தை மாதத்தின் முதல் நாளாக தமிழர்களால் கொள்ளப்படுவது தைப்பொங்கல் நாளாகும்.
அதையே தமிழர் புதுவருடமாக சிறு காலத்துக்கு முன் தமிழ்நாட்டு முதல்வர், கலைஞர் என அழைக்கப்படும் கருணாநிதி அறிவித்திருந்தார் என்பது அனைவரும் அறிந்த விடயம்...
நான் பொதுவாக எந்த அரசியல் வாதிகளுக்கும் அவர்கள், இவர்கள் என மரியாதை கொடுப்பதில்லை...
(தற்போதைய அரசியல் வாதிகளுக்கு மட்டும்... :-) )
ஆனால் கருணாநிதி எழுதிய சில எழுத்துகள் எனக்கு உண்மையிலேயே பிடிக்கும்..
அதானால் மட்டும் அவரை கருணாநிதி என பெயர் சொல்லி அழைக்காமல் கலைஞர் என அழைப்பேன்..
:-)
சன் டீ.வியின் உரிமையாளர் கலாநிதி மாறன் மற்றும் அவருடைய குடும்பத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கலைஞர் தொடங்கிய தொலைக்காட்சி தான் கலைஞர் தொலைக்காட்சி..
இது அனைவரும் அறிந்ததே...
அதைத் தொடர்ந்து சிரிப்பொலி, செய்திகளுக்காக தொடங்கப்பட்ட தொலைக்காட்சி என ஏகப்பட்டது இருக்கின்றது...
இப்போ விஷயம் என்னான்னா, தைப்பொங்கல் தினத்தை தமிழர் புதுவருடமாக அறிவித்த கலைஞர் சித்திரை புதுவருட தினத்தை மறந்திருக்க வேண்டும்..
ஆனால் கலைஞர் தொலைக்காட்சிக்கு போட்டியாக உள்ள விஜய் டீ.வி, ஜெயா டீ.வி, சன் டீ.வி போன்றன சித்திரை தமிழ் புத்தாண்டு தினத்துக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் என்று சொல்லி பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பிருப்பதை தத்தமது தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தி வருகின்றன...
விஜய் டீ.வி ஒரு வித்தியாசமாக சித்திரை புதுவருடம் என சொல்லாமல் "சித்திரை விழா" என கூறி வருகிறது..
புதுவருடம் என சொன்னால் அரசியல் ரீதியாக ஏதும் பிரச்சனை வரும் என பயமோ???
:-)
இப்படி கலைஞர் தொலைக்காட்சிக்கு போட்டியாகவுள்ள தொலைக்காட்சிகள் அனைத்தும் சித்திரைப் புதுவருடத்துக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது அறிந்த கலைஞர் தொலைக்காட்சி சித்திரை முதல் நாள் என்ற பெயரில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப ஆயத்தமாக இருக்கின்றது...
சரி, அப்படியானால் எல்லா மாத முதல் நாளுக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப வேண்டியது தானே???
அது ஏன் சித்திரை மாதத்தின் முதல் நாளுக்கு மட்டும் சிறப்பு நிகழ்ச்சிகள்???
காரணம் விளங்கவில்லை எனக்கு...
:-)
கலைஞர் தைப்பொங்கல் தினத்தை தமிழர் புதுவருடமாக அறிவித்தால் ஜெயலலிதாவுக்கு சித்திரை மாதம் தான் தமிழர் புதுவருடம் வரும் கட்டாயமாக...
கலைஞர் வடக்கு என்றால் ஜெயலலிதா தெற்கு தானே???
:-)
100 % அரசியல் வாதிகள் இருவரும்...
இப்படி தங்களுக்குள் சணடை பிடிப்பதை நிறுத்தி நாட்டை பற்றி சிந்தித்திருந்தால் இன்னும் கொஞ்சம் தமிழ்நாட்டை முன்னேற்றியிருக்கலாம் அல்லவா???
நான் குறிப்பாக இவர்களை மட்டும் சொல்லவில்லை..
எல்லா அரசியல் வாதிகளும் தான்...
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சிகள் கலைஞரின் அனுமதியோடு தானே ஒளிபரப்பப்படுகிறது???
தைப்பொங்கல் தினத்தை தமிழர் புத்தாண்டாக அறிவித்த கலைஞர் ஏன் இதற்கு அனுமதி அளித்தார்???
நிகழ்ச்சிகளுக்காக விளம்பரம் மூலம் வரும் பணமா காரணம் ???
புரியவில்லை எனக்கு...
ஏதும் நுண்ணரசியல் இருக்குமோ???
:-)
நான் இந்த விடயம் பத்தி அரசியல் நோக்கில் எழுதவில்லை...
அரசியல் எனக்கு பிடிக்காது...
எது எப்படியிருந்தாலும் சித்திரை புதுவருட தினத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதால் நமக்கு தானே ஜாலி...
:-)
Sunday, 12 April 2009
தமிழர் புதுவருடத்துக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகள் !
தமிழர் புதுவருடத்துக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகள் !
Subscribe to:
Post Comments (Atom)
59 . பின்னூட்டங்கள்:
அரசியல் பிடிக்காதி பிடிக்காது என்று ஒதுங்கிவிட்டால்
என்று தான் அதை சரி செய்வது
நட்புடன் ஜமால் said...
அரசியல் பிடிக்காதி பிடிக்காது என்று ஒதுங்கிவிட்டால்
என்று தான் அதை சரி செய்வது//
வாங்க ஜமால் அண்ணே...
அரசியல் பிடிக்காமல் போனதுக்கு காரணமே இப்போதுள்ள அரசியல்வாதிகள் தான்...
:-)
//விஜய் டீ.வி ஒரு வித்தியாசமாக சித்திரை புதுவருடம் என சொல்லாமல் "சித்திரை விழா" என கூறி வருகிறது..//
எப்படி அழைத்தால் என்ன ?
நல்ல விஷயம் தானே !!!!!
//சரி, அப்படியானால் எல்லா மாத முதல் நாளுக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப வேண்டியது தானே???
அது ஏன் சித்திரை மாதத்தின் முதல் நாளுக்கு மட்டும் சிறப்பு நிகழ்ச்சிகள்???
காரணம் விளங்கவில்லை எனக்கு...///
சபாஷ்...சரியான கேள்வி...
யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு(மதுரக்காரங்கப்பா) சித்திரை தான் தமிழ் புத்தாண்டு..அனைவருக்கும் முந்திய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..
தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கட்டுரைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
கருணாநிதியை கலைஞர் என அழைக்காமல் கொலைஞர் என இனி அழைக்கவேண்டும்.
//கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சிகள் கலைஞரின் அனுமதியோடு தானே ஒளிபரப்பப்படுகிறது???//
இப்படிக் கேள்வி கேட்டால், அதன் தலைமை அதிகாரியைத் தான் கேட்கவேண்டும் என்று பதில் வரும்.
திரு சரத் அவர்கள் தான் இந்த டி.வி யை ஆரம்பித்துக் கொடுத்தார்.
பாவம் அவர் கதி என்ன ஆனதோ?! இப்ப எங்க இருக்குறாரோ?!
இதுதான் இந்த காலத்துல ஞாயம்.
நமக்குத் தான் புரியமாட்டேங்குது.
Tamil new year is only on chithirai 1 only. No dog can change this
100 % அரசியல் வாதிகள் இருவரும்...
இப்படி தங்களுக்குள் சணடை பிடிப்பதை நிறுத்தி நாட்டை பற்றி சிந்தித்திருந்தால் இன்னும் கொஞ்சம் தமிழ்நாட்டை முன்னேற்றியிருக்கலாம் அல்லவா???
நான் குறிப்பாக இவர்களை மட்டும் சொல்லவில்லை..
எல்லா அரசியல் வாதிகளும் தான்...//
ம்....நல்ல சிந்தனை தான்? இதைப் பற்றிக் கலைஞர் எப்பவோ சிந்தித்திருந்தாலே கதிரையை மற்றவைக்கு விட்டுக் கொடுத்திருப்பார்??
ம்...கலைஞர் அறிஞ்சால் உங்களைத் தேடியும் ஒரு இரங்கற்பா அனுப்பி வைச்சிடுவார்? கவனம்:))
//100 % அரசியல் வாதிகள் இருவரும்...
இப்படி தங்களுக்குள் சணடை பிடிப்பதை நிறுத்தி நாட்டை பற்றி சிந்தித்திருந்தால் இன்னும் கொஞ்சம் தமிழ்நாட்டை முன்னேற்றியிருக்கலாம் அல்லவா???//
நல்ல கனவா இருக்கு வேத்தியன்... கொஞ்சம் தூக்கம் கழைந்து வாருங்கள். நடக்குற காரியத்தை பற்றி பேசலாம்... ஹிஹிஹி
அரசியல் வேறு, வியாபாரம் வேறு.
தொழில் வேறு, நட்பு வேறு.
இரண்டு வெவ்வேறான விசயங்களைப் போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது.
அரசியல் வியாபாரத்தை காப்பாற்றிக் கொள்ள. வியாபாரம் பணம் சம்பாதிக்க.
அப்படி இருக்கும் போது இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்கின்றீர்களே...
// எது எப்படியிருந்தாலும் சித்திரை புதுவருட தினத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதால் நமக்கு தானே ஜாலி... //
ஜாலியா... கொடுமையோ கொடுமை..
சினிமா நடிகர்கள், சினிமாவை விட்டால் வேறு ஒன்றும் இவர்களுக்குத் தெரியாது.
அன்று சினிமா நிகழ்ச்சிகள்தான் அதிகமான இடத்தைப் பிடித்துக் கொண்டு இருக்கும்..
வாழ்க பண நாயகம்.
அ.மு.செய்யது said...
//விஜய் டீ.வி ஒரு வித்தியாசமாக சித்திரை புதுவருடம் என சொல்லாமல் "சித்திரை விழா" என கூறி வருகிறது..//
எப்படி அழைத்தால் என்ன ?
நல்ல விஷயம் தானே !!!!!//
சரிதான் நண்பா...
Rajeswari said...
யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு(மதுரக்காரங்கப்பா) சித்திரை தான் தமிழ் புத்தாண்டு..அனைவருக்கும் முந்திய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..//
கரெக்ட்...
உங்களுக்கும் முந்திய புத்தாண்டு வாழ்த்துகள்...
Anonymous said...
கருணாநிதியை கலைஞர் என அழைக்காமல் கொலைஞர் என இனி அழைக்கவேண்டும்.//
ம்...
என்னை ஒருவழி பண்ணாம விடமாட்டீங்க போல...
இந்தக் கருத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...
ஜோதிபாரதி said...
//கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சிகள் கலைஞரின் அனுமதியோடு தானே ஒளிபரப்பப்படுகிறது???//
இப்படிக் கேள்வி கேட்டால், அதன் தலைமை அதிகாரியைத் தான் கேட்கவேண்டும் என்று பதில் வரும்.
திரு சரத் அவர்கள் தான் இந்த டி.வி யை ஆரம்பித்துக் கொடுத்தார்.
பாவம் அவர் கதி என்ன ஆனதோ?! இப்ப எங்க இருக்குறாரோ?!
இதுதான் இந்த காலத்துல ஞாயம்.
நமக்குத் தான் புரியமாட்டேங்குது.//
ஆமாங்க, சரிதான்...
Raja said...
Tamil new year is only on chithirai 1 only. No dog can change this//
வார்த்தைகளை கொஞ்சம் கட்டுப்படுத்தி கருத்து தெரிவித்தல் நல்லமல்லவா நண்பரே...
:-)
கமல் said...
100 % அரசியல் வாதிகள் இருவரும்...
இப்படி தங்களுக்குள் சணடை பிடிப்பதை நிறுத்தி நாட்டை பற்றி சிந்தித்திருந்தால் இன்னும் கொஞ்சம் தமிழ்நாட்டை முன்னேற்றியிருக்கலாம் அல்லவா???
நான் குறிப்பாக இவர்களை மட்டும் சொல்லவில்லை..
எல்லா அரசியல் வாதிகளும் தான்...//
ம்....நல்ல சிந்தனை தான்? இதைப் பற்றிக் கலைஞர் எப்பவோ சிந்தித்திருந்தாலே கதிரையை மற்றவைக்கு விட்டுக் கொடுத்திருப்பார்??
ம்...கலைஞர் அறிஞ்சால் உங்களைத் தேடியும் ஒரு இரங்கற்பா அனுப்பி வைச்சிடுவார்? கவனம்:))//
ஐயையோ..
எனக்கே இரங்கற்பாவா???
:-)
ஆ.ஞானசேகரன் said...
//100 % அரசியல் வாதிகள் இருவரும்...
இப்படி தங்களுக்குள் சணடை பிடிப்பதை நிறுத்தி நாட்டை பற்றி சிந்தித்திருந்தால் இன்னும் கொஞ்சம் தமிழ்நாட்டை முன்னேற்றியிருக்கலாம் அல்லவா???//
நல்ல கனவா இருக்கு வேத்தியன்... கொஞ்சம் தூக்கம் கழைந்து வாருங்கள். நடக்குற காரியத்தை பற்றி பேசலாம்... ஹிஹிஹி//
:-)))
இராகவன் நைஜிரியா said...
// எது எப்படியிருந்தாலும் சித்திரை புதுவருட தினத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதால் நமக்கு தானே ஜாலி... //
ஜாலியா... கொடுமையோ கொடுமை..
சினிமா நடிகர்கள், சினிமாவை விட்டால் வேறு ஒன்றும் இவர்களுக்குத் தெரியாது.
அன்று சினிமா நிகழ்ச்சிகள்தான் அதிகமான இடத்தைப் பிடித்துக் கொண்டு இருக்கும்..
வாழ்க பண நாயகம்.//
இது வாஸ்தவம்...
என்னவோ சினமாகாரங்களை விட்டா ஒன்னுமே நிகழ்ச்சி பண்ணமுடியாதது போல முழுதும் அவங்களை வச்சே நிகழ்ச்சிகள்...
அதுலயும் அன்னைக்குன்னு வந்து ஹீரோயின்ஸ் 'தமில்' பேசுவாங்க...
பகிரங்க குற்றச்சாட்டு இங்கு
பயமில்லாமல் அரங்கேற்றியுள்ளிர்...ஆட்சிக்கு வருவோர் எல்லாம் அரங்கேற்றுவதே சட்டம்...
"தமிழர் புதுவருடத்துக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகள் !"
அரசியல்ல இதேல்லாம் சகஜமப்பா!
ஏதோ அன்று ஒரு நாள் நம்மக்களூக்கு(உள்ளூரில் இருப்பவர்கள்) லீவு கிடைக்கிறது, அதையும் நீங்க கெடுத்துவிடுவீர்கள் போலிருக்கே
நல்ல அலசல் வேத்தியன்...
தமிழ் வருடப்பிறப்பை மாற்றியது அரசியல் புகழுக்காக
அதை வைத்து நிறைய நிகழ்ச்சி செய்வது வியாபாரத்திற்காக
ஆகவே என்னத்த சொன்னாலும் அவர்கள் தீர்மானிப்பதுதான்... கட்சி இருக்கோ இல்லியோ சொந்த டீவீ சேனல் இருக்குப்பா இந்த நாட்டை(???) காப்பாத்த
அரசியல்ல இதெல்லாம் சகஜம் வேத்தியன். இவங்க குடும்ப சண்டையை கூட கூலா அரசியல் பண்ணுவாங்க
//கலைஞர் தைப்பொங்கல் தினத்தை தமிழர் புதுவருடமாக அறிவித்தால் ஜெயலலிதாவுக்கு சித்திரை மாதம் தான் தமிழர் புதுவருடம் வரும் கட்டாயமாக...
கலைஞர் வடக்கு என்றால் ஜெயலலிதா தெற்கு தானே???//
நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை ........... அடுத்து அம்மா ஆட்சிக்கு வந்தா கண்டிப்பா தமிழ்வருட பிறப்பை சித்திரை முதல் நாள் என்று சட்டம் போடுவார்.......இதுதான் தமிழ் மக்களின் தலை எழுத்து
//அப்படியானால் எல்லா மாத முதல் நாளுக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப வேண்டியது தானே???
அது ஏன் சித்திரை மாதத்தின் முதல் நாளுக்கு மட்டும் சிறப்பு நிகழ்ச்சிகள்???
காரணம் விளங்கவில்லை எனக்கு...///
ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த நாள் அரசாங்க விடுமுறை......... மத்த தமிழ் மாதங்களின் முதல் தேதிக்கு அரசாங்க விடுமுறை இல்லையே
இப்படி கலைஞர் தொலைக்காட்சிக்கு போட்டியாகவுள்ள தொலைக்காட்சிகள் அனைத்தும் சித்திரைப் புதுவருடத்துக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது அறிந்த கலைஞர் தொலைக்காட்சி சித்திரை முதல் நாள் என்ற பெயரில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப ஆயத்தமாக இருக்கின்றது...//
ஆடு பகை குட்டி உறவு...(குட்டினு நான் சொன்னது கலைஞர் டீவிய)...
:)))
எத்தனை நாள் தான் எம்மாற்றுவார் இந்த நாட்டில் சொந்த நாட்டிலே விட்டிலே ஹா ஹா அருமை கருத்துகள் சூளிர் :-)
தமிழரசி said...
பகிரங்க குற்றச்சாட்டு இங்கு
பயமில்லாமல் அரங்கேற்றியுள்ளிர்...ஆட்சிக்கு வருவோர் எல்லாம் அரங்கேற்றுவதே சட்டம்...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழரசி...
கவின் said...
"தமிழர் புதுவருடத்துக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகள் !"
அரசியல்ல இதேல்லாம் சகஜமப்பா!//
வருகைக்கு நன்றி கவின்...
அபுஅஃப்ஸர் said...
ஏதோ அன்று ஒரு நாள் நம்மக்களூக்கு(உள்ளூரில் இருப்பவர்கள்) லீவு கிடைக்கிறது, அதையும் நீங்க கெடுத்துவிடுவீர்கள் போலிருக்கே//
எனக்கும் நிகழ்ச்சிகள் போடுறதுல சந்தோஷம் தான்..
ஆனா மேட்டர் அதுவல்லவே...
:-)
Syed Ahamed Navasudeen said...
அரசியல்ல இதெல்லாம் சகஜம் வேத்தியன். இவங்க குடும்ப சண்டையை கூட கூலா அரசியல் பண்ணுவாங்க//
எல்லாமே அரசியல் தான்...
அத்திரி said...
//அப்படியானால் எல்லா மாத முதல் நாளுக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப வேண்டியது தானே???
அது ஏன் சித்திரை மாதத்தின் முதல் நாளுக்கு மட்டும் சிறப்பு நிகழ்ச்சிகள்???
காரணம் விளங்கவில்லை எனக்கு...///
ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த நாள் அரசாங்க விடுமுறை......... மத்த தமிழ் மாதங்களின் முதல் தேதிக்கு அரசாங்க விடுமுறை இல்லையே//
இந்த மேட்டர் புதுசா கீது...
வழிப்போக்கன் said...
இப்படி கலைஞர் தொலைக்காட்சிக்கு போட்டியாகவுள்ள தொலைக்காட்சிகள் அனைத்தும் சித்திரைப் புதுவருடத்துக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது அறிந்த கலைஞர் தொலைக்காட்சி சித்திரை முதல் நாள் என்ற பெயரில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப ஆயத்தமாக இருக்கின்றது...//
ஆடு பகை குட்டி உறவு...(குட்டினு நான் சொன்னது கலைஞர் டீவிய)...
:)))//
கொஞ்சம் விளங்கினா மாதிரி இருக்கு..
ஆனா விளங்காத மாதிரியும் இருக்கு...
:-)
Suresh said...
எத்தனை நாள் தான் எம்மாற்றுவார் இந்த நாட்டில் சொந்த நாட்டிலே விட்டிலே ஹா ஹா அருமை கருத்துகள் சூளிர் :-)//
நன்றி மாம்ஸ்...
அஞ்சாதே...... விரைவில் என்று கலைஞரில் விளம்பரம் கொடுக்கும் பொழுதே நினைத்தேன். மேட்டர் என்னன்னு..
எங்கள் ஊரில் சித்திரை முதல் நாளை, சித்திரைக் கனி என்று கொண்டாடுவோம். எல்லா கோவில்களிலும் விசேசமாக இருக்கும்.. (திருப்பூர் காரய்ங்க எடுத்து சொல்லுங்கப்பா) கனி என்று ஏன் சொல்லப் படுகிறது... கனிந்து வருவதால் தானே.... புது பழம்.. புதுவருடம்... என்பதால்...
இந்த வருடம் "விரோதி" வருடமாம்.... கெட்டவைகளுக்கு விரோதியா என்னவோ???
என்னதான் தை முதல் மாதம்னாலும்... இன்னிக்கும் என்னைக் கேட்டால், தமிழ்மாதத்தை சித்திரையில் இருந்துதான் நான் தொடக்குவேன்!!!
நான் சொல்ல நினைத்த விஷயத்தை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் வேத்தியன்.
(( வழக்கம் போல ஓட்டு))
விடையில்லாத வினாக்கள் தொடுத்த வேத்தியன் வாழ்க!
//படைப்பு பிடிச்சிருந்தா உங்க ஓட்டையும் குத்திட்டு போங்க...//
குத்துறதுக்கு ஒன்னும் கொடுத்தனுப்பலையே?
சன் டிவி இதை சித்திரை விழா என்றோ, தமிழ் புத்தாண்டு என்றோ கூறாமல் தன் பிறந்த நாள் விழா என்று கூறுகிறது.
தை மாதத்தின் முதல் நாளாக தமிழர்களால் கொள்ளப்படுவது தைப்பொங்கல் நாளாகும்.
அதையே தமிழர் புதுவருடமாக சிறு காலத்துக்கு முன் தமிழ்நாட்டு முதல்வர், கலைஞர் என அழைக்கப்படும் கருணாநிதி அறிவித்திருந்தார் என்பது அனைவரும் அறிந்த விடயம்...
///
சித்திரை 1 ஐ மாற்ற சரியான காரணம் என்ன?
இப்படி மாற்றினால் பழைய வரலாறு குளறுபடியாகி விடாதா?
யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு(மதுரக்காரங்கப்பா) சித்திரை தான் தமிழ் புத்தாண்டு..அனைவருக்கும் முந்திய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..///
ராஜேஸ் சொன்னதை வழிமொழிகிறேன்!
ஓட்டும் போட்டாச்சு!
@ ஆதவா...
சித்திரைக்கனிக்கு நல்ல விளக்கம்...
:-)
நன்றி...
பழமைபேசி said...
விடையில்லாத வினாக்கள் தொடுத்த வேத்தியன் வாழ்க!
//படைப்பு பிடிச்சிருந்தா உங்க ஓட்டையும் குத்திட்டு போங்க...//
குத்துறதுக்கு ஒன்னும் கொடுத்தனுப்பலையே?//
நன்றி...
கையில இருக்குறத வச்சு குத்துங்கண்ணே...
:-)
அறிவிலி said...
சன் டிவி இதை சித்திரை விழா என்றோ, தமிழ் புத்தாண்டு என்றோ கூறாமல் தன் பிறந்த நாள் விழா என்று கூறுகிறது.//
அப்பிடியும் இருக்கோ???
சன் டீ.வி எமக்கு வராதே...
:-)
thevanmayam said...
இப்படி மாற்றினால் பழைய வரலாறு குளறுபடியாகி விடாதா?//
ஆகும் தான்..
என்ன செய்வது ???
thevanmayam said...
ஓட்டும் போட்டாச்சு!//
மிக்க நன்றி பாஸு...
50
:-)
தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.
Rajaraman said...
தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.//
வருகைக்கு நன்றி ராஜாராமன்...
யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு(மதுரக்காரங்கப்பா) சித்திரை தான் தமிழ் புத்தாண்டு..அனைவருக்கும் முந்திய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..
12 April 2009 11:43//
இதுதான் எங்க மதுரைக்கர்ரங்களொட நேர்மை.
நன்றி ராஜேஸ்வரி.. நல்ல் புத்தாண்ட்டு மலரட்டும்.
உங்களுக்கும் எல்லோருக்கும் வாழ்த்துகள்.
தோழர்களே தோழர்களே
இந்த கபட வேதியன்
வேத்தியன் என்ற பெயரில்
அம்மையாருக்கு அடிபணிந்து
எம் மீது பழி சொல்ல முயல்கிறான்
வாழ்க தமிழ் சாக தமிழ் ஈழ மக்கள்
இது வேத்தியனின் பதிவை படித்து அதற்கு முத்தமிழ் அறிஞர் எழுதிய மறுப்பபு அறிக்கையாகும்
வல்லிசிம்ஹன் said...
யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு(மதுரக்காரங்கப்பா) சித்திரை தான் தமிழ் புத்தாண்டு..அனைவருக்கும் முந்திய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..
12 April 2009 11:43//
இதுதான் எங்க மதுரைக்கர்ரங்களொட நேர்மை.
நன்றி ராஜேஸ்வரி.. நல்ல் புத்தாண்ட்டு மலரட்டும்.
உங்களுக்கும் எல்லோருக்கும் வாழ்த்துகள்.//
வருகைக்கு நன்றி வல்லிசிம்ஹன்...
Maal said...
தோழர்களே தோழர்களே
இந்த கபட வேதியன்
வேத்தியன் என்ற பெயரில்
அம்மையாருக்கு அடிபணிந்து
எம் மீது பழி சொல்ல முயல்கிறான்
வாழ்க தமிழ் சாக தமிழ் ஈழ மக்கள்
இது வேத்தியனின் பதிவை படித்து அதற்கு முத்தமிழ் அறிஞர் எழுதிய மறுப்பபு அறிக்கையாகும்//
ஆஹா...
வீட்டை தேடி ஆட்டோ அனுப்பப்போறாங்களே...
இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...
:-)
சித்திரை புதுவருட கொண்டாட்டம் தண்டனைக்கு உரியது என அரசு
அறிவிக்கவில்லையே...
கொண்டாடுவோம்...
மனிதனுக்குதானே இந்த கொண்டாட்டமெல்லாம்...
புவியும், சூரியனும் தம் கடமையை
தவறாது செய்து கொண்டுதான் இருக்கிறது.
அறிவே தெய்வம் said...
சித்திரை புதுவருட கொண்டாட்டம் தண்டனைக்கு உரியது என அரசு
அறிவிக்கவில்லையே...
கொண்டாடுவோம்...
மனிதனுக்குதானே இந்த கொண்டாட்டமெல்லாம்...
புவியும், சூரியனும் தம் கடமையை
தவறாது செய்து கொண்டுதான் இருக்கிறது.//
அரசு தவறு என அறிவித்தது என நானும் சொல்லவில்லையே...
நான் சொன்ன விடயமே வேறு...
:-)
பன்னிரண்டு ராசி சக்கரத்தில் மேஷ ராசியிலிருந்து சூரியன் இடப ராசிக்கு மாறுவது தான் வருடப்பிறப்பு என்பது தெரியாத மூடன் மு.கருணாநிதி. புதுமை எனும் பெயரில் எமது கலாசாரத்தை சீரழிக்க இடமளியாதீர்கள். தினம் ஒரு பெண் தேடும் சாத்தான் கலைஞர். வாக்குகண்ணன். இவர்களை அரசமைக்க விட்டது தமிழகத்தின் தரித்திரம் என்று தான் சொல்ல வேண்டும்.
Post a Comment