
ctrl+b அமத்தினாராம்... உடனே ஒரு pop-up window வந்து இப்பிடி கேட்டுச்சாம் : "Are you sure you really want to stop?". நம்ம தல பில் "yes" அமத்துறதுக்குள்ள அந்த லாறி வந்து காரோட மோதிரிச்சாம்... உடனே கார் தீப்பத்தி எரிய ஆரம்பிச்சிருச்சாம்...

உடனே அந்தரத்துல கதவை துறக்குற பாஸ்வேர்ட் பில்லுக்கு மறந்து போயிருச்சாம்... அப்போ பில் சத்தமா "F1 ! F1 !"ன்னு கத்தினாராம்... ( அதாங்க HELP... ) ஆனா அவரு நல்ல காலத்துக்கு அந்த இடத்துல கம்ப்யூட்டர் பத்தி தெரிஞ்ச யாரும் இருக்கலையாம்...

அப்போ கார் ஜன்னலுக்குள்ளால வர முயற்சி பண்ணியிருக்காரு பில். உடனே காரோட ஸ்கீரீன்ல இப்பிடி ஒரு மெஸேஜ் வந்துச்சாம் : "
An illegal function is performed."
உடனே காரோட எல்லா ஜன்னலும் மூடிக்கிச்சாமுங்க...
பாவம் நம்ம தல பில்... மேல போயிட்டாருங்க...

அப்போ மேலோகத்துல இருக்குற பெரிய தல எல்லாம் ஒன்னா கூடி பில்லுக்கு சொன்னாங்களாம் "நீ உன்னோட வாழ்க்கையில யாருக்கும் எந்த நல்லதையும் செஞ்சதே கிடையாது. அதனால நாங்க உன்னை நரகத்துக்கு அனுப்புறோம்...".

உடனே அவங்க கிட்ட நம்ம பில் கேட்டாராம் "நான் எந்த நரகத்துக்கும் போக தயாரா இருக்கேன். ஆனா ப்ளீஸ் எனக்கு ஒரு கம்ப்யூட்டர் மாத்திரம் தந்து அனுப்புங்க...".

மேலோகத்து தலைகள் சிரிச்சுட்டு ஒரு கம்ப்யூட்டர் குடுக்கு சம்மதிச்சாங்களாம்...

ஆனா கீபோர்ட்டுல Alt, Ctrl, Delete keys இல்லாம குடுக்கனும்ங்கிறது அவங்களோட உத்தரவு...

இதத் தான் முந்தியெல்லாம் பெரியவங்க சொல்லி வச்சாங்க...

"தன்வினை தன்னைச் சுடும்"


பில் கேட்ஸும் சாஃப்ட்வேர் காரும் !SocialTwist Tell-a-Friend

Saturday, 7 February 2009

பாரதியார் - கவிதைத்தமிழன்

4 . பின்னூட்டங்கள்

சின்ன வயசிலயிருந்தே கவிதை, கட்டுரை எல்லாத்துலயும் ஆர்வம் இருந்தாலும் படிப்பு, வகுப்புகள் நிமித்தமாக அதுல எல்லாம் ஈடுபாடு குறைவு தான் நம்மளுக்கு.

இப்ப தான் ஒருமாதிரி கொஞ்சம் ஃப்ரீயா இருக்குறதால முந்தி ஆசைப்பட்டு வாசிக்க முடியாமப் போன கவிதை, கட்டுரை எல்லாம் வாங்கிப் படிச்சுட்டிருக்கேன். அதுல பாரதியார் கவிதைகள் ரொம்ப பிடிச்சமானது எனக்கு சின்ன வயசிலயிருந்து...
சொந்தமா எனக்குன்னு ஒரு புத்தகம் இருந்ததில்ல. இப்ப வாங்கிட்டேன் "பாரதியார் கவிதைகள்".

அதை வாசிச்சுட்டிருக்கும் போதுதான் தெரிஞ்சுது எவ்வளவு பெரிய கவிதைத்தமிழன் அவருன்னு....
கவிதகள்ல தமிழால என்ன மாதிரி விளையாடியிருக்காரு...
ஒவ்வொரு கவிதையையும் படிக்கும் போது அவரு மேல இருக்குற மரியாதை கூடிட்டே போகுது.

இந்த கவிதைகளைப் படிச்சிட்டு, இப்ப நம்ம தமிழ் சினமாவுல வர்ற பாடல்களை பார்க்கும் போது (எல்லாம் இல்லீங்க) வருத்தம் தான் மிச்சம்... ( நான் இரண்டையும் ஒப்பிடவில்லை.. ஒப்பிட முடியுமா??? )

சின்ன வயசிலயிருந்தே எனக்கு ரொம்ப பிடித்த கவிதையை தான் முதல்ல வாசிச்சேன்...

மனத்தில் உறுதி வேண்டும்

மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்,
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்,
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்,
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்,
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்,
பெண் விடுதலை வேண்டும்,
பெரியகடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்,
உண்மை நின்றிட வேண்டும்,
ஓம் ஓம் ஓம் ஓம்.

இன்னும் ஒன்று...

நந்த லாலா

காக்கைச் சிறகினிலே நந்த லாலா ! - நின்றன்
கரியநிறந் தோன்று தையே, நந்த லாலா !
பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா ! - நின்றன்
பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா !
கேட்கு மொழியி லெல்லாம் நந்த லாலா - நின்றன்
கீத மிசைக்குதடா, நந்த லாலா !
தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா ! - நின்னைத்
தீண்டு மின்பந் தோன்றுதடா, நந்த லாலா !


அடுத்து பகவத்கீதை தான்...

பாரதியார் - கவிதைத்தமிழன்SocialTwist Tell-a-Friend

Wednesday, 4 February 2009

குளிர் நீர் பருகுவதால் உடலுக்கு கேடு !

7 . பின்னூட்டங்கள்
குளிர் நீரின் பாதிப்புகள் (EFFECTS OF COLD WATER) எனும் தலைப்பில் நண்பர் ஒருவர் செய்தி அடங்கிய படம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
உபயோகமான செய்தி என்பதால் அதை உங்களுக்கும் தரலாம் என்று நினைத்தே இந்தப் பதிவு.
உண்மையில் குளிரான நீர் குடிக்கும் போது இன்னும் இன்னும் குடிக்க வேண்டுமென்றே ஆசை வரும். ஆனால் உடலுக்கு குளிர் நீர் கேடானது என்பதே உண்மை.
நாம் உண்ணும் உணவிலுள்ள கொழுப்புகள் கரைவதில் இந்த குளிரான நீரானது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். உணவு சமிபாடடைவதை தாமதப்படுத்தும்.
இது சில இதய நோய்களுக்கும் காரணமாக உள்ளது.

மேலதிக தகவல்களுக்கு இந்தப் படத்தை சொடுக்கி வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.


நலத்துடன் கூடிய எமது வாழ்வு நம் கைகளிலேயே தங்கியுள்ளது.
குளிர் நீர் பருகுவதால் உடலுக்கு கேடு !SocialTwist Tell-a-Friend

Sunday, 1 February 2009

மாணவனின் பதில்கள் - நகைச்சுவை

4 . பின்னூட்டங்கள்
கேக்கிற கேள்விகளுக்கு ஓரளவு பிழையா பதில் சொன்னா பரவாயில்ல. ஆனா இப்பிடி முட்டாத்தனமா பதில் சொன்னா என்ன செய்யுறதுங்க ???
கேள்வி கேட்ட ஆசிரியருக்கு பைத்தியம் பிடிக்காது ???
சும்மா ஒரு நகைச்சுவைக்காக...

மின்னஞ்சலில் வந்திறங்கியது... பார்த்து ரசிங்க...
படத்துல சொடுக்கி பெருசா பாருங்க...

மாணவனின் பதில்கள் - நகைச்சுவைSocialTwist Tell-a-Friend
 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.