காலையில பல்லு விளக்கிட்டு அம்மா தந்த தேநீரைக் குடிச்சிட்டு சும்மா இருந்திருக்கணும். அத விட்டுட்டு நம்ம தமிழ்த்துளி எழுதும் தேவா சார் இன்னும் "கொஞ்சம் தேநீர்" தருவார்ன்னு எதிர்பார்த்து போனா எனக்கு கிடைச்சது இன்னொரு பதிவு போட வாய்ப்பு....
அதோட விளைவு தான் இது.
"என்னைக் கவர்ந்தவர்கள் !!!"ன்னுற தலைப்புல நான் எனக்குப் புடிச்ச ரெண்டு பேரப் பத்தி எழுதனும்ன்னு நெனைக்கறேன்...
எழுதிடுவோம். நமக்கு என்ன ???
1. சுப்பிரமணிய பாரதியார்
தன் சொந்த வாழ்க்கைக்கு எவ்வளவு துன்பங்களும் துயரங்களும் வந்த போதிலும் தமிழ் மீது கொண்டிருந்த அதீத பற்று காரணமாக அவற்றையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு தமிழுக்காகவே தொண்டாற்றிய கவிதைத்தமிழன் பாரதியார்.
சாதிகள், பெண்களுக்கெதிரான செயற்பாடுகள் பற்றி தனது கவிதைத்தமிழ் மூலம் சொல்லி அவற்றுகு தீர்வு கண்டவர்.
பாரதியார் பற்றி இன்னும் வாசிக்க 'இங்கே' சொடுக்குங்கள்.
2. சே குவேரா
அமெரிக்கா என்னும் வல்லரசு நாட்டுக்கு பக்கத்திலே உள்ள கியுபா எனும் ஒரு சிறிய நாட்டின் மேல் பற்று கொண்டவர்.
மருத்துவம் படித்துக் கொண்டிருந்த போது இலத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றுக்கு பயணங்கள் போயிருந்த போது அங்கு நிலவிய வறுமையின் மூலம் பாதிக்கப்பட்டு புரட்சி மூலம் அதற்கு தீர்வு கண்டவர். மார்க்சியத்தில் ஈடுபாடு கொண்டவர்.
சே குவேரா பற்றி இன்னும் வாசிக்க 'இங்கே' சொடுக்குங்கள்.
”விதிமுறைப்படி நீங்க குறைந்த பட்சம் 2 பேரை அழைக்கணும்” ன்னு இருந்ததால நாமளும் நம்ம பங்குக்கு ரெண்டு பேரை அழைக்கணும்ல....
ரெண்டு பேரை கூப்பிட்டு விட்டா போச்சு...
நான் கூப்பிட்டு விடுவது...
1. மெல்போர்ன் கமல் - தமிழ் மதுரம்
2. பழமைபேசி - பழமைபேசி
என்னா பண்றதுங்க ?
நம்மளுக்கு தெரிஞ்சவங்க இவங்க தானே ...
:-)
Subscribe to:
Post Comments (Atom)
30 . பின்னூட்டங்கள்:
வாங்க வந்து கலந்துகிங்க...
:-)
முதல் பின்னூட்டம் போடலாம்னு வந்தா... முந்திக்கிட்டீங்க...
இது செல்லாது செல்லாது~!
அதுக்குள்ள இன்னொரு பதிவா ??
கொஞ்சம் பாஸ்ட்டா தாய்யா இருக்காஹ..
இருங்க வரேன்...
பாரதி :
எனக்குப் பிடித்தவர்... என்னைப் பிடித்தவர்.. சொல்ல வார்த்தையில்லை.. அது நான் என் வலைப்பூவில் சொல்கிறேன்.
சேகுவேரா.
எங்கள் வீட்டில் இரண்டு மிகப்பெரிய போஸ்டர்கள் உண்டு... ஒன்று பிரபாகரன் இன்னொன்று சேகுவரா.
அதே போன்று கெரில்ல யுத்த முறை பற்றிய செகுவேராவின் புத்தகமும் என்னிடமுண்டு... எனக்கு எதிரியின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு செல்லும் நபர்களள ரொம்பப் பிடிக்கும்.. ( நம்ம மராட்டிய சிவா.ஜி மாதிரி ) செகுவேராவையும் அப்படித்தான்...
அ.மு.செய்யது said...
அதுக்குள்ள இன்னொரு பதிவா ??
கொஞ்சம் பாஸ்ட்டா தாய்யா இருக்காஹ..
செய்யது அண்ணாச்சி!! நீங்க டூ லேட்... ஆனா நமக்கு முன்னமே வேத்தியர் கமெண்ட் போட்டுட்டு நம்மளை ஏமாத்திப்புட்டாரு!!!
பாரதியார் கூட நம்ம ஃபேவரைட் தான்...
செகுவேரா பற்றி நிறைய படிச்சிருக்கேன்...
ஓட்டும் போட்டாச்சு!
அப்பாலிக்கா வாரென்.
நன்றிங்க வேத்தியன்! செய்திடுவோம்!!
// ஆதவா said...
அ.மு.செய்யது said...
அதுக்குள்ள இன்னொரு பதிவா ??
கொஞ்சம் பாஸ்ட்டா தாய்யா இருக்காஹ..
செய்யது அண்ணாச்சி!! நீங்க டூ லேட்... ஆனா நமக்கு முன்னமே வேத்தியர் கமெண்ட் போட்டுட்டு நம்மளை ஏமாத்திப்புட்டாரு!!!//
:-))))
// ஆதவா said...
ஓட்டும் போட்டாச்சு!
அப்பாலிக்கா வாரென்.//
நன்றி நன்றி...
// பழமைபேசி said...
நன்றிங்க வேத்தியன்! செய்திடுவோம்!!//
நன்றி...
இரண்டு போராட்ட குணமுள்ள வீர மறவர்களை பற்றி மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள தாங்கள் கொடுத்த தொடுப்பு(லிங்க்) பயனுள்ளது. தங்களுக்கு என் வாழ்த்துக்கள்!
// அன்புமணி said...
இரண்டு போராட்ட குணமுள்ள வீர மறவர்களை பற்றி மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள தாங்கள் கொடுத்த தொடுப்பு(லிங்க்) பயனுள்ளது. தங்களுக்கு என் வாழ்த்துக்கள்!//
நன்றிங்க...
சும்மா இருக்கிறவங்களுக்குச் சுதி ஏத்தி விடுறீங்களே??
வேத்தியன்!
ஆதவாவின் வலைப்பக்கம் மூலம் இங்கு வந்தேன். முயற்சிகள் தொடர வாழ்த்துகிறேன். ’சேகுவேரா-சி.ஐ.ஏ குறிப்புகளின் பின்னணியில்’ என்று ஜனவரி மாதம் தொடராக 12 பதிவு செய்துள்ளேன். முடிந்தால் படித்துப் பாருங்கள்.
ஸப்பா! முடியலை?? எங்கை கமலை மாட்டிச் சந்தோசப் படலாம் எண்டு தேநீர் குடிக்கும் போது யோசிச்சிருப்பீங்கள்?
ம்.....என்ன செய்வது?? உங்களிடமிருந்து தப்ப முடியாதே??
எழுதுறேன் நண்பா??
// கமல் said...
சும்மா இருக்கிறவங்களுக்குச் சுதி ஏத்தி விடுறீங்களே??//
சும்மா ஒரு ஜாலிக்குத் தான்...
:-)
// மாதவராஜ் said...
வேத்தியன்!
ஆதவாவின் வலைப்பக்கம் மூலம் இங்கு வந்தேன். முயற்சிகள் தொடர வாழ்த்துகிறேன். ’சேகுவேரா-சி.ஐ.ஏ குறிப்புகளின் பின்னணியில்’ என்று ஜனவரி மாதம் தொடராக 12 பதிவு செய்துள்ளேன். முடிந்தால் படித்துப் பாருங்கள்.//
நன்றி மாதவராஜ்...
கண்டிப்பா வரேன்...
// கமல் said...
ஸப்பா! முடியலை?? எங்கை கமலை மாட்டிச் சந்தோசப் படலாம் எண்டு தேநீர் குடிக்கும் போது யோசிச்சிருப்பீங்கள்?
ம்.....என்ன செய்வது?? உங்களிடமிருந்து தப்ப முடியாதே??
எழுதுறேன் நண்பா??//
ஹிஹி ஹிஹி....
ஓகே...
உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன்...
:-)
வேத்தியன்!
சொன்னவுடன் எழுதீட்டிங்க!
நான் இன்று முழுக்க ஊரில் இல்லை!
பாரதியார்,சே,யாருக்குப் பிடிக்காது இவர்களை?
அருமை!
தேவா..
// thevanmayam said...
வேத்தியன்!
சொன்னவுடன் எழுதீட்டிங்க!
நான் இன்று முழுக்க ஊரில் இல்லை!
பாரதியார்,சே,யாருக்குப் பிடிக்காது இவர்களை?
அருமை!
தேவா..//
நன்றி நன்றி...
அட..என்னங்கப்பா உங்களுக்கு புடிச்சவங்களை சொல்லுவேங்கன்னு பார்த்த எனக்கு பிடிச்ச கர்ணன் , பாரதி எல்லாரையும் உங்க பதிவுக்கு...கடன் வங்கிட்டேங்க....ஹி ஹி..சும்மாச்சுக்கும்..
சரியா சொன்னேங்க...பாரதி, அவ்ளோ துன்பதுளையும் தமிழுக்கு ஒரு தனி அர்த்தம் வங்கி குடுத்தவர் ஆயிற்றே...
சே குவாரா பற்றி தெரிஞ்சுக்கிட்டேன்...நன்றி தம்பி
// Nilavum Ammavum said...
அட..என்னங்கப்பா உங்களுக்கு புடிச்சவங்களை சொல்லுவேங்கன்னு பார்த்த எனக்கு பிடிச்ச கர்ணன் , பாரதி எல்லாரையும் உங்க பதிவுக்கு...கடன் வங்கிட்டேங்க....ஹி ஹி..சும்மாச்சுக்கும்..
சரியா சொன்னேங்க...பாரதி, அவ்ளோ துன்பதுளையும் தமிழுக்கு ஒரு தனி அர்த்தம் வங்கி குடுத்தவர் ஆயிற்றே...
சே குவாரா பற்றி தெரிஞ்சுக்கிட்டேன்...நன்றி தம்பி//
நன்றிங்க...
பிறகென்ன கலக்கல் தான்?? பக்க வடிவமைப்பெல்லாம் செய்து தூக்கல் தான்?? புது வீடு?(லேயவுட்) ஆனால் என்ன புது பதிவைத் தான் காணவில்லை.
நண்பா...நான் பல் சுவையும் கலந்து பதிவுகள் எழுத வேண்டும் என்று நினைப்பவன். அதனால் அப்பப்ப அரசியலும் என் பதிவில் தலை தூக்கும். நீங்கள் இடம், பொருள், காலம் அறிந்து பின்னூட்டமிடுவது உங்களுக்கு நல்லது. நான் இலங்கையில் இருந்து 2007 இல் தான் இங்கு வந்தேன்.
ஆதலால் எனக்கு கொழும்பு விடயங்கள் எல்லாம் தெரியும். ஆர்வக் கோளாறில் நான் ஓவரா ஏதாவது எழுத அதற்கு நீங்களும் ஆர்வ மிகுதியால் பின்னூட்டமிட்டு உங்கள் வீண் வம்புகளைத் தேட வேண்டாம்.
நான் அப்படி ஏதாவது பதிவு எழுதினால் அதற்கு நீங்கள் விரும்பினால் பெயர் குறிப்பிடாமல் பின்னூட்டமிடாலம்.
மற்றும் படி நீங்கள் வழமை போல என்னுடைய ஏனைய பதிவுகளுக்குப் பின்னூட்டமிடலாம். இது தங்கள் விருப்பம்.. நான் சொல்வது தங்களுக்குப் புரியும் என்று நினைக்கின்றேன்.
கோபப்பட வேண்டாம் வேத்தியா...
தாங்கள் லேயவுட் மாற்றியவுடன் தமிழ் மணக் கருவிப் பட்டையை இணைக்கவில்லை என்று நினைகின்றேன். தமிழ் மணக் கருவிப் பட்டை, தமிழிஸ் ஓட்டளிப்புப் பட்டையை நீங்கள் மீளவும் முன்னைய முறையைப் பயன்படுத்தி இணைக்க வேண்டும்... மேலதிக விபரங்கள், விளக்கங்கள் வேண்டுமெனில் : melbkamal@gmail.com
பாரதியை பிடிக்காத தமிழர் இருக்க முடியாது
பாரதியை பிடிக்காதவர் தமிழராக இருக்கவும் முடியாது...
வேத்தியன் நீங்கள் தமிழன் என்பதை சொல்லிவிட்டீர்கள்...
சே குவேரா ஒரு மிகச்சிறந்த புரட்சியாளர் இவரும் எனக்குப் பிடித்தவரே...
@ புதியவன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புதியவன்...
பாரதி... எல்லோரின் மனதிலும் நிச்சயம் இருப்பார்
சே குவேரா - விகடனில் படித்து பிடித்தவர்...
Post a Comment