Friday, 27 February 2009

தமிழக அரசின் "கலைமாமணி விருதுகள்"...


தமிழ அரசு வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்றான "கலைமாமணி விருது"க்கான இந்த ஆண்டின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கையின் பிரபல பத்திரிக்கையொன்றில் வெளியான செய்தியொன்றின் ஒரு பகுதியை இங்கு தருகிறேன்...

அசின், நயன்தாரா, ஐஸ்வர்யா ரஜினி உட்பட 71 பேருக்கு கலைமாமணி விருதுகள் (தமிழக அரசு அறிவிப்பு)

சென்னை : தமிழ் நடிகைகள் அசின், நயந்தாரா, மீரா ஜாஸ்மின், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர்கள் பரத், சுந்தர்.சி உட்பட 71 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
என்று அந்த செய்தி தொடர்ந்து செல்கிறது.

கலைமாமணி விருது பெறும் மற்றும் சிலர் விபரமும் அங்கு குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் :

அபிராமி ராமனாதன் - திரைப்பட தயாரிப்பாளர்.
சேரன் - திரைப்பட இயக்குனர்.

சுந்தர்.சி - நடிகர்.

பசுபதி - குணச்சித்திர நடிகர்.

ஷோபனா - குணச்சித்திர நடிகை.
வையாபுரி - நகைச்சுவை நடிகர்.

சரோஜாதேவி - பழம்பெரும் நடிகை.

"வேதம்புதிது" கண்ணன் - வசனகர்த்தா.
ஹாரிஸ் ஜெயராஜ் - இசையமைப்பாளர்.

இதுல எந்த பிரச்சினையும் இல்ல....
இப்போ என்னோட கேள்வியெல்லாம் என்னான்னா, ஒரு விருது குடுக்க முதல்ல அந்த விருதுக்கு அவர் தகுதியுடையவரான்னு நல்லா யோசிக்கணும் இல்லைங்களா????

சமீபத்துல நடிகர் விஜய்க்கு கெளரவ டாக்டர் பட்டம் எம்.ஜி.ஆர் பல்கைக்கழகத்தால் வழங்கப்பட்டது நாம் எல்லோரும் அறிந்ததே....
டாக்டர் பட்டம் என்பது இவ்வளவு காலமும் மதிப்பு மிக்க ஒன்றாக கருதப்பட்டு வந்தது...
வாழ்நாளிலே பல சவால்களை எதிர்கொண்டு சாதித்தவர்களுக்கு அல்லவா அது வழங்கப்பட வேண்டும்???
அந்தளவுக்கு நடிகர் விஜய் என்னாத்த சாதிச்சார்ன்னு எனக்கு தெரியாதுங்க...
இதச் சொல்றதுனால நான் விஜய் எதிர்ப்பாளன்னு அர்த்தமில்ல...
:)

நாம திரும்பி விசயத்துக்கு வரலாம்...
இந்த முறையும் தமிழக அரசு விருதுக்கு தேர்வு செய்தவர்கள் பத்தியும் எனக்கு ஒரு அதிருப்தி தான்...
ஏன்னா அசின், நயன்தாரா, பரத், மீரா ஜாஸ்மின், சுந்தர்.சி எல்லோரும் விருது பெறும் அளவுக்கு சாதித்தவர்களா என்பது தாங்க என்னோட கேள்வி...

சரோஜாதேவிக்கு வழங்கப்படும் விருதப் பத்தி எந்த கேள்வியும் இல்ல...
அந்தளவுக்கு நடிக்கிறதுக்கும் அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் இவங்களுக்கு அனுபவம் இல்ல...

இன்னொரு விசயம்.
சமீபத்தில் மண்ணுலகை விட்டு நீங்கிய இணையற்ற நடிகர் நாகேஷுக்கு ஒரு விருதும் கொடுக்கப்படவில்லையா???
நகைச்சுவைக்கென்று தனக்கென ஒரு வரலாறையே எழுதியவர் அவர்...
இன்று இருக்கும் பல நடிகர்களுக்கு ஒரு ரோல் மாடல்...
இப்படிப்பட்ட ஒரு கலைஞருக்கு ஒரு மரியாதை செய்யும் விதமாகவேனும் ஒரு விருது அறிவிக்கப் படவில்லையா???
எம்.என்.நம்பியாரையும் மறந்துட்டாங்களா ???

அடுத்து ஐஸ்வர்யா ரஜினி...
ரஜினி ஒரு பெரிய நடிகர். அதுல மாற்று கருத்து இல்லை.
ஆனா அவரின் மகள் ஐஸ்வர்யா என்னாத்த செய்தார்???
விருது பெறும் அளவுக்கு பெரிய கலைஞரா என்பது என்னோட கேள்விங்க...

இந்தப் பதிவு என்னுடைய எதிர்ப்பு அல்ல...
விருது வழங்கப்படுபவர்கள் பற்றிய என்னுடைய ஆதங்கம் !!!
இதில் ஏதாவது பிழை இருந்தால் சொல்லுங்கள்...
தமிழக அரசின் "கலைமாமணி விருதுகள்"...SocialTwist Tell-a-Friend

22 . பின்னூட்டங்கள்:

பழமைபேசி on 27 February 2009 at 22:53 said...

உங்க கிட்டர்ந்து நிறைய எதிர்ப்பார்க்கிறோம்!!

நன்றி! நன்றி !! நன்றி !!!

வேத்தியன் on 27 February 2009 at 22:57 said...

பழமைபேசி said...

உங்க கிட்டர்ந்து நிறைய எதிர்ப்பார்க்கிறோம்!!

நன்றி! நன்றி !! நன்றி !!!///

என்னால முடிஞ்சத செய்வேன்...
:)
ஆமா எதுக்கு நன்றி???
புரியலீங்க...

குடுகுடுப்பை on 27 February 2009 at 22:59 said...

நான் என்னோட பாட்டிக்கு வலைமாமணி விருது கொடுத்திருக்கேன் வந்து பாருங்க

ஆதவா on 28 February 2009 at 08:24 said...

விருதுகள்... தண்டம்...

எல்லாரையும் திரும்பிப் பார்க்கவைக்க வேண்டும் என்றால் அதற்கு நடிகைகள், நடிகர்கள் வேண்டும்...

விருதுகள் அப்படித்தான்... திறமைக்காக வழங்கப்படுவதில்லை.

நடிகர் ரித்தீஷுகு ஏன் வழங்கப்படவில்லை.?????? :)

ஆதவா on 28 February 2009 at 08:27 said...

அந்தளவுக்கு நடிகர் விஜய் என்னாத்த சாதிச்சார்ன்னு எனக்கு தெரியாதுங்க...

என்னங்க இப்படி சொல்லீட்டீங்க... எத்தனை தடவை அவர் ரவுடிங்க கிட்ட இருந்து தமிழ்நாட்டையே காப்பாத்தியிருக்காரு..... ரொம்ப ரிஸ்க் எடுத்து, ரவுடிங்க கூடவே நுழைஞ்சு, பல மாயவித்தைகள் செஞ்சிருக்காரு....

அவரைப் போய்.........

வேத்தியன் on 28 February 2009 at 08:42 said...

குடுகுடுப்பை said...

நான் என்னோட பாட்டிக்கு வலைமாமணி விருது கொடுத்திருக்கேன் வந்து பாருங்க//

இதோ வந்தேன்...

வேத்தியன் on 28 February 2009 at 08:42 said...

ஆதவா said...

விருதுகள்... தண்டம்...

எல்லாரையும் திரும்பிப் பார்க்கவைக்க வேண்டும் என்றால் அதற்கு நடிகைகள், நடிகர்கள் வேண்டும்...

விருதுகள் அப்படித்தான்... திறமைக்காக வழங்கப்படுவதில்லை.

நடிகர் ரித்தீஷுகு ஏன் வழங்கப்படவில்லை.?????? :)//

அதானே, ஏன் வழங்கப்படவில்லை???

வேத்தியன் on 28 February 2009 at 08:43 said...

ஆதவா said...

அந்தளவுக்கு நடிகர் விஜய் என்னாத்த சாதிச்சார்ன்னு எனக்கு தெரியாதுங்க...

என்னங்க இப்படி சொல்லீட்டீங்க... எத்தனை தடவை அவர் ரவுடிங்க கிட்ட இருந்து தமிழ்நாட்டையே காப்பாத்தியிருக்காரு..... ரொம்ப ரிஸ்க் எடுத்து, ரவுடிங்க கூடவே நுழைஞ்சு, பல மாயவித்தைகள் செஞ்சிருக்காரு....

அவரைப் போய்......... //

ஓகே ஓகே...
நீங்களும் உங்க பங்குக்கு கலக்குங்க ஆதவா...
:-)

இராகவன் நைஜிரியா on 28 February 2009 at 17:56 said...

விருது கொடுக்க வேண்டும் என்பதற்காக கொடுக்கப் படுகின்றது.

இதில் அவர்கள் எதை வைத்து எடைப் போடுகின்றனர் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

கூந்தல் உள்ள சீமாட்டி அள்ளி முடியறா அப்படின்னு சொல்லுவாங்க அது மாதிரித்தான் இதுவும். விருது இருக்கு யாருக்கு கொடுப்பது எனத்தெரியவில்லை. கொடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.

வேத்தியன் on 28 February 2009 at 18:00 said...

இராகவன் நைஜிரியா said...

விருது கொடுக்க வேண்டும் என்பதற்காக கொடுக்கப் படுகின்றது.

இதில் அவர்கள் எதை வைத்து எடைப் போடுகின்றனர் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

கூந்தல் உள்ள சீமாட்டி அள்ளி முடியறா அப்படின்னு சொல்லுவாங்க அது மாதிரித்தான் இதுவும். விருது இருக்கு யாருக்கு கொடுப்பது எனத்தெரியவில்லை. கொடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.//

ஆமாங்க...

thevanmayam on 28 February 2009 at 19:29 said...

உங்க கிட்டர்ந்து நிறைய எதிர்ப்பார்க்கிறோம்!!

நன்றி! நன்றி !! நன்றி !!!//

வேத்தியன் நானும்தான்!!!

thevanmayam on 28 February 2009 at 19:30 said...

விருதுகள்
பற்றி
நாம் என்ன
சொல்வது?
ஏதோ செய்ரானுங்க!!

வேத்தியன் on 28 February 2009 at 21:34 said...

thevanmayam said...

உங்க கிட்டர்ந்து நிறைய எதிர்ப்பார்க்கிறோம்!!

நன்றி! நன்றி !! நன்றி !!!//

வேத்தியன் நானும்தான்!!!//

கண்டிப்பா என்னால முடிஞ்சத செய்றேனுங்க....
:-)

வேத்தியன் on 28 February 2009 at 21:35 said...

thevanmayam said...

விருதுகள்
பற்றி
நாம் என்ன
சொல்வது?
ஏதோ செய்ரானுங்க!!//

ஆமாங்க...
என்னத்த சொல்லி.. என்னத்த செஞ்சு...

பழமைபேசி on 28 February 2009 at 21:47 said...

...நண்பா, நாளைக்கி உங்கள கெளரவிக்கிற பதிவுதான்...ஆமாங்க, அந்த மனதைக் கவர்ந்தவர்கள்.... நாளை...யார் அந்த இருவர்? நாளைக்கு விறுவிறுப்பான தகவல்களுடன்....

வேத்தியன் on 28 February 2009 at 22:02 said...

பழமைபேசி said...

...நண்பா, நாளைக்கி உங்கள கெளரவிக்கிற பதிவுதான்...ஆமாங்க, அந்த மனதைக் கவர்ந்தவர்கள்.... நாளை...யார் அந்த இருவர்? நாளைக்கு விறுவிறுப்பான தகவல்களுடன்....//

கலக்குங்க நண்பரே...
வாழ்த்துகள்...
:-)

கமல் on 1 March 2009 at 11:50 said...

வேத்தியா உதென்ன வேலை??

இனப் படுகொலைகளுக்கு எல்லாம் விருது கொடுப்பதில்லையா???

வேத்தியன் on 1 March 2009 at 13:44 said...

கமல் said...

வேத்தியா உதென்ன வேலை??

இனப் படுகொலைகளுக்கு எல்லாம் விருது கொடுப்பதில்லையா???//

:-)))

mal_rama said...

கலை மாமணி விருதா காசு மாமணி விருதா என்று புரியவில்லை
பிகினி உடையில் வந்து ஒரு கவர்ச்சி ஆட்டம் போட்டால் விருது நிச்சயம் போலிருக்கிறதே

வேத்தியன் on 1 March 2009 at 21:20 said...

mal_rama said...

கலை மாமணி விருதா காசு மாமணி விருதா என்று புரியவில்லை
பிகினி உடையில் வந்து ஒரு கவர்ச்சி ஆட்டம் போட்டால் விருது நிச்சயம் போலிருக்கிறதே//

:-)
ஆமா ஆமா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மால்...

நசரேயன் on 2 March 2009 at 20:53 said...

நானும் யோசிச்சேன், கேள்விக்கு பதில் இல்லை

வேத்தியன் on 2 March 2009 at 21:54 said...

நசரேயன் said...

நானும் யோசிச்சேன், கேள்விக்கு பதில் இல்லை//

ஆமா ஆமா...

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.