அமெரிக்கா,சீனா,இந்தோனேசியா போன்ற நாடுகளில் அதிகமான நோய்த்தொற்றுகள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
Swine Influenza அல்லது Swine Flu என்று பொதுவாக அழைக்கப்படும்.
இது Influenza எனும் நோயையே குறிப்பிடும்.
Influenza (பொதுவாக Flu) என்பது Orthomyxoviridae எனும் குடும்பத்திலுள்ள RNA வைரஸ்களால் பரப்பப்படும் தொற்றுநோயாகும்.
இது பொதுவாக பறவைகள் மற்றும் முலையூட்டிகளை பாதிக்கும்.
Swine என்பது பன்றியைக் குறிக்கும்.
இந்த Swine Flu ஆனது வளர்ப்பின பன்றிகளிடமிருந்து Swine Influenza Virusஆல் (SIV) கடத்தப்படுகிறது.
Swine Flu ஆனது பொதுவாக வளர்ப்பின பன்றிகளிடம் தொற்றும் நோயாகும்.
மனிதனுக்கு பரவுவது மிகவும் அரிதானது.
வளர்ப்பின பன்றிகளோடு மிகவும் அதிகமாக வேலை செய்வோருக்கு இந்த நோய் தாக்கும் சந்தர்ப்பம் அதிகம் உள்ளது.
எனினும் இந்த நோய்க்கான வைரஸ் ஒரு மனிதனிலிருந்து இன்னொரு மனிதனுக்கு கடத்தப்படுவது மிகவும் அரிதானது.
மனிதனுக்கு பரவியுள்ள இந்த நோய்க்கான வைரஸின் உடற்கட்டமைப்பில் உள்ள சில புரதங்கள் வழமையாக பன்றிக்கு நோயைத் தோற்றுவிக்கும் வைரஸின் உடற்கட்டமைப்போடு ஒத்துப் போகின்றனவாம்...
மனிதனுக்கு இந்த நோய் பரவியுள்ளதற்கான அறிகுறிகள் பின்வருவனவாகும்...
வழமையாக Influenzaக்கான அறிகுறிகள் தான்.
காய்ச்சல், உடல் குளிர்தல், தொண்டை அடைப்பு, தசைகளில் வலி, கடுமையான தலைவலி, இருமல், உடல் வலுக்குறைவு மற்றும் அசாதாரண உடல் நிலைமைகள்.
இந்த அறிகுறிகள் யாருக்காவது காணப்படின் உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்வதே நல்லது...
பாதுகாப்பாக இருந்து நோய் வருமுன் காப்போம் !!!
21 . பின்னூட்டங்கள்:
பரவுகிறது கஷ்டம்தான்னு சொல்றாங்க.. அப்புறமும் ஏன் இந்தப் பதட்டம்? இருந்தாலும் நாம கவனமாவே இருப்போம்.. ஏற்கனவே தேர்தல்ன்கிற பேர்ல பெரிய வியாதி ஒன்னு ஊரு பூரா பரவிக்கிட்டு இருக்கு.. பத்திரம் மக்களே
சரியான நேரத்தில் சரியான பதிவு. நன்றி வேத்தியன்
டைமிங் பதிவு வேத்தியன்..
சில நாட்களுக்கு முன்பு நான் பன்றி இறைச்சியால் பரவும் நோய்களைப் பற்றி எழுதியிருந்தேன்.
உங்கள் பதிவில் தெளிவான விளக்கம் இருக்கிறது.
நன்றி பகிர்வுக்கு !!!
ஒபாமாவுக்கும் வந்து இருக்காமே.. அப்படியா
again டெக்னாலஜி???
நல்லா இருக்கு :-)
கார்த்திகைப் பாண்டியன் said...
பரவுகிறது கஷ்டம்தான்னு சொல்றாங்க.. அப்புறமும் ஏன் இந்தப் பதட்டம்? இருந்தாலும் நாம கவனமாவே இருப்போம்.. ஏற்கனவே தேர்தல்ன்கிற பேர்ல பெரிய வியாதி ஒன்னு ஊரு பூரா பரவிக்கிட்டு இருக்கு.. பத்திரம் மக்களே//
நம்ம நாட்டுலயும் இப்போ தான் தேர்தல் வியாதி முடிஞ்சுது...
:-)
அது தான் எல்லாத்துலயும் பாக்க பெரிய வியாதியாமே???
:-)
S.A. நவாஸுதீன் said...
சரியான நேரத்தில் சரியான பதிவு. நன்றி வேத்தியன்//
மிக்க நன்றி நவாஸுதீன்...
அ.மு.செய்யது said...
டைமிங் பதிவு வேத்தியன்..
சில நாட்களுக்கு முன்பு நான் பன்றி இறைச்சியால் பரவும் நோய்களைப் பற்றி எழுதியிருந்தேன்.
உங்கள் பதிவில் தெளிவான விளக்கம் இருக்கிறது.
நன்றி பகிர்வுக்கு !!!//
நன்றி நன்றி...
லோகு said...
ஒபாமாவுக்கும் வந்து இருக்காமே.. அப்படியா//
தெரியலயே...
தெரிஞ்ச உடனே இன்னொரு பதிவுல சொல்லுறேனே???
:-)
மச்சி ரொம்ப உபயோகமான பதிவு
கடைக்குட்டி said...
again டெக்னாலஜி???
நல்லா இருக்கு :-)//
என்ன பண்றது க.கு. ???
நாம கதை, கவிதைன்னு எழுதுவோம்ன்னா நான் எழுதுனது எனக்கே பிடிக்கல...
:-)
நமக்கு எது தெரியுமோ அதை வச்சு பதிவைப் போட வேண்டியது தானே...
:-)
சர்வின்னா said...
மச்சி ரொம்ப உபயோகமான பதிவு//
நன்றி மாம்ஸு...
:-)
அட இதுதான் வெசஹயம்! நானு ஏதோ ஆர்.பி ராஜநாயமுங்க பிளாக்க பத்தி சொல்லறீங்களோன்னு டைட்டில பாத்து உள்ளாற வந்துட்டேன்ஹ.
இனி கவனமா இருக்கேன்...
:)))
சுத்தம், ஆரோக்கியம்... நல்வாழ்வு....
இவையிருந்தால் எந்த நோயும் அண்டாது!!!
பார்க்கலாமே!!!
தேவையான பதிவு வேத்தியன்... நன்றியும் கூட.
சுத்தம், ஆரோக்கியம்... நல்வாழ்வு....
இவையிருந்தால் எந்த நோயும் அண்டாது!!!
பார்க்கலாமே!!!
தேவையான பதிவு வேத்தியன்...
நன்றியும் கூட.
வழக்கம் போல ஓட்டு!!!
சுத்தம், ஆரோக்கியம்... நல்வாழ்வு....
இவையிருந்தால் எந்த நோயும் அண்டாது!!!
பார்க்கலாமே!!!
தேவையான பதிவு வேத்தியன்...
நன்றியும் கூட.
வழக்கம் போல ஓட்டு!!!
நன்றி...
வழிப்போக்கன்...
ஆதவா...
பயனுள்ள பதிவு.
இப்பொழுது நிறைய முன் தடுப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது
சுட சுட அப்டேட் செய்ததற்கு வாழ்த்துக்கள்
நன்றி...
அபுஅஃப்ஸர்...
சொல்லரசன்...
Post a Comment