Tuesday, 7 April 2009

வேத்தியன் பார்வையில் அயன்...



ஏற்கனவே நிறையா பேர் அலசி துவைச்சு காயவச்ச ஒரு மேட்டர வீணாப்போனவன் இப்ப தான் எடுக்கிறான்னு இல்லாம ச்சும்மா படிச்சு பாருங்களேன்...
:-)

வந்து நாலு நாள் ஆயிடுச்சு, ஆனா இன்னைக்கு தான் பாக்க வாய்ப்பு கிடைச்சுது...

முதல் பாதியில சில ஜோக்ஸ், சில ஃபைட்ஸ், சில லவ்ஸ், சில பாட்டுகள்ன்னு கொஞ்சம் நல்லா இருந்துச்சு...
சூர்யா கம்ப்யூட்டரில் மேற்படிப்பு படிச்சவரு..
சும்மா த்ரில்லிங்க்காக கடத்தல்காரன் "என்ன கொடும இது சரவணன் இது??" புகழ் பிரபு கிட்ட வேலை செய்யுறாராம்...

கருணாஸும் இவங்களோட இருக்கிறாரு...
இவங்களுக்கு தொழில்ல போட்டியா இன்னொருத்தன்...
அவனோட சண்டை வழக்கம்போலவே...
:-)

பிரபு செய்யுற பிஸ்னஸ் ஆட்களை தன்வசப்படுத்த வில்லன் முயற்சி செய்யுறான்...
அது சாத்தியமாகாத தருணத்துல விஜய் டீ.வி புகழ் ஜெகனை பிரபு ஆட்களோடு சேர்த்து விடுகிறான்...
ஜெகன் மூலம் அவர்களுக்கு செய்தி போகிறது...

ஜெகனோட தங்கை தமன்னா...
அவங்களைப் பாத்ததும் காதல்...
அப்புரம் என்ன நடந்திருக்கும்ன்னு உங்களுக்கே தெரியும்...
பாட்டுக்கு மட்டுமே வந்துட்டுப் போறாங்க ஹீரோயின்...
வழமை போலவே... :-)

ரெண்டாம் பாதியில இன்னும் கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்க்கா இருக்கும்...
ஜெகன் தான் செய்தி அனுப்பினதுன்னு சூர்யா கண்டுபிடிக்கிறாராம்...
அப்புறம் ஜெகனோட கோபம், ஜெகன் தங்கை தமன்னாவுடன் கொஞ்ச நேர கோபம், பிறகு காதல்...
உஸ்ஸ்ஸ்ஸ்...

வில்லன் இன்னும் கொஞ்சம் நல்லா நடிச்சிருக்கலாம்ன்னு தோனிச்சு...
சூர்யாவின் நடிப்பு அருமையா இருக்கு... குறை சொல்லக் கூடாது...
தமன்னாவின் நடிப்பு.. சாரி அப்பிடி எதுவும் இருக்கல...

பாடல்கள் சூப்பர்ன்னு சொல்வதற்கில்லை..
விஷுவலோட பாக்க நல்லா இருக்கு...

ஒளிப்பதிவாள்ர் கே.வி.ஆனந்த் இயக்குனராக இருப்பதனால் காட்சிகளை படமாக்கிய விதம் அருமைய இருக்கு...
கொங்கோவில் நடக்கும் சண்டைக் காட்சிகள் கிட்டத் தட்ட ஆங்கில படங்களுக்கு இணையாக இருக்கிறா மாதிரி இருக்கு... அது ரொம்ப பிடிச்சிருக்கு...

பிரபு நடிப்பும் அருமையா இருக்கு..
நல்லா யூஸ் பண்ணியிருக்காங்க அவர...
நல்ல நடிகருக்கு நல்ல பாத்திரம், அதுல நல்ல நடிப்பு...

படத்துல சில இடங்கள்ல பாக்க நல்லா இருக்கு..
சில இடங்கள் அறுவையா இருக்கு..
மொத்தத்துல சொல்லப்போனா சூப்பர் தான்...
(நான் சூர்யா ரசிகன் தான்..)

மொத்தத்துல, பாக்கக்கூடிய நல்ல படம்...

அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
வர்ட்டாஆஆஆ...
டாட்டா..
பை பை...
.
வேத்தியன் பார்வையில் அயன்...SocialTwist Tell-a-Friend

34 . பின்னூட்டங்கள்:

நட்புடன் ஜமால் on 7 April 2009 at 19:51 said...

முதல் விமர்சணமா

தூள்

அப்துல்மாலிக் on 7 April 2009 at 20:03 said...

இதைவிட எப்படித்தான் படம் எடுக்குறது சொல்லுங்க‌

எல்லா கதையும் எடுத்தாச்சு, இனிமேல் எதுவுமே இல்லே
இனிமேல் இதுமாதிரி எடுக்கப்பட்ட படங்கள்தான் டூப்பர் சூப்பர் ஆகும் பாருங்க‌

தேவன் மாயம் on 7 April 2009 at 20:05 said...

விமரிசனம் அருமை!!

தேவன் மாயம் on 7 April 2009 at 20:07 said...

வேத்தியன் சகல கலா வல்லவன்!!

லோகு on 7 April 2009 at 20:08 said...

பார்க்கலாமா..
வேண்டாமா..

S.A. நவாஸுதீன் on 7 April 2009 at 20:09 said...

இன்னும் CD கிடைக்கவில்ல வேத்தி

வேத்தியன் on 7 April 2009 at 20:38 said...

நட்புடன் ஜமால் said...

முதல் விமர்சணமா

தூள்//

நன்றி...
முதல் விமர்சனம் இதுவல்ல...
படிக்காதவன், சிலம்பாட்டம் பிரிச்சு மேஞ்சிருக்கேனே...
:-)

வேத்தியன் on 7 April 2009 at 20:39 said...

அபுஅஃப்ஸர் said...

இதைவிட எப்படித்தான் படம் எடுக்குறது சொல்லுங்க‌

எல்லா கதையும் எடுத்தாச்சு, இனிமேல் எதுவுமே இல்லே
இனிமேல் இதுமாதிரி எடுக்கப்பட்ட படங்கள்தான் டூப்பர் சூப்பர் ஆகும் பாருங்க‌//

ஆமாங்க ஆமாங்க...
சரியா சொன்னீங்க...

வேத்தியன் on 7 April 2009 at 20:39 said...

thevanmayam said...

விமரிசனம் அருமை!!//

நன்றி நன்றி...

வேத்தியன் on 7 April 2009 at 20:39 said...

லோகு said...

பார்க்கலாமா..
வேண்டாமா..//

கட்டாயமாக பாக்கவே வேணும்...

வேத்தியன் on 7 April 2009 at 20:40 said...

Syed Ahamed Navasudeen said...

இன்னும் CD கிடைக்கவில்ல வேத்தி//

ஆஹா...
அவரா நீங்க???
:-)

கிடைச்சதும் அனுப்பிவிடவா???

S.A. நவாஸுதீன் on 7 April 2009 at 20:42 said...

வேத்தியன் said...

Syed Ahamed Navasudeen said...

இன்னும் CD கிடைக்கவில்ல வேத்தி//

ஆஹா...
அவரா நீங்க???
:-)

கிடைச்சதும் அனுப்பிவிடவா???

நம்ம ஊர்ல நம்ம ரூம்தான் தல தியேட்டர். இங்க சினிமா தியேட்டர் எல்லாம் கிடையாது

வேத்தியன் on 7 April 2009 at 20:43 said...

Syed Ahamed Navasudeen said...

வேத்தியன் said...

Syed Ahamed Navasudeen said...

இன்னும் CD கிடைக்கவில்ல வேத்தி//

ஆஹா...
அவரா நீங்க???
:-)

கிடைச்சதும் அனுப்பிவிடவா???

நம்ம ஊர்ல நம்ம ரூம்தான் தல தியேட்டர். இங்க சினிமா தியேட்டர் எல்லாம் கிடையாது//

எந்த ஊர் நீங்க???
இந்தியாவா???

S.A. நவாஸுதீன் on 7 April 2009 at 20:45 said...

இந்தியா தான், இப்ப இருக்கிறது சவூதி அரேபியால

வேத்தியன் on 7 April 2009 at 20:46 said...

Syed Ahamed Navasudeen said...

இந்தியா தான், இப்ப இருக்கிறது சவூதி அரேபியால//

ஆஹா அப்ப சீடி தான் பட ரீல்ன்னு நெனைச்சு ஓட்ட வேண்டியது தான்...
:-)

S.A. நவாஸுதீன் on 7 April 2009 at 20:49 said...

அது படம் நல்லா இருந்தா, இல்லன்ன நாமதான் ஓடனும்

Anonymous said...

அடடே! சூப்பர் பா... விமர்சனம் ஸ்வீட்டா ஷாட்டா இருக்கே!

வேத்தியன் on 7 April 2009 at 21:05 said...

ஷீ-நிசி said...

அடடே! சூப்பர் பா... விமர்சனம் ஸ்வீட்டா ஷாட்டா இருக்கே!//

அது தான் நம்மோட ஸ்பெஷாலிட்டி...
:-)

வேத்தியன் on 7 April 2009 at 21:06 said...

Syed Ahamed Navasudeen said...

அது படம் நல்லா இருந்தா, இல்லன்ன நாமதான் ஓடனும்//

எங்க ஓடுறது???
:-)

S.A. நவாஸுதீன் on 7 April 2009 at 21:08 said...

அடுத்த ரூம்ல நல்ல படம் ஓடுதான்னு பார்க்கத்தான்

நட்புடன் ஜமால் on 7 April 2009 at 21:08 said...

\\வேத்தியன் said...

நட்புடன் ஜமால் said...

முதல் விமர்சணமா

தூள்//

நன்றி...
முதல் விமர்சனம் இதுவல்ல...
படிக்காதவன், சிலம்பாட்டம் பிரிச்சு மேஞ்சிருக்கேனே...
:-)\\

தம்பி வேத்தியா நல்லா பார்த்தியா

உன் விமர்சணத்து - நான் தான் முதல் விமர்சணமான்னு கேட்டேன்.



(சமாளிப்ஃபிக்கேஷன்)

ஆதவா on 7 April 2009 at 23:11 said...

பக்கா!!!!

தமண்ணாவின் அழகு கொள்ளை!!!!
விமர்சனம் அழகு!!!

ஆனால்..... டூ லேட் விமர்சனம்!!! ஏற்கனவே அக்நாழிகையும் கார்த்திகைப் பாண்டியரும் போட்டுட்டாங்க!

Suresh on 7 April 2009 at 23:26 said...

அருமை விமர்சன்ம் லேட்டானாலும் பழைய சோறு கணக்கா ஜிவ்வுனு தான் இருக்கு :-)

தர்ஷன் on 7 April 2009 at 23:39 said...

நாளையிலிருந்து 1st term விடுமுறை ஆரம்பமாகிறது.
உங்களை நம்பி படம் பார்க்க போகலாம்னு நினைக்கிறேன். போய் பார்த்துட்டு சொல்றேன்.

அ.மு.செய்யது on 8 April 2009 at 00:55 said...

படுகேஷூவலாக கூலாக விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள்.

எனக்கு தான் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆ.ஞானசேகரன் on 8 April 2009 at 05:53 said...

//மொத்தத்துல, பாக்கக்கூடிய நல்ல படம்...//

so நீங்களும் படம் பார்த்துடீங்க...
நான் try பன்னுரேன்....

ச.பிரேம்குமார் on 8 April 2009 at 07:39 said...

சில பல மொக்கைப் படங்களுக்கு இது நூறு மடங்கு தேவலாம் :)

கார்த்திகைப் பாண்டியன் on 8 April 2009 at 10:16 said...

விமர்சனம் நல்லாத்தான் இருக்கு நண்பா.. எனக்கும் படம் ரொம்ப பிடிச்சு இருந்தது..

குடந்தை அன்புமணி on 8 April 2009 at 12:34 said...

சூர்யா ரசிகரா!நீ்ங்க எழுதிய விமர்சனத்தை நான் படிக்கமாட்டேன்! சும்மா லுலாய்க்கு... படம் பார்க்கும் ஆவலில்தான் இருக்கிறேன். ஞாயிறுதான் முயற்சி செய்யணும்!

SASee on 8 April 2009 at 14:57 said...

வேத்தி
படம்னா இன்னும் பாக்கல ஆனா விமர்சனம் நல்லா இருக்கு
வாசிச்சத வச்சி சொன்னேன்...

ARV Loshan on 8 April 2009 at 16:35 said...

பாட்டுக்கு மட்டுமே வந்துட்டுப் போறாங்க ஹீரோயின்...
வழமை போலவே... :-)//
கடுமையா ஆட்சேபிக்கிறேன்.. எங்க தமி சிரிக்கிறா..சிரிக்க வைக்கிறா.. அழுறா.. எவ்வளவு செய்றா.. வேத்தியனே திருத்திக் கொள்.. ;)

வில்லன் இன்னும் கொஞ்சம் நல்லா நடிச்சிருக்கலாம்ன்னு தோனிச்சு...//

ME TOO..

பிரபு நடிப்பும் அருமையா இருக்கு..
நல்லா யூஸ் பண்ணியிருக்காங்க அவர...
நல்ல நடிகருக்கு நல்ல பாத்திரம், அதுல நல்ல நடிப்பு...//
:)

கடைக்குட்டி on 8 April 2009 at 22:22 said...

விமர்சனம் என்னும் பெயரில் படத்தின் கதையை மட்டும் சொல்லி சப்ப க்ட்டு கட்டலாமா???

நீங்க என்னைய மாதிரி புதுசா ஏதாவது பண்ணி இருப்பீங்கன்னு நெனச்சேன்....

Rajeswari on 9 April 2009 at 19:23 said...

அப்ப படம் பாக்கலாம் போல..

விமர்சனம் நன்றாக இருந்தது

வேத்தியன் on 10 April 2009 at 15:14 said...

நன்றி,

ஆதவா
Suresh
தர்ஷன்
அ.மு.செய்யது
ஆ.ஞானசேகரன்
பிரேம்குமார்
கார்த்திகைப் பாண்டியன்
குடந்தைஅன்புமணி
SASee
LOSHAN
கடைக்குட்டி
Rajeswari

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.