Thursday, 30 April 2009

Googleஇல் வேலை கிடைக்குமா ???

28 . பின்னூட்டங்கள்
என்னடா இவன் தலைப்பை இப்பிடி வச்சிருக்கானேன்னு நினைக்கிறீங்களோ ???
கூகிள் வேலைத் தளத்தின் சில படங்கள் பாருங்கள். நீங்களே அங்கே வேலை செய்ய விரும்புவீர்கள்...
:-)

இந்த பந்து போன்ற அமைப்பு ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைக்குமாம்...

ஒரு மாடியிலிருந்து இன்னொரு மாடிக்கு வர இலகுவான வழி...

தேவையான உணவு கிடைக்கும், எந்நேரமும் !

பெரிய திரை கொண்ட கணனிகள், வேலை செய்ய இலகுவாக...

மேசைக்கு முன்னுக்கே இருந்தா புதிய ஐடியா ஏதும் வராதுன்னு ஐடியா வரவழிக்க சொகுசாக அறைகள்...

சிறிது நேரம் உல்லாசமாக இருக்க பிலியர்ட்ஸ்,வீடியோ கேம்ஸ்ன்னு.. ஐ ஜாலி...

பிரத்தியேக தேவைகளுக்காக தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள வசதியாக...

பழுதடைந்த கணனிகளை திருத்தும் இடம்...
(Drinksம் உண்டாம்ல...)

உடல்நலத்தைப் பேண masseursகளால் மசாஜ் செய்துவிடப்படும்...

தானாகவே மசாஜ் செய்துவிடும் கதிரை...
நீர்வாழ் உயிரினங்களின் அழகை ரசித்தபடியே...

நூலகம். புரோகிராமிங் பத்தி கொஞ்சம் அதிகமாவே இருக்கு...

Commercial Google Office...


இப்பிடில்லாம் பார்த்தா கூகிள்ல நாமளும் வேலை செய்யனும்ன்னு தோனுமா இல்லையா??
அதுசரி நாம மட்டும் ஆசைப்பட்டா போதுமா???
இப்பிடி ஆளாளுக்கு ஆசைப்பட்டா கூகிளுக்கு என்ன ஆவுறது ???
:-)

வேலை செய்யும் ஆயிரக்கணக்கான என்ஜினியர்களும் செம புத்திசாலிகளாம்ல...
:-)

வாழ்க கூகிள், வளர்க கூகிள்...
Googleஇல் வேலை கிடைக்குமா ???SocialTwist Tell-a-Friend

Wednesday, 29 April 2009

SWINE FLU பரவுகிறது ! கவனம்.

21 . பின்னூட்டங்கள்
தற்போது அதிகளவில் மக்களால் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது Swine Flu.

அமெரிக்கா,சீனா,இந்தோனேசியா போன்ற நாடுகளில் அதிகமான நோய்த்தொற்றுகள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Swine Influenza அல்லது Swine Flu என்று பொதுவாக அழைக்கப்படும்.
இது Influenza எனும் நோயையே குறிப்பிடும்.
Influenza (பொதுவாக Flu) என்பது Orthomyxoviridae எனும் குடும்பத்திலுள்ள RNA வைரஸ்களால் பரப்பப்படும் தொற்றுநோயாகும்.
இது பொதுவாக பறவைகள் மற்றும் முலையூட்டிகளை பாதிக்கும்.

Swine என்பது பன்றியைக் குறிக்கும்.
இந்த Swine Flu ஆனது வளர்ப்பின பன்றிகளிடமிருந்து Swine Influenza Virusஆல் (SIV) கடத்தப்படுகிறது.

Swine Influenza Virus (SIV)

Swine Flu ஆனது பொதுவாக வளர்ப்பின பன்றிகளிடம் தொற்றும் நோயாகும்.
மனிதனுக்கு பரவுவது மிகவும் அரிதானது.
வளர்ப்பின பன்றிகளோடு மிகவும் அதிகமாக வேலை செய்வோருக்கு இந்த நோய் தாக்கும் சந்தர்ப்பம் அதிகம் உள்ளது.

எனினும் இந்த நோய்க்கான வைரஸ் ஒரு மனிதனிலிருந்து இன்னொரு மனிதனுக்கு கடத்தப்படுவது மிகவும் அரிதானது.

மனிதனுக்கு பரவியுள்ள இந்த நோய்க்கான வைரஸின் உடற்கட்டமைப்பில் உள்ள சில புரதங்கள் வழமையாக பன்றிக்கு நோயைத் தோற்றுவிக்கும் வைரஸின் உடற்கட்டமைப்போடு ஒத்துப் போகின்றனவாம்...

நோய் பரவியுள்ள நாடுகளில் மக்கள் பாதுகாப்புக்காக முகமூடி அணிந்து கொண்டு செல்கின்றனர்...மனிதனுக்கு இந்த நோய் பரவியுள்ளதற்கான அறிகுறிகள் பின்வருவனவாகும்...
வழமையாக Influenzaக்கான அறிகுறிகள் தான்.
காய்ச்சல், உடல் குளிர்தல், தொண்டை அடைப்பு, தசைகளில் வலி, கடுமையான தலைவலி, இருமல், உடல் வலுக்குறைவு மற்றும் அசாதாரண உடல் நிலைமைகள்.
இந்த அறிகுறிகள் யாருக்காவது காணப்படின் உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்வதே நல்லது...


பாதுகாப்பாக இருந்து நோய் வருமுன் காப்போம் !!!
SWINE FLU பரவுகிறது ! கவனம்.SocialTwist Tell-a-Friend

Monday, 27 April 2009

Email Hoax என்றால் என்ன ???

11 . பின்னூட்டங்கள்
தற்போதைய காலகட்டத்தில் இணையம் பாவிப்போரின் பொதுவான இரு குற்றச்சாட்டுகள் என்றால் Email Scamsஉம் Internet Fraudஉம் தான்...

Email வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒருதடவையாவது இந்த Hoax mails வந்திருக்கும்...

சரி விரிவாகப் பாக்கலாம்...

Hoax என்பதற்கு தமிழில் அர்த்தம் பார்த்தால் போலி,ஏமாற்றுதல்,குறும்புத்தனமாக ஏமாற்றுதல் என்று பொருள்.
ஆக குறும்புத் தனமாக ஏமாற்றும் நோக்கில் வேலை வெட்டி இல்லாதவர்களால் மின்னஞ்சல் பயனர்களுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் தான் இந்த Hoax mails.

அதாவது இந்த Email Hoax, Hoax mails என்பவற்றை ஒரு வார்த்தையிலோ, அல்லது தெளிவாக இது தான் என்றோ விளக்க முடியாது...
இதை Email Scams  என்றும் சொல்லலாம்.
இந்த வகையான மின்னஞ்சல்கள் பயனர்களுக்கு பணம் மற்றும் மன ரீதியில் பாதகமான விளைவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்...

இந்த Hoax mailsஆனது உருவாக்கியவர்களால் மற்றவர்களுக்கு வெவ்வேறு நோக்கில் அனுப்பப்படும்...
இந்த வகையான மின்னஞ்சல்களை பாதுகாப்பாக அணுக அவற்றின் வெவ்வேறு வகைகளை அறிந்திருப்பது முக்கியம்.


 • Phishing: This scam involves thieves trolling the Internet with fake e-mails, Web sites, chat rooms and other devices while illegally using the names of trusted financial brands in an attempt to convince victims to divulge personal financial information such as credit card or social security numbers.

 • Money handling: This scam involves recruiting a third-party to receive funds stolen through another e-mail scam into an account before then transferring the money overseas, minus a commission. One such e-mail that recruits money handlers, or "mules," often has a subject line like, "I need your assistance," and a message that describe the sender as an overseas government official who is trying to move his countries' assets to a new secure location.

 • Advance fee fraud: In this arrangement, a person is approached by someone posing as Nigerian official about an opportunity to make a huge commission by helping the crooked "official" hide a massive overpayment on a government contract. In the end, the victim is persuaded to provide a large up-front fee to keep the transaction moving forward.

 • Lottery scams: Potential victims are notified via e-mail that they have won a large prize in a foreign lottery. In most cases, the victim is asked to provide either an up-front fee, or bank account or social security numbers so that the lottery can transfer the money.

 • Internet auction scams: In this case, scam artists pick victims from those using sites such as eBay or Craigslist. They contact those bidding by e-mail asking to work with them outside the auction to make a deal. As usual, the perpetrator asks for payment up front, often in cash.

 • இந்த வகையான மின்னஞ்சல்களை பாதுகாப்பாகவும், பொது அறிவுடனும் அணுக வேண்டும்.
  உதாரணமாக “உங்களுக்கு நாம் நடத்திய லொத்தர் சீட்டிழுப்பில் பரிசு விழுந்திருக்கிறது.” என்ற ஒரு மின்னஞ்சலை பார்த்தவுடன் எம்மைப் போன்ற முட்டாள்கள் என்ன செய்வோம்??
  உடனடியாக அது தொடர்பாக ஏதாவது முட்டாள் தனமான முடிவுகளை எடுப்போம்..
  அதுவே அவர்களுக்கு சாதகமாக அமைந்து விடும்.

  பதிலாக அந்த முறையிலான மின்னஞ்சல்கள் கிடைத்தால் புத்தியுடன் யோசித்துப் பார்க்க வேண்டும்.
  நாமே விண்ணப்பிக்காமல் நமக்கு லொத்தரில் எப்பிடி பரிசு விழும் ???
  :-)

  இந்த தொடுப்பைப் பயன்படுத்தி இது பற்றி அறிந்து கொள்க.

  இந்த தொடுப்பைப் பயன்படுத்தி இது பற்றி அறிந்து கொள்க.

  தற்போதைய காலகட்டத்தில் பொதுவான பிரச்சினையாக இது வளர்ந்து வருகிறது.
  ஆக எல்லோரும் அறிவை பாவித்து பாதுகாப்பாக இருப்பதே நல்லது.  Email Hoax என்றால் என்ன ???SocialTwist Tell-a-Friend

  Wednesday, 22 April 2009

  பிரபல மருத்துவமனைகளில் சரியில்லாத தலைமைத்துவம் !!!

  22 . பின்னூட்டங்கள்
  அப்பாடா ஒருமாதிரி நம்ம நாட்டுல ஒரு சேனல்ல ஐ.பி.எல் போட்டிகள் வருது...
  ஒரே குஜால்...
  முதல் ரெண்டு நாள் போட்டிகளை தான் மிஸ் பண்ணியாச்சு...
  நோ ப்ராப்ளம்..
  இப்பவாவது வருதேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்...
  :-)

  ஆனா வச்சது வச்சாங்க தெனாபிரிக்காவுல...
  அங்க இப்போ மழைநேரமாம்ல...
  நேத்து என்னோட ஃபேவரிட் சனத் ஜயசூரிய விளையாடுறத பாக்கலாம்ன்னு இருந்தா மழை வந்து கெடுத்து விட்டது...
  :-(

  ----------------------------------------------------------------------------

  என்னோட நெருங்கிய உறவினர் ஒருவர் தொலைவிலிருந்து சிகிச்சைக்காக கொழும்புக்கு வந்திருந்தார்...
  மிகவும் சீரியஸான நேரத்தில் ஒரு பிரபல மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தோம்...
  உடனே கையில் ஒரு சீட்டைத் தந்து கொண்டு போய் பணம் கட்டிவிட்டு வரவும் என்உ தந்தனர்.
  சரின்னு கொண்டுபோனா பணம் கட்டுறதுக்கு முன்னால அந்த நோயாளியை ரெஜிஸ்டர் பண்ணவாம்...

  ஒரு ஆபத்து என்றவுடன் கொண்டுபோய் சேர்த்தவுடன் பணம் கட்டு என்று உடனே கையில் பில்லைத் தந்தது கொஞ்சமாவது பரவாயில்லை...
  பணம் தானே போனால் போகட்டும் என்று கொண்டு போனால்,
  பணம் கட்டுவதற்கு முன் பேஷண்டை ரெஜிஸ்டர் பண்ணு என்றால் எவ்வளவு கோபம் வரும் நமக்கு???
  அவ்வளத்துக்கு நான் அந்த நேரத்தில் சாப்பிட்டும் இருக்கவில்லை...
  :-)))

  ஆபத்து நேரத்தில் கொண்டுபோய் சேர்க்கையில் பணம் முக்கியமில்லை என்று அதைக் கட்டப் போனல் அதையும் வாங்க முன் ரெஜிஸ்டர் பண்ணு என்று சொல்வது நியாயமா???

  சரி என்று விதியை நொந்து கொண்டு நோயாளியைப் பதியப் (ரெஜிஸ்டர்) போனால் அங்கே இருந்தது ஒரு பெண்...
  முடியாவிட்டால் கையால் எழுத வேண்டியது தானே...
  அந்த பெண் ஊழியருக்கு ஒரு கணனி வேறு...
  அதில் ஒவ்வொரு கீயையும் தேடித் தேடி டைப் அடிக்கிறார் அந்த பெண்...
  என்ன கொடுமை???

  அவசரம் என்று வருபவர்களுக்கு உடனடியாக வேலை செய்யும் வகையில் உள்ள ஒரு ஊழியரை ஒரு பொறுப்பான இடத்தில் அமர்த்த வேண்டுமல்லவா ???
  நான் அது ஒரு பெண் ஊழியர் என்று குறை சொல்லவில்லை...
  அந்த இடத்தில் யார் இருந்தாலும் விரைவாக வேலை செய்யும் திறமை இருக்க வேண்டும் என்று தான் சொல்கிறேன்...

  டைப் பண்ணுறதுல தான் வேகம் குறைவு என்று பார்த்தால் எழுதுவதிலும் வேகம் குறைவு தான்...
  :-(

  வெகம் குறைவாக வேலை செய்வதையும் தாண்டி பக்கத்தில் இருக்கும் சக ஊழியர்களோடு சாட்டிங் வேறு...
  அவசரமாக வருபவர்களுக்கு கொடுக்கப்படும் தொல்லைகள் கொஞ்சமல்ல...
  இவ்வளத்துக்கும் அது ஒரு பிரபல மருத்துவமனை...
  பெயர் சொல்ல விரும்பவில்லை...
  அது இந்திய உரிமையில் இருந்து சிறிது காலத்துக்கு முன் தான் இலங்கை உரிமைக்கு மாற்றப்பட்டது...
  தெரிந்தால் கண்டுபிடித்துக் கொள்ளவும்...
  :-)

  பணம் வேண்டுமானல் முதலில் வாங்கிக் கொண்டு, நோயாளியின் நிலைமை சரியானதும் அவர்களின் பதிதல் செயற்பாடுகளை வைத்துக் கொள்ளலாம் தானே...
  நோயாளியின் மோசமான நிலைமையை நினைத்துக் கொண்டு பணம் கட்டப் போனால் இதை எல்லாம் செய் என்றால் கோபம் வருவது நியாயமா இல்லையா???
  பதில் சொல்லவும்...

  இந்த நிலைமையை நினைக்கும் போது எனக்கு கமலின் வசூல் ராஜா படம் தான் ஞாபகம் வருகிறது...
  அதிலும் இது மாதிரி ஒரு சீன் வரும்...
  :-)

  அந்த மருத்துவமனையின் தலைமைத்துவம் தான் இதற்குக் காரணம்...
  மற்றபடி அங்கு சேவை செய்யும் அனைவரும் சிறந்தவர்கள், நல்ல மனம்...
  (மருத்துவமனிகளில் இருப்பவர்கள் செய்வது சேவை தானே...
  வேலை செய்பவர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்காது...)

  இது என்னுடைய கருத்து தான்...
  கருத்து பற்றிய உங்களுடைய நிலைப்பாட்டை கூறிச் செல்லவும்...

  ----------------------------------------------------------------------------

  நம்ம குழந்தை ஓவியம் ஆதவாவை சிறிது காலமாக காணவில்லையே...
  எங்கு போனார் என்று தெரியவில்லை...
  விஷயம் தெரிந்தவர்கள் சொல்லவும்...

  அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
  அன்புடன்,


  .
  பிரபல மருத்துவமனைகளில் சரியில்லாத தலைமைத்துவம் !!!SocialTwist Tell-a-Friend

  Monday, 20 April 2009

  அசினும் த்ரிஷாவும்... சும்மா ஒரு விஷயம்...

  54 . பின்னூட்டங்கள்
  நமது தமிழ் சினமா நடிகைகள் உடை அணிவதில் நாளுக்கு நாள் சிக்கனம் காட்டிக்கொண்டே வருகிறார்கள்...

  முன்பு உடலை முழுவதுமாக மூடி ஆடை அணிந்தனர்..
  பின்பு படிப்படியாக நாகரிகம் வளர்ந்ததால் ஆடையில் குறைவு...
  (ஒன்னு கூடினா இன்னொன்னு குறைந்தே ஆகனும் போல...
  என்னா தத்துவம் ??? :-) )

  நடிக்க வந்துட்டா எவ்வளவு ஆடையில குறைவு வருதோ அவ்வளவு சம்பளத்துல நிறைவு வருமாம்ல...
  என்ன கொடுமையோ ???
  எவ்வளவோ நல்ல நடிக, நடிகைகள் இருக்கிறார்கள்..
  அவர்களை இதுல இழுக்கவில்லை நான்...
  :-)

  நடிகைகள் எல்லோரும் சின்ன வயசுல போட்ட ட்ரெஸையே இப்போவும் போடுவதாக கேள்வி...
  நம்ம ஆழ ஊடுருவும் படையை அனுப்பி ஆராஞ்சு பாத்ததுல கிடைச்ச சில படங்கள்...

  ஒருவருடைய ஆடை அணியும் சுதந்திரத்தை வேத்தியன் பறிக்கிறான்னு யாரும் கொடி தூக்கிராதீங்கப்பா...

  எது எப்பிடின்னாலும் இது மாதிரி படம் பாத்து குஜாலா இருக்கிறதுக்குன்னும் சில பேர் இருக்காங்கல்ல...
  :-)

  அசினின் சிறுவயது படம்..  அசினின் தற்போதைய படம்...


  த்ரிஷாவின் சிறுவயது படம்


  த்ரிஷாவின் தற்போதைய படம்


  நயன்தாராவை கவனிக்க வேறு கிளைகள் உள்ளதால் வேத்தியன் அந்த மேட்டரை விட்டாச்சு...
  :-)

  நமீதாவின் தற்போதைய படங்களும் சின்ன வயசு படங்களும் கிடைச்சாலும் சென்சார் போர்ட்டால கத்தரிக்கப்பட்டு வருவதால் ஏதும் தேறாது..
  அதனால் போடவில்லை..
  தேவைப்படுவோர் மெயிலிடவும்...
  :-)

  அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
  அன்புடன்,


  .
  அசினும் த்ரிஷாவும்... சும்மா ஒரு விஷயம்...SocialTwist Tell-a-Friend

  Friday, 17 April 2009

  "Déjà vu" ஒரு விளக்கம்...

  30 . பின்னூட்டங்கள்
  நீங்கள் எப்போதாவது ஒரு புதிய கடைக்கு சென்றிருக்கும் போது ஏற்கனவே அந்த கடைக்கு வந்த மாதிரி உணர்வு வந்திருக்கா???
  அல்லது நண்பர் ஒருவருடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது ஏற்கனவே அதே வசனங்களுடன் கதைத்த மாதிரி உணர்வு வந்திருக்கா???
  நமக்கு அப்பிடி ஒரு சம்பவம் ஏற்கனவே நடந்திருக்கவில்லை என்றாலும் அது நடந்த மாதிரியான உணர்வு வரும்...
  இப்பிடி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தை நீங்கள் உணர்ந்திருந்தால் நீங்கள் Déjà vuஐ உணர்ந்திருக்கிறீர்கள்...
  நம்மில் 60-70 சதவீதமானோருக்கு வாழ்வில் ஒருதடவையாவது இந்த உணர்வு வந்திருக்கும்...
  அதுவும் 15 இலிருந்து 25 வயசுக்குள்ள இருக்கிறவங்க இதை அடிக்கடி உணருவாங்க...

  மாணவர்களுக்கு இந்த உணர்வு அடிக்கடி வரும். உதாரணமா பரீட்சைக்கு முதல் நாள் இப்பிடி கேள்வி வந்தா எப்பிடியிருக்கும்ன்னு நினைச்சுட்டே இருந்திருப்போம்...
  பரீட்சை பேப்பரில் நாம நினைத்தது மாதிரியே கேள்வி வந்திருக்கும்...
  இதை அனேகமானோர் அனுபவித்திருப்பர்...
  உங்களுக்கும் அனுபவம் உண்டா ???

  இந்த Déjà vu உணர்வை விளக்க 40 தத்துவங்கள் வரை இருக்கிறது...
  இந்த தத்துவங்கள் Déjà vu எனும் உணர்வு எப்பிடி வருகிறது, அது என்னவெல்லாம் தோற்றுவிக்கும் போன்ற நம்முடைய பல கேள்விகளுக்கு விடை சொல்லும் விதமாக இருக்கிறது...

  Déjà vu எனும் சொல்லானது பிரெஞ்சு சொல்லாகும்...
  Emile Boirac எனும் பிரெஞ்சு விஞ்ஞானி இது பத்தி படிச்சு 1876ல இந்தப் பெயரை சொன்னாராம்..
  Déjà vu சொல்லின் அர்த்தம் ஆங்கிலத்தில் "already seen" என்பதாகும்...
  இந்த உணர்வுக்கு இன்னும் சில பெயர்கள் இருக்கு...
  déjà vécu - already experienced.
  déjà senti - already thought.
  déjà visité - already visited.

  பல பேர் பல விதமாக அர்த்தம் சொன்னாலும் Déjà vu என்பது நாம் ஒன்றை முன்னர் அனுபவித்திராமல் அது நடந்த மாதிரி தோன்றுவது...
  "The feeling that you've seen or experienced something before when you know you haven't".

  இந்த உணர்வை பலர் முன்னுணர்வுக்கு தவறாக ஒப்பிடுகின்றனர்...
  முன்னுணர்வு வேறு. அதாவது முன்னுணர்வு என்பது அடுத்து நடப்பது என்ன என்பது சிறிது நேரத்துக்கு முன்னரே தெரிந்து விடும்...
  "அழகிய தமிழ் மகன்" திரைப்படத்தில் விஜய்க்கு நடப்பது போன்று...
  "Next" திரைப்படத்தில் Nicholas Cageக்கு நடப்பது போன்று...
  ("Next" படத்தைப் பாத்து தான் "அழகிய தமிழ் மகன்" வந்ததோ???
  டைரக்டருக்கும் விஜய்க்குமே வெளிச்சம் ! :-) )
  இந்த Déjà vu சம்பந்தமாக 2006ல ஒரு திரைப்படம் வந்தது...
  முடிந்தால் பார்க்கவும்...
  படம் பற்றிய தகவல்களுக்கு இங்கே க்ளிக்கவும்...

  மனப்பிரமையும், சற்று மறந்த ஞாபகங்களும் கூட Déjà vu உடன் தவறாக ஒப்பிடப்படுகின்றன...
  Déjà vu ஆனது 10 - 30 செக்கன்கள் மட்டுமே நிலைக்கும்...
  ஆனால் சற்று மறக்கப்பட்ட நினைவுகள், மனப்பிரமை போன்றன அதிக காலத்துக்கு நிலைத்திருக்கக் கூடியன...

  இந்த உணர்வு ஏற்பட காரணம் மூளை தான்...
  மூளையின் நினைப்புக்கும் முன்னுணர்வுக்கும் இடைப்பட்ட ஒரு வித்தியாசமான உணர்வு தான் இது...


  Types of
  Déjà vu

  அமெரிக்காவிலுள்ள South Methodist Universityல Psychology பேராசிரியரும், "The Déjà Vu Experience: Essays in Cognitive Psychology," எனும் புத்தகத்தை எழுதியவருமான Alan Brown என்பவர் Déjà vu ஏற்படுவதற்கான காரணங்கள்ன்னு முக்கியமா 3 காரணங்கள் சொல்லியிருக்கார்...
  1. Biological dysfunction (e.g., epilepsy)
  epilepsyங்கிறது தமிழ்ல காக்கை வலிப்பு நோய்...

  2. Implicit familiarity
  ஒருத்தருக்கு இருக்கிற உள்ளுணர்வு...
  (வேட்டையாடு விளையாடு படத்துல கமலுக்கு இருக்குமே... அதேதான்ல :-)
  )

  3. Divided perception
  திசை திரும்பிய புலனுணர்வு...

  இந்த காரணங்கள் பத்தி தெரிஞ்சுக்கிற அளவுக்கு நாம இன்னும் வராத காரணத்தால இத்தோட நிறுத்திக்கலாம்...
  :-)

  Déjà vuஐ இரண்டு பிரதான வகைகளாக பிரிக்கலாம்...
  1. Associative déjà vu
  இது தான் நமக்கு பொதுவா வருவது...
  நாம பார்த்து, கேட்டு, மணந்து (Smell) இருக்கிற மாதிரியான உணர்வுகள்...
  இது பொதுவா Memory Based Experiences...

  2. Biological déjà vu
  காக்கை வலிப்பு போன்ற நோயோடு இருக்கிறவங்க அடிக்கடி இந்த உணர்வை அனுபவிப்பாங்களாம்...
  இதுக்கான காரணம் அதிக சிக்கலானதுனால நாம அது பத்தி அறிஞ்சுக்கிறது கஷட்ம் தான்...

  இது விளங்குறதுக்கு அவ்வளவு ஈஸியான பாடம் அல்ல...
  அதிகமானவங்க இப்பிடி ஒரு உணர்வு வந்தும் அது பத்தி யோசிக்காமலோ அல்லது விஷயம் தெரியாமலோ இருந்திருப்பாங்க...
  அவங்களுக்கு தெளிவு படுத்துறதுக்கு தான் இந்தப் பதிவு...
  தெளிவா இருந்துச்சுன்னா கமென்ட்ல சொல்லிட்டுப் போங்க...

  நன்றி, தகவல் - http://www.howstuffworks.com

  அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
  வர்ட்டாஆஆஆ...

  டாட்டா..

  பை பை...

  .
  "Déjà vu" ஒரு விளக்கம்...SocialTwist Tell-a-Friend

  Thursday, 16 April 2009

  வேத்தியனின் பள்ளி வாழ்க்கை...

  45 . பின்னூட்டங்கள்
  என்னையும் தொடர் பதிவிட அழைத்த "ரசனைக்காரி" ராஜேஸ்வரி அக்காவுக்கு நன்றிகள்...
  அவங்களோட பதிவு படிக்க
  இங்கே க்ளிக்கவும்...

  ஆனா விஷயம் என்னான்னா வேத்தியனாகிய நான் இன்னும் கல்லூரியில் சேரவே இல்லை...

  இப்போ தான் பள்ளி வாழ்க்கை முடிஞ்சிருக்கு...

  இந்த ஜூலையில தான் கல்லூரி...

  :-)


  ஆனாலும் என் பள்ளி வாழ்க்கை பத்தி எழுதனும்ன்னு ரொம்ப நாளா நினைச்சுட்டிருந்தேன்...

  இந்த பதிவு மூலமா நான் அது பத்தி எழுதிடுறேன்...


  "வேத்தியன்" எனும் பெயரானது எனது சொந்தப்பெயர் அல்ல..

  நான் படித்தது Royal College எனும் கொழும்பிலுள்ள பள்ளியிலாகும்..

  தமிழில் எமது பள்ளியை "வேத்தியர் கல்லூரி" என அழைப்போம்.

  பதிவு எழுத வந்த போது சில பல காரணங்களுக்காக சொந்தப்பெயர் வைக்க வேண்டாம்ன்னு முடிவு பண்ணினேன்..


  ஒரு பெயர் யோசிக்கும் போது கூட சட்டென்று ஞாபகத்துக்கு வரும் இடம் எனது பள்ளி...

  அதனால வச்ச பெயர் தான் "வேத்தியன்" எனும் பெயர்...

  ஆங்கிலத்தில் பொருள் Royalist என்பதாகும்...

  ஒவ்வொரு தடவையும் இந்த வேத்தியன் எனும் பெயரை கேட்கும் போது எனது பள்ளி ஞாபகங்கள் வந்து போகும்..


  பள்ளி என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மறக்கவே முடியாது...

  ஏகப்பட்ட நண்பர்கள்..
  எப்போதும் சந்தோஷம்...

  முக்கியமான விஷயம் என்னவென்றால் எந்தப் பொறுப்பும் இருக்காது, படிப்பதை தவிர...

  :-)
  நான் படித்த பள்ளியின் ஒரு தோற்றத்தை இங்கு காணலாம்...  பள்ளி வாழ்க்கையைப் பத்தி யோசிக்கும் போது சட்டுனு ஞாபகத்துக்கு வருவது ஒவ்வொரு ஆண்டும் நாம் சென்ற சுற்றுலக்கள் தான்...

  படித்து முடித்த 12 ஆண்டுகளிலே எத்தனை சுற்றுலாக்கள் ???

  பெயர் மட்டும் தான் 'கல்விச் சுற்றுலா'..

  ஆனால் நாம் அதை ஒரு உல்லாசச் சுற்றுலாவாக தானே எடுத்துக் கொள்வோம் ??


  அதுவும் இரண்டு நாள் சுற்றுலாவாக இருந்தால் டபுள் சந்தோஷம் தான்...
  வீட்டுக்காரங்க சகவாசம் இல்லாம இருக்குற அந்த ஒரு இரவுல நாம என்னென்ன செய்யனும்ன்னு ஒரு மாசத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணி வச்சிருவோம்ல...
  பல பேருக்கு பீரின் டேஸ்டும் சிகரெட்டின் வாசனையும் தெரிய வருவது இந்த இரவில் தானே ???
  தெளிவா இருக்கிறவங்க தப்பிச்சுருவாங்க..
  மாட்டினவங்களுக்கு நிலைமை மோசம்...

  அடுத்து மறக்கவே முடியாத இன்னொரு விஷயம் டியுஷன் க்ளாஸ்...

  அதுவும் உயர்தரம்ன்னா ஒவ்வொரு பாடத்துக்கும் க்ளாஸ் போவோம்ல நாம...
  சும்மாவா போவோம்??
  நாம க்ளாசுக்கு போய் படிச்சுட்டு வரதே ஒரு கூத்து தான்...

  :-)


  மத்தது மன்றங்கள்...

  நம்ம பள்ளியில தமிழ் மன்றங்கள் சில இருக்கு..

  இந்து மாணவர் மன்றம், தமிழ் இலக்கிய மன்றம், தமிழ் கர்னாடக இசை மன்றம், தமிழ் நாடக மன்றம்...

  இந்த ஒவ்வொரு மன்றமும் ஒவ்வொரு வருடமும் விழாக்கள் நடாத்தும்..
  அடுத்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் அதற்கு முந்திய வருடம் அவ்வொவ்வொரு மன்றங்களையும் வழிநடாத்துவது வழக்கம்... மன்றங்கள், விழாக்கள்ன்னா சும்மாவா???
  ஜமாய்ச்சுருவோம்ல நாம...


  உதாரணமா தமிழ் இலக்கிய மன்றம்ன்னா அது ஒவ்வொரு வருடமும் "கலை விழா" நடத்தும்..

  விழா நவம்பர் மாசம்ன்னா அதற்கான முயற்சிகள் மார்ச் மாசத்துல இருந்தே தொடங்கிருவோம் நாம...

  வேற வேலை நமக்கு ???

  :-)


  இப்பிடி மன்றங்கள் வளர்த்த காலப்பகுதியில் கிடைத்த அனுபவங்கள் ஏகப்பட்டது இருக்கு...

  ஒருவருடன் எப்பிடிப் பேச வேண்டும்ன்னு அப்போ தான் தெரிந்து கொண்டேன்...


  அடுத்து நினைவுக்கு வருவது முக்கியமான விஷயம்..

  ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஒளிந்திருக்கும் இசைத் திறனை வெளியில கொண்டு வருவது, மேசையில தாளம் போட்டு நாம படிக்கிற பாடல்கள் தான்...

  ஏதாவது ஒரு பாடத்துக்கு ஆசிரியர் வரலைன்னா அது ஒரு தனி சந்தோஷம் தான் நமக்கு...

  நண்பர்கள் எல்லாருமா சேர்ந்து சுத்தி ஒக்கார்ந்திருவோம்...

  ஒரு 5 பேர் இருந்தாலும் போதும் கச்சேரி நடத்த..

  :-)


  எனது நண்பர் குழாமில் நான் தான் மேசையில மியுசிக் போடுறது..

  பாட்டு பாட மச்சான் பால்பாண்டி...

  பாட்டு எடுத்துக் குடுக்க பைக் சொந்தக்காரன்...

  லிரிக்ஸ் ஞாபகப் படுத்த நயன்தாரா...

  கூடி இருந்து வேடிக்கை பாக்க ரெண்டு பேர்ன்னு எப்பவுமே நம்ம கச்சேரி களைகட்டும்...


  பள்ளியில இருந்தா பட்டப்பெயர் இல்லாம இருக்குமா??

  நம்மல கூப்பிடுறது 'ஐயன்'ன்னு தான்...

  நண்பர்களோட பெயர தான் மேல சொல்லியிருக்கேன்ல...

  :-)


  இப்பிடி பள்ளி வாழ்க்கையை நினைக்கையில ஞாபகத்துக்கு வர்ற விஷயங்கள் ஏராளம் ஏராளம்...

  சிலதை சொல்லியிருக்கேன்..

  பலதை தினமும் நினைச்சுகிட்டு இருக்கேன்...

  பள்ளி வாழ்க்கையைப் பத்தி எழுதனும்ன்னா ஒரு பதிவு போதுமா சாமி ??

  :-)


  நான் எழுதனும்ன்னு தினமும் நினைச்சுட்டிருந்த விஷயங்களைப் பத்தி எழுதுறதுக்கு வாய்ப்பு தந்த ராஜேஸ்வரி அக்காவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றிகள்...


  தொடர்ந்து எழுத நான் அழைப்பது எனது நண்பர்கள்,


  1.
  கார்த்திகைப் பாண்டியன் - பொன்னியின் செல்வன்.

  2.
  ஆதவா - குழந்தை ஓவியம்.

  அடுத்த பதிவுல சந்திக்கலாம்...

  வர்ட்டாஆஆஆ...

  டாட்டா..

  பை பை...

  .

  வேத்தியனின் பள்ளி வாழ்க்கை...SocialTwist Tell-a-Friend

  Wednesday, 15 April 2009

  அருமையான கணிதம் !

  37 . பின்னூட்டங்கள்
  படிக்கிறப்போ அலட்டாத ஒரே பாடம்ன்னா அது கணிதம் தான்... 
  என்ன நான் சொல்றது ??? 
  :‍)  

  இந்தப் படங்கள் எனக்கு மெயிலில் வந்தவை...  

  கணிதத்தில் இவ்வளவு வினோதம் உண்டா என்று பார்த்து வியந்தேன்...  

  நீங்களும் கட்டாயமாக பார்க்க வேண்டும்...  

  படங்களில் க்ளிக்கி பெரிய படமாக பார்க்கவும்...
  அருமையான கணிதம் !SocialTwist Tell-a-Friend

  Monday, 13 April 2009

  தமிழர் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!!

  17 . பின்னூட்டங்கள்
  அனைவருக்கும் சித்திரை தமிழ் வருடப் பிறப்பு நல்வாழ்த்துகள் !!!


  மலரப்போகும் இந்த "விரோதி" தமிழ் வருடத்தில் அனைவரினது துன்பங்களும் நீங்கி வாழ்வில் சந்தோஷம் பொங்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...  முக்கியமாக இலங்கையின் வடபகுதி தமிழ் மக்களின் இன்னல்கள் நீங்கி அவர்களுக்கு ஒரு சந்தோஷமான வாழ்வு கிட்ட வேண்டும் என தமிழராகிய நாம் இறைவனை பிரார்த்திப்போமாக !!!

  தமிழர் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!!SocialTwist Tell-a-Friend

  Sunday, 12 April 2009

  தமிழர் புதுவருடத்துக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகள் !

  59 . பின்னூட்டங்கள்
  தை மாதத்தின் முதல் நாளாக தமிழர்களால் கொள்ளப்படுவது தைப்பொங்கல் நாளாகும்.
  அதையே தமிழர் புதுவருடமாக சிறு காலத்துக்கு முன் தமிழ்நாட்டு முதல்வர், கலைஞர் என அழைக்கப்படும் கருணாநிதி அறிவித்திருந்தார் என்பது அனைவரும் அறிந்த விடயம்...

  நான் பொதுவாக எந்த அரசியல் வாதிகளுக்கும் அவர்கள், இவர்கள் என மரியாதை கொடுப்பதில்லை...
  (தற்போதைய அரசியல் வாதிகளுக்கு மட்டும்... :-) )
  ஆனால் கருணாநிதி எழுதிய சில எழுத்துகள் எனக்கு உண்மையிலேயே பிடிக்கும்..
  அதானால் மட்டும் அவரை கருணாநிதி என பெயர் சொல்லி அழைக்காமல் கலைஞர் என அழைப்பேன்..
  :-)

  சன் டீ.வியின் உரிமையாளர் கலாநிதி மாறன் மற்றும் அவருடைய குடும்பத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கலைஞர் தொடங்கிய தொலைக்காட்சி தான் கலைஞர் தொலைக்காட்சி..
  இது அனைவரும் அறிந்ததே...
  அதைத் தொடர்ந்து சிரிப்பொலி, செய்திகளுக்காக தொடங்கப்பட்ட தொலைக்காட்சி என ஏகப்பட்டது இருக்கின்றது...

  இப்போ விஷயம் என்னான்னா, தைப்பொங்கல் தினத்தை தமிழர் புதுவருடமாக அறிவித்த கலைஞர் சித்திரை புதுவருட தினத்தை மறந்திருக்க வேண்டும்..  ஆனால் கலைஞர் தொலைக்காட்சிக்கு போட்டியாக உள்ள விஜய் டீ.வி, ஜெயா டீ.வி, சன் டீ.வி போன்றன சித்திரை தமிழ் புத்தாண்டு தினத்துக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் என்று சொல்லி பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பிருப்பதை தத்தமது தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தி வருகின்றன...

  விஜய் டீ.வி ஒரு வித்தியாசமாக சித்திரை புதுவருடம் என சொல்லாமல் "சித்திரை விழா" என கூறி வருகிறது..
  புதுவருடம் என சொன்னால் அரசியல் ரீதியாக ஏதும் பிரச்சனை வரும் என பயமோ???
  :-)

  இப்படி கலைஞர் தொலைக்காட்சிக்கு போட்டியாகவுள்ள தொலைக்காட்சிகள் அனைத்தும் சித்திரைப் புதுவருடத்துக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது அறிந்த கலைஞர் தொலைக்காட்சி சித்திரை முதல் நாள் என்ற பெயரில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப ஆயத்தமாக இருக்கின்றது...

  சரி, அப்படியானால் எல்லா மாத முதல் நாளுக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப வேண்டியது தானே???
  அது ஏன் சித்திரை மாதத்தின் முதல் நாளுக்கு மட்டும் சிறப்பு நிகழ்ச்சிகள்???
  காரணம் விளங்கவில்லை எனக்கு...
  :-)

  கலைஞர் தைப்பொங்கல் தினத்தை தமிழர் புதுவருடமாக அறிவித்தால் ஜெயலலிதாவுக்கு சித்திரை மாதம் தான் தமிழர் புதுவருடம் வரும் கட்டாயமாக...
  கலைஞர் வடக்கு என்றால் ஜெயலலிதா தெற்கு தானே???
  :-)
  100 % அரசியல் வாதிகள் இருவரும்...
  இப்படி தங்களுக்குள் சணடை பிடிப்பதை நிறுத்தி நாட்டை பற்றி சிந்தித்திருந்தால் இன்னும் கொஞ்சம் தமிழ்நாட்டை முன்னேற்றியிருக்கலாம் அல்லவா???
  நான் குறிப்பாக இவர்களை மட்டும் சொல்லவில்லை..
  எல்லா அரசியல் வாதிகளும் தான்...

  கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சிகள் கலைஞரின் அனுமதியோடு தானே ஒளிபரப்பப்படுகிறது???
  தைப்பொங்கல் தினத்தை தமிழர் புத்தாண்டாக அறிவித்த கலைஞர் ஏன் இதற்கு அனுமதி அளித்தார்???
  நிகழ்ச்சிகளுக்காக விளம்பரம் மூலம் வரும் பணமா காரணம் ???
  புரியவில்லை எனக்கு...
  ஏதும் நுண்ணரசியல் இருக்குமோ???
  :-)

  நான் இந்த விடயம் பத்தி அரசியல் நோக்கில் எழுதவில்லை...
  அரசியல் எனக்கு பிடிக்காது...

  எது எப்படியிருந்தாலும் சித்திரை புதுவருட தினத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதால் நமக்கு தானே ஜாலி...
  :-)
  தமிழர் புதுவருடத்துக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகள் !SocialTwist Tell-a-Friend

  Friday, 10 April 2009

  திரைப்பார்வை - "ஆனந்த தாண்டவம்"

  44 . பின்னூட்டங்கள்


  இரண்டு நாளா ஊர்ல இல்லை...
  போரடிச்சு போயிடுச்சு...
  அதான் இன்னைக்கு ஏதாவது படம் பாக்கலாம்ன்னு தியேட்டர் போனேன்..
  படம் ஆனந்த தாண்டவம்.

  படத்தின் கதை கொஞ்சம் சிக்கல் தான்...
  முதல் கொஞ்ச நேரத்துக்கு என்ன நடக்குதுன்னு விளங்கவேயில்லை..
  பிறகு போகப் போக கொஞ்சம் பரவாயில்லை...

  அறிமுக நடிகர் சித்தார்த்...
  என்ஜினீரிங் படித்துவிட்டு ஊருக்கு வர அங்கு தமன்னாவுடன் பழக்கம்..
  பின் காதல்..
  அப்பாவின் அறிவுரையை கேட்காமல் நடக்கிறார் ஹீரோ...

  தமன்னா அதிகமான இடங்களில் முகத்தைக் காட்ட வாய்ப்பு கிடைச்சிருக்கு...
  அப்போ கூட நடிப்பு பிரமாதம்ன்னு சொல்ல முடியாது...
  ஓகே அவ்ளோ தான்... :-)
  சித்தார்துடன் காதல், பிறகு அமெரிக்காவிலிருந்து ஒருத்தன் வர அவனுடன் கல்யாணம்...
  இதனால் உடைந்து போய் தற்கொலை முயற்சி பண்ணுகிறார் ஹீரோ...
  எனினும் உயிர்பிழைத்து மீண்டும் வருகிறார்..
  சார்லி நடித்திருக்கிறார்... நல்லாவும் இருக்கு அவரோட நடிப்பு.

  இரண்டாம் பாதியில், அப்பாவின் அறிவுரைப்படி மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்கிறார் ஹீரோ...
  அங்கு பொம்மலாட்டம் ஹீரோயின் ருக்மணி வருகிறார்..

  மீண்டும் அங்கு ஒரு நடன நிகழ்ச்சியில் தமன்னாவைச் சந்திக்கிறார் ஹீரோ...
  திரும்ப அவருடன் கொஞ்சம் காதலுடன் பழகுகிறார்...
  கண்ணாளமானாலும் சித்தார்த் மீது கொஞ்ச காதல் இருக்கத் தான் செய்கிறது தமன்னாவுக்கு...

  ருக்மணி சித்தார்த் மீது காதல் கொள்கிறார்..
  ருக்மணியின் அப்பாவாக பிரபல டான்ஸ் மாஸ்டர் ரகுராம் நடித்திருக்கிறார்...
  தமன்னாவின் அமெரிக்க புருஷன் கொடுமை பண்ண தற்கொலை செய்து கொள்கிறார் தமன்னா...
  கடைசியில் ருக்மணியுடன் சேர்கிறாரா இல்லையா என்பது தான் விஷயம்...
  இவ்வளவு தான் கதை...

  தயாரிப்பு ஆஸ்கார் பிலிம்ஸ் V.ரவிச்சந்திரன்.

  எழுத்தின் சிகரம் சுஜாதாவின் மறைவுக்குப் பின் அவரது கதையில் வரும் முதல் படம்..
  எனக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு இந்தப் படத்தின் மேல்...

  இயக்கம் காந்திகிருஷ்ணா...
  பெரிதாக படம் விறுவிறுப்பாக இல்லை...
  இயக்குனர் சுஜாதாவின் கதை கிடைத்தும் அதை வீணடித்து விட்டார் என்றே தோனுது...
  அதிகமான இடங்களில் தொய்வாக இருக்கிறது..

  ஒளிப்பதிவு சில இடங்களில் அருமை..
  சில இடங்களில் போர்...
  அமெரிக்காவில் எடுக்கப்பட்ட காட்சிகள் பார்ப்பதற்கு கொஞ்சம் அழகு..
  :-)

  இசை G.V.பிரகாஷ்குமார்...
  பாடல்கள் அனைத்தும் சுத்த போர்...
  ஒரே ஒரு டூயட் மட்டும் நல்லா இருந்துச்சு...
  மற்ற பாடல்கள் கொஞ்சமும் நல்லாவே இல்லை..

  எடிட்டிங் சூப்பர் என்று சொல்வதற்கில்லையென்றாலும் பரவாயில்லை...
  அமெரிக்கா காட்சிகள் அழகா இருப்பதற்கு எடிட்டிங்கும் காரணம்...

  கலை இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்...
  அதிகமான இடங்களில் செயற்கையாக இருக்கிறது...
  பார்ப்பதற்கு இன்னும் கொஞ்சம் அழகா இருக்குற மாதிரி கவனமா செய்திருக்கலாம்...

  ஏன் தான் எல்லோரும் வெளிநாடு என்றவுடன் அமெரிக்காவுக்கே போறாங்கன்னு எனக்கு புரியவேயில்ல...
  என்ன காரணமோ ???

  படம் சில இடங்கள் மட்டுமே பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது..
  மிகுதி போர் தான்..
  மொத்தத்தில் படம் அடிச்சு புடிச்சி தியேட்டருக்கு போய் பார்க்குமளவுக்கு வேலையில்லை...
  ஆறுதலா தியேட்டரை விட்டு தூக்குவதற்கு முதல் நாள் போய் பாக்கலாம்... :-)
  புரோடியூசருக்கு நஷ்டம் தான் போல இருக்கு...

  இது என்னுடையா கண்ணோட்டம் தான் ...
  யாருக்காவது படம் நல்லா இருந்தா சொல்லவும்... :-)

  அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
  வர்ட்டாஆஆஆ...
  டாட்டா..
  பை பை...
  .
  திரைப்பார்வை - "ஆனந்த தாண்டவம்"SocialTwist Tell-a-Friend

  Tuesday, 7 April 2009

  வேத்தியன் பார்வையில் அயன்...

  34 . பின்னூட்டங்கள்

  ஏற்கனவே நிறையா பேர் அலசி துவைச்சு காயவச்ச ஒரு மேட்டர வீணாப்போனவன் இப்ப தான் எடுக்கிறான்னு இல்லாம ச்சும்மா படிச்சு பாருங்களேன்...
  :-)

  வந்து நாலு நாள் ஆயிடுச்சு, ஆனா இன்னைக்கு தான் பாக்க வாய்ப்பு கிடைச்சுது...

  முதல் பாதியில சில ஜோக்ஸ், சில ஃபைட்ஸ், சில லவ்ஸ், சில பாட்டுகள்ன்னு கொஞ்சம் நல்லா இருந்துச்சு...
  சூர்யா கம்ப்யூட்டரில் மேற்படிப்பு படிச்சவரு..
  சும்மா த்ரில்லிங்க்காக கடத்தல்காரன் "என்ன கொடும இது சரவணன் இது??" புகழ் பிரபு கிட்ட வேலை செய்யுறாராம்...

  கருணாஸும் இவங்களோட இருக்கிறாரு...
  இவங்களுக்கு தொழில்ல போட்டியா இன்னொருத்தன்...
  அவனோட சண்டை வழக்கம்போலவே...
  :-)

  பிரபு செய்யுற பிஸ்னஸ் ஆட்களை தன்வசப்படுத்த வில்லன் முயற்சி செய்யுறான்...
  அது சாத்தியமாகாத தருணத்துல விஜய் டீ.வி புகழ் ஜெகனை பிரபு ஆட்களோடு சேர்த்து விடுகிறான்...
  ஜெகன் மூலம் அவர்களுக்கு செய்தி போகிறது...

  ஜெகனோட தங்கை தமன்னா...
  அவங்களைப் பாத்ததும் காதல்...
  அப்புரம் என்ன நடந்திருக்கும்ன்னு உங்களுக்கே தெரியும்...
  பாட்டுக்கு மட்டுமே வந்துட்டுப் போறாங்க ஹீரோயின்...
  வழமை போலவே... :-)

  ரெண்டாம் பாதியில இன்னும் கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்க்கா இருக்கும்...
  ஜெகன் தான் செய்தி அனுப்பினதுன்னு சூர்யா கண்டுபிடிக்கிறாராம்...
  அப்புறம் ஜெகனோட கோபம், ஜெகன் தங்கை தமன்னாவுடன் கொஞ்ச நேர கோபம், பிறகு காதல்...
  உஸ்ஸ்ஸ்ஸ்...

  வில்லன் இன்னும் கொஞ்சம் நல்லா நடிச்சிருக்கலாம்ன்னு தோனிச்சு...
  சூர்யாவின் நடிப்பு அருமையா இருக்கு... குறை சொல்லக் கூடாது...
  தமன்னாவின் நடிப்பு.. சாரி அப்பிடி எதுவும் இருக்கல...

  பாடல்கள் சூப்பர்ன்னு சொல்வதற்கில்லை..
  விஷுவலோட பாக்க நல்லா இருக்கு...

  ஒளிப்பதிவாள்ர் கே.வி.ஆனந்த் இயக்குனராக இருப்பதனால் காட்சிகளை படமாக்கிய விதம் அருமைய இருக்கு...
  கொங்கோவில் நடக்கும் சண்டைக் காட்சிகள் கிட்டத் தட்ட ஆங்கில படங்களுக்கு இணையாக இருக்கிறா மாதிரி இருக்கு... அது ரொம்ப பிடிச்சிருக்கு...

  பிரபு நடிப்பும் அருமையா இருக்கு..
  நல்லா யூஸ் பண்ணியிருக்காங்க அவர...
  நல்ல நடிகருக்கு நல்ல பாத்திரம், அதுல நல்ல நடிப்பு...

  படத்துல சில இடங்கள்ல பாக்க நல்லா இருக்கு..
  சில இடங்கள் அறுவையா இருக்கு..
  மொத்தத்துல சொல்லப்போனா சூப்பர் தான்...
  (நான் சூர்யா ரசிகன் தான்..)

  மொத்தத்துல, பாக்கக்கூடிய நல்ல படம்...

  அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
  வர்ட்டாஆஆஆ...
  டாட்டா..
  பை பை...
  .
  வேத்தியன் பார்வையில் அயன்...SocialTwist Tell-a-Friend

  Sunday, 5 April 2009

  ச்சும்மா தெரிஞ்சுக்கிங்க...

  31 . பின்னூட்டங்கள்
  ஏதாவது பதிவு போடனும்ன்னு தோன்றது...
  ஆனா என்னத்த போடனும்ன்னு தோனலையேஏஏஏஏ....
  :-)

  இவை மெயிலில் வந்தவை...
  ஞாயிறு தானே, ச்சும்மா படிச்சுட்டு போங்க...
  :-)

  * தற்போது உலகில் பிரசித்தமான மூன்று Brand Names...
  1. Malboro
  2. Coca-Cola
  3. Budweiser

  * தனது உள்ளங்கையில் நிறப்பொருள் இல்லாத ஒரே Primate மனிதன் தான்...

  * "The quick brown fox jumps over the lazy dog." என்ற ஆங்கில வசனத்தில் ஆங்கில அகராதியில இருக்குற சகல எழுத்துகளும் உண்டு...

  * ஆங்கிலத்தில் ஒரு எழுத்தை திரும்ப பாவிக்காமல் எழுதக்கூடிய ஒரே 15 எழுது வார்த்தை "Uncopyrightable"

  * ஆங்கில அகராதியில் Month, Orange, Silver, Purple எனும் இந்த நான்கு வார்த்தைகளுடனும் எந்த வார்த்தையும் ரைம் (Rhyme) பண்ணாதாம்...

  * வாத்து போடும் "குவாக்" சத்தம் ஒருபோதும் எக்கோ பண்ணுவதில்லையாம்...

  * ஞாயிற்றுக்கிழமையில தொடங்குற எந்த மாதத்திலயும் 13ம் திகதி வெள்ளிக்கிழமையா தான் இருக்கும்...

  * ஆங்கிலத்தில எளிதாக உச்சரிக்கக்கூடிய பெரிய வார்த்தை "screeched".

  * ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் குடிக்குற ஆளு சராசரியா பத்து வருஷத்துக்கு ஒருதடவை தன்னோட ரெண்டு பல்லை இழக்குறாராம்...


  * நாம் தும்மும் போது இதய அடிப்பு உட்பட உடலின் சகல செயற்பாடுகளும் நின்று போய்விடுகின்றனவாம்...


  * எமது பாதம் ஒரு நாளின் மற்றைய நேரங்களில் இருப்பதை விட பின்னேரங்களில் சற்று பெருசா இருக்கும்...


  * Caffeine, Apple போன்றன எம்மை காலையில் தூக்கத்தில் இருந்து எழுப்ப நல்ல அயிட்டங்களாம்...
  (Coffeeயில் Caffeine உண்டு)


  --------------------------------------------------------------------------

  Three contractors are bidding to fix a broken fence at the White House.

  One is from Chicago, another is from Tennessee, and the third is from Minnesota.

  All three go with a White House official to examine the fence.

  The Minnesota contractor takes out a tape measure and does some measuring, then works some figures with a pencil. "Well," he says, "I figure the job will run about $900: $400 for materials, $400 for my crew and $100 profit for me."

  The Tennessee contractor also does some measuring and figuring, then says, "I can do this job for $700: $300 for materials, $300 for my crew and $100 profit for me."

  The Chicago contractor doesn't measure or figure, but leans over to the White House official and whispers, "$2,700."

  The official, incredulous, says, "You didn't even measure like the other guys! How did you come up with such a high figure?"

  The Chicago contractor whispers back, "$1000 for me, $1000 for you, and we hire the guy from Tennessee to fix the fence."

  "Done!" replies the government official.

  ச்சும்மா தெரிஞ்சுக்கிங்க...SocialTwist Tell-a-Friend

  Friday, 3 April 2009

  கறுப்பு விளக்கும் கலர்ஃபுல் காட்சிகளும்...

  47 . பின்னூட்டங்கள்
  தலைப்பப் பாத்ததும் இது ஏதோ 'சிவப்பு விளக்கு' மாதிரி குஜாலா இருக்கும்ன்னு நினைச்சா அது தவறு..
  அவங்களுக்கு இது விசயமல்ல...
  ச்சும்மா ஒரு எச்சரிக்கை தான்..
  :-)

  கறுப்பு விளக்குன்னா என்னான்னு ஒரு சிறிய விளக்கம் இங்கு தரலாம்ன்னு நினைக்கிறேன்...
  ரொம்பப் பெருசா இருந்தாலும் வாசிக்க போரடிக்கும்ல..
  அதான்..
  எல்லோரும் என்னை மாதிரி தான்னு எனக்கு தெரியுமப்பா...
  :-)

  அதிகமா இரவு நிகழ்ச்சிகள், ஹொரர் ஹவுஸ் போன்றவற்றில் நீங்கள் இது பார்த்திருக்கக்கூடும்...
  இருட்டான அறையில சிலர் பல வண்ணங்களில் அடையாளங்களிட்டு எமக்கு வேடிக்கை காட்டுவது புதுமையாக இருக்கும்...
  ஆங்கிலத்துல இதை Black Lightன்னு சொல்லுவாங்க...
  இது சாதரண புளோரொளிர்வு (Fluorescent) விளக்குகள் மாதிரி தோன்றினாலும் அவற்றிலிருந்து இது வித்தியாசம்...  ஒரு சாதாரண இருட்டு அறையில் இந்த கறுப்பு விளக்கை நீங்க ஆன் பண்ணா அதுல இருந்து ஒரு பிரகாசமான ஊதா நிர ஒளி வருவது மட்டுமே கண்ணுக்கு தெரியும்.
  ஆனா அதுல இருந்து கழியூதா ஒளி (Ultraviolet Light) வெளிவருவது சாதாரண மனிதக் கண்ணுக்கு தெரிவதில்லை...
  இதுவே இதன் ரகசியம்...  மனிதக் கண்ணால் கட்புலனாகும் ஒளியை மட்டுமே பார்க்க முடியும்.
  அது சிவப்பிலிருந்து ஊதா வரி செல்லும்..
  ஊதாவுக்கு அடுத்து கழியூதாக் கதிர்கள் காணப்படும்...
  ஒரு கறுப்பு விளக்கிலிருந்து இந்த கதிர்களே வரும்...


  ஒரு கறுப்பு விளக்கின் முன்னிலையில் நாம் காண்பது பொஸ்பர்ஸ் (Phosphors) துணிக்கைகள் ஆகும்...

  பொஸ்பர் என்ன செய்யும்?

  எந்த கதிர்ப்பு அதன் மேல் விழுந்தாலும் அந்த கதிர்ப்பை கட்புலனாகும் ஒளியாக மாற்றும்..
  இதன் விளைவாக அது எமது கண்ணுக்கு தெளிவாக தெரியும்...

  ஹொரர் ஹவுஸில் இருக்கும் மனிதர்கள் என்ன செய்வார்கள்???

  தமது உடலில் இந்த பொஸ்பர் துணிக்கைகளை பூசிக் கொண்டு வந்து நிற்பார்கள்...
  இந்த கறுப்பு விளக்கு போடப்பட்டதும் அதிலிருந்து வரும் கழியூதாக் கதிர்களை கண்ணுக்கு புலப்படும் ஒளியாக மாற்றும்..
  இதனால் அவர்கள் தமது உடலில் பொஸ்பர் துணிக்கையால் பூசிய அடையாளங்கள் எமக்கு தெரிகிறது...
  இவ்வளவு தான் மேட்டர்...

  தகவல், படங்கள் நன்றி - www.howstuffworks.com

  அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
  வர்ட்டாஆஆஆ...
  டாட்டா..
  பை பை...
  .
  கறுப்பு விளக்கும் கலர்ஃபுல் காட்சிகளும்...SocialTwist Tell-a-Friend

  Wednesday, 1 April 2009

  விமானங்கள்,மருத்துவ மனைகளில் செல்லிடத் தொலைபேசி பாவிக்க அனுமதி இல்லாதது ஏன் ???

  43 . பின்னூட்டங்கள்

  நாம் அதிகமான இடங்களில் மின்காந்த குறுக்கீடுகளை அவதானித்திருப்போம் அல்லவா???
  உதாரணத்திற்கு நாம் கணனிக்கு முன்னல் இருந்து வேலை செய்து கொண்டிருக்கும் போது அலைபேசியில் அழைப்பு வந்தால் உடனே கணனி ஒலிபெருக்கிகளில் ஒரு குறுக்கீட்டு ஒலி உண்டாவதை பார்த்திருப்போம்...

  இவை ஒரு பயங்கர பிரச்சனை என கூறுவதற்கில்லை.
  எனினும் இதே பிரச்சனை விமானத்தில் வந்தால் அது எவ்வாறு இருக்கும்???
  காரணம் தெரியுமா ???

  பொதுவாக ரேடியோ அலைகள் மூலம் இயங்கும் அனைத்து சாதனங்களும் ரேடியோ என்றே அழைக்கப்படும்...
  நாம் அன்றாட வாழ்வில் பாட்டு கேட்க பாவிக்கும் ரேடியோகளில் 2 வகைகள் உண்டு...

  1. FM Radio - Frequency Modulated Radio - மீடிறன் மட்டிசைக்கப்பட்டது.
  2. AM Radio - Amplitude Modulated Radio - வீச்சம் மட்டிசைக்கப்பட்டது.

  ஒரு விமானத்தில் வெவ்வேறு காரணங்களுக்காக அதிகமான வானொலி ஒலிபரப்பு சாதனங்கள் காணப்படும்...
  உதாரணமாக, விமானிகள் விமான கட்டுப்பாட்டு மையத்துடன் பேசிக்கொள்ள ஒரு வானொலி ஒலிபரப்பு சாதனம் உண்டு.

  அதேபோல் விமானங்கள் தங்கள் நிலையை ATC கணனிகளுக்கு (Air Traffic Control Computers) தெரிவிக்க ஒரு வகையான வானொலி உண்டு...
  காலநிலையை அறிய ரேடார் கருவிகள் உண்டு...
  இவை அனைத்து வானொலி சாதனங்களும் தமக்குரிய மீடிறன்களில் வேலை செய்யும்... (Specific Frequency)

  இப்படி இருக்கையில் யாராவது தங்கள் தொலைபேசியை பாவிக்க முற்பட்டால் அது உயர் சக்தியை கடத்தும் (up to 3 watts).
  இதன்போது வெளியேறும் அலைகளானது விமானத்தில் இருந்து அனுப்பப்படும் அலைகளின் மேல் பொருந்துகையடைய முற்படும்.

  இதனால் விமானத்தில் இருந்து அனுப்பப்படும் செய்திகள் குழப்பமடையும்...
  அப்போது விமானத்தில் இருக்கும் ஏதாவது ஒரு வடம் (Wire) சிறிதாவது சேதமடைந்திருந்தால் அது கணனி ஒலிபெருக்கிகள் போல இந்த அலைகளை பெற்று விடும்...
  அதனால் தவறான செய்திகளே கட்டுப்பாட்டு மையத்தை அடையை வாய்ப்புகள் உண்டு...

  அதிகமான மருத்துவமனைகளில் வடமில்லா வலையமைப்புடன் (Wireless Network) கூடிய சாதனங்களே தற்போது பாவனையில் உள்ளது...
  அதிகமான சாதனங்களின் அன்டெனாவானது Nursing Stationஉடன் Wireless Network மூலமே இணைக்கப்பட்டுள்ளது...

  இந்த நிலைமையில் நாம் தொலைபேசியை பாவித்தோமானால் அதிலிருந்து வரும் அலைகள் இந்த அலைகளுடன் மேற்பொருந்துகையடை முற்பட்டு தவறான செய்திகளே சென்றடையும்...

  தொலைபேசியை பாவித்தால் மட்டுமே இப்பிடி நடக்க வாய்ப்புகள் உண்டு என எண்ணுவது தவறு...
  சாதாரணமாக செல்லிடத் தொலைபேசிகள் தங்கள் சேவை வழங்குனர்களுடன் ஒரு தொடர்பை எந்நேரமும் வைத்துக் கொண்டே இருக்கும்...
  இதன் காரணமாக வரும் அலைகளும் இந்த பிரச்சனையை உண்டாக்க வாய்ப்புகள் உள்ளது..
  எனவே மருத்துவமனைகளில் நாம் எமது செல்லிடத்தொலைபேசிகளை அணைத்து வைப்பது நல்லது...

  ஒழுங்காக காவலிடப்படாத லாப்டாப்களும் CD பிளேயர்களும் இதே பிரச்சனையை விமானங்களில் ஏற்படுத்தும்...
  அவற்றிலிருந்தும் சிறியளவிலான அலைகள் தெறிப்படைவதே இதற்குக் காரணம்...

  எனவே, மருத்துவமனைகள்,விமானங்கள்,எரிபொருள் நிலையங்கள் என ஆபத்தான இடங்களில் நாம் எமது செல்லிடத் தொலைபேசிகளை அணைத்து வைப்பதே சிறந்தது...

  அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
  வர்ட்டாஆஆஆ...
  டாட்டா..
  பை பை...
  .
  விமானங்கள்,மருத்துவ மனைகளில் செல்லிடத் தொலைபேசி பாவிக்க அனுமதி இல்லாதது ஏன் ???SocialTwist Tell-a-Friend
   

  COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.