Wednesday, 22 April 2009

பிரபல மருத்துவமனைகளில் சரியில்லாத தலைமைத்துவம் !!!


அப்பாடா ஒருமாதிரி நம்ம நாட்டுல ஒரு சேனல்ல ஐ.பி.எல் போட்டிகள் வருது...
ஒரே குஜால்...
முதல் ரெண்டு நாள் போட்டிகளை தான் மிஸ் பண்ணியாச்சு...
நோ ப்ராப்ளம்..
இப்பவாவது வருதேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்...
:-)

ஆனா வச்சது வச்சாங்க தெனாபிரிக்காவுல...
அங்க இப்போ மழைநேரமாம்ல...
நேத்து என்னோட ஃபேவரிட் சனத் ஜயசூரிய விளையாடுறத பாக்கலாம்ன்னு இருந்தா மழை வந்து கெடுத்து விட்டது...
:-(

----------------------------------------------------------------------------

என்னோட நெருங்கிய உறவினர் ஒருவர் தொலைவிலிருந்து சிகிச்சைக்காக கொழும்புக்கு வந்திருந்தார்...
மிகவும் சீரியஸான நேரத்தில் ஒரு பிரபல மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தோம்...
உடனே கையில் ஒரு சீட்டைத் தந்து கொண்டு போய் பணம் கட்டிவிட்டு வரவும் என்உ தந்தனர்.
சரின்னு கொண்டுபோனா பணம் கட்டுறதுக்கு முன்னால அந்த நோயாளியை ரெஜிஸ்டர் பண்ணவாம்...

ஒரு ஆபத்து என்றவுடன் கொண்டுபோய் சேர்த்தவுடன் பணம் கட்டு என்று உடனே கையில் பில்லைத் தந்தது கொஞ்சமாவது பரவாயில்லை...
பணம் தானே போனால் போகட்டும் என்று கொண்டு போனால்,
பணம் கட்டுவதற்கு முன் பேஷண்டை ரெஜிஸ்டர் பண்ணு என்றால் எவ்வளவு கோபம் வரும் நமக்கு???
அவ்வளத்துக்கு நான் அந்த நேரத்தில் சாப்பிட்டும் இருக்கவில்லை...
:-)))

ஆபத்து நேரத்தில் கொண்டுபோய் சேர்க்கையில் பணம் முக்கியமில்லை என்று அதைக் கட்டப் போனல் அதையும் வாங்க முன் ரெஜிஸ்டர் பண்ணு என்று சொல்வது நியாயமா???

சரி என்று விதியை நொந்து கொண்டு நோயாளியைப் பதியப் (ரெஜிஸ்டர்) போனால் அங்கே இருந்தது ஒரு பெண்...
முடியாவிட்டால் கையால் எழுத வேண்டியது தானே...
அந்த பெண் ஊழியருக்கு ஒரு கணனி வேறு...
அதில் ஒவ்வொரு கீயையும் தேடித் தேடி டைப் அடிக்கிறார் அந்த பெண்...
என்ன கொடுமை???

அவசரம் என்று வருபவர்களுக்கு உடனடியாக வேலை செய்யும் வகையில் உள்ள ஒரு ஊழியரை ஒரு பொறுப்பான இடத்தில் அமர்த்த வேண்டுமல்லவா ???
நான் அது ஒரு பெண் ஊழியர் என்று குறை சொல்லவில்லை...
அந்த இடத்தில் யார் இருந்தாலும் விரைவாக வேலை செய்யும் திறமை இருக்க வேண்டும் என்று தான் சொல்கிறேன்...

டைப் பண்ணுறதுல தான் வேகம் குறைவு என்று பார்த்தால் எழுதுவதிலும் வேகம் குறைவு தான்...
:-(

வெகம் குறைவாக வேலை செய்வதையும் தாண்டி பக்கத்தில் இருக்கும் சக ஊழியர்களோடு சாட்டிங் வேறு...
அவசரமாக வருபவர்களுக்கு கொடுக்கப்படும் தொல்லைகள் கொஞ்சமல்ல...
இவ்வளத்துக்கும் அது ஒரு பிரபல மருத்துவமனை...
பெயர் சொல்ல விரும்பவில்லை...
அது இந்திய உரிமையில் இருந்து சிறிது காலத்துக்கு முன் தான் இலங்கை உரிமைக்கு மாற்றப்பட்டது...
தெரிந்தால் கண்டுபிடித்துக் கொள்ளவும்...
:-)

பணம் வேண்டுமானல் முதலில் வாங்கிக் கொண்டு, நோயாளியின் நிலைமை சரியானதும் அவர்களின் பதிதல் செயற்பாடுகளை வைத்துக் கொள்ளலாம் தானே...
நோயாளியின் மோசமான நிலைமையை நினைத்துக் கொண்டு பணம் கட்டப் போனால் இதை எல்லாம் செய் என்றால் கோபம் வருவது நியாயமா இல்லையா???
பதில் சொல்லவும்...

இந்த நிலைமையை நினைக்கும் போது எனக்கு கமலின் வசூல் ராஜா படம் தான் ஞாபகம் வருகிறது...
அதிலும் இது மாதிரி ஒரு சீன் வரும்...
:-)

அந்த மருத்துவமனையின் தலைமைத்துவம் தான் இதற்குக் காரணம்...
மற்றபடி அங்கு சேவை செய்யும் அனைவரும் சிறந்தவர்கள், நல்ல மனம்...
(மருத்துவமனிகளில் இருப்பவர்கள் செய்வது சேவை தானே...
வேலை செய்பவர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்காது...)

இது என்னுடைய கருத்து தான்...
கருத்து பற்றிய உங்களுடைய நிலைப்பாட்டை கூறிச் செல்லவும்...

----------------------------------------------------------------------------

நம்ம குழந்தை ஓவியம் ஆதவாவை சிறிது காலமாக காணவில்லையே...
எங்கு போனார் என்று தெரியவில்லை...
விஷயம் தெரிந்தவர்கள் சொல்லவும்...

அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
அன்புடன்,


.
பிரபல மருத்துவமனைகளில் சரியில்லாத தலைமைத்துவம் !!!SocialTwist Tell-a-Friend

22 . பின்னூட்டங்கள்:

அப்பாவி முரு on 22 April 2009 at 11:15 said...

//இந்த நிலைமையை நினைக்கும் போது எனக்கு கமலின் வசூல் ராஜா படம் தான் ஞாபகம் வருகிறது...
அதிலும் இது மாதிரி ஒரு சீன் வரும்...
:-)//

அதேதான்...

வந்தியத்தேவன் on 22 April 2009 at 11:32 said...

வேத்தியன் அந்த மருத்துவமனையில் முன்னர் இந்திய டொக்டர்கள் நேர்ஸ்கள் இருந்தார்கள் இப்போ பெரும்பான்மை பெரும்பான்மைதான் அதனால் கவனிப்பும் குறைவு. பணமும் அதிகம் பிடுங்குகின்றார்கள். அதுமட்டுமல்ல ரமணா படக்காட்சிபோல் சில சம்பவங்களும் நடைபெற்றன. இந்தியாவின் பிரபல மருத்துவமனையின் பெயரில் இயங்கும் சாதாரண ஒரு மருத்துவமனையாகிவிட்டது அது. பெயரைப் பார்த்து நம்மவர்கள் போவது என்றைக்குத் தான் மாறப்போகின்றதோ. அந்த மருத்துவமனையில் வைத்தியம் செய்வபர்கள் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். காரணம் வரட்டுக் கெளரவம். கொழும்பு 2ல் இருக்கும் இன்னொரு மருத்துவமனையோ அல்லது நீங்கள் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் மருத்துவமனைகளூக்கோ எங்கள் சனம் போவதில்லை. பெரும்பாலான சிங்கள மக்கள் போகும் மருத்துவமனைகள் அவைதான்.

என்றைக்குத் தான் எங்கள் சனம் திருந்தப்போகின்றதோ,.

லோகு on 22 April 2009 at 11:32 said...

உண்மை நண்பா..
தமிழ்கத்திலும் பெரும்பான்மை மருத்துவமனைகளில் இது நடக்கிறது..

ஆதவா on 22 April 2009 at 12:40 said...

வந்துவிட்டேன் வேத்தியன்... என்னை ஞாபகத்திற்கு வைத்திருந்தமைக்கு மிக்க நன்றி ... கொஞ்சம் அதிகப்படியான பணிச்சுமை!

மருத்துவமனை விவகாரங்கள் எப்பொழுதுமே சலிப்பானவை... இங்கேயும் இதைப் போன்று பலமுறை நடப்பதுண்டு.. அதிலும் எங்கள் ஊரில் ஒரு அரசு மருத்துவமனையில் என்ன நோய் என்று கேட்காமலேயே மருந்து எழுதிக் கொடுக்கிறார்கள்.. சரி, தனியார் மருத்துவமனைக்குத்தான் போய் பார்ப்பமே என்று போனால், என்ன நோய் என்று தெரிந்தவுடன் பில்லை தீட்டுகிறார்கள்....

என் நண்பன் கீழே விழுந்து தலையில் சற்றே அடிபட்டிருந்தது.. அதற்கு பதினைந்தாயிரம் செலவு!!!! யம்மாடியோ!!!!

டக்ளஸ்....... on 22 April 2009 at 12:48 said...

Super pathivu...!

thevanmayam on 22 April 2009 at 12:54 said...

அவசரம் என்று வருபவர்களுக்கு உடனடியாக வேலை செய்யும் வகையில் உள்ள ஒரு ஊழியரை ஒரு பொறுப்பான இடத்தில் அமர்த்த வேண்டுமல்லவா ???
நான் அது ஒரு பெண் ஊழியர் என்று குறை சொல்லவில்லை...
அந்த இடத்தில் யார் இருந்தாலும் விரைவாக வேலை செய்யும் திறமை இருக்க வேண்டும் என்று தான் சொல்கிறேன்...////

உண்மை!! ஊழியர்கள் அவச்ரம் புரிந்து நடக்கவேண்டு!!

கார்த்திகைப் பாண்டியன் on 22 April 2009 at 13:02 said...

இங்கே பணந்தான் பிரதானம் நண்பா.. மனிதேநேயம் என்றால் என்ன என்று கேட்கும் நிலை வந்து விட்டது...

Suresh on 22 April 2009 at 13:30 said...

ஒரு உணமையை அப்படியே சொல்லிருக்க மச்சான்

சரியான ஆளு வேனும் அந்த இடத்தில் பண்ம் ரெஜிஸ்டர் என்று சொல்லும் போது அவன்கள் என்ன பண்ணலாம்

//டைப் பண்ணுறதுல தான் வேகம் குறைவு என்று பார்த்தால் எழுதுவதிலும் வேகம் குறைவு தான்...
:-(//

என்ன செய்ய அவ்வளவு சுறுசுறுப்பு//(மருத்துவமனிகளில் இருப்பவர்கள் செய்வது சேவை தானே...வேலை செய்பவர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்காது...)/

சரியான மெஸேஜ்

அப்புறம் நம்ம ஐ.பி.எல் Tatasky ல காசு கட்டி தான் வரும் என்று பார்த்தால் பரவாயில்லை மே 31 வரை இலவசமாக அதான் South Starter pack oda koduthutan puniyavan

i saw the matches but intha malai palivanguthu

அப்புறம் நம்ம ஆதவாக்கு ஒரு நல்ல தோழி அதான் பா கேள் பிரண்டு கிடச்சி இருக்கு

உனக்கு நான் முக்கியமா இல்லை மொக்கை போடும் இந்த பதிவுலக பசங்க முக்கியமா என்று ஒரு கேள்வி கேட்க்க நம்ம பய கவுந்துட்டான்

:-) அவரு வீட்டுல எதோ பங்ஷனாம் அதான் ஆளே காணோம்

வேத்தியன் on 22 April 2009 at 14:16 said...

வருகை தந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி...

வேத்தியன் on 22 April 2009 at 14:16 said...

@ ஆதவா...

நண்பா...
வந்தாச்சா??
பணிச்சுமையா...
பரவாயில்லை..
வந்ததே சந்தோஷம்...

Rajeswari on 22 April 2009 at 15:08 said...

எனக்கு தெரிஞ்சு நிறைய இடங்களில் இதுமாதிரிதான் நடக்குது.எல்லாமே பொருளாய் போனபிறகு,உயிருக்கு ஏது மதிப்பு??

ஆ.முத்துராமலிங்கம் on 22 April 2009 at 17:01 said...

சமீபத்தில் இப்படியான மருத்துவமணை அனுபவம் ஏற்பட்டது. அங்கு என்று இல்லை பொதுவாக இப்ப மருத்துவமணை பெரும்பாலும் பணம் மட்டுமே முக்கியப் படுத்துகிறது ஏனென்றால்
இது அடிப்படையில் இருந்தே அவர்கள் அப்படி உருவாக்க படும்படியாக உள்ளது நம் சமூக நிலை. எல்லா துறைகளிலும் லஞ்சம் புரையோடி இருப்பதுதான் காரணம்.

அவர்கள் லஞ்சமாக கொடுத்ததை
நோயாலிகளிட்டம் வசூலிக்கிரார்கள்.

ஆ.ஞானசேகரன் on 22 April 2009 at 17:02 said...

இந்த கொடுமை தற்பொழுது எல்லா மருத்துவமனைகளிலும் உள்ளது. அதற்கு மனிதர்களிடையே சேவை மனப்பான்மை குறைந்ததும் ஒரு காரணம்.. இன்னும் ஒருபடி மேலே ரமணா படத்தில் வருவதுபோல பிணத்தை வைத்துக்கொண்டும் காசு பார்க்கின்றார்கள்... இந்நிலை மாற்ற வேண்டிய ஒன்று...

ஆதவா தற்பொழுதுதான் என்பக்கம் வந்து ஒரு பின்னுட்டம் இட்டு சென்றார்...

thevanmayam on 22 April 2009 at 17:42 said...

மருத்துவத்துறையில் காலதாமதம
இருக்கக் கூடாது, சில இடங்களில் அப்படி இருப்பது உண்மை

thevanmayam on 22 April 2009 at 17:46 said...

நல்ல காசு தீட்டும் இடம் நோக்கியே நோயாளிகள் ஓடுகிறார்கள்!!

அபுஅஃப்ஸர் on 22 April 2009 at 17:51 said...

நல்ல பதிவு வேத்தியன்

இதெல்லாம் கண்டிக்கப்படவேன்டியதுதான்

இது எல்லா இடங்களெயும் பொதுவா இருக்கும் ஒன்னு

ஆதவா காணோம்.. நானும் தேடிக்கிட்டுதான் இருக்கேன்

வழிப்போக்கன் on 22 April 2009 at 18:13 said...

நாம் என்ன செய்ய முடியும்???
புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சந்தோஷம்....

Ramana said...

தமிழ்கத்திலும் பெரும்பான்மை மருத்துவமனைகளில் இது நடக்கிறது..

YES

ஆதவா on 23 April 2009 at 13:10 said...

அடப்பாவி மச்சான்.... இருக்கிறத சமாளிக்கவே முடியல.. இதில புது கேர்ள் ஃப்ரண்ட் வேறயா???

வேத்தியன் on 24 April 2009 at 08:35 said...

நன்றி...

Rajeswari
ஆ.முத்துராமலிங்கம்
ஆ.ஞானசேகரன்
thevanmayam
அபுஅஃப்ஸர்
வழிப்போக்கன்
Ramana
ஆதவா

sankarfilms on 26 April 2009 at 20:56 said...

to write srilanka &ltte war...
what hapend in srilanka?

Subash on 28 April 2009 at 19:31 said...

அதேமருத்துவமனையில் அதேபோலெரு அனுபவமுண்டு.

என்னத்த சொல்றது

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.