நீங்கள் எப்போதாவது ஒரு புதிய கடைக்கு சென்றிருக்கும் போது ஏற்கனவே அந்த கடைக்கு வந்த மாதிரி உணர்வு வந்திருக்கா???
அல்லது நண்பர் ஒருவருடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது ஏற்கனவே அதே வசனங்களுடன் கதைத்த மாதிரி உணர்வு வந்திருக்கா???
நமக்கு அப்பிடி ஒரு சம்பவம் ஏற்கனவே நடந்திருக்கவில்லை என்றாலும் அது நடந்த மாதிரியான உணர்வு வரும்...
இப்பிடி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தை நீங்கள் உணர்ந்திருந்தால் நீங்கள் Déjà vuஐ உணர்ந்திருக்கிறீர்கள்...
நம்மில் 60-70 சதவீதமானோருக்கு வாழ்வில் ஒருதடவையாவது இந்த உணர்வு வந்திருக்கும்...
அதுவும் 15 இலிருந்து 25 வயசுக்குள்ள இருக்கிறவங்க இதை அடிக்கடி உணருவாங்க...
மாணவர்களுக்கு இந்த உணர்வு அடிக்கடி வரும். உதாரணமா பரீட்சைக்கு முதல் நாள் இப்பிடி கேள்வி வந்தா எப்பிடியிருக்கும்ன்னு நினைச்சுட்டே இருந்திருப்போம்...
பரீட்சை பேப்பரில் நாம நினைத்தது மாதிரியே கேள்வி வந்திருக்கும்...
இதை அனேகமானோர் அனுபவித்திருப்பர்...
உங்களுக்கும் அனுபவம் உண்டா ???
இந்த Déjà vu உணர்வை விளக்க 40 தத்துவங்கள் வரை இருக்கிறது...
இந்த தத்துவங்கள் Déjà vu எனும் உணர்வு எப்பிடி வருகிறது, அது என்னவெல்லாம் தோற்றுவிக்கும் போன்ற நம்முடைய பல கேள்விகளுக்கு விடை சொல்லும் விதமாக இருக்கிறது...
Déjà vu எனும் சொல்லானது பிரெஞ்சு சொல்லாகும்...
Emile Boirac எனும் பிரெஞ்சு விஞ்ஞானி இது பத்தி படிச்சு 1876ல இந்தப் பெயரை சொன்னாராம்..
Déjà vu சொல்லின் அர்த்தம் ஆங்கிலத்தில் "already seen" என்பதாகும்...
இந்த உணர்வுக்கு இன்னும் சில பெயர்கள் இருக்கு...
déjà vécu - already experienced.
déjà senti - already thought.
déjà visité - already visited.
பல பேர் பல விதமாக அர்த்தம் சொன்னாலும் Déjà vu என்பது நாம் ஒன்றை முன்னர் அனுபவித்திராமல் அது நடந்த மாதிரி தோன்றுவது...
"The feeling that you've seen or experienced something before when you know you haven't".
இந்த உணர்வை பலர் முன்னுணர்வுக்கு தவறாக ஒப்பிடுகின்றனர்...
முன்னுணர்வு வேறு. அதாவது முன்னுணர்வு என்பது அடுத்து நடப்பது என்ன என்பது சிறிது நேரத்துக்கு முன்னரே தெரிந்து விடும்...
"அழகிய தமிழ் மகன்" திரைப்படத்தில் விஜய்க்கு நடப்பது போன்று...
"Next" திரைப்படத்தில் Nicholas Cageக்கு நடப்பது போன்று...
("Next" படத்தைப் பாத்து தான் "அழகிய தமிழ் மகன்" வந்ததோ???
டைரக்டருக்கும் விஜய்க்குமே வெளிச்சம் ! :-) )
இந்த Déjà vu சம்பந்தமாக 2006ல ஒரு திரைப்படம் வந்தது...
முடிந்தால் பார்க்கவும்...
படம் பற்றிய தகவல்களுக்கு இங்கே க்ளிக்கவும்...
மனப்பிரமையும், சற்று மறந்த ஞாபகங்களும் கூட Déjà vu உடன் தவறாக ஒப்பிடப்படுகின்றன...
Déjà vu ஆனது 10 - 30 செக்கன்கள் மட்டுமே நிலைக்கும்...
ஆனால் சற்று மறக்கப்பட்ட நினைவுகள், மனப்பிரமை போன்றன அதிக காலத்துக்கு நிலைத்திருக்கக் கூடியன...
இந்த உணர்வு ஏற்பட காரணம் மூளை தான்...
மூளையின் நினைப்புக்கும் முன்னுணர்வுக்கும் இடைப்பட்ட ஒரு வித்தியாசமான உணர்வு தான் இது...
Types of Déjà vu
அமெரிக்காவிலுள்ள South Methodist Universityல Psychology பேராசிரியரும், "The Déjà Vu Experience: Essays in Cognitive Psychology," எனும் புத்தகத்தை எழுதியவருமான Alan Brown என்பவர் Déjà vu ஏற்படுவதற்கான காரணங்கள்ன்னு முக்கியமா 3 காரணங்கள் சொல்லியிருக்கார்...
1. Biological dysfunction (e.g., epilepsy)
epilepsyங்கிறது தமிழ்ல காக்கை வலிப்பு நோய்...
2. Implicit familiarity
ஒருத்தருக்கு இருக்கிற உள்ளுணர்வு...
(வேட்டையாடு விளையாடு படத்துல கமலுக்கு இருக்குமே... அதேதான்ல :-)
)
3. Divided perception
திசை திரும்பிய புலனுணர்வு...
இந்த காரணங்கள் பத்தி தெரிஞ்சுக்கிற அளவுக்கு நாம இன்னும் வராத காரணத்தால இத்தோட நிறுத்திக்கலாம்...
:-)
Déjà vuஐ இரண்டு பிரதான வகைகளாக பிரிக்கலாம்...
1. Associative déjà vu
இது தான் நமக்கு பொதுவா வருவது...
நாம பார்த்து, கேட்டு, மணந்து (Smell) இருக்கிற மாதிரியான உணர்வுகள்...
இது பொதுவா Memory Based Experiences...
2. Biological déjà vu
காக்கை வலிப்பு போன்ற நோயோடு இருக்கிறவங்க அடிக்கடி இந்த உணர்வை அனுபவிப்பாங்களாம்...
இதுக்கான காரணம் அதிக சிக்கலானதுனால நாம அது பத்தி அறிஞ்சுக்கிறது கஷட்ம் தான்...
இது விளங்குறதுக்கு அவ்வளவு ஈஸியான பாடம் அல்ல...
அதிகமானவங்க இப்பிடி ஒரு உணர்வு வந்தும் அது பத்தி யோசிக்காமலோ அல்லது விஷயம் தெரியாமலோ இருந்திருப்பாங்க...
அவங்களுக்கு தெளிவு படுத்துறதுக்கு தான் இந்தப் பதிவு...
தெளிவா இருந்துச்சுன்னா கமென்ட்ல சொல்லிட்டுப் போங்க...
நன்றி, தகவல் - http://www.howstuffworks.com
அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
வர்ட்டாஆஆஆ...
டாட்டா..
பை பை...
.
Subscribe to:
Post Comments (Atom)
29 . பின்னூட்டங்கள்:
me the first
கரெக்ட் தாங்க.. எனக்கும் இப்படி பல முறை நடந்து இருக்கு.. உதாரணமா 2007 உலக கோப்பைல இந்திய தோக்கும் போது, அதே வருட இறுதியில் நடக்கும் 20-20 உலக கோப்பையை வெல்லும்னு எனக்கு சத்தியமா தோனுச்சு..
அதே மாதிரி ரஹ்மான் ஆஸ்கர் வாங்குவார்னு நெனச்சுட்டு இருந்த போது, ரஹ்மான் ஆஸ்கர் வாங்கிய விஷயத்தை நண்பர் ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பினார்.
அப்ப நானும் அழகிய தமிழ் மகனா.
வேத்தியன்,
அருமையான முழுமையான பதிவு.
நன்றாக இருந்தது.
கமல் நடித்த ‘எனக்குள் ஒருவன்‘ படம் கூட
இதை மையக் கருத்தாக கொண்டது,
அன்புடன்,
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
ரொம்ப நாளா ஒரு தெளிவு கிடைக்காமல் குழம்பிய (குழப்பிய) விசயத்திற்கு நல்ல விடை கிடைத்தது. நன்றி வேத்தியன்
அது மறு ஜென்மம் பற்றிய படம் அல்லவா??
நல்ல பதிவு நண்பா.. நீங்கள் சொல்லும் deje vu படத்தை நானும் பார்த்துள்ளேன்.. இன்று வரை எனக்கு கதை புரியவே இல்லை.. ஒரு வித்தியாசமான உணர்வைப் பற்றி நல்லா ஆராய்ஞ்சு பதிவு போட்டிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..
வேத்தியன் அருமையான அறிவியல் கட்டுரை!!!
இந்த உணர்வு அனைவருக்கும் வரும்!!எனக்கும் வந்துள்ளது!!
வருகை தந்த அனைவருக்கும் நன்றிகள்...
லோகு, இன்னும் கூட நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லையே....
நீங்கள் உணர்ந்தது முன்னுணர்வு..
இது ஒரு யோசனையுடன் கலந்த உணர்வு...
"நடக்காத ஒன்று நடந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் போது அதுவே நடப்பது தான் இது"
//லோகு, இன்னும் கூட நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லையே....
நீங்கள் உணர்ந்தது முன்னுணர்வு..
இது ஒரு யோசனையுடன் கலந்த உணர்வு...
"நடக்காத ஒன்று நடந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் போது அதுவே நடப்பது தான் இது"//
இல்லை புரிந்தது. அது போலவும் எனக்கு நடந்து இருக்கிறது.
ஆனால் அந்த சம்பவங்களை இப்பொழுது நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை..
நல்ல பதிவு..எனக்கும் இது மாதிரி பலமுறை நடந்துள்ளது..
Rajeswari said...
நல்ல பதிவு..எனக்கும் இது மாதிரி பலமுறை நடந்துள்ளது..//
வருகைக்கு நன்றி அக்கா...
Hi,
Nice post. This concept would have been used in a subtle way in Matrix first part.
//இது விளங்குறதுக்கு அவ்வளவு ஈஸியான பாடம் அல்ல...//
அப்படிதான் நினைக்கின்றேன்..
இது போன்ற நினைவு எல்லோருக்கும் இருக்கும் என்றே தோன்றுகின்றது...எனக்கும் பலமுறை
உண்மைதான் நண்பரே, எனக்கு இதுபோல் அவ்வப்போது நடந்துள்ளது.
முதல் முறை இதை நான் உணர்ந்தபோது மிகவும் பயந்தேன். இப்பொதெல்லாம் பழகிவிட்டது.
ஆனால் இதுவரை அதன் காரணம் விளங்கவில்லை.உங்க பதிவை படித்த பிறகும் தான்.....
நட்புடன்
கரிகாலன்
நான் தேடி கொண்டிருந்த விளக்கம் கிடைத்து விட்டது.
நன்றி வேத்தியன்.
////நீங்கள் எப்போதாவது ஒரு புதிய கடைக்கு சென்றிருக்கும் போது ஏற்கனவே அந்த கடைக்கு வந்த மாதிரி உணர்வு வந்திருக்கா???////
ஆமாம்!
////நண்பர் ஒருவருடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது ஏற்கனவே அதே வசனங்களுடன் கதைத்த மாதிரி உணர்வு வந்திருக்கா???///
அட ஆமாம்பா ஆமாம்!
இதுக்கு பேரு Déjà vu வா!
சரி இதனால் எதிர்காலத்தை பத்தி எதும் தெரிஞ்சிக்க முடியுமா?! :)
அண்ணே உங்கட இந்த பதிவை கூட சுட்டுட்டாங்க
என்ன கொடுமை சார் இது
நன்றி...
ஆ.ஞானசேகரன்
இளைய கரிகாலன்
அ.மு.செய்யது
ஷீ-நிசி
மிக அருமையான பயனுள்ள பதிவு. மிகவும் விபரமாகவும் தந்துள்ளீர்கள். மிக ஆழமான விடயத்தை எளிமையாகச் சொன்னது உங்கள் வெற்றி.
ஆமாம் பாஸ்.. எனக்கும் இப்டி அடிக்கடி நடக்கும்..
சில சமயம் friends'kooda பேசிட்டு இருக்கும்போது, அடுத்து கொஞ்ச நேரத்துல சண்டவர்ரமாதிரி முன்னமே நடந்த மாதிரி தோணும்.. உடனே பேசிட்டு இருக்கற topic'a மாத்தி வேற topic பத்தி பேச்ச மாத்திடுவேன்.. ரொம்ப தடவ இப்டி நடந்திருக்கு..
உங்களோட பதிவு மூலமா இதுக்கான பெயரும், இதே அனுபவம் பலபேருக்கும் இருக்குதுனும் தெரிஞ்சுகிட்டேன்.. நன்றி..
ஆனா இந்த எண்ணத்திற்கான காரணங்களை இன்னும் கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லாஇருக்கும்..
ஹய்யா.. மீ த 25th..
சுரேஷ் குமார் said...
ஆனா இந்த எண்ணத்திற்கான காரணங்களை இன்னும் கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லாஇருக்கும்..//
வருகைக்கு நன்றி மாப்ள...
நானும் யோசிச்சேன் தான், காரணத்தை விபரமா கொடுப்பது பத்தி...
ஆனா இது ஒரு அறிமுகமா இருக்கட்டும்ன்னு தான் இத்தோட நிறுத்தியாச்சு...
இன்னொரு பதிவுல விபரமா கொடுத்துரலாம்...
:-)
"Déjà vu" என்று ஒரு படம் பார்த்தேன்!!! முதலில் சட்டென்று புரியவில்லை... பிறகு புரிந்தது!!! (அந்த சொல்லை அப்படியே ஆங்கிலம் களவாடிக் கொண்டது!!! )
"Déjà vu" என்று ஒரு பிரபல பாடலும் உண்டு (Beyonce) தமிழில் இச்சொல்லுக்கு சரியான அர்த்தம் இதுவரை நான் கண்டதில்லை!!!
விளக்கத்திற்கு நன்றி வேத்தியன்
ஆதவா said...
"Déjà vu" என்று ஒரு படம் பார்த்தேன்!!! முதலில் சட்டென்று புரியவில்லை... பிறகு புரிந்தது!!! (அந்த சொல்லை அப்படியே ஆங்கிலம் களவாடிக் கொண்டது!!! )
"Déjà vu" என்று ஒரு பிரபல பாடலும் உண்டு (Beyonce) தமிழில் இச்சொல்லுக்கு சரியான அர்த்தம் இதுவரை நான் கண்டதில்லை!!!
விளக்கத்திற்கு நன்றி வேத்தியன்//
நானும் அந்த பாடலை கேட்டதுண்டு...
நன்றி மாம்ஸ்...
//
வருகைக்கு நன்றி மாப்ள...
நானும் யோசிச்சேன் தான், காரணத்தை விபரமா கொடுப்பது பத்தி...
ஆனா இது ஒரு அறிமுகமா இருக்கட்டும்ன்னு தான் இத்தோட நிறுத்தியாச்சு...
இன்னொரு பதிவுல விபரமா கொடுத்துரலாம்...
:-)
//
ஓகே மச்சா..இப்போ இருந்து, இது பத்தின விவரமான பதிவ விவரம் இல்லாம ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்..
Post a Comment