Friday 20 February 2009

ஒஸ்கார் விருதுகள் 2009 !!!

எல்லோராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆண்டின் ஒஸ்கார் விருதுகள் நாளைமறுநாள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.
வழமையாக இது பெரிய, திரைப்படத்துறை சார்ந்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் என்ற கண்ணோட்டத்திலேயே இவ்வளவு காலமும் எமது மக்களால் நோக்கப்பட்டு வந்தது.

ஆனால் இந்த முறை அப்படியல்ல என்பதை எம்மால் உணர முடிகிறது அல்லவா ???
ஏ.ஆர்.ரஹ்மான் எனும் அற்புத இசையமைப்பாளர், அதுவும் அவர் ஒரு தமிழர், இன்னும் சொல்லப்போனால் பல்லாயிரக் கணக்கான இசைவிரும்பிகளின் இதயத்தில் இடம் கொண்ட அற்புத மனிதர் அவ்விருதுக்கு முன்மொழியப்பட்டிருப்பது என்பது சாதாரண விடயமல்ல.

என்னைப் பொறுத்தவரை ஏ.ஆர்.ஆர் என்பவரை வேறு ஒருவராக பிரித்து பார்க்கவே முடியாது. நான் தமிழ் திரைப்பட இசையை எப்போ ரசிக்கத் தொடங்கினேனோ, அப்போதிலிருந்து ஏ.ஆர்.ஆர் பாடல்கள் என்றால் தனிப் பிரியம் தான்....

அப்படிப்பட்ட ஒரு தீவிர ஏ.ஆர்.ஆர் ரசிகனான எனக்கும் என்னைப்போன்ற பலருக்கும் இந்த ஆண்டு ஒஸ்கார் விருதுகள் என்பது மறக்க முடியாதது.
சந்தேகமே இல்லை. கண்டிப்பாக கிடைக்கும்.

சொன்னால் என்ன???
சின்ன வயசிலிருந்து நீண்ட காலமாக எனக்கிருந்த ஆசை, ரஹ்மானின் இசைக்குழுவில் நானும் இடம்பெற வேண்டுமென்பது. ஆனால் கோட் இஸ் கிரேட். இன்று வரை ரஹ்மான் இசை நன்றாகவே இருக்கிறது நான் போய் சேராததால்...

திரும்ப மேட்டருக்கு வருவோம்...
நாளைமறுநாளான ஃபெப்ரவரி 22ம் திகதி 2009ம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் அறிவிக்கப்படவுள்ளன.

SLUMDOG MILLIONAIRE திரைப்படத்திற்கு பின்வரும் விருதுகளுக்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

1. ACHIEVEMENT IN CINEMATOGRAPHY

2. ACHIEVEMENT IN DIRECTING

3. ACHIEVEMENT IN FILM EDITING

4. ACHIEVEMENT IN MUSIC WRITTEN FOR MOTION PICTURES (ORIGINAL SCORE)

5. ACHIEVEMENT IN MUSIC WRITTEN FOR MOTION PICTURES (ORIGINAL SONG)

6. ACHIEVEMENT IN MUSIC WRITTEN FOR MOTION PICTURES (ORIGINAL SONG)

7. BEST MOTION PICTURE OF THE YEAR

8. ACHIEVEMENT IN SOUND EDITING

9. ACHIEVEMENT IN SOUND MIXING

10. ADAPTED SCREENPLAY

இதில் இசைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. (கண்டிப்பாக கிடைக்கும் !!!)

ஒஸ்கார் விருதுகள் பற்றி அறிய இந்த தளத்துக்கு போய்ப்பாருங்கள்.

http://www.oscar.com - Click Here

இந்த ஆண்டு ஒஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள திரைப்படங்கள் பற்றி அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பில் சொடுக்குங்கள்.

Click Here to see the Nominee List for The Oscar Awards 2009.

SLUMDOG MILLIONAIRE திரைப்படத்துக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள விருதுகள் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

ஒஸ்கார் விருதுகள் ஏ.ஆர்.ஆருக்கு கிடைத்து விட்டது என்ற இனிப்பான செய்தியை அறிய நாளைமறுநாள் இரவு வரை காத்திருப்போம்...

GOOD LUCK A.R.RAHMAN !!!
ஒஸ்கார் விருதுகள் 2009 !!!SocialTwist Tell-a-Friend

23 . பின்னூட்டங்கள்:

அ.மு.செய்யது on 20 February 2009 at 15:51 said...

Nan thaan 1st aa ??

வேத்தியன் on 20 February 2009 at 15:54 said...

// அ.மு.செய்யது said...

Nan thaan 1st aa ??

யெஸ் யெஸ்...
நீங்க தான்...

அ.மு.செய்யது on 20 February 2009 at 15:54 said...

//ஒஸ்கார் விருதுகள் ஏ.ஆர்.ஆருக்கு கிடைத்து விட்டது என்ற இனிப்பான செய்தியை அறிய நாளைமறுநாள் இரவு வரை காத்திருப்போம்...//

இறைவனை பிரார்த்திப்போம்...ஒரு இந்தியன் உலக அரங்கில் எல்லோரையும் தோற்கடித்து, வெற்றிப்பெருமிதம் அடையும் தருணத்தை எண்ணி...

அ.மு.செய்யது on 20 February 2009 at 15:57 said...

10 விருதுகள் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது..பத்தும் கிடைத்தால் மகிழ்ச்சியே..

ஆனால் இன்று காலை 'டைம்' இதழில்,

4,5 விருதுகள் ஸ்லம்டாக் கிற்கு கிடைக்கலாம் என்ற தொனியில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்கள்..இது ஒரு ஊகமே..

இதில் நம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு Best Original Score பிரிவில் விருது நிச்சயம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

வேத்தியன் on 20 February 2009 at 15:58 said...

//அ.மு.செய்யது said...

//ஒஸ்கார் விருதுகள் ஏ.ஆர்.ஆருக்கு கிடைத்து விட்டது என்ற இனிப்பான செய்தியை அறிய நாளைமறுநாள் இரவு வரை காத்திருப்போம்...//

இறைவனை பிரார்த்திப்போம்...ஒரு இந்தியன் உலக அரங்கில் எல்லோரையும் தோற்கடித்து, வெற்றிப்பெருமிதம் அடையும் தருணத்தை எண்ணி...
//

எல்லோரும் இறைவனை பிரார்த்திப்போம்...

அ.மு.செய்யது on 20 February 2009 at 15:59 said...

சவுண்ட் மிக்ஸிங் பிரிவில் இந்தியரான ரசூல் பூக்குட்டிக்கு கிடைத்தாலும் பெருமையே..

வேத்தியன் on 20 February 2009 at 16:01 said...

// அ.மு.செய்யது said...

10 விருதுகள் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது..பத்தும் கிடைத்தால் மகிழ்ச்சியே..

ஆனால் இன்று காலை 'டைம்' இதழில்,

4,5 விருதுகள் ஸ்லம்டாக் கிற்கு கிடைக்கலாம் என்ற தொனியில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்கள்..இது ஒரு ஊகமே..

இதில் நம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு Best Original Score பிரிவில் விருது நிச்சயம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.//

ரஹ்மானுக்கு நிச்சயம் ஒஸ்கார் விருது கிடைக்கும்...
10 விருதுகளும் கிடைக்கும்...

அ.மு.செய்யது on 20 February 2009 at 16:02 said...

//என்னைப் பொறுத்தவரை ஏ.ஆர்.ஆர் என்பவரை வேறு ஒருவராக பிரித்து பார்க்கவே முடியாது. நான் தமிழ் திரைப்பட இசையை எப்போ ரசிக்கத் தொடங்கினேனோ, அப்போதிலிருந்து ஏ.ஆர்.ஆர் பாடல்கள் என்றால் தனிப் பிரியம் தான்....//

எனக்கு தெரிந்து எல்லா திரைப்பட கலைஞர்களுக்கும் ரசிகர்களும் உண்டு.
அதே சமயம் எதிர்ப்பாளர்களும் உண்டு.

எடுத்துக் காட்டாக கமலை சிலருக்கு பிடிக்கும்.சிலருக்கு பிடிக்காது.விஜயை அஜித் ரசிகர்களுக்கு பிடிக்காது.அஜித்தை விஜய் ரசிகர்களுக்கு பிடிக்காது.

ஆனால் எல்லோருக்கும் பிடித்த கலைஞர்கள் வெகுசிலரே...

இளையராஜா..ரஹ்மான் போன்றவர்கள்.இவர்கள் வெற்றியடையும் போது
நமக்கும் ஒருவித பெருமிதம்...தான்..அது அலாதி.

அ.மு.செய்யது on 20 February 2009 at 16:03 said...

நல்ல டைமிங் பதிவு வேத்தியன்...

கூடிய விரைவில் நல்ல செய்தியோடு அடுத்த பதிவை போடுவீர்கள் என்று நம்புகிறேன்.

வேத்தியன் on 20 February 2009 at 16:06 said...

// அ.மு.செய்யது said...

நல்ல டைமிங் பதிவு வேத்தியன்...

கூடிய விரைவில் நல்ல செய்தியோடு அடுத்த பதிவை போடுவீர்கள் என்று நம்புகிறேன்.//

கண்டிப்பாக போடுகிறேன் செய்யது...

தேவன் மாயம் on 20 February 2009 at 16:35 said...

பவர் கட் ஆக இருந்தது வேத்தியன்!

தேவன் மாயம் on 20 February 2009 at 16:37 said...

சின்ன வயசிலிருந்து நீண்ட காலமாக எனக்கிருந்த ஆசை, ரஹ்மானின் இசைக்குழுவில் நானும் இடம்பெற வேண்டுமென்பது. ஆனால் கோட் இஸ் கிரேட். இன்று வரை ரஹ்மான் இசை நன்றாகவே இருக்கிறது நான் போய் சேராததால்..///

அதெல்லாம் ஒன்றுமில்லை.’நீங்கள் இசை பழகியிருந்தால்!!!

ஆதவா on 20 February 2009 at 17:01 said...

ஏஆருக்கு ஒரு விருது நிச்சயம் வேத்தியன்...!!! பொறுங்க.. உங்க கட்டுரைய படிச்சட்றேன்!!

ஆதவா on 20 February 2009 at 17:04 said...

நூற்றிப்பத்து கோடி மக்களின் அங்கீகாரம் இது!!! ஏ.ஆருக்கு நிச்சயம் கிடைக்கும்!!! மூன்று விருதுகளில் இரண்டு கன்ஃபர்ம்..

ஆதவா on 20 February 2009 at 17:06 said...

thevanmayam said...
சின்ன வயசிலிருந்து நீண்ட காலமாக எனக்கிருந்த ஆசை, ரஹ்மானின் இசைக்குழுவில் நானும் இடம்பெற வேண்டுமென்பது. ஆனால் கோட் இஸ் கிரேட். இன்று வரை ரஹ்மான் இசை நன்றாகவே இருக்கிறது நான் போய் சேராததால்..///
அதெல்லாம் ஒன்றுமில்லை.’நீங்கள் இசை பழகியிருந்தால்!!!

டைமிங் காமெடி தேவன் சார்!

வேத்தியனால் ஆஸ்கர் கிடைச்சது நம்ம ஏ.ஆருக்குன்னு ஒரு பதிவு வரும்பாருங்க.!!!

வேத்தியன் on 20 February 2009 at 18:06 said...

//thevanmayam said...

சின்ன வயசிலிருந்து நீண்ட காலமாக எனக்கிருந்த ஆசை, ரஹ்மானின் இசைக்குழுவில் நானும் இடம்பெற வேண்டுமென்பது. ஆனால் கோட் இஸ் கிரேட். இன்று வரை ரஹ்மான் இசை நன்றாகவே இருக்கிறது நான் போய் சேராததால்..///

அதெல்லாம் ஒன்றுமில்லை.’நீங்கள் இசை பழகியிருந்தால்!!!
//

ஹி ஹி ஹி...
இதுக்காகவே ட்ரம்ஸ் பழகியிருக்கேன் தேவா சார்...

வேத்தியன் on 20 February 2009 at 18:10 said...

// ஆதவா said...

thevanmayam said...
சின்ன வயசிலிருந்து நீண்ட காலமாக எனக்கிருந்த ஆசை, ரஹ்மானின் இசைக்குழுவில் நானும் இடம்பெற வேண்டுமென்பது. ஆனால் கோட் இஸ் கிரேட். இன்று வரை ரஹ்மான் இசை நன்றாகவே இருக்கிறது நான் போய் சேராததால்..///
அதெல்லாம் ஒன்றுமில்லை.’நீங்கள் இசை பழகியிருந்தால்!!!

டைமிங் காமெடி தேவன் சார்!

வேத்தியனால் ஆஸ்கர் கிடைச்சது நம்ம ஏ.ஆருக்குன்னு ஒரு பதிவு வரும்பாருங்க.!!!//

ஆஹா ஆஹா...

Anonymous said...

machn thr is a spelling mistake //கேழே சொடுக்குங்கள்//. pls correct it.

தமிழ் மதுரம் on 20 February 2009 at 19:23 said...

சொன்னால் என்ன???
சின்ன வயசிலிருந்து நீண்ட காலமாக எனக்கிருந்த ஆசை, ரஹ்மானின் இசைக்குழுவில் நானும் இடம்பெற வேண்டுமென்பது. ஆனால் கோட் இஸ் கிரேட். இன்று வரை ரஹ்மான் இசை நன்றாகவே இருக்கிறது நான் போய் சேராததால்...//

நல்லாத் தான் யோசிக்கிறீங்களே?? நிச்சயம் ரகுமானிற்குக் கிடைக்கும்???

வேத்தியா அப்புக்குட்டி தங்களோடு பேச வேண்டுமாம்??? http://melbkamal.blogspot.com/2009/02/blog-post_19.html

வேத்தியன் on 20 February 2009 at 20:54 said...

// Nishanthan said...

machn thr is a spelling mistake //கேழே சொடுக்குங்கள்//. pls correct it.//

சரி பண்ணிட்டேன்...
நன்றி நிஷாந்தன்.

வேத்தியன் on 20 February 2009 at 20:55 said...

// கமல் said...

சொன்னால் என்ன???
சின்ன வயசிலிருந்து நீண்ட காலமாக எனக்கிருந்த ஆசை, ரஹ்மானின் இசைக்குழுவில் நானும் இடம்பெற வேண்டுமென்பது. ஆனால் கோட் இஸ் கிரேட். இன்று வரை ரஹ்மான் இசை நன்றாகவே இருக்கிறது நான் போய் சேராததால்...//

நல்லாத் தான் யோசிக்கிறீங்களே?? நிச்சயம் ரகுமானிற்குக் கிடைக்கும்???

வேத்தியா அப்புக்குட்டி தங்களோடு பேச வேண்டுமாம்??? http://melbkamal.blogspot.com/2009/02/blog-post_19.html//

கண்டிப்பா வரேன்...

அ.மு.செய்யது on 23 February 2009 at 10:52 said...

தப்பா பிரடிக்ட் பண்ண டைம் மேகஸின்கு பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...அவ‌ங்க
ஸ்லம்டாகுக்கு 4 தான் கிடைக்கும்னு சொன்னாங்க..

நம்ம ரஹ்மான் கலக்கிட்டாரு...8 விருதுகள் மொத்த‌ ப‌ட‌க்திற்கு...

வாழ்த்துக்க‌ள் ர‌ஹ்மான் !!!!!!!!

வேத்தியன் on 23 February 2009 at 10:54 said...

// அ.மு.செய்யது said...

தப்பா பிரடிக்ட் பண்ண டைம் மேகஸின்கு பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...அவ‌ங்க
ஸ்லம்டாகுக்கு 4 தான் கிடைக்கும்னு சொன்னாங்க..

நம்ம ரஹ்மான் கலக்கிட்டாரு...8 விருதுகள் மொத்த‌ ப‌ட‌க்திற்கு...

வாழ்த்துக்க‌ள் ர‌ஹ்மான் !!!!!!!!//

:-)
பொறுத்திருங்க செய்யது.
அதப்பத்தி ஒரு பதிவு போட்டுருவோம்...

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.