Friday, 10 April 2009

திரைப்பார்வை - "ஆனந்த தாண்டவம்"




இரண்டு நாளா ஊர்ல இல்லை...
போரடிச்சு போயிடுச்சு...
அதான் இன்னைக்கு ஏதாவது படம் பாக்கலாம்ன்னு தியேட்டர் போனேன்..
படம் ஆனந்த தாண்டவம்.

படத்தின் கதை கொஞ்சம் சிக்கல் தான்...
முதல் கொஞ்ச நேரத்துக்கு என்ன நடக்குதுன்னு விளங்கவேயில்லை..
பிறகு போகப் போக கொஞ்சம் பரவாயில்லை...

அறிமுக நடிகர் சித்தார்த்...
என்ஜினீரிங் படித்துவிட்டு ஊருக்கு வர அங்கு தமன்னாவுடன் பழக்கம்..
பின் காதல்..
அப்பாவின் அறிவுரையை கேட்காமல் நடக்கிறார் ஹீரோ...

தமன்னா அதிகமான இடங்களில் முகத்தைக் காட்ட வாய்ப்பு கிடைச்சிருக்கு...
அப்போ கூட நடிப்பு பிரமாதம்ன்னு சொல்ல முடியாது...
ஓகே அவ்ளோ தான்... :-)
சித்தார்துடன் காதல், பிறகு அமெரிக்காவிலிருந்து ஒருத்தன் வர அவனுடன் கல்யாணம்...
இதனால் உடைந்து போய் தற்கொலை முயற்சி பண்ணுகிறார் ஹீரோ...
எனினும் உயிர்பிழைத்து மீண்டும் வருகிறார்..
சார்லி நடித்திருக்கிறார்... நல்லாவும் இருக்கு அவரோட நடிப்பு.

இரண்டாம் பாதியில், அப்பாவின் அறிவுரைப்படி மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்கிறார் ஹீரோ...
அங்கு பொம்மலாட்டம் ஹீரோயின் ருக்மணி வருகிறார்..

மீண்டும் அங்கு ஒரு நடன நிகழ்ச்சியில் தமன்னாவைச் சந்திக்கிறார் ஹீரோ...
திரும்ப அவருடன் கொஞ்சம் காதலுடன் பழகுகிறார்...
கண்ணாளமானாலும் சித்தார்த் மீது கொஞ்ச காதல் இருக்கத் தான் செய்கிறது தமன்னாவுக்கு...

ருக்மணி சித்தார்த் மீது காதல் கொள்கிறார்..
ருக்மணியின் அப்பாவாக பிரபல டான்ஸ் மாஸ்டர் ரகுராம் நடித்திருக்கிறார்...
தமன்னாவின் அமெரிக்க புருஷன் கொடுமை பண்ண தற்கொலை செய்து கொள்கிறார் தமன்னா...
கடைசியில் ருக்மணியுடன் சேர்கிறாரா இல்லையா என்பது தான் விஷயம்...
இவ்வளவு தான் கதை...

தயாரிப்பு ஆஸ்கார் பிலிம்ஸ் V.ரவிச்சந்திரன்.

எழுத்தின் சிகரம் சுஜாதாவின் மறைவுக்குப் பின் அவரது கதையில் வரும் முதல் படம்..
எனக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு இந்தப் படத்தின் மேல்...

இயக்கம் காந்திகிருஷ்ணா...
பெரிதாக படம் விறுவிறுப்பாக இல்லை...
இயக்குனர் சுஜாதாவின் கதை கிடைத்தும் அதை வீணடித்து விட்டார் என்றே தோனுது...
அதிகமான இடங்களில் தொய்வாக இருக்கிறது..

ஒளிப்பதிவு சில இடங்களில் அருமை..
சில இடங்களில் போர்...
அமெரிக்காவில் எடுக்கப்பட்ட காட்சிகள் பார்ப்பதற்கு கொஞ்சம் அழகு..
:-)

இசை G.V.பிரகாஷ்குமார்...
பாடல்கள் அனைத்தும் சுத்த போர்...
ஒரே ஒரு டூயட் மட்டும் நல்லா இருந்துச்சு...
மற்ற பாடல்கள் கொஞ்சமும் நல்லாவே இல்லை..

எடிட்டிங் சூப்பர் என்று சொல்வதற்கில்லையென்றாலும் பரவாயில்லை...
அமெரிக்கா காட்சிகள் அழகா இருப்பதற்கு எடிட்டிங்கும் காரணம்...

கலை இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்...
அதிகமான இடங்களில் செயற்கையாக இருக்கிறது...
பார்ப்பதற்கு இன்னும் கொஞ்சம் அழகா இருக்குற மாதிரி கவனமா செய்திருக்கலாம்...

ஏன் தான் எல்லோரும் வெளிநாடு என்றவுடன் அமெரிக்காவுக்கே போறாங்கன்னு எனக்கு புரியவேயில்ல...
என்ன காரணமோ ???

படம் சில இடங்கள் மட்டுமே பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது..
மிகுதி போர் தான்..
மொத்தத்தில் படம் அடிச்சு புடிச்சி தியேட்டருக்கு போய் பார்க்குமளவுக்கு வேலையில்லை...
ஆறுதலா தியேட்டரை விட்டு தூக்குவதற்கு முதல் நாள் போய் பாக்கலாம்... :-)
புரோடியூசருக்கு நஷ்டம் தான் போல இருக்கு...

இது என்னுடையா கண்ணோட்டம் தான் ...
யாருக்காவது படம் நல்லா இருந்தா சொல்லவும்... :-)

அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
வர்ட்டாஆஆஆ...
டாட்டா..
பை பை...
.
திரைப்பார்வை - "ஆனந்த தாண்டவம்"SocialTwist Tell-a-Friend

44 . பின்னூட்டங்கள்:

நட்புடன் ஜமால் on 10 April 2009 at 15:08 said...

நல்ல பேர்

நட்புடன் ஜமால் on 10 April 2009 at 15:10 said...

\\எனக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு இந்தப் படத்தின் மேல்...\\

எனக்குள்ளேயும்.

நட்புடன் ஜமால் on 10 April 2009 at 15:19 said...

\\படம் சில இடங்கள் மட்டுமே பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது..
மிகுதி போர் தான்..
மொத்தத்தில் படம் அடிச்சு புடிச்சி தியேட்டருக்கு போய் பார்க்குமளவுக்கு வேலையில்லை...
ஆறுதலா தியேட்டரை விட்டு தூக்குவதற்கு முதல் நாள் போய் பாக்கலாம்... :-)
புரோடியூசருக்கு நஷ்டம் தான் போல இருக்கு...\\



என்னாங்க இது

ரொம்ப வருத்தமாயிருக்குங்க

இப்படி சொதப்பிட்டாய்ங்களா

குடந்தை அன்புமணி on 10 April 2009 at 15:22 said...

அப்ப அவ்வளவுதானா? செலவு மிச்சம் நமக்கு! கூடிய சீக்கிரம் சன்டீவியில் போட்டிருவாங்க!

குடந்தை அன்புமணி on 10 April 2009 at 15:23 said...

சுஜாத கதையை வீணடிச்சதுல வருத்தம்தான்... எனக்கும்!

வேத்தியன் on 10 April 2009 at 15:40 said...

வாங்க ஜமால் அண்ணே...
படம் கொஞ்சம் போர் தான்...

வேத்தியன் on 10 April 2009 at 15:41 said...

குடந்தைஅன்புமணி said...

அப்ப அவ்வளவுதானா? செலவு மிச்சம் நமக்கு! கூடிய சீக்கிரம் சன்டீவியில் போட்டிருவாங்க!//

நல்லா யோசிக்க வருதுங்க உங்களுக்கு...
:-)

Anbu on 10 April 2009 at 15:41 said...

நான் இன்னும் படம் பார்க்கவில்லை,

பார்க்கவும் வாய்ப்பில்லை...

சுஜாதா கதையை வீணடிச்சதுல வருத்தம்தான்... எனக்கும்!

வேத்தியன் on 10 April 2009 at 15:43 said...

Anbu said...

நான் இன்னும் படம் பார்க்கவில்லை,

பார்க்கவும் வாய்ப்பில்லை...

சுஜாதா கதையை வீணடிச்சதுல வருத்தம்தான்... எனக்கும்!//

அவசரமா போய்ப் பாக்காதீங்க...
ஆறுதலா போகலாம்...
:-)

Anbu on 10 April 2009 at 15:44 said...

அப்புறம் எப்ப ஊருக்கு வருவீங்க

வேத்தியன் on 10 April 2009 at 15:46 said...

Anbu said...

அப்புறம் எப்ப ஊருக்கு வருவீங்க//

ஊருக்கு திரும்ப வந்தாச்சுங்க...
வந்து தான் தியேட்டருக்குப் போனேன்...
:-)

Anbu on 10 April 2009 at 15:48 said...

எங்க இருக்கீங்க

வேத்தியன் on 10 April 2009 at 15:49 said...

Anbu said...

எங்க இருக்கீங்க//

Colombo, Srilanka.

Maal said...

தற்கொலை இல்லப்பா அது அவங்க புல் மப்புல போயி ஆக்சிடென்ட் ஆகிட்டங்கப்பா

shabi on 10 April 2009 at 16:11 said...

இந்த கதை AMERICAவில் நடப்பதாக உள்ளதால் தான் அங்கு போய் படம் எடுத்திருக்கிறார்கள்

ஆதவா on 10 April 2009 at 16:30 said...

அய்யாயோ தமன்னா செத்துடுவாளா.....
அய்யய்யோ எப்படி நான் அந்த படத்தைப் பார்ப்பேன்??

அயனில் பிந்தினாலும், ஆனந்த தாண்டவத்தில் முந்திக்கிட்டீங்க.

சீக்கிரமே பார்க்கணும்... அயனும் ஆனந்த தாண்டவமும்ம்!!!

ஆதவா on 10 April 2009 at 16:32 said...

///////
தமன்னா அதிகமான இடங்களில் முகத்தைக் காட்ட வாய்ப்பு கிடைச்சிருக்கு...
அப்போ கூட நடிப்பு பிரமாதம்ன்னு சொல்ல முடியாது...
///////////////

படத்தை நல்லா பார்த்தீங்களா???

அ.உ.த.ர. தலைவர்.
ஆதவா

ஆதவா on 10 April 2009 at 16:34 said...

இயக்குனர் சுஜாதாவின் கதை கிடைத்தும் அதை வீணடித்து விட்டார் என்றே தோனுது.../////////////

எல்லா இயக்குநர்களும் அப்படித்தான்!!!! ஒருசில "பூ' க்களைத் தவிர...

தேவன் மாயம் on 10 April 2009 at 17:18 said...

வந்து போட்டுட்டு போயாச்சா?

தேவன் மாயம் on 10 April 2009 at 17:19 said...

\படம் சில இடங்கள் மட்டுமே பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது..
மிகுதி போர் தான்..
மொத்தத்தில் படம் அடிச்சு புடிச்சி தியேட்டருக்கு போய் பார்க்குமளவுக்கு வேலையில்லை...
ஆறுதலா தியேட்டரை விட்டு தூக்குவதற்கு முதல் நாள் போய் பாக்கலாம்... :-)
புரோடியூசருக்///

ஆஹா கவுத்துட்டானுங்களா?

தேவன் மாயம் on 10 April 2009 at 17:19 said...

ஆன்ந்தமில்லாத தாண்டவமா!

தேவன் மாயம் on 10 April 2009 at 17:21 said...

இயக்குனர் சுஜாதாவின் கதை கிடைத்தும் அதை வீணடித்து விட்டார் என்றே தோனுது...///

டைரக்டர்கிட்ட சரக்கு வேணுமில்ல.

வந்தியத்தேவன் on 10 April 2009 at 18:09 said...

சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் ஒரு அழகான கதை. ஸ்ரீ லங்காவில் எந்த தியேட்டரில் இந்தப்படம் காட்டுகின்றார்கள்?

வேத்தியன் on 10 April 2009 at 18:33 said...

Maal said...

தற்கொலை இல்லப்பா அது அவங்க புல் மப்புல போயி ஆக்சிடென்ட் ஆகிட்டங்கப்பா//

ஆமாங்க...
சாரி, கொஞ்சம் தப்பா எழுதீட்டேன்...

வேத்தியன் on 10 April 2009 at 18:34 said...

shabi said...

இந்த கதை AMERICAவில் நடப்பதாக உள்ளதால் தான் அங்கு போய் படம் எடுத்திருக்கிறார்கள்//

ஓ அப்பிடியா விஷயம்???
நல்லது...

வேத்தியன் on 10 April 2009 at 18:34 said...

ஆதவா said...

அய்யாயோ தமன்னா செத்துடுவாளா.....
அய்யய்யோ எப்படி நான் அந்த படத்தைப் பார்ப்பேன்??

அயனில் பிந்தினாலும், ஆனந்த தாண்டவத்தில் முந்திக்கிட்டீங்க.

சீக்கிரமே பார்க்கணும்... அயனும் ஆனந்த தாண்டவமும்ம்!!!//

ஆமாங்கோவ்...
இங்க வாங்க, நம்ம கூட சேர்ந்தே பாக்கலாம்...
:-)

வேத்தியன் on 10 April 2009 at 18:36 said...

ஆதவா said...

///////
தமன்னா அதிகமான இடங்களில் முகத்தைக் காட்ட வாய்ப்பு கிடைச்சிருக்கு...
அப்போ கூட நடிப்பு பிரமாதம்ன்னு சொல்ல முடியாது...
///////////////

படத்தை நல்லா பார்த்தீங்களா???

அ.உ.த.ர. தலைவர்.
ஆதவா//

உங்களுக்காகவே பாத்தேன்...
தமன்னா கொஞ்சம் போர் தான்...

இப்படிக்கு,

வேத்தியன்.
அ.உ.அ.ர. தல.
(அகில உலக அசின் ரசிகர்கள் தல)

வேத்தியன் on 10 April 2009 at 18:37 said...

thevanmayam said...

வந்து போட்டுட்டு போயாச்சா?//

இன்னாத்த???

வேத்தியன் on 10 April 2009 at 18:37 said...

thevanmayam said...

ஆன்ந்தமில்லாத தாண்டவமா!//

அதே அதே...

வேத்தியன் on 10 April 2009 at 18:39 said...

வந்தியத்தேவன் said...

சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் ஒரு அழகான கதை. ஸ்ரீ லங்காவில் எந்த தியேட்டரில் இந்தப்படம் காட்டுகின்றார்கள்?//

வாங்க வந்தியத்தேவன்..
நீங்களும் நம்ம நாடா???
எங்க இருக்கீங்க கொழும்புல??
நாமளும் கொழும்பு தானுங்கோவ்...
:-)

இந்தப்படம் பாமன்கடை ஈரோஸ் தியேட்டர்ல ஓடுது...
EROS, Pamankade.

ஆ.ஞானசேகரன் on 10 April 2009 at 20:18 said...

என்ன வேத்தியன் வரிசையாக திரைப்படம் பாக்குரீங்க

ஆ.ஞானசேகரன் on 10 April 2009 at 20:21 said...

so படம் பார்க்கவேண்டாம்..

வேத்தியன் on 10 April 2009 at 21:52 said...

ஆ.ஞானசேகரன் said...

என்ன வேத்தியன் வரிசையாக திரைப்படம் பாக்குரீங்க//

வேலைவெட்டி எதுவும் இல்லாம வெட்டி வேலை பாக்கிறேன்...
மத்தது படமா பாத்தா பதிவா எழுதலாம்ல..
அதான்...
ஒரு பதிவு போட எவ்வளவு கஷ்டப் பட வேண்டியிருக்கு???
:-)

(என்னா வில்லத்தனம்???)
:-)

பழூர் கார்த்தி on 10 April 2009 at 21:57 said...

இன்னுமொரு மொக்கைப் படமா...
எங்களை காப்பாத்தினதுக்கு நன்றி :-)

Drsenthil kuwait said...

Pirivom santhipom was my favourite novel by my fav.author sujatha.i was expecting this movie very much because this director's movie chellame was also penned by sujatha and it was a hit.i'm disappointed with your review abt anandha thaandavam.

வழிப்போக்கன் on 11 April 2009 at 09:17 said...

இரண்டு நாளா ஊர்ல இல்லை...
போரடிச்சு போயிடுச்சு...
அதான் இன்னைக்கு ஏதாவது படம் பாக்கலாம்ன்னு தியேட்டர் போனேன்..
படம் ஆனந்த தாண்டவம்.//

பாவம் நீங்க..
இது அத விட போர் அட்ச்சுபோச்சு போல..
:)))

தர்ஷன் on 11 April 2009 at 09:32 said...

உங்கள் விமர்சனத்தைப் பார்த்து இரு முடிவுகள் எடுத்திருக்கிறேன்
அயன் தியேட்டரில் பார்ப்பது ஆனந்த தாண்டவம் நல்ல copy வந்தவுடன் download செய்து பார்ப்பது
காந்தி கிருஷ்ணா நல்லா எடுப்பாரே ஷங்கரின் Assistant செல்லமே நன்றாயிருக்கும்
எனது பிரிவோம் சந்திப்போம் கதையை மிகச்சிறப்பாய் திரைக்கதை ஆக்கி இருந்தார் என சுஜாதாவும் ஒரு பெட்டியில் சிலாகித்ததாய் ஞாபகம்
நல்ல வேலை சுஜாதான் இல்லை

வேத்தியன் on 11 April 2009 at 09:57 said...

பழூர் கார்த்தி said...

இன்னுமொரு மொக்கைப் படமா...
எங்களை காப்பாத்தினதுக்கு நன்றி :-)//

எதுக்கும் இன்னொரு விமர்சனத்தையும் பார்ப்போம்..
சிலவேளை என்னோட கண்ணோட்டம் தப்பாவும் இருக்கலாம்...
:-)

வேத்தியன் on 11 April 2009 at 09:58 said...

Drsenthil kuwait said...

Pirivom santhipom was my favourite novel by my fav.author sujatha.i was expecting this movie very much because this director's movie chellame was also penned by sujatha and it was a hit.i'm disappointed with your review abt anandha thaandavam.//

பொறுத்திருந்து பாக்கலாம் யாராவது நல்லா சொல்றாங்களான்னு...
:-)

வேத்தியன் on 11 April 2009 at 09:58 said...

வழிப்போக்கன் said...

இரண்டு நாளா ஊர்ல இல்லை...
போரடிச்சு போயிடுச்சு...
அதான் இன்னைக்கு ஏதாவது படம் பாக்கலாம்ன்னு தியேட்டர் போனேன்..
படம் ஆனந்த தாண்டவம்.//

பாவம் நீங்க..
இது அத விட போர் அட்ச்சுபோச்சு போல..
:)))//

ஆமாங்கோவ்..
என்ன பண்ண???

வேத்தியன் on 11 April 2009 at 09:59 said...

தர்ஷன் said...

உங்கள் விமர்சனத்தைப் பார்த்து இரு முடிவுகள் எடுத்திருக்கிறேன்
அயன் தியேட்டரில் பார்ப்பது ஆனந்த தாண்டவம் நல்ல copy வந்தவுடன் download செய்து பார்ப்பது
காந்தி கிருஷ்ணா நல்லா எடுப்பாரே ஷங்கரின் Assistant செல்லமே நன்றாயிருக்கும்
எனது பிரிவோம் சந்திப்போம் கதையை மிகச்சிறப்பாய் திரைக்கதை ஆக்கி இருந்தார் என சுஜாதாவும் ஒரு பெட்டியில் சிலாகித்ததாய் ஞாபகம்
நல்ல வேலை சுஜாதான் இல்லை//

அயன் பாக்கலாம், நல்ல படம்..
ஆனந்த தாண்டவம் கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்க...

தமிழ் மதுரம் on 12 April 2009 at 04:37 said...

தலை விமர்சனம் எல்லாம் போட்டுக் கலக்குறீங்கள்?? ஒரு சில இழப்புக்கள், மறைவுகளின் துயரங்கள் காரணமாகக் கொஞ்ச நாள் பதிவுலகப் பக்கம் எட்டிப் பார்க்க முடியவேயில்லை??


காலம் தான் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டும்...தொடருங்கோ!

வேத்தியன் on 12 April 2009 at 10:06 said...

கமல் said...

தலை விமர்சனம் எல்லாம் போட்டுக் கலக்குறீங்கள்?? ஒரு சில இழப்புக்கள், மறைவுகளின் துயரங்கள் காரணமாகக் கொஞ்ச நாள் பதிவுலகப் பக்கம் எட்டிப் பார்க்க முடியவேயில்லை??


காலம் தான் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டும்...தொடருங்கோ!//

அதுக்கென்ன???
நிலைமை மாறும்...
கவலை வேண்டாம் நண்பனே...

Muruganandan M.K. on 12 April 2009 at 22:45 said...

ஆனந்த தாண்டவம் என்ற பெயர் கேட்டதும் ஏதோ நல்ல படமாயிருக்கும் எனத் தோன்றியது. உங்கள் பதிவைப் பார்த்தும் மனம் மாறிவிட்டது.

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.