திரும்பவும் மாட்டிக்கிட்டேன் தமிழ்த்துளி தேவா சாரிடம் (அவ்வ்வ்வ்வ்வ்)...
சரி பரவாயில்ல, நம்ம தமிழ் பத்தி நாமளே எழுதலைன்னா வேற யாரு எழுதறதுன்னு சொல்லிட்டு (ஏற்கனவே தயாரா வச்சிருந்த) சொற்களை இங்க போட்டுரலாம்ன்னு தான் இந்த பதிவு !
இப்போவே நம்ம கண்முன்னுக்கே சில தமிழ் சொற்கள் வழக்கொழிந்து வரும் காலம் இது.
காரணம் ஆங்கில மோகமா அல்லது தமிழ் மேல் வெறுப்பா (இருக்காது, இருக்கவும் முடியாது !) ???
எனக்குப் புரியவில்லை !!!
சரி நாம நமக்கான வேலையைப் பாக்கலாம்...
அங்க இங்கன்னு தேடி ஒரு 25 வழக்கொழிந்த சொற்களை தேடிப்பிடிச்சிருக்கேன்...
அவற்றை இங்கே தருகிறேன்..
சில சொற்களுக்கு எனக்கு ஒரு அர்த்தம் தான் தெரியும். வேற ஏதாவது அர்த்தம் இருந்துச்சுனா சொல்லுங்க... (எந்த வார்த்தைக்கும் ஏடாகூடமா ஏதும் அர்த்தம் இருக்காதுன்னு நெனைக்கிறேன் ! :-) )
மடம் - அறியாமை, முனிவர் வாழுமிடம்.
காதம் - 10 மைல் தூரம் (அகராதியில் - 7.5 நாழிகைவழி).
கொப்பம் - யானை பிடிக்க வெட்டிய பெரிய குழி.
தடாகம் - குளம், சிறு நீர்ப்பரப்பு.
அங்காடி - கடைத்தெரு, சந்தை.
சாளரம் - ஜன்னல்.
கூறை - கல்யாண ஆடை, புத்தாடை.
மஞ்சாடி - இரண்டு குன்றிமணி எடையுடையது, மரவகை.
புசித்தல் - உண்ணுதல், சாப்பிடுதல்.
மந்தி - பெண்குரங்கு.
ஞாலம் - பூமி, வித்தை.
இறுங்கு - சோளம்.
குல்லகம் - வறுமை.
பீடிப்பு - துன்பம்.
சாலிகை - கவசம்.
பொலிசை - இலாபம்.
நாண் - வெட்கம், கயிறு.
தக்கடை - தராசு.
கொள்ளம் - குழைவான சேறு.
ஏதிலார் - அன்னியர், அன்பில்லாதார், பகைவர்.
நுகும்பு - குருத்து, ஓலை.
பதாதி - காலாட்படை.
துமிதம் - நீர்த்துளி.
சமஷ்டி - தொகுதி.
நல்குரவு - வறுமை.
கோபம் எனும் சொல்லுக்கு சிலபேர் "கடுப்பு"ன்னு (உதாரணமா 'கோபத்தைக் கிளப்பாத'ன்னு சொல்றதுக்கு 'கடுப்பைக் கிளப்பாத'ன்னு சொல்றாங்க !) சொல்றாங்களே, அப்போ "கோபம்" வழக்கொழிந்து வரும் சொல்லாயிடுமா ???
அப்போ "வழக்கொழிந்து வரும் தமிழ் சொற்கள்"ன்னு ஒரு தொடர் பதிவ ஆரம்பிச்சிரலாமா ???
:-)
சரி ரெண்டு பேரைக் கோர்த்து விடனுமேன்னு யோசிச்சுட்டு இருக்கிறப்போ, சட்டுனு ஞாபகம் வந்தது இவங்க தான்...
1. கமல் - தமிழ் மதுரம்
2. ஆதவா - குழந்தை ஓவியம்
எப்பிடி நம்ம சொற்கள் ???
புடிச்சிருந்தா அப்பிடியே தமிழ்மணத்திலயும், தமிழிஷ்லயும் ஒரு ஓட்டு போடுறது...
:-)
Subscribe to:
Post Comments (Atom)
67 . பின்னூட்டங்கள்:
ரெடியா இருந்திருப்பீக போல உள்ளதே?
மடம் - அறியாமை, முனிவர் வாழுமிடம்.
காதம் - 10 மைல் தூரம் (அகராதியில் - 7.5 நாழிகைவழி).
போஜனம் - உணவு, சாப்பாடு.
தடாகம் - குளம், சிறு நீர்ப்பரப்பு.
அங்காடி - கடைத்தெரு, சந்தை.
சாளரம் - ஜன்னல்.
கூறை//
இதுவரை தெரியுது!
இறுங்கு - சோளம்.
குல்லகம் - வறுமை.
பீடிப்பு - துன்பம்.
சாலிகை - கவசம்.
பொலிசை - இலாபம்.//
இது தெரியாது!1
thevanmayam said...
ரெடியா இருந்திருப்பீக போல உள்ளதே?//
ஆமா ஆமா...
:-)
நல்ல முயற்சி!!!!!!!!!!!!
நெறய சொற்கள் புதிது!
iniya said...
நல்ல முயற்சி!!!!!!!!!!!!//
நன்றி நன்றி...
முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்...
சொன்னவுடன் செய்து விடுகிறீர் வேத்தியன் எப்படி?
iniya said...
நெறய சொற்கள் புதிது!//
நன்றிங்க...
தமிழ் வழக்கொழியாமல் இருக்க நல்ல முயற்சி
thevanmayam said...
சொன்னவுடன் செய்து விடுகிறீர் வேத்தியன் எப்படி?//
இப்போ கொஞ்சம் ஃப்ரீயா இருக்கேன்...
படிப்பு விசயம் எல்லாம் திரும்ப தொடங்கினா பழைய மாதிரி கஷ்டம் தான்...
:-)
iniya said...
தமிழ் வழக்கொழியாமல் இருக்க நல்ல முயற்சி//
இந்த வாழ்த்துகள் இந்தப் பதிவை தொடங்கினவர்களுக்கு போய்ச் சேர வேண்டும் !!!
:-)
iniya said...
தமிழ் வழக்கொழியாமல் இருக்க நல்ல முயற்சி//
இந்த வாழ்த்துகள் இந்தப் பதிவை தொடங்கினவர்களுக்கு போய்ச் சேர வேண்டும் !!!
:-)//
சரிதான்/
போஜனம் என்பது தெலுங்கு மொழிச் சொல் என்று அறிகிறேன். யாராவது சொல்லுங்கப்பா! உண்மையா?
போஜனம்-சம்ஸ்கிருதம்!!
//மடம் - அறியாமை, முனிவர் வாழுமிடம்.//
மடமை என்பதுதான் அறியாமை. மடம் என்பது துறவிகள் வாழும் இடம் சரிதான்.
போஜனம் என்பது தெலுங்கு மொழிச் சொல் என்று அறிகிறேன். யாராவது சொல்லுங்கப்பா! உண்மையா?///
சமஸ்கிருதமா?
சரியா தெரியலை!
//iniya said...
போஜனம் என்பது தெலுங்கு மொழிச் சொல் என்று அறிகிறேன். யாராவது சொல்லுங்கப்பா! உண்மையா?///
சமஸ்கிருதமா?
சரியா தெரியலை!//
ஆக, தமிழ்ச் சொல் அல்ல! திருத்திக் கொள்க வேத்தியன்!
thevanmayam said...
போஜனம்-சம்ஸ்கிருதம்!!//
தெரியாமப் போச்சு சார்...
நான் இவ்வளவு நாளும் அது ஒரு தமிழ் வார்த்தைன்னு நெனைச்சுகிட்டு இருந்தேன்...
தாங்க்ஸ் ஃபோர் தி இன்ஃபோ...
:-)
அன்புமணி said...
//iniya said...
போஜனம் என்பது தெலுங்கு மொழிச் சொல் என்று அறிகிறேன். யாராவது சொல்லுங்கப்பா! உண்மையா?///
சமஸ்கிருதமா?
சரியா தெரியலை!//
ஆக, தமிழ்ச் சொல் அல்ல! திருத்திக் கொள்க வேத்தியன்!//
தகவலுக்கு நன்றி...
இதோ எடுத்து விட்டேன்...
போஜனம், தடாகம், காதம், துமிதம் சமஸ்டி - இவையெல்லாம் வடமொழிச் சொற்கள்.
இவற்றிற்கான தமிழ்ச் சொற்கள் எழுதி இருப்பது சரி.
ஆனால் இந்த சொற்கள் வழக்கு இழக்க வேண்டிய சொற்கள் தான், :)
அதற்கு மாற்றான தமிழ்ச் சொற்கள் தான் முன்பு வழக்கு இழந்து இருந்து மேற்கண்ட 'போஜனம், தடாகம், காதம், துமிதம்' சொற்கள் அதற்கு மாற்றாக புகுத்தப்பட்டிருந்தது
***
நல்ல இடுகை
வேத்தியன்
சரிதான்!
சமஸ்கிருதம் தான்
சரி!
நன்றி, திரு. கோவி. கண்ணன் அவர்களே!
இத்தொடரைத் துவக்கிய Sriram அவர்களுக்கும், தொடர்ந்து வரும் உங்களைப் போன்றோருக்கும் மிக்க நன்றி!!!
கோவி.கண்ணன் said...
போஜனம், தடாகம், காதம், துமிதம் சமஸ்டி - இவையெல்லாம் வடமொழிச் சொற்கள்.
இவற்றிற்கான தமிழ்ச் சொற்கள் எழுதி இருப்பது சரி.
ஆனால் இந்த சொற்கள் வழக்கு இழக்க வேண்டிய சொற்கள் தான், :)
அதற்கு மாற்றான தமிழ்ச் சொற்கள் தான் முன்பு வழக்கு இழந்து இருந்து மேற்கண்ட 'போஜனம், தடாகம், காதம், துமிதம்' சொற்கள் அதற்கு மாற்றாக புகுத்தப்பட்டிருந்தது
***
நல்ல இடுகை//
தகவலுக்கு மிக்க நன்றிங்க...
இவ்வளவு நாளும் இவை எல்லாம் தமிழ் சொற்கள்ன்னு நினைத்திருந்தேன்...
அதனால் தான் பதிவில் இட்டேன்...
:-(
அன்புமணி said...
//மடம் - அறியாமை, முனிவர் வாழுமிடம்.//
மடமை என்பதுதான் அறியாமை. மடம் என்பது துறவிகள் வாழும் இடம் சரிதான்.//
நான் அகராதி பார்த்த போது அதில் இந்த இரண்டு அர்த்தங்களும் இருந்தன...
பழமைபேசி said...
இத்தொடரைத் துவக்கிய Sriram அவர்களுக்கும், தொடர்ந்து வரும் உங்களைப் போன்றோருக்கும் மிக்க நன்றி!!!//
மிக்க நன்றி...
போஜனம்,காதம்,தடாகம்,துமிதம்,சமஷ்டி இவை எல்லாம் தமிழ் சொற்கள் இல்லை என்பது இந்தப் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்...
தகவல் அளித்தோருக்கு நன்றிகள்...
பதிவிலிட்டு பின்னர் அவை தமிழ் சொற்கள் இல்லை என்று தெரிய வந்த சொற்களை சிவப்பு நிறத்தால் அடையாளப்படுத்தியிருக்கிறேன்.
போஜனம் என்ற வார்த்தையை தூக்கி விட்டேன்...
வழக்கு ஒழிந்த சொற்க்களுகேனவே தனி புத்தகம் போடணும்
நசரேயன் said...
வழக்கு ஒழிந்த சொற்க்களுகேனவே தனி புத்தகம் போடணும்//
ஆமாங்க...
:-)
எத்தனை நாளைக்குங்க ப்ளான் பண்ணி வெச்சீங்க???
நிறைய சொற்கள் புதியதாக இருக்கின்றன... பாதி சொற்கள் பழகியவை!!!
என்னால் முடியுமா?????
பார்க்கிறேனப்பா!!!
நிறைய சொற்கள் புதியவை...
எண்ணிக்கையிலும் நீங்கள் அதிக சொற்களைக் கூறியிருக்கிறீர்கள்.
ஒரு மினி டிக்ஷனரி ஆரம்பிக்கலாமே !!!!
// பழமைபேசி said...
இத்தொடரைத் துவக்கிய Sriram அவர்களுக்கும், தொடர்ந்து வரும் உங்களைப் போன்றோருக்கும் மிக்க நன்றி!!!
//
அப்ப பழமை பேசியார் ஆரம்பிச்சி வைக்கலியா ?
//நசரேயன் said...
வழக்கு ஒழிந்த சொற்க்களுகேனவே தனி புத்தகம் போடணும்
//
ஆமா..நீங்க பதிவ போட்டுடீங்களா ..??
வந்துடோமில்ல...
படு சுறு சுறுப்பா இருகீங்க...
வெரிகுட் கீப் இட் அப்...
// திரும்பவும் மாட்டிக்கிட்டேன் தமிழ்த்துளி தேவா சாரிடம் (அவ்வ்வ்வ்வ்வ்)...//
மாட்டிகிட்டீங்களா...
இதுக்கெல்லாம் அழப்பிடாது...
// சரி பரவாயில்ல, நம்ம தமிழ் பத்தி நாமளே எழுதலைன்னா //
அது சரி... நாமதானே எழுதணும்...
// இப்போவே நம்ம கண்முன்னுக்கே சில தமிழ் சொற்கள் வழக்கொழிந்து வரும் காலம் இது.
காரணம் ஆங்கில மோகமா அல்லது தமிழ் மேல் வெறுப்பா (இருக்காது, இருக்கவும் முடியாது !) ???
எனக்குப் புரியவில்லை !!! //
புரியாது.. அதனால பதிவு மட்டும் போட்டுடணும்..
// சரி நாம நமக்கான வேலையைப் பாக்கலாம்... //
ரெடி... ஸ்டெடி... ஸ்டார்ட் ... ம்யூசிக்
// அங்க இங்கன்னு தேடி ஒரு 25 வழக்கொழிந்த சொற்களை தேடிப்பிடிச்சிருக்கேன்... //
ஆஹா...அருமை.. அருமை..
// அங்காடி - கடைத்தெரு, சந்தை. //
நிச்சயமாக இந்த வார்த்தை காணாமல் போய்விட்டது..
இப்போ எல்லோரும் சூப்பர் மார்கெட் என்றுதான் சொல்லி கொண்டு இருக்கின்றார்கள்.
// கொப்பம் - யானை பிடிக்க வெட்டிய பெரிய குழி. //
கேள்விபட்ட ஞாபகம் இல்லைங்க..
இடுகைக்கு நன்றி நண்பரே
வாழ்த்துகள்
/திரும்பவும் மாட்டிக்கிட்டேன் தமிழ்த்துளி தேவா சாரிடம் (அவ்வ்வ்வ்வ்வ்).../
மாட்டியது நீங்களல்ல நண்பரே
மாட்டிக் கொண்டது தமிழ் தான்
இந்தத் தொடர் பதிவில் பல நல்ல சொற்களை மீண்டும் முகிழ்ந்து எடுத்துள்ளது.
நல்ல முயற்சி, நல்ல பதிவும் கூட... பணி சிறக்க வாழ்த்துக்கள்
ஆதவா said...
24 February 2009 22:00
எத்தனை நாளைக்குங்க ப்ளான் பண்ணி வெச்சீங்க???
நிறைய சொற்கள் புதியதாக இருக்கின்றன... பாதி சொற்கள் பழகியவை!!!
என்னால் முடியுமா?????
பார்க்கிறேனப்பா!!! //
ஹ்ம்ம்ம்...
உங்களால் முடியாததா???
அதான் போட்டுட்டீங்க போல...
அ.மு.செய்யது said...
24 February 2009 22:25
நிறைய சொற்கள் புதியவை...
எண்ணிக்கையிலும் நீங்கள் அதிக சொற்களைக் கூறியிருக்கிறீர்கள்.
ஒரு மினி டிக்ஷனரி ஆரம்பிக்கலாமே !!!! //
இல்லீங்க தமிழ் பிழைச்சு போகட்டும்ன்னு விட்டுட்டேன்...
:-)
இராகவன் நைஜிரியா said...
25 February 2009 03:23
வந்துடோமில்ல... //
வாங்க வாங்க...
இராகவன் நைஜிரியா said...
படு சுறு சுறுப்பா இருகீங்க...
வெரிகுட் கீப் இட் அப்...//
நன்றிங்க...
ஏற்கனவே தேவா சார் தலைப்பை கூறினது நல்லாதா போச்சுங்க...
:-)
இராகவன் நைஜிரியா said...
// அங்காடி - கடைத்தெரு, சந்தை. //
நிச்சயமாக இந்த வார்த்தை காணாமல் போய்விட்டது..
இப்போ எல்லோரும் சூப்பர் மார்கெட் என்றுதான் சொல்லி கொண்டு இருக்கின்றார்கள்.//
அட ஆமாங்க...
அங்காடிகள் குறைஞ்சு போச்சுல்ல...
திகழ்மிளிர் said...
இடுகைக்கு நன்றி நண்பரே
வாழ்த்துகள்//
நன்றி திகழ்மிளிர்...
திகழ்மிளிர் said...
/திரும்பவும் மாட்டிக்கிட்டேன் தமிழ்த்துளி தேவா சாரிடம் (அவ்வ்வ்வ்வ்வ்).../
மாட்டியது நீங்களல்ல நண்பரே
மாட்டிக் கொண்டது தமிழ் தான்
இந்தத் தொடர் பதிவில் பல நல்ல சொற்களை மீண்டும் முகிழ்ந்து எடுத்துள்ளது.//
உண்மைதான்...
தொடங்கியவருக்கு தான் முழு வாழ்த்துகளும் போய் சேர வேண்டும்...
:-)
எட்வின் said...
நல்ல முயற்சி, நல்ல பதிவும் கூட... பணி சிறக்க வாழ்த்துக்கள்//
நன்றி எட்வின்...
எல்லாமே நல்லா இருக்கு
சில வார்த்தைகள் தெரிகிறது
சிலவைகள் தெரியவில்லை.
ஆனாலும் நிறைய எழுதி இருக்கீங்க
நல்ல முயற்சி.
நாங்களும் வந்துட்டோமில்லே!!
//
இறுங்கு - சோளம்.
குல்லகம் - வறுமை.
பீடிப்பு - துன்பம்.
சாலிகை - கவசம்.
பொலிசை - இலாபம்.//
இதெல்லாம் தெரியாது!
//
iniya said...
போஜனம் என்பது தெலுங்கு மொழிச் சொல் என்று அறிகிறேன். யாராவது சொல்லுங்கப்பா! உண்மையா?
//
இனியா போஜனம் தெலுங்குதான்
சொல் சரியா!!
உமக்கும் என் மேலை நல்ல அன்பு இருக்குது என்பதை அடிக்கடி நிரூபிக்கிறீங்கள்?/
ம்.........நல்ல தொகுப்பு...
பத்தாம் ஆண்டு ‘’நீல மட்டைத் தமிழ்ப் புத்தகத்தைப் பார்த்தால் இன்னும் நிறைய வழக்கொழிந்த தமிழ்ச் சொற்களை அறியலாம்..
நல்ல தொகுப்பு....உங்கள் வருங்காலச் சந்ததிக்குக் காட்டச் சேகரிக்கிறீங்கள் போல...
தொடருங்கோ............’
என்னை அழைத்தமைக்கு நன்றிகள்..
என் பதிவும் வரும்..ஆனால் இப்ப இல்லை பெரும் பாலும் கொஞ்சம் தாமதமாய்த் தான்?
மஞ்சாடி -இது மலையாள வார்த்தை இல்லியா?
RAMYA said...
எல்லாமே நல்லா இருக்கு
சில வார்த்தைகள் தெரிகிறது
சிலவைகள் தெரியவில்லை.
ஆனாலும் நிறைய எழுதி இருக்கீங்க
நல்ல முயற்சி.
நாங்களும் வந்துட்டோமில்லே!!//
நன்றிங்க...
வாங்க வாங்க...
:-)
கமல் said...
உமக்கும் என் மேலை நல்ல அன்பு இருக்குது என்பதை அடிக்கடி நிரூபிக்கிறீங்கள்?///
இல்லையா பின்னே???
:-)
கமல் said...
ம்.........நல்ல தொகுப்பு...
பத்தாம் ஆண்டு ‘’நீல மட்டைத் தமிழ்ப் புத்தகத்தைப் பார்த்தால் இன்னும் நிறைய வழக்கொழிந்த தமிழ்ச் சொற்களை அறியலாம்..
நல்ல தொகுப்பு....உங்கள் வருங்காலச் சந்ததிக்குக் காட்டச் சேகரிக்கிறீங்கள் போல...
தொடருங்கோ............’
என்னை அழைத்தமைக்கு நன்றிகள்..
என் பதிவும் வரும்..ஆனால் இப்ப இல்லை பெரும் பாலும் கொஞ்சம் தாமதமாய்த் தான்?//
பரவாயில்ல கமல்...
நேரம் வரும்போது எழுதுங்க...
Nilavum Ammavum said...
மஞ்சாடி -இது மலையாள வார்த்தை இல்லியா?//
தெரியலீங்க..
இவ்வளவு நாளும் இது தமிழ் சொல்னு நெனைச்சுகிட்டிருந்தேன்...
அப்பிடி இல்லையா???
மஞ்சாடி -இது மலையாள வார்த்தை இல்லியா?//
தெரியலீங்க..
இவ்வளவு நாளும் இது தமிழ் சொல்னு நெனைச்சுகிட்டிருந்தேன்...
அப்பிடி இல்லையா???
Copy Paste thaan theriyum
பயனுள்ள தகவல்
Post a Comment