Wednesday, 1 April 2009
விமானங்கள்,மருத்துவ மனைகளில் செல்லிடத் தொலைபேசி பாவிக்க அனுமதி இல்லாதது ஏன் ???
நாம் அதிகமான இடங்களில் மின்காந்த குறுக்கீடுகளை அவதானித்திருப்போம் அல்லவா???
உதாரணத்திற்கு நாம் கணனிக்கு முன்னல் இருந்து வேலை செய்து கொண்டிருக்கும் போது அலைபேசியில் அழைப்பு வந்தால் உடனே கணனி ஒலிபெருக்கிகளில் ஒரு குறுக்கீட்டு ஒலி உண்டாவதை பார்த்திருப்போம்...
இவை ஒரு பயங்கர பிரச்சனை என கூறுவதற்கில்லை.
எனினும் இதே பிரச்சனை விமானத்தில் வந்தால் அது எவ்வாறு இருக்கும்???
காரணம் தெரியுமா ???
பொதுவாக ரேடியோ அலைகள் மூலம் இயங்கும் அனைத்து சாதனங்களும் ரேடியோ என்றே அழைக்கப்படும்...
நாம் அன்றாட வாழ்வில் பாட்டு கேட்க பாவிக்கும் ரேடியோகளில் 2 வகைகள் உண்டு...
1. FM Radio - Frequency Modulated Radio - மீடிறன் மட்டிசைக்கப்பட்டது.
2. AM Radio - Amplitude Modulated Radio - வீச்சம் மட்டிசைக்கப்பட்டது.
ஒரு விமானத்தில் வெவ்வேறு காரணங்களுக்காக அதிகமான வானொலி ஒலிபரப்பு சாதனங்கள் காணப்படும்...
உதாரணமாக, விமானிகள் விமான கட்டுப்பாட்டு மையத்துடன் பேசிக்கொள்ள ஒரு வானொலி ஒலிபரப்பு சாதனம் உண்டு.
அதேபோல் விமானங்கள் தங்கள் நிலையை ATC கணனிகளுக்கு (Air Traffic Control Computers) தெரிவிக்க ஒரு வகையான வானொலி உண்டு...
காலநிலையை அறிய ரேடார் கருவிகள் உண்டு...
இவை அனைத்து வானொலி சாதனங்களும் தமக்குரிய மீடிறன்களில் வேலை செய்யும்... (Specific Frequency)
இப்படி இருக்கையில் யாராவது தங்கள் தொலைபேசியை பாவிக்க முற்பட்டால் அது உயர் சக்தியை கடத்தும் (up to 3 watts).
இதன்போது வெளியேறும் அலைகளானது விமானத்தில் இருந்து அனுப்பப்படும் அலைகளின் மேல் பொருந்துகையடைய முற்படும்.
இதனால் விமானத்தில் இருந்து அனுப்பப்படும் செய்திகள் குழப்பமடையும்...
அப்போது விமானத்தில் இருக்கும் ஏதாவது ஒரு வடம் (Wire) சிறிதாவது சேதமடைந்திருந்தால் அது கணனி ஒலிபெருக்கிகள் போல இந்த அலைகளை பெற்று விடும்...
அதனால் தவறான செய்திகளே கட்டுப்பாட்டு மையத்தை அடையை வாய்ப்புகள் உண்டு...
அதிகமான மருத்துவமனைகளில் வடமில்லா வலையமைப்புடன் (Wireless Network) கூடிய சாதனங்களே தற்போது பாவனையில் உள்ளது...
அதிகமான சாதனங்களின் அன்டெனாவானது Nursing Stationஉடன் Wireless Network மூலமே இணைக்கப்பட்டுள்ளது...
இந்த நிலைமையில் நாம் தொலைபேசியை பாவித்தோமானால் அதிலிருந்து வரும் அலைகள் இந்த அலைகளுடன் மேற்பொருந்துகையடை முற்பட்டு தவறான செய்திகளே சென்றடையும்...
தொலைபேசியை பாவித்தால் மட்டுமே இப்பிடி நடக்க வாய்ப்புகள் உண்டு என எண்ணுவது தவறு...
சாதாரணமாக செல்லிடத் தொலைபேசிகள் தங்கள் சேவை வழங்குனர்களுடன் ஒரு தொடர்பை எந்நேரமும் வைத்துக் கொண்டே இருக்கும்...
இதன் காரணமாக வரும் அலைகளும் இந்த பிரச்சனையை உண்டாக்க வாய்ப்புகள் உள்ளது..
எனவே மருத்துவமனைகளில் நாம் எமது செல்லிடத்தொலைபேசிகளை அணைத்து வைப்பது நல்லது...
ஒழுங்காக காவலிடப்படாத லாப்டாப்களும் CD பிளேயர்களும் இதே பிரச்சனையை விமானங்களில் ஏற்படுத்தும்...
அவற்றிலிருந்தும் சிறியளவிலான அலைகள் தெறிப்படைவதே இதற்குக் காரணம்...
எனவே, மருத்துவமனைகள்,விமானங்கள்,எரிபொருள் நிலையங்கள் என ஆபத்தான இடங்களில் நாம் எமது செல்லிடத் தொலைபேசிகளை அணைத்து வைப்பதே சிறந்தது...
அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
வர்ட்டாஆஆஆ...
டாட்டா..
பை பை...
.
Subscribe to:
Post Comments (Atom)
43 . பின்னூட்டங்கள்:
இவ்வளவு நாள் புரிந்ததேயில்லை
நன்றிப்பா
கேள்விப்பட்ட விசயங்களுக்கு உரிய விளக்கம் இன்று கிடைத்தது நண்பா! நன்றி தகவலுக்கு!
ஜமால்! இலக்கியா வரவும்! ஓவர்!
நல்ல பதிவு.அறியத் தந்தமைக்கு நன்றி.
பதிவர்களின் பக்கம் சில பின்னூட்டங்களை கவனிச்சா மொக்கைச்சாமியோன்னு நினச்சிருந்தேன்:)
நட்புடன் ஜமால் said...
இவ்வளவு நாள் புரிந்ததேயில்லை
நன்றிப்பா//
நன்றி ஜமால் அண்ணே...
குடந்தைஅன்புமணி said...
கேள்விப்பட்ட விசயங்களுக்கு உரிய விளக்கம் இன்று கிடைத்தது நண்பா! நன்றி தகவலுக்கு!//
நன்றி நன்றி...
ராஜ நடராஜன் said...
நல்ல பதிவு.அறியத் தந்தமைக்கு நன்றி.//
நன்றிங்க...
ராஜ நடராஜன் said...
நல்ல பதிவு.அறியத் தந்தமைக்கு நன்றி.//
நன்றிங்க...
ஆககா! அச்சா அச்சா! நல்லாருக்கு! நீங்க என்னவா இருக்கிறீங்க? டெக்னோலஜி பிச்சு வாங்கிறீங்க...
ம்ம் ஓட்ட குத்தியாச்சு! :)
தொடருங்கோ! வாழ்த்துக்கள்... :))
புல்லட் பாண்டி said...
ஆககா! அச்சா அச்சா! நல்லாருக்கு! நீங்க என்னவா இருக்கிறீங்க? டெக்னோலஜி பிச்சு வாங்கிறீங்க...
ம்ம் ஓட்ட குத்தியாச்சு! :)
தொடருங்கோ! வாழ்த்துக்கள்... :))//
நன்றி புல்லட்...
இன்னும் மாணவன் தான்..
இப்போ தான் உயர்தரம் முடித்தேன்...
இனி மேல்படிப்பு...
:-)
இந்த அறிவியல் விடயங்கள் சின்ன வயதிலிருந்தே அலாதிப்பிரியம்.. அதான்..
:-)
சூப்பர் வேத்தியன். பிரயோசமான தகவல்கள் இவ்வளவு நாளா தெரியாத ஒன்று!
தகவலுக்கு நன்றி தல...
இது வரை தெரியாத சில/பல விசயங்களை தெளிவாக எடுத்துரைக்கும் சிறந்த பதிவு வேத்தியன், நிறைய தமிழ் வார்த்தைகளை சொல்லிருக்கீர்கள்
வாழ்த்துக்கள்
நானும் டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் தாங்க படிச்சேன்..
எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் எழுதணும்னு தோண மாட்டேங்குதே !!!
அசத்துறேள் வேத்தியன் !!!!
பயனுள்ள பதிவுங்க..
ஓட்டு போட்டாச்சு
இதான் மேட்டரா..!
நீங்க எங்க வேலை செய்யறீங்க?? தகவல்கள் பிரமிக்க வைக்கிறது இப்பொழுது நன்கு புரிகிறது... ஏன் பாவிக்கக்கூடாது என்று!!!
ஆனால் எனக்குப் பிரச்சனையே இல்லை.. நான் எங்கும் விமானப் பயணம் சென்றதில்லை!!!! நீங்கள் சொல்வதைப் போல சில சமயங்களில் மொபைல் அணைத்து (Switch off) இருப்பதுதான் நல்லது!!!
பதிவுக்குப் பாராட்டுகள்!!!
கலை - இராகலை said...
சூப்பர் வேத்தியன். பிரயோசமான தகவல்கள் இவ்வளவு நாளா தெரியாத ஒன்று!//
நன்றி கலை...
Anbu said...
தகவலுக்கு நன்றி தல...//
வந்ததுக்கு நன்றி தல...
:-)
அபுஅஃப்ஸர் said...
இது வரை தெரியாத சில/பல விசயங்களை தெளிவாக எடுத்துரைக்கும் சிறந்த பதிவு வேத்தியன், நிறைய தமிழ் வார்த்தைகளை சொல்லிருக்கீர்கள்
வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி அபுஅஃப்ஸர்...
அ.மு.செய்யது said...
நானும் டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் தாங்க படிச்சேன்..
எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் எழுதணும்னு தோண மாட்டேங்குதே !!!
அசத்துறேள் வேத்தியன் !!!!//
இது ஏதோ தோனிச்சு அதான் எழுதினேன்...
நன்றி செய்யது...
லோகு said...
பயனுள்ள பதிவுங்க..
ஓட்டு போட்டாச்சு//
நன்றிப்பா...
கவின் said...
இதான் மேட்டரா..!//
அட ஆமாங்க தல...
:-)
ஆதவா said...
நீங்க எங்க வேலை செய்யறீங்க?? தகவல்கள் பிரமிக்க வைக்கிறது இப்பொழுது நன்கு புரிகிறது... ஏன் பாவிக்கக்கூடாது என்று!!!
ஆனால் எனக்குப் பிரச்சனையே இல்லை.. நான் எங்கும் விமானப் பயணம் சென்றதில்லை!!!! நீங்கள் சொல்வதைப் போல சில சமயங்களில் மொபைல் அணைத்து (Switch off) இருப்பதுதான் நல்லது!!!
பதிவுக்குப் பாராட்டுகள்!!!//
எங்கும் வேலை செய்யவில்லைங்க...
இப்போ படிச்சுட்டு தான் இருக்கேன்...
நானும் விமானத்துல சென்றது கிடையாது...
:-)
இது தெரியாம நெறைய யூஸ் பண்ணீட்டேனே!!
இன்னிமே நான் என்ன பண்ணுவேன்!
thevanmayam said...
இது தெரியாம நெறைய யூஸ் பண்ணீட்டேனே!!//
டாக்குத்தரே...
நீங்களா???
:-)
thevanmayam said...
இன்னிமே நான் என்ன பண்ணுவேன்!//
முதல்ல ஃபோனை ஆஃப் பண்ணுங்க சாமியோவ்...
:-)
நமக்கு புரிஞ்ச விடயங்கள நமக்கு புரிஞ்ச மாதிரியே அடுத்தவங்களுக்கும் புரியவைக்கிறது பல பேருக்கு புரியாத ஒரு கலை..
உங்களுக்கு கைவந்திருக்கு... கலாய்ங்க தலைவா!!!
நல்ல பதிவு. பாராட்டுகள்!!!
நல்ல பகிர்வு நண்பரே... வாழ்த்துகளுடன் நன்றி
நல்ல பதிவு வாழ்த்துகள்
நிறைய அறிவியல் விடயங்களை அறியக் கூடியதாக இருந்தது உங்களது பதிவின் மூலம்...
தொடருங்கோ....!
விமானங்கள்,மருத்துவ மனைகளில் செல்லிடத் தொலைபேசி பாவிக்க அனுமதி இல்லாதது ஏன் ???
//
கல்யாணம் ஆன் வுடன் தெரியும் தம்பி
நல்ல தகவல்
நன்றி,
கடைக்குட்டி...
கடையம் ஆனந்த்
ஆ.ஞானசேகரன்
சொல்லரசன்
கமல்
வருங்கால முதல்வர்
நசரேயன்
நல்ல தகவல்.
வாழ்த்துகள்.
வண்ணத்துபூச்சியார் said...
நல்ல தகவல்.
வாழ்த்துகள்.//
மிக்க நன்றி...
//
மீடிறன் மட்டிசைக்கப்பட்டது.
வீச்சம் மட்டிசைக்கப்பட்டது
//
FM Radio'na - Frequency Modulated Radio and
AM Radio'na - Amplitude Modulated Radio அப்படிங்கறத
தெரிஞ்சு வைத்திருப்பதுக்கே நாங்க காலரை தூகிவிட்டுட்டு உடான்ஸ் விட்டுட்டு இருந்தோம்..
ஆனா அதுக்கு தமிழ்ல வார்த்தைய போட்டு எங்க காலர கட்பண்ணி ஆப் பண்ணிடியலே பாஸு..
நல்ல தகவல்..
சுரேஷ் குமார் said...
//
மீடிறன் மட்டிசைக்கப்பட்டது.
வீச்சம் மட்டிசைக்கப்பட்டது
//
FM Radio'na - Frequency Modulated Radio and
AM Radio'na - Amplitude Modulated Radio அப்படிங்கறத
தெரிஞ்சு வைத்திருப்பதுக்கே நாங்க காலரை தூகிவிட்டுட்டு உடான்ஸ் விட்டுட்டு இருந்தோம்..
ஆனா அதுக்கு தமிழ்ல வார்த்தைய போட்டு எங்க காலர கட்பண்ணி ஆப் பண்ணிடியலே பாஸு..
நல்ல தகவல்..//
மிக்க நன்றிங்க...
உபயோகமுள்ள நல்ல பதிவு வேத்தியன், வாழ்த்துக்கள்
Syed Ahamed Navasudeen said...
உபயோகமுள்ள நல்ல பதிவு வேத்தியன், வாழ்த்துக்கள்//
மிக்க நன்றிங்க...
Post a Comment