Saturday, 7 February 2009

பாரதியார் - கவிதைத்தமிழன்



சின்ன வயசிலயிருந்தே கவிதை, கட்டுரை எல்லாத்துலயும் ஆர்வம் இருந்தாலும் படிப்பு, வகுப்புகள் நிமித்தமாக அதுல எல்லாம் ஈடுபாடு குறைவு தான் நம்மளுக்கு.

இப்ப தான் ஒருமாதிரி கொஞ்சம் ஃப்ரீயா இருக்குறதால முந்தி ஆசைப்பட்டு வாசிக்க முடியாமப் போன கவிதை, கட்டுரை எல்லாம் வாங்கிப் படிச்சுட்டிருக்கேன். அதுல பாரதியார் கவிதைகள் ரொம்ப பிடிச்சமானது எனக்கு சின்ன வயசிலயிருந்து...
சொந்தமா எனக்குன்னு ஒரு புத்தகம் இருந்ததில்ல. இப்ப வாங்கிட்டேன் "பாரதியார் கவிதைகள்".

அதை வாசிச்சுட்டிருக்கும் போதுதான் தெரிஞ்சுது எவ்வளவு பெரிய கவிதைத்தமிழன் அவருன்னு....
கவிதகள்ல தமிழால என்ன மாதிரி விளையாடியிருக்காரு...
ஒவ்வொரு கவிதையையும் படிக்கும் போது அவரு மேல இருக்குற மரியாதை கூடிட்டே போகுது.

இந்த கவிதைகளைப் படிச்சிட்டு, இப்ப நம்ம தமிழ் சினமாவுல வர்ற பாடல்களை பார்க்கும் போது (எல்லாம் இல்லீங்க) வருத்தம் தான் மிச்சம்... ( நான் இரண்டையும் ஒப்பிடவில்லை.. ஒப்பிட முடியுமா??? )

சின்ன வயசிலயிருந்தே எனக்கு ரொம்ப பிடித்த கவிதையை தான் முதல்ல வாசிச்சேன்...

மனத்தில் உறுதி வேண்டும்

மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்,
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்,
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்,
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்,
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்,
பெண் விடுதலை வேண்டும்,
பெரியகடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்,
உண்மை நின்றிட வேண்டும்,
ஓம் ஓம் ஓம் ஓம்.

இன்னும் ஒன்று...

நந்த லாலா

காக்கைச் சிறகினிலே நந்த லாலா ! - நின்றன்
கரியநிறந் தோன்று தையே, நந்த லாலா !
பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா ! - நின்றன்
பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா !
கேட்கு மொழியி லெல்லாம் நந்த லாலா - நின்றன்
கீத மிசைக்குதடா, நந்த லாலா !
தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா ! - நின்னைத்
தீண்டு மின்பந் தோன்றுதடா, நந்த லாலா !


அடுத்து பகவத்கீதை தான்...

பாரதியார் - கவிதைத்தமிழன்SocialTwist Tell-a-Friend

4 . பின்னூட்டங்கள்:

தமிழ் மதுரம் on 7 February 2009 at 20:32 said...

கவிதகள்ல தமிழால என்ன மாதிரி விளையாடியிருக்காரு//

குறும்பு:))))//


பாரதியின் கவிதைகள் எப்போதுமே தனித்துவமானவை! பாரதியின் கவிதைகள் அவருக்குப் பின் வந்த பல இளம் தலை முறைக் கவிஞர்களின் தோன்றுதல்களுக்கும் ஒரு காரணமாக விளங்கியது என்றால் மிகையாகாது.

வேத்தியன் on 7 February 2009 at 22:16 said...

// கமல் said...

கவிதகள்ல தமிழால என்ன மாதிரி விளையாடியிருக்காரு//

குறும்பு:))))//


பாரதியின் கவிதைகள் எப்போதுமே தனித்துவமானவை! பாரதியின் கவிதைகள் அவருக்குப் பின் வந்த பல இளம் தலை முறைக் கவிஞர்களின் தோன்றுதல்களுக்கும் ஒரு காரணமாக விளங்கியது என்றால் மிகையாகாது.//

வருகைக்கு நன்றிகள்...

தேவன் மாயம் on 10 February 2009 at 07:04 said...

அன்பு வேத்தியன்,
வணக்கம்!
இன்று வலச்சரத்தில்
உங்களைப்ப்ற்றி
எழுத உள்ளேன்.
வந்து பின்னூட்டத்தில்
கலந்து கொள்ளவும்
தேவா..

வேத்தியன் on 10 February 2009 at 11:13 said...

// thevanmayam said...

அன்பு வேத்தியன்,
வணக்கம்!
இன்று வலச்சரத்தில்
உங்களைப்ப்ற்றி
எழுத உள்ளேன்.
வந்து பின்னூட்டத்தில்
கலந்து கொள்ளவும்
தேவா..//

நன்றி நன்றி...
கட்டாயமாக கலந்து கொள்கிறேன்...

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.