தலைப்பப் பாத்ததும் இது ஏதோ 'சிவப்பு விளக்கு' மாதிரி குஜாலா இருக்கும்ன்னு நினைச்சா அது தவறு..
அவங்களுக்கு இது விசயமல்ல...
ச்சும்மா ஒரு எச்சரிக்கை தான்..
:-)
கறுப்பு விளக்குன்னா என்னான்னு ஒரு சிறிய விளக்கம் இங்கு தரலாம்ன்னு நினைக்கிறேன்...
ரொம்பப் பெருசா இருந்தாலும் வாசிக்க போரடிக்கும்ல..
அதான்..
எல்லோரும் என்னை மாதிரி தான்னு எனக்கு தெரியுமப்பா...
:-)
அதிகமா இரவு நிகழ்ச்சிகள், ஹொரர் ஹவுஸ் போன்றவற்றில் நீங்கள் இது பார்த்திருக்கக்கூடும்...
இருட்டான அறையில சிலர் பல வண்ணங்களில் அடையாளங்களிட்டு எமக்கு வேடிக்கை காட்டுவது புதுமையாக இருக்கும்...
ஆங்கிலத்துல இதை Black Lightன்னு சொல்லுவாங்க...
இது சாதரண புளோரொளிர்வு (Fluorescent) விளக்குகள் மாதிரி தோன்றினாலும் அவற்றிலிருந்து இது வித்தியாசம்...
ஒரு சாதாரண இருட்டு அறையில் இந்த கறுப்பு விளக்கை நீங்க ஆன் பண்ணா அதுல இருந்து ஒரு பிரகாசமான ஊதா நிர ஒளி வருவது மட்டுமே கண்ணுக்கு தெரியும்.
ஆனா அதுல இருந்து கழியூதா ஒளி (Ultraviolet Light) வெளிவருவது சாதாரண மனிதக் கண்ணுக்கு தெரிவதில்லை...
இதுவே இதன் ரகசியம்...
மனிதக் கண்ணால் கட்புலனாகும் ஒளியை மட்டுமே பார்க்க முடியும்.
அது சிவப்பிலிருந்து ஊதா வரி செல்லும்..
ஊதாவுக்கு அடுத்து கழியூதாக் கதிர்கள் காணப்படும்...
ஒரு கறுப்பு விளக்கிலிருந்து இந்த கதிர்களே வரும்...
ஒரு கறுப்பு விளக்கின் முன்னிலையில் நாம் காண்பது பொஸ்பர்ஸ் (Phosphors) துணிக்கைகள் ஆகும்...
பொஸ்பர் என்ன செய்யும்?
எந்த கதிர்ப்பு அதன் மேல் விழுந்தாலும் அந்த கதிர்ப்பை கட்புலனாகும் ஒளியாக மாற்றும்..
இதன் விளைவாக அது எமது கண்ணுக்கு தெளிவாக தெரியும்...
ஹொரர் ஹவுஸில் இருக்கும் மனிதர்கள் என்ன செய்வார்கள்???
தமது உடலில் இந்த பொஸ்பர் துணிக்கைகளை பூசிக் கொண்டு வந்து நிற்பார்கள்...
இந்த கறுப்பு விளக்கு போடப்பட்டதும் அதிலிருந்து வரும் கழியூதாக் கதிர்களை கண்ணுக்கு புலப்படும் ஒளியாக மாற்றும்..
இதனால் அவர்கள் தமது உடலில் பொஸ்பர் துணிக்கையால் பூசிய அடையாளங்கள் எமக்கு தெரிகிறது...
இவ்வளவு தான் மேட்டர்...
தகவல், படங்கள் நன்றி - www.howstuffworks.com
அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
வர்ட்டாஆஆஆ...
டாட்டா..
பை பை...
.
Friday, 3 April 2009
Subscribe to:
Post Comments (Atom)
47 . பின்னூட்டங்கள்:
யப்பா!
நிறைய மேட்டர் கீது பா உன்கிட்ட
நட்புடன் ஜமால் said...
யப்பா!
நிறைய மேட்டர் கீது பா உன்கிட்ட//
சும்மா எழுதினதுக்கு இப்பிடியா??
நன்றிங்க...
என்னவோ இருந்திருக்கு உனக்குள்ளே பாறேன்.
ஒட்டு போட்டாச்சு .தமிழ்மணத்திலும் த்மிலீழிலும்.
நட்புடன் ஜமால் said...
என்னவோ இருந்திருக்கு உனக்குள்ளே பாறேன்.//
ஆமாங்க...
ரெண்டு நாளா கொஞ்சம் காய்ச்சல் இருந்தது..
அதைத் தவிர ஒன்னுமேயில்லையே...
:-)
thevanmayam said...
ஒட்டு போட்டாச்சு .தமிழ்மணத்திலும் த்மிலீழிலும்.//
நன்றிங்கோவ்...
கமெண்ட் சிறிது நேரம் கழித்து
அட சிறு வயது முதல் வியந்து பார்க்கும் ஒரு விடயம்.
ஆனாலும் விளங்கவில்லைதானே
(எனக்கு)
thevanmayam said...
கமெண்ட் சிறிது நேரம் கழித்து//
ஆணியை எல்லாம் கழட்டி முடிச்சுப்புட்டு ஆறுதலா வாங்க...
:-)
இயற்பியல் கிளாஸ் அட்டண்ட் பண்ண மாதிரி இருக்கு...நல்ல தகவல்கள்..
Rajeswari said...
இயற்பியல் கிளாஸ் அட்டண்ட் பண்ண மாதிரி இருக்கு...நல்ல தகவல்கள்..//
மிக்க நன்றிங்க...
நிறைய விசயங்கள் கைவசம் இருக்குபோல... கலக்கிறீங்க தோழரே!
\\நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க மாப்ஸ்...\\
டக்ளஸ்
டக்ளஸ்
டக்ளஸ்
டக்ளஸ்
இதுதான அந்த நல்ல வார்த்தை...
குடந்தைஅன்புமணி said...
நிறைய விசயங்கள் கைவசம் இருக்குபோல... கலக்கிறீங்க தோழரே!//
நன்றிங்க...
டக்ளஸ்....... said...
\\நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க மாப்ஸ்...\\
டக்ளஸ்
டக்ளஸ்
டக்ளஸ்
டக்ளஸ்
இதுதான அந்த நல்ல வார்த்தை...//
இது சூப்பர்ங்க...
:-)
ஒட்டும் போட்டாச்சு .
நட்புடன் ஜமால் said...
என்னவோ இருந்திருக்கு உனக்குள்ளே பாறேன்.//
ஆமாங்க...
ரெண்டு நாளா கொஞ்சம் காய்ச்சல் இருந்தது..
அதைத் தவிர ஒன்னுமேயில்லையே...
:-)///
இரண்டு நாளா காய்ச்சலா/
இயற்பியல் கிளாஸ் அட்டண்ட் பண்ண மாதிரி இருக்கு.///
ஆமா ஆமா!
இந்தமாதிரி
புதுத்தகவல்
அடிக்கடி
தரவும்!!
நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் :) வாழ்த்துக்கள்... :)
thevanmayam said...
இந்தமாதிரி
புதுத்தகவல்
அடிக்கடி
தரவும்!!//
தரேன் தரேன்...
அதானே நமக்கு வேலையே...
:-)
புல்லட் பாண்டி said...
நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் :) வாழ்த்துக்கள்... :)//
நன்றி புல்லட்...
வேத்தி
படித்தேன், நல்ல விசயம்....!
howstuffworks சைட்ல ஒரு நாள் ஒக்காந்து படிச்சாலும் புரியாத ஒரு விஷயத்த இப்பிடி புட்டு புட்டு வச்சுட்டீங்களே பாஸூ...
சில தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவது இதுதானா??
SASee said...
வேத்தி
படித்தேன், நல்ல விசயம்....!//
நன்றி சசி...
கடைக்குட்டி said...
howstuffworks சைட்ல ஒரு நாள் ஒக்காந்து படிச்சாலும் புரியாத ஒரு விஷயத்த இப்பிடி புட்டு புட்டு வச்சுட்டீங்களே பாஸூ...//
அப்பிடியா??
விளக்கமா இருந்தா சரிதான்...
நன்றிங்க...
லோகு said...
சில தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவது இதுதானா??//
அதே அதே...
:-)
கலர் கலரா, புதுசு புதுசா நல்லா விசயமா சொல்றீங்க. நீங்க கலக்குங்க வேத்தியன்.
thevanmayam said...
இந்தமாதிரி
புதுத்தகவல்
அடிக்கடி
தரவும்!!
ரிப்பீட்டேய்......................
Syed Ahamed Navasudeen said...
கலர் கலரா, புதுசு புதுசா நல்லா விசயமா சொல்றீங்க. நீங்க கலக்குங்க வேத்தியன்.//
கலக்கிடுவோம்...
நன்றிங்க...
Good!
r.selvakkumar said...
Good!//
Thank you...
nallava ealuthurinka continue
தமிழ் வெங்கட் said...
nallava ealuthurinka continue//
நன்றிங்க...
நல்ல தகவல் வேந்தியன்.. பாராட்டுகள்..
இன்னும் மேட்டர் இருக்கா வேந்தியன்.. சொல்லுங்கள் நாங்க கேட்க தயார்.
ஆ.ஞானசேகரன் said...
இன்னும் மேட்டர் இருக்கா வேந்தியன்.. சொல்லுங்கள் நாங்க கேட்க தயார்.//
நீங்க கேக்க தயார்ன்னா நான் சொல்ல தயார்...
கைவசம் மேட்டர் ஏராளமா இருக்குங்க...
:-)
கழியூதா ஒளி ---
கழியூதாவா? அதுக்கு பேரு புற ஊதா இல்லை?
மாத்திட்டாங்களா...சொல்லவே இல்லை
வோட்டிட்டேன்
thevanmayam said...
நட்புடன் ஜமால் said...
என்னவோ இருந்திருக்கு உனக்குள்ளே பாறேன்.//
ஆமாங்க...
ரெண்டு நாளா கொஞ்சம் காய்ச்சல் இருந்தது..
அதைத் தவிர ஒன்னுமேயில்லையே...
:-)///
இரண்டு நாளா காய்ச்சலா/
/////
தேவா டாக்டர் இருக்காரே கை வசம்
good post
அப்போ நீங்களும் அறிவியலிலை பெரிய ஆள் தான் போங்கோ?
கலக்குறீங்கள்?
அப்ப பேய் நாடகத்துக்கெல்லாம் இந்த விளக்கைப் பயன்படுத்தியா பேக்காட்டுவாங்கள்??
நிலாவும் அம்மாவும் said...
கழியூதா ஒளி ---
கழியூதாவா? அதுக்கு பேரு புற ஊதா இல்லை?
மாத்திட்டாங்களா...சொல்லவே இல்லை//
2 மாதிரியும் சொல்லலாம்...
கவின் said...
good post//
Thanks mate...
:-)
கமல் said...
அப்போ நீங்களும் அறிவியலிலை பெரிய ஆள் தான் போங்கோ?
கலக்குறீங்கள்?
அப்ப பேய் நாடகத்துக்கெல்லாம் இந்த விளக்கைப் பயன்படுத்தியா பேக்காட்டுவாங்கள்??//
இதே தான் பயன்படுத்துவாங்க...
பாத்து பயந்திருக்கீங்க போல...
:-)
தொடரட்டும் அறிவியல்
Post a Comment