Tuesday, 17 February 2009
காதல் பற்றிய நியுட்டனின் விதிகள் என்ன ???
எப்ப நியுட்டன் என்பவரின் விதிகளை நாம் பள்ளியில படிக்கத் தொடங்கினோமோ, அப்போதிலயிருந்து அந்த விதிகளை வித்தியாசமாக, அந்தந்த நேரங்களுக்கு தகுந்தபடி மாற்றி மாற்றி விளையாடுவது என்பது ஒரு பொழுதுபோக்காகவே இருந்துவருகிறது.
இந்த பதிவும் அது சம்பந்தமான ஒன்று தான்...
நியுட்டன் அந்த மூன்று விதிகளையும் எழுதும் போது அவர் சற்று ரொமான்டிக் மூடில இருந்திருந்தா அந்த மூன்று விதிகளும் எப்பிடி வந்திருக்கும் என்பது சற்று நகைச்சுவையாக...
இது எனக்கு நண்பனிடமிருந்து மின்னஞ்சலில் வந்தது.
இது நகைச்சுவைக்காக மட்டுமே...
நியுட்டனை எந்த வம்புக்கும் இழுக்கவில்லை !!!
:-)
பொதுவான விதி :
காதலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. அது ஒரு பெண்ணிலிருந்து இன்னொரு பெண்ணுக்கு சில பல செலவுகளுடன் மாற்றப்பட மட்டுமே முடியும்.
முதலாவது விதி :
வெளியிலயிருந்து காதலியோட அப்பா அல்லது அண்ணன் வந்து காதலனோட காலை உடைக்கும் வரைக்கும் காதலன் மேல காதலிக்கு இருக்குற காதலும் காதலி மேல காதலனுக்கு இருக்குற காதலும் தொடர்ந்து அப்பிடியே இருக்கும்.
இரண்டாவது விதி :
காதலன் மேல காதலிக்கு இருக்குற காதலானது காதலனின் பாங்க் பாலன்ஸ்க்கு நேர்விகித சமனாகும். காதலியின் திசையானது பாங்க் பாலன்ஸின் இன்க்ரீமென்ட் அல்லது டிக்ரீமென்டில் தங்கியிருக்கும்.
மூன்றாவது விதி :
காதலன் காதலி கிட்ட தன் காதலை சொல்லும் போதிருந்த விசையானது, காதலி காதலனுக்கு அறையும் போதிருக்கும் விசைக்கு சமமானதும் எதிரானதுமாக இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------------
சிரிக்க சிந்திக்க...
ஒரு கடையின் ஓனர் தன் தொழிலாளியிடம் கேட்கிறார் "குமார், எங்கே சொல்லு பாக்கலாம், 1000 ரூபாய்க்கு எத்தனை பூச்சியம் ?".
குமாரின் பதில் : "ஐயா மூனு பூச்சியமுங்க ஐயா...".
ஓனர் திரும்ப கேட்கிறார் "அப்ப சொல்லு பாக்கலாம், நாலாஆஆஆஆயிரத்துக்கு எத்தினை பூச்சியம் வரும் ?".
குமார் : "அப்புறமா யோசிச்சு சொல்றேன் மொதலாளி. இப்ப நிறையா வேலை இருக்கு...".
Subscribe to:
Post Comments (Atom)
26 . பின்னூட்டங்கள்:
அந்தாளு ஏதோ விதியேன்னு கண்டுபிடிச்சுட்டு போயிட்டாரு!!! பாவம்யா!!! விட்டுருங்கய்யா!!!
பொதுவான விதி :
காதலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. அது ஒரு பெண்ணிலிருந்து இன்னொரு பெண்ணுக்கு சில பல செலவுகளுடன் மாற்றப்பட மட்டுமே முடியும்.
அய்யோ அய்யோ!!!! (தலையில் அடித்துக் கொள்ளவும்!!) நல்லா பண்றாங்கய்யா ட்ரான்ஸ்லேட்டு!!!
முதலாவது விதி :
வெளியிலயிருந்து காதலியோட அப்பா அல்லது அண்ணன் வந்து காதலனோட காலை உடைக்கும் வரைக்கும் காதலன் மேல காதலிக்கு இருக்குற காதலும் காதலி மேல காதலனுக்கு இருக்குற காதலும் தொடர்ந்து அப்பிடியே இருக்கும்.
எப்பா!!! ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ!!!!! தேவுடா!
இரண்டாவது விதி :
காதலன் மேல காதலிக்கு இருக்குற காதலானது காதலனின் பாங்க் பாலன்ஸ்க்கு நேர்விகித சமனாகும். அவர்களின் காதலின் திசையானது பாங்க் பாலன்ஸின் இன்க்ரீமென்ட் அல்லது டிக்ரீமென்டில் தங்கியிருக்கும்.
இன்கிரிமெண்ட் ஓகே!!! அதெப்படி டிக்ரிமெண்டில் தங்கியிருக்கும்??/
அதிலயும் சின்ன ஆல்டர்.... காதலின் திசைன்னு போடறதுக்குப் பதிலா, காதலியின் திசைன்னு போடலாம்...
மூன்றாவது விதி :
காதலன் காதலி கிட்ட தன் காதலை சொல்லும் போதிருந்த விசையானது, காதலி காதலனுக்கு அறையும் போதிருக்கும் விசைக்கு சமமானதும் எதிரானதுமாக இருக்கும்.
காதலர்கள் நாட் அலவ்ட்டு னு ஒரு போர்ட் போட்டிருங்க... அப்பறம் எல்லா காதலர்களும் கன்னத்தில கைய வெச்சுகிட்டு அலையணும்...
சிரிக்க சிந்திக்க...
எனக்கு சிந்திக்க மட்டுமே தோணிச்சு.... நிறைய பேர் இந்தமாதிரி இருக்காய்ங்க.!!! எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்லுனு கேட்டா முழிக்கிறவங்க மாதிரி!!!!
கலக்குங்க வேத்தியன் (வயித்தை இல்லை)
வேற ஒண்ணுமில்ல,,, ஓட்டு போட வந்தேன்.....
ஹி ஹி
வாங்க ஆதவா...
//இன்கிரிமெண்ட் ஓகே!!! அதெப்படி டிக்ரிமெண்டில் தங்கியிருக்கும்??/ //
இன்கிரிமென்ட் ஆனா காதலின் வலு கூடும்.. டிக்கிரிமென்ட் ஆனா வலு குறையும்.. அதான்...
//காதலின் திசைன்னு போடறதுக்குப் பதிலா, காதலியின் திசைன்னு போடலாம்...//
ஓ யெஸ் யெஸ்...
மாத்திடுறேன்...
காதலன் காதலி கிட்ட தன் காதலை சொல்லும் போதிருந்த விசையானது, காதலி காதலனுக்கு அறையும் போதிருக்கும் விசைக்கு சமமானதும் எதிரானதுமாக இருக்கும்.
>>..
சூப்பர்....
ஹாஹாஹாஹா
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
வேகமாக வளர்ந்து வரும தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
// கவின் said...
காதலன் காதலி கிட்ட தன் காதலை சொல்லும் போதிருந்த விசையானது, காதலி காதலனுக்கு அறையும் போதிருக்கும் விசைக்கு சமமானதும் எதிரானதுமாக இருக்கும்.
>>..
சூப்பர்....
ஹாஹாஹாஹா//
நன்றி நன்றி...
கும்மி இன்கேயுமா?
// thevanmayam said...
கும்மி இன்கேயுமா?//
என்ன பண்றது சார்..
கும்மிக்கு யாரும் வரலீங்க..
:-)
எல்லாம் விதி ...
இந்த பதிவும் அது சம்பந்தமான ஒன்று தான்...
நியுட்டன் அந்த மூன்று விதிகளையும் எழுதும் போது அவர் சற்று ரொமான்டிக் மூடில இருந்திருந்தா அந்த மூன்று விதிகளும் எப்பிடி வந்திருக்கும் என்பது சற்று நகைச்சுவையாக...
//
ஆஹா நியூட்டனுக்கேயா?
\\"அப்புறமா யோசிச்சு சொல்றேன் மொதலாளி. இப்ப நிறையா வேலை இருக்கு...".\\
ஹா ஹா இரசிச்சேன்
// நட்புடன் ஜமால் said...
எல்லாம் விதி ...//
:-)))))
// thevanmayam said...
இந்த பதிவும் அது சம்பந்தமான ஒன்று தான்...
நியுட்டன் அந்த மூன்று விதிகளையும் எழுதும் போது அவர் சற்று ரொமான்டிக் மூடில இருந்திருந்தா அந்த மூன்று விதிகளும் எப்பிடி வந்திருக்கும் என்பது சற்று நகைச்சுவையாக...
//
ஆஹா நியூட்டனுக்கேயா?//
என்ன பண்றது சாரே...
நமக்கு ஏதாவது போஸ்ட் பண்ணனும்ன்னா, யாராயிருந்தாலும் இழுத்துத் தானே ஆகனும்
:-)
// நட்புடன் ஜமால் said...
\\"அப்புறமா யோசிச்சு சொல்றேன் மொதலாளி. இப்ப நிறையா வேலை இருக்கு...".\\
ஹா ஹா இரசிச்சேன்//
நன்றி நன்றி...
வேத்தியன்,
பவர் கட்டாகி விட்டது.
அதுதான் ஜமாலுக்கு லின்க் கொடுத்தேனே! வந்துருக்கார் போல..
தேவா.
வேத்தியன் கமண்ட் மாடரேசனை எடுத்து விடவும்!
வேத்தியன் அடுத்த பதிவு போட்டா செப்புக..
// thevanmayam said...
வேத்தியன்,
பவர் கட்டாகி விட்டது.
அதுதான் ஜமாலுக்கு லின்க் கொடுத்தேனே! வந்துருக்கார் போல..
தேவா.//
வந்தார்...
நன்றி...
// thevanmayam said...
வேத்தியன் கமண்ட் மாடரேசனை எடுத்து விடவும்!//
செஞ்சுட்டேன்...
// thevanmayam said...
வேத்தியன் அடுத்த பதிவு போட்டா செப்புக..//
நன்னா செப்புரேனுங்க...
:-)
இப்ப அதுதான் கொழும்பிலை ஒரு றூம் வாடகை இப்படி அமோகமா கூடுது?? இப்பத்தான் விசயம் விளங்குது??? வளமான கற்பனை?? வேத்தியர்கள்(Royal) விஞ்ஞானத்தில் புலி என்பதை நிரூபிக்கிறீர்கள்??
இரண்டாவது விதி :
காதலன் மேல காதலிக்கு இருக்குற காதலானது காதலனின் பாங்க் பாலன்ஸ்க்கு நேர்விகித சமனாகும். காதலியின் திசையானது பாங்க் பாலன்ஸின் இன்க்ரீமென்ட் அல்லது டிக்ரீமென்டில் தங்கியிருக்கும்.//
சொந்த அனுபவம் போல இருக்கே????????? எப்பிடி??
Post a Comment