ஒவ்வொரு மனிதனும் தன்னோட வாழ்க்கையில மறக்க முடியாத பல அனுபவங்கள் பள்ளியில் இருக்கும் போது ஏற்பட்டது தான்...
மாணவனாக இருந்த அந்த பசுமையான நாட்களை ஒரு மனிதன் எவ்வளவு காலம் சென்றாலும் மறக்க மாட்டான்.
அந்த பள்ளி வாழ்க்கையில ஏற்படுகிற சின்னச் சின்ன சந்தோஷங்கள், துக்கங்கள், ஏமாற்றங்கள், முதல் காதல் (அட, வந்தது தானே ???), நகைச்சுவையான சம்பவங்கள் எல்லாம் அந்தந்த வயதில் அவனை ஒரு பக்குவ நிலைக்கு இட்டுச் செல்லும்.
ஒரு சிறுவனாக நாம் பள்ளியில் சேர்ந்ததிலிருந்து பள்ளியிலிருந்து விலகும் வரையும் உள்ள அந்த காலப்பகுதியில் நம்மில் எவ்வளவு மாற்றங்கள் ???
சரி நாம விசயத்துக்கு வருவோம்...
இன்று நான் என்னோட பள்ளியில் இருந்து லீவிங் சர்டிபிகட் வாங்கிட்டேன்.
(அடுத்து யுனிவர்சிட்டி தான். ஐ நானும் பெரியாள் ஆயிட்டேனே...).
லீவிங் வாங்கிட்டு அப்பிடியே நடந்து வந்திட்டிருக்கும் போது பள்ளியில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை யோசிச்சுட்டே வந்தேன்.
அப்போ எனக்கு ஞாபகம் வந்தது தான் இந்த "கனாக் காணும் காலங்கள்".
(எனக்கு என்னென்னா நடந்துச்சுனு சொல்லி அறுக்க விரும்பலைங்க...)
சின்ன வயசிலயிருந்தே எனக்கு தொலைக்காட்சி நாடகங்கள்ன்னா பிடிக்கவே பிடிக்காது. (நமக்கு ஸ்போர்ட்ஸ் தாங்க...).
ஒரு வீட்டை மையப்படுத்தி அங்கு நடக்கும் பிரச்சினைகளை காட்டுறோம் பேர்வழின்னு பெண்களை அழவிட்டு அந்த டெலிட்ராமா டைரக்டர்ஸ் நம்மைப் போட்டு ஆட்டிப் படைச்சுட்டாங்க...
அப்பிடி சின்ன வயசிலயிருந்தே அந்த மாதிரியான நாடகங்களை பாத்து பிடிக்காமப் போனதாலோ என்னவோ, இன்று வரை நாடகங்கள் பாக்கணும்ன்னு எனக்கு ஒரு ஆசை வந்ததே கிடையாது.
ஆனா ஒரு மாசம் முன்னாடி டி.வி பார்த்துட்டிருக்கும் போது தற்செயலா விஜய் டி.வியில ஒளிபரப்பப்படும் "கனாக் காணும் காலங்கள்"ங்கிற நாடகம் பார்த்தேன்.
என்னவோ ஒரு வித்தியாசம் உணர்ந்தேன்.
நாம் வழமையாக பார்க்கும் நாடகங்களுக்கும் இதுக்கும் என்னவோ ஒரு வித்தியாசம் இருக்கில்ல ???
யோசிச்சு பார்த்தப்போ, இவ்வளவு காலமும் நாம பார்த்துட்டிருந்த நாடகங்கள் இன்டோர்ல ஷூட் பண்ணது (அதாவது ஒரு வீட்டுக்குள்ளேயோ, ஏதாவ்து செட்டுக்குள்ளேயோ ஷூட் பண்ணது).
ஆனா கனாக் காணும் காலங்கள் அவுட்டோர்ல ஷூட் பண்றாங்க.
அது தான் அந்த நாடகத்தின் ரசிக்கும் படியுள்ள தன்மைக்கு காரணம்ன்னு நான் நினைக்கிறேன்.
எனக்கு ஷூட்டிங் பத்தி அதிகமா தெரியாது.
ஆனா "கானாக் காணும் காலங்கள்" ஒரு வித்தியாசமான நாடகம்ன்னு மட்டும் நன்னா தெரியுதுங்க...
விசயம் தெரிஞ்சவங்க சொல்லவும்...
இந்த நாடகத்தில் வரும் விசயங்கள் எல்லாம் என்னோட பள்ளி வாழ்க்கையில நடந்ததை அப்பிடியே ஞாபகப் படுத்துகிறது...
இந்த நாடகத்தைப் பார்த்தாவது மற்ற டைரக்டர்ஸ் அது மாதிரி நாடகம் எடுக்கணும்ங்கிறது (அதாவது அவுட்டோர் ஷூட்டிங்) என்னோட ஆசை....
ஆனா என்னத்தைச் சொன்னாலும் இப்போ பிரபலமான சேனல்களில் ஒளிபரப்பப்படும் வழமையான நாடகங்களை பாக்கிறதுக்கின்னே ஒரு கூட்டம் இருக்கில்லே ???
இந்த மாதிரியான ரசிகர் கூட்டம் இருக்கிற வரை அந்த மாதிரியான டைரக்டர்களும் இருந்திட்டே தான் இருப்பாங்க...
மாற்றம் தேவை !!!
உங்கள் கருத்தைச் சொல்லவும்...
Thursday, 26 February 2009
Subscribe to:
Post Comments (Atom)
22 . பின்னூட்டங்கள்:
இப்பொழுது வரும் கனாக்காணும் காலத்தை விட, முன்பு வந்தவை நன்றாக இருக்கும்...
பள்ளி நினைவுகள் எல்லாமே ஒரு சுகமானவை வேத்தியன்..
விசயம் தெரிஞ்சவங்க சொல்லவும்...
மொத்தமே இரண்டு வாரங்கள்தான் நான் பார்த்திருப்பேன்.... எனக்கு அதில் நேரம் கிடைப்பதில்லை.... சாரி!!!!
ிஜய் டி.வியில ஒளிபரப்பப்படும் "கனாக் காணும் காலங்கள்"ங்கிற நாடகம் பார்த்தேன்.
என்னவோ ஒரு வித்தியாசம் உணர்ந்தேன்.
நாமும் அதே வயதில் இருக்கிறோம் என்பதுதான் அந்த வித்தியாசத்திற்கான காரணம்..
வாழ்க்கையில் ஒரு ரிவர்ஸ் பட்டன் இருந்தால் நான் திரும்பவும் பள்ளி வாழ்க்கைக்கு தான் செல்வேன்.
மறக்கமுடியாத கனா காலங்கள்...
அழகான பதிவு வேத்தியன்..
// ஒவ்வொரு மனிதனும் தன்னோட வாழ்க்கையில மறக்க முடியாத பல அனுபவங்கள் பள்ளியில் இருக்கும் போது ஏற்பட்டது தான்... //
கரெக்டாய் சொன்னீர்கள். பள்ளிப் பருவம் தான் பலதையும் கற்றுத்தரும் பருவம்.
// அந்த பள்ளி வாழ்க்கையில ஏற்படுகிற சின்னச் சின்ன சந்தோஷங்கள், துக்கங்கள், ஏமாற்றங்கள், முதல் காதல் (அட, வந்தது தானே ???), நகைச்சுவையான சம்பவங்கள் எல்லாம் அந்தந்த வயதில் அவனை ஒரு பக்குவ நிலைக்கு இட்டுச் செல்லும். //
இப்போதைக்கு வாழ்க்கையை ஓட்டுவதே இது மாதிரி சின்ன சின்ன சந்தோஷங்கள்தான்.
நானெல்லாம் இன்னும் பள்ளிக்கூடம் பக்கம் போகவேயில்லை
நானும் முன்னாடி தவறாமல் பார்ப்பேன், பதிவு உலகம் வந்ததிலே இருந்து எல்லாம் போச்சு
ஆதவா said...
இப்பொழுது வரும் கனாக்காணும் காலத்தை விட, முன்பு வந்தவை நன்றாக இருக்கும்...
பள்ளி நினைவுகள் எல்லாமே ஒரு சுகமானவை வேத்தியன்..//
ஆமா ஆமா...
மறக்கவே முடியாது...
ஆதவா said...
ிஜய் டி.வியில ஒளிபரப்பப்படும் "கனாக் காணும் காலங்கள்"ங்கிற நாடகம் பார்த்தேன்.
என்னவோ ஒரு வித்தியாசம் உணர்ந்தேன்.
நாமும் அதே வயதில் இருக்கிறோம் என்பதுதான் அந்த வித்தியாசத்திற்கான காரணம்..//
அதுவும் உண்மை தான்...
அ.மு.செய்யது said...
வாழ்க்கையில் ஒரு ரிவர்ஸ் பட்டன் இருந்தால் நான் திரும்பவும் பள்ளி வாழ்க்கைக்கு தான் செல்வேன்.
மறக்கமுடியாத கனா காலங்கள்...
அழகான பதிவு வேத்தியன்..//
அதில் என்ன சந்தேகம்???
எல்லோரும் பள்ளி வாழ்க்கையை தான் விரும்புவர்...
நன்றி...
இராகவன் நைஜிரியா said...
// அந்த பள்ளி வாழ்க்கையில ஏற்படுகிற சின்னச் சின்ன சந்தோஷங்கள், துக்கங்கள், ஏமாற்றங்கள், முதல் காதல் (அட, வந்தது தானே ???), நகைச்சுவையான சம்பவங்கள் எல்லாம் அந்தந்த வயதில் அவனை ஒரு பக்குவ நிலைக்கு இட்டுச் செல்லும். //
இப்போதைக்கு வாழ்க்கையை ஓட்டுவதே இது மாதிரி சின்ன சின்ன சந்தோஷங்கள்தான்.//
அட ஆமாங்க...
குடுகுடுப்பை said...
நானெல்லாம் இன்னும் பள்ளிக்கூடம் பக்கம் போகவேயில்லை//
ஓகோ...
சொல்லவேயில்ல???
நசரேயன் said...
நானும் முன்னாடி தவறாமல் பார்ப்பேன், பதிவு உலகம் வந்ததிலே இருந்து எல்லாம் போச்சு//
நான் இப்போ தொடர்ந்து பார்க்கிறேன்...
:-)
ம்ம் முதலில் கனாகாணும் காலங்களில் ஓரிரண்டு எபிசோட்டை தன்னும் பார்க்கணும்..
சொதப்புறாங்கள்.
இப்பொழுது வரும் கனாக்காணும் காலத்தை விட, முன்பு வந்தவை நன்றாக இருக்கும்.//
ஆமாம் உண்மைதான்!!!
இன்று நான் என்னோட பள்ளியில் இருந்து லீவிங் சர்டிபிகட் வாங்கிட்டேன்.
(அடுத்து யுனிவர்சிட்டி தான். ஐ நானும் பெரியாள் ஆயிட்டேனே...).
லீவிங் வாங்கிட்டு அப்பிடியே நடந்து வந்திட்டிருக்கும் போது பள்ளியில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை யோசிச்சுட்டே வந்தேன்.
அப்போ எனக்கு ஞாபகம் வந்தது தான் இந்த "கனாக் காணும் காலங்கள்".//
இளமைக் காலங்கள் எப்போதும் இனிமைக் காலங்களாம்...ஆதவா மாதிரி முதியவர்கள் அடிக்கடி எங்களைப் போன்ற இளசுகளை நினைத்துப் பொறாமைப் பட்டுக் கொள்வார்களாம்.
ஸப்பா...என்ன அறிவுரை கூறும் படலம்....ஆரம்பிச்சுட்டீங்களா??
நானும் முந்தி இந்த நாடகத்தைப் பார்த்ததாக ஞாபகம்..
’கல்லூரி நட்புக்கில்லை முற்றுப் புள்ளியே.......???
Thooya said...
ம்ம் முதலில் கனாகாணும் காலங்களில் ஓரிரண்டு எபிசோட்டை தன்னும் பார்க்கணும்..//
பாருங்கோ பாருங்கோ...
pukalini said...
சொதப்புறாங்கள்.//
ஏங்க என்னாச்சு???
:-)
கமல் said...
இன்று நான் என்னோட பள்ளியில் இருந்து லீவிங் சர்டிபிகட் வாங்கிட்டேன்.
(அடுத்து யுனிவர்சிட்டி தான். ஐ நானும் பெரியாள் ஆயிட்டேனே...).
லீவிங் வாங்கிட்டு அப்பிடியே நடந்து வந்திட்டிருக்கும் போது பள்ளியில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை யோசிச்சுட்டே வந்தேன்.
அப்போ எனக்கு ஞாபகம் வந்தது தான் இந்த "கனாக் காணும் காலங்கள்".//
இளமைக் காலங்கள் எப்போதும் இனிமைக் காலங்களாம்...ஆதவா மாதிரி முதியவர்கள் அடிக்கடி எங்களைப் போன்ற இளசுகளை நினைத்துப் பொறாமைப் பட்டுக் கொள்வார்களாம்.//
:-)))
Post a Comment