Monday, 27 April 2009

Email Hoax என்றால் என்ன ???


தற்போதைய காலகட்டத்தில் இணையம் பாவிப்போரின் பொதுவான இரு குற்றச்சாட்டுகள் என்றால் Email Scamsஉம் Internet Fraudஉம் தான்...

Email வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒருதடவையாவது இந்த Hoax mails வந்திருக்கும்...

சரி விரிவாகப் பாக்கலாம்...

Hoax என்பதற்கு தமிழில் அர்த்தம் பார்த்தால் போலி,ஏமாற்றுதல்,குறும்புத்தனமாக ஏமாற்றுதல் என்று பொருள்.
ஆக குறும்புத் தனமாக ஏமாற்றும் நோக்கில் வேலை வெட்டி இல்லாதவர்களால் மின்னஞ்சல் பயனர்களுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் தான் இந்த Hoax mails.

அதாவது இந்த Email Hoax, Hoax mails என்பவற்றை ஒரு வார்த்தையிலோ, அல்லது தெளிவாக இது தான் என்றோ விளக்க முடியாது...
இதை Email Scams  என்றும் சொல்லலாம்.
இந்த வகையான மின்னஞ்சல்கள் பயனர்களுக்கு பணம் மற்றும் மன ரீதியில் பாதகமான விளைவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்...

இந்த Hoax mailsஆனது உருவாக்கியவர்களால் மற்றவர்களுக்கு வெவ்வேறு நோக்கில் அனுப்பப்படும்...
இந்த வகையான மின்னஞ்சல்களை பாதுகாப்பாக அணுக அவற்றின் வெவ்வேறு வகைகளை அறிந்திருப்பது முக்கியம்.


  • Phishing: This scam involves thieves trolling the Internet with fake e-mails, Web sites, chat rooms and other devices while illegally using the names of trusted financial brands in an attempt to convince victims to divulge personal financial information such as credit card or social security numbers.

  • Money handling: This scam involves recruiting a third-party to receive funds stolen through another e-mail scam into an account before then transferring the money overseas, minus a commission. One such e-mail that recruits money handlers, or "mules," often has a subject line like, "I need your assistance," and a message that describe the sender as an overseas government official who is trying to move his countries' assets to a new secure location.

  • Advance fee fraud: In this arrangement, a person is approached by someone posing as Nigerian official about an opportunity to make a huge commission by helping the crooked "official" hide a massive overpayment on a government contract. In the end, the victim is persuaded to provide a large up-front fee to keep the transaction moving forward.

  • Lottery scams: Potential victims are notified via e-mail that they have won a large prize in a foreign lottery. In most cases, the victim is asked to provide either an up-front fee, or bank account or social security numbers so that the lottery can transfer the money.

  • Internet auction scams: In this case, scam artists pick victims from those using sites such as eBay or Craigslist. They contact those bidding by e-mail asking to work with them outside the auction to make a deal. As usual, the perpetrator asks for payment up front, often in cash.

  • இந்த வகையான மின்னஞ்சல்களை பாதுகாப்பாகவும், பொது அறிவுடனும் அணுக வேண்டும்.
    உதாரணமாக “உங்களுக்கு நாம் நடத்திய லொத்தர் சீட்டிழுப்பில் பரிசு விழுந்திருக்கிறது.” என்ற ஒரு மின்னஞ்சலை பார்த்தவுடன் எம்மைப் போன்ற முட்டாள்கள் என்ன செய்வோம்??
    உடனடியாக அது தொடர்பாக ஏதாவது முட்டாள் தனமான முடிவுகளை எடுப்போம்..
    அதுவே அவர்களுக்கு சாதகமாக அமைந்து விடும்.

    பதிலாக அந்த முறையிலான மின்னஞ்சல்கள் கிடைத்தால் புத்தியுடன் யோசித்துப் பார்க்க வேண்டும்.
    நாமே விண்ணப்பிக்காமல் நமக்கு லொத்தரில் எப்பிடி பரிசு விழும் ???
    :-)

    இந்த தொடுப்பைப் பயன்படுத்தி இது பற்றி அறிந்து கொள்க.

    இந்த தொடுப்பைப் பயன்படுத்தி இது பற்றி அறிந்து கொள்க.

    தற்போதைய காலகட்டத்தில் பொதுவான பிரச்சினையாக இது வளர்ந்து வருகிறது.
    ஆக எல்லோரும் அறிவை பாவித்து பாதுகாப்பாக இருப்பதே நல்லது.



    Email Hoax என்றால் என்ன ???SocialTwist Tell-a-Friend

    11 . பின்னூட்டங்கள்:

    கடைக்குட்டி on 27 April 2009 at 11:04 said...

    நல்லா இருக்கு.... கம்பூட்டர் பொட்டி ரொம்ப புடிக்குமா????? கலக்குறீங்க...

    கடைக்குட்டி on 27 April 2009 at 11:05 said...

    மீ த ஃப்ஸ்ட் ?????கடய நாந்தான் தொறந்து வெச்சு இருக்கேனா??? உடனே சூடான இடுகையாகும் பாருங்க....

    கார்த்திகைப் பாண்டியன் on 27 April 2009 at 15:45 said...

    ஹி.. ஹி.. ஹி.. நானும் ஒரு தடவை வாயப் பொளந்துக்கிட்டு நம்பி இருக்கேன்ப்பா.. அப்புறமா லாட்டரிக்காரன் நீங்க பணம் தாங்கன்னு கேட்டப்பத்தான் இது டுபாக்கூருன்னு உரைச்சது.. நல்ல பதிவு..

    सुREஷ் कुMAர் on 27 April 2009 at 16:01 said...

    //
    இந்த வகையான மின்னஞ்சல்களை பாதுகாப்பாகவும், பொது அறிவுடனும் அணுக வேண்டும்.
    //
    ஹெ ஹே.. இதுக்கு தான் சம்மந்தமே இல்லாம வர்ற இந்தமாதிரி மெயில எல்லாம் நான் படிப்பதே இல்லை.. செலக்ட் ஆல் அண்ட் டெலிட் தான்..

    सुREஷ் कुMAர் on 27 April 2009 at 16:02 said...

    //
    உடனடியாக அது தொடர்பாக ஏதாவது முட்டாள் தனமான முடிவுகளை எடுப்போம்..
    //
    நெறையா அனுபவம் இருக்கும் போல..!

    ஆதவா on 27 April 2009 at 17:15 said...

    இரண்டு மூன்று வருடத்திற்கு முன்னர், ஏதோ ஒரு அமெரிக்க வங்கியிலிருந்து எனக்கு மடல் வந்தது. லாட்டரி பணத்தை எடுத்துக் கொள்ள உங்களது கிரடிட் கார் எண் வேண்டுமென்று.. (நம்ம கிட்ட ஏது கிரடிட் கார்டு?)

    திடீர் சந்தோஷம்... அப்பத்தான் நினைச்சேன்... ஏதோ ஃப்ராடு இருக்குமோ என்று. பிறகுதான் தெரிந்தது அந்த மெயில் முகவரியில் ஒரெழுத்து மட்டும் சற்றே மாறியிருப்பதும்.. அது ஒரு ப்ராடுலண்ட் மெயில் என்றும்...

    நல்லவேளையாக எனது முகவரியையெல்லாம் கொடுக்கவில்லை.

    பயனுள்ள பதிவு வேத்தியன்.

    ஆ.சுதா on 27 April 2009 at 17:38 said...

    நாமே விண்ணப்பிக்காமல் நமக்கு லொத்தரில் எப்பிடி பரிசு விழும் ???
    :-)

    நீங்க வேற...
    ஏற்கனவே பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்கல்ல 'கொடுக்கிற தெய்வம் கூரைய பிச்சிக்கிட்டு கொடுக்கும்னு, அப்படி ஏதாவது தெய்வம் கம்பியூட்டர பொத்துக்கிட்டு கொடுத்துட்டோன்னு நிச்சிருவோம்ல..!!


    நல்ல பயனுள்ள பதிவு வேத்தியன்.
    இப்படி ஏமாறகூடாது.

    ஆ.ஞானசேகரன் on 28 April 2009 at 00:54 said...

    ஆசையை அதாவது பேராசையை குறைத்துக்கொண்டு சிந்தித்தால் இது போன்ற மோசடியில் இருந்து தப்பிக்கலாம்... நன்றி நண்பா..

    S.A. நவாஸுதீன் on 28 April 2009 at 11:47 said...

    வழக்கம் போல் மிக பயனுள்ள பதிவு. நீங்க கலக்குங்க வேத்தியன்.

    வேத்தியன் on 28 April 2009 at 14:38 said...

    வந்து பின்னூட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி...

    Subash on 28 April 2009 at 19:22 said...

    அருமை
    நல்ல விடயங்கள்

     

    COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.