என்னையும் தொடர் பதிவிட அழைத்த "ரசனைக்காரி" ராஜேஸ்வரி அக்காவுக்கு நன்றிகள்...
அவங்களோட பதிவு படிக்க இங்கே க்ளிக்கவும்...
ஆனா விஷயம் என்னான்னா வேத்தியனாகிய நான் இன்னும் கல்லூரியில் சேரவே இல்லை...
இப்போ தான் பள்ளி வாழ்க்கை முடிஞ்சிருக்கு...
இந்த ஜூலையில தான் கல்லூரி...
:-)
ஆனாலும் என் பள்ளி வாழ்க்கை பத்தி எழுதனும்ன்னு ரொம்ப நாளா நினைச்சுட்டிருந்தேன்...
இந்த பதிவு மூலமா நான் அது பத்தி எழுதிடுறேன்...
"வேத்தியன்" எனும் பெயரானது எனது சொந்தப்பெயர் அல்ல..
நான் படித்தது Royal College எனும் கொழும்பிலுள்ள பள்ளியிலாகும்..
தமிழில் எமது பள்ளியை "வேத்தியர் கல்லூரி" என அழைப்போம்.
பதிவு எழுத வந்த போது சில பல காரணங்களுக்காக சொந்தப்பெயர் வைக்க வேண்டாம்ன்னு முடிவு பண்ணினேன்..
ஒரு பெயர் யோசிக்கும் போது கூட சட்டென்று ஞாபகத்துக்கு வரும் இடம் எனது பள்ளி...
அதனால வச்ச பெயர் தான் "வேத்தியன்" எனும் பெயர்...
ஆங்கிலத்தில் பொருள் Royalist என்பதாகும்...
ஒவ்வொரு தடவையும் இந்த வேத்தியன் எனும் பெயரை கேட்கும் போது எனது பள்ளி ஞாபகங்கள் வந்து போகும்..
பள்ளி என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மறக்கவே முடியாது...
ஏகப்பட்ட நண்பர்கள்..
எப்போதும் சந்தோஷம்...
முக்கியமான விஷயம் என்னவென்றால் எந்தப் பொறுப்பும் இருக்காது, படிப்பதை தவிர...
:-)
நான் படித்த பள்ளியின் ஒரு தோற்றத்தை இங்கு காணலாம்...
பள்ளி வாழ்க்கையைப் பத்தி யோசிக்கும் போது சட்டுனு ஞாபகத்துக்கு வருவது ஒவ்வொரு ஆண்டும் நாம் சென்ற சுற்றுலக்கள் தான்...
படித்து முடித்த 12 ஆண்டுகளிலே எத்தனை சுற்றுலாக்கள் ???
பெயர் மட்டும் தான் 'கல்விச் சுற்றுலா'..
ஆனால் நாம் அதை ஒரு உல்லாசச் சுற்றுலாவாக தானே எடுத்துக் கொள்வோம் ??
அதுவும் இரண்டு நாள் சுற்றுலாவாக இருந்தால் டபுள் சந்தோஷம் தான்... வீட்டுக்காரங்க சகவாசம் இல்லாம இருக்குற அந்த ஒரு இரவுல நாம என்னென்ன செய்யனும்ன்னு ஒரு மாசத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணி வச்சிருவோம்ல...
பல பேருக்கு பீரின் டேஸ்டும் சிகரெட்டின் வாசனையும் தெரிய வருவது இந்த இரவில் தானே ???
தெளிவா இருக்கிறவங்க தப்பிச்சுருவாங்க..
மாட்டினவங்களுக்கு நிலைமை மோசம்...
அடுத்து மறக்கவே முடியாத இன்னொரு விஷயம் டியுஷன் க்ளாஸ்...
அதுவும் உயர்தரம்ன்னா ஒவ்வொரு பாடத்துக்கும் க்ளாஸ் போவோம்ல நாம... சும்மாவா போவோம்??
நாம க்ளாசுக்கு போய் படிச்சுட்டு வரதே ஒரு கூத்து தான்...
:-)
மத்தது மன்றங்கள்...
நம்ம பள்ளியில தமிழ் மன்றங்கள் சில இருக்கு..
இந்து மாணவர் மன்றம், தமிழ் இலக்கிய மன்றம், தமிழ் கர்னாடக இசை மன்றம், தமிழ் நாடக மன்றம்...
இந்த ஒவ்வொரு மன்றமும் ஒவ்வொரு வருடமும் விழாக்கள் நடாத்தும்.. அடுத்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் அதற்கு முந்திய வருடம் அவ்வொவ்வொரு மன்றங்களையும் வழிநடாத்துவது வழக்கம்... மன்றங்கள், விழாக்கள்ன்னா சும்மாவா???
ஜமாய்ச்சுருவோம்ல நாம...
உதாரணமா தமிழ் இலக்கிய மன்றம்ன்னா அது ஒவ்வொரு வருடமும் "கலை விழா" நடத்தும்..
விழா நவம்பர் மாசம்ன்னா அதற்கான முயற்சிகள் மார்ச் மாசத்துல இருந்தே தொடங்கிருவோம் நாம...
வேற வேலை நமக்கு ???
:-)
இப்பிடி மன்றங்கள் வளர்த்த காலப்பகுதியில் கிடைத்த அனுபவங்கள் ஏகப்பட்டது இருக்கு...
ஒருவருடன் எப்பிடிப் பேச வேண்டும்ன்னு அப்போ தான் தெரிந்து கொண்டேன்...
அடுத்து நினைவுக்கு வருவது முக்கியமான விஷயம்..
ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஒளிந்திருக்கும் இசைத் திறனை வெளியில கொண்டு வருவது, மேசையில தாளம் போட்டு நாம படிக்கிற பாடல்கள் தான்...
ஏதாவது ஒரு பாடத்துக்கு ஆசிரியர் வரலைன்னா அது ஒரு தனி சந்தோஷம் தான் நமக்கு...
நண்பர்கள் எல்லாருமா சேர்ந்து சுத்தி ஒக்கார்ந்திருவோம்...
ஒரு 5 பேர் இருந்தாலும் போதும் கச்சேரி நடத்த..
:-)
எனது நண்பர் குழாமில் நான் தான் மேசையில மியுசிக் போடுறது..
பாட்டு பாட மச்சான் பால்பாண்டி...
பாட்டு எடுத்துக் குடுக்க பைக் சொந்தக்காரன்...
லிரிக்ஸ் ஞாபகப் படுத்த நயன்தாரா...
கூடி இருந்து வேடிக்கை பாக்க ரெண்டு பேர்ன்னு எப்பவுமே நம்ம கச்சேரி களைகட்டும்...
பள்ளியில இருந்தா பட்டப்பெயர் இல்லாம இருக்குமா??
நம்மல கூப்பிடுறது 'ஐயன்'ன்னு தான்...
நண்பர்களோட பெயர தான் மேல சொல்லியிருக்கேன்ல...
:-)
இப்பிடி பள்ளி வாழ்க்கையை நினைக்கையில ஞாபகத்துக்கு வர்ற விஷயங்கள் ஏராளம் ஏராளம்...
சிலதை சொல்லியிருக்கேன்..
பலதை தினமும் நினைச்சுகிட்டு இருக்கேன்...
பள்ளி வாழ்க்கையைப் பத்தி எழுதனும்ன்னா ஒரு பதிவு போதுமா சாமி ??
:-)
நான் எழுதனும்ன்னு தினமும் நினைச்சுட்டிருந்த விஷயங்களைப் பத்தி எழுதுறதுக்கு வாய்ப்பு தந்த ராஜேஸ்வரி அக்காவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றிகள்...
தொடர்ந்து எழுத நான் அழைப்பது எனது நண்பர்கள்,
1. கார்த்திகைப் பாண்டியன் - பொன்னியின் செல்வன்.
2. ஆதவா - குழந்தை ஓவியம்.
அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
வர்ட்டாஆஆஆ...
டாட்டா..
பை பை...
.
Subscribe to:
Post Comments (Atom)
45 . பின்னூட்டங்கள்:
ஒரே ஒரு வாட்டி சொல்லிக்கிறேனே.. me the firstuuu...:-)
யாராலையும் மறக்க முடியாத காலங்கள் பள்ளி நினைவுகள்.. ரொம்ப அனுபவிச்சு வாழ்ந்து இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..
தொடர் பதிவுல எழுத சொல்லிட்டீங்கல்ல.. ஜமாய்ச்சுடலாம்..
@ கார்த்திகைப் பாண்டியன்...
//ஒரே ஒரு வாட்டி சொல்லிக்கிறேனே.. me the firstuuu...:-)//
நல்லா சொல்லிக்கிங்க...
//யாராலையும் மறக்க முடியாத காலங்கள் பள்ளி நினைவுகள்.. ரொம்ப அனுபவிச்சு வாழ்ந்து இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..//
மிக்க நன்றி நண்பா...
//தொடர் பதிவுல எழுத சொல்லிட்டீங்கல்ல.. ஜமாய்ச்சுடலாம்..//
ஜமாய்ங்க ஜமாய்ங்க...
வாழ்த்துகள்...
பள்ளி, கல்லூரி இரண்டுமே கற்கும் இடம் தானே!!
கட்டிடம், புல்வெளி இரண்டும் அருமை!!
thevanmayam said...
பள்ளி, கல்லூரி இரண்டுமே கற்கும் இடம் தானே!!//
வாங்க டாக்குத்தரே...
ஆமா, இப்ப யாரு இல்லைன்னது???
ச்சும்மா உல்லூலாயிக்கு...
:-)
thevanmayam said...
கட்டிடம், புல்வெளி இரண்டும் அருமை!!//
ரொம்பப் பழைய பள்ளி...
1835ல நிறுவப்பட்டது...
வேத்தியன் நீங்கள் ரோயல் கல்லூரி மாணவனா? பரவாயில்லை ரோயலில் படித்த ஒருவர் தமிழ் வலைப்பகுதிகளில்(கோவிக்கவேண்டாம் ரோயலில் படித்த பெரும்பாலான தமிழ் மாணவர்கள் தமிழே பேசமாட்டார்கள்)
வந்தியத்தேவன் said...
வேத்தியன் நீங்கள் ரோயல் கல்லூரி மாணவனா? பரவாயில்லை ரோயலில் படித்த ஒருவர் தமிழ் வலைப்பகுதிகளில்(கோவிக்கவேண்டாம் ரோயலில் படித்த பெரும்பாலான தமிழ் மாணவர்கள் தமிழே பேசமாட்டார்கள்)//
ஆமாங்க...
நான் ரோயல் கல்லூரி தான்...
ஆனா நீங்க சொல்றதுல முழுதும் உண்மை இல்லை...
சில பேர் வேண்டுமானால் தமிழ் பேசாமல் போயிருக்கலாம்..
ஆனால் தலைநகரில் தமிழ் மன்றங்கள் வைத்து தமிழை வளர்ப்பதில் நாம் உழைத்திருக்கிறோம் அல்லவா???
:-)
வேத்தியன் --- வேதங்கள் கற்றவன் ?
thevanmayam said...
வேத்தியன் --- வேதங்கள் கற்றவன் ?//
ஆஹா
புதுசால்ல இருக்கு...
எனக்கு அந்த அர்த்தம் தெரியாது...
எனக்கு தெரிஞ்சது வேத்தியன் என்றால் ROYALIST...
:-)
பீரின் வாசனையும், சிகரெட்டும் டூரில் கற்றுக்கொள்பவர் நிறைய!!
தப்பிச்சாச்சா?
அருமை.. அருமை... அருமை...
ஏற்கனவே பல தடவை யோசித்தது உண்டு உங்கள் பேருக்கு அர்த்தம் என்னவாய் இருக்கும் என்று இப்போதுதான் தெரிந்தது
பள்ளிக் காலங்கள் எப்போதும் மகிழ்ச்சிக்குரியன
//வேத்தியன் on 16 April 2009 21:52 said...
ஆனால் தலைநகரில் தமிழ் மன்றங்கள் வைத்து தமிழை வளர்ப்பதில் நாம் உழைத்திருக்கிறோம் அல்லவா???
:-)//;
உண்மை தான் ஏற்றுக்கொள்கின்றேன். என்னுடன் படித்த மாணவர்கள் பலர் தமிழே கதைக்க மாட்டார்கள் ஆனால் தமிழ்மீடியத்தில் ஏஎல் எடுத்தவர்களாம். உங்கள் காலத்தில் மாறிவிட்டார்களோ தெரியாது.
என்னே ஒரு வேகம். தம்பி சும்மா சொல்லக்கூடாதுப்பா.. சூப்பர் பாஸ்ட்.
அனுபவங்கள்... அதுவும் பள்ளி அனுபவங்கள் அருமை... அருமை.
நல்லா தாளம் போடுவீகளா.. நான் பள்ளியில் படிக்கும் போது கோபால் என்று ஒரு நண்பர் அவர்தான் மேசையில் தாளம் போடுவார். அந்த ஞாபகம் வந்துவிட்டது..
ஆஹா ...ஸ்கூல் படிக்குற பசங்களை இந்த பதிவுல இல்லுக்க வேண்டாம்னு சொன்னா கேட்க்கலியே...
வேத்தியன் அருமை....எனக்கும் பள்ளி நினைவுகள் எப்போவுமே பசுமை தான்....படிகக்கக்டு தவிர வேற எந்த பொறுப்பும் இல்லாம.....சரியா சொன்னீங்க
உங்க நண்பி பேரு நிஜமாவே நயன் தாராவா
ஆஹா ...ஸ்கூல் படிக்குற பசங்களை இந்த பதிவுல இல்லுக்க வேண்டாம்னு சொன்னா கேட்க்கலியே...
வேத்தியன் அருமை....எனக்கும் பள்ளி நினைவுகள் எப்போவுமே பசுமை தான்....படிகக்கக்டு தவிர வேற எந்த பொறுப்பும் இல்லாம.....சரியா சொன்னீங்க
உங்க நண்பி பேரு நிஜமாவே நயன் தாராவா///
நிலா அம்மா! தம்பி ஆசைப்பட்டு எவ்வளவு அழகா எழுதியிருக்கார் பார்த்தீங்களா?
பள்ளி நினைவுகள் ரசனை
thevanmayam said...
பீரின் வாசனையும், சிகரெட்டும் டூரில் கற்றுக்கொள்பவர் நிறைய!!
தப்பிச்சாச்சா?//
நாம தப்பிச்சிட்டோம்...
மாட்டினவங்க பல பேர்...
அது தான் வருத்தம்...
:-(
நையாண்டி நைனா said...
அருமை.. அருமை... அருமை...//
மிக்க நன்றி நைனா...
:-)
தர்ஷன் said...
ஏற்கனவே பல தடவை யோசித்தது உண்டு உங்கள் பேருக்கு அர்த்தம் என்னவாய் இருக்கும் என்று இப்போதுதான் தெரிந்தது
பள்ளிக் காலங்கள் எப்போதும் மகிழ்ச்சிக்குரியன//
இப்ப காரணம் விளங்கிச்சா???
நன்றி தர்ஷன்...
:-)
இராகவன் நைஜிரியா said...
என்னே ஒரு வேகம். தம்பி சும்மா சொல்லக்கூடாதுப்பா.. சூப்பர் பாஸ்ட்.
அனுபவங்கள்... அதுவும் பள்ளி அனுபவங்கள் அருமை... அருமை.
நல்லா தாளம் போடுவீகளா.. நான் பள்ளியில் படிக்கும் போது கோபால் என்று ஒரு நண்பர் அவர்தான் மேசையில் தாளம் போடுவார். அந்த ஞாபகம் வந்துவிட்டது..//
நன்றி அண்ணா...
ஆமா நாந்தேன் தாளம் போடுறது...
அவருக்கு ஒரு ஃபோன் பண்ணி ஹாய் சொல்லிருங்க...
:-)
நிலாவும் அம்மாவும் said...
ஆஹா ...ஸ்கூல் படிக்குற பசங்களை இந்த பதிவுல இல்லுக்க வேண்டாம்னு சொன்னா கேட்க்கலியே...
வேத்தியன் அருமை....எனக்கும் பள்ளி நினைவுகள் எப்போவுமே பசுமை தான்....படிகக்கக்டு தவிர வேற எந்த பொறுப்பும் இல்லாம.....சரியா சொன்னீங்க
உங்க நண்பி பேரு நிஜமாவே நயன் தாராவா//
ஆஹா..
நிலா அம்மா, நம்ம பள்ளி ஆண்கள் பள்ளி..
பெண்களுக்கு இடமில்லை...
அவனுக்கு நயந்தாரா மேல அப்பிடியொரு ஆசை..
அதான் அவனுக்கு பெயர் அது...
:-)
ஆ.முத்துராமலிங்கம் said...
பள்ளி நினைவுகள் ரசனை//
மிக்க நன்றி நண்பரே...
ம்ம்ம்..நல்லாயிருக்கு தல
மச்சான் டாஷ் போர்ட்டுல காட்ட மாடிங்குது .. சூப்பர் பதிவு மச்சான் ஒரு பயணங்கள் மாதிரி இருந்தது
எமது பள்ளியை "வேத்தியர் கல்லூரி"
oh peyar karanam athuva
//இப்பிடி பள்ளி வாழ்க்கையை நினைக்கையில ஞாபகத்துக்கு வர்ற விஷயங்கள் ஏராளம் ஏராளம்...
சிலதை சொல்லியிருக்கேன்..
பலதை தினமும் நினைச்சுகிட்டு இருக்கேன்... /
நாங்களும் அசை போட்டோம்
எனது நண்பர் குழாமில் நான் தான் மேசையில மியுசிக் போடுறது..
பாட்டு பாட மச்சான் பால்பாண்டி...
பாட்டு எடுத்துக் குடுக்க பைக் சொந்தக்காரன்...
லிரிக்ஸ் ஞாபகப் படுத்த நயன்தாரா...
கூடி இருந்து வேடிக்கை பாக்க ரெண்டு பேர்ன்னு எப்பவுமே நம்ம கச்சேரி களைகட்டும்...
பார்வையாளர்கள் ரசிகர்கள் கணக்கிடமுடியாதவர்கள்
எமக்கு கிடைக்கும் ஆஸ்கர் விருதுகள் நண்பர்களின் பாராட்டுக்கள்
முக்கிய எதிரிகள் மொட்டைப் பரா, ரஜனி ஷன்
என்ன தான் இருந்தாலும் நாம் ஒரு போதும் மழைத்துளி பாடலை இதுவரை முற்றாக அடித்தது இல்ல
//பெயர் மட்டும் தான் 'கல்விச் சுற்றுலா'..
ஆனால் நாம் அதை ஒரு உல்லாசச் சுற்றுலாவாக தானே எடுத்துக் கொள்வோம் ?? //
என்னது உல்லாசச் சுற்றுலாவா?? உங்க ஆசிரியர் சுற்றுலா முசிந்து வந்த உடனே "கல்வி சுற்றுலா" பற்றி குறைந்தது 2 பக்கங்களுக்கு கட்டுரை எழுதச் சொல்லமாட்டாரோ??
நன்றி...
Anbu...
Suresh...
" உழவன் " " Uzhavan "...
@ Maal...
நண்பா வா வா...
உன்னைத்தான் எதிர்ப்பார்த்தேன்...
அதானே நம்ம பாட்டுன்னா பாக்கா கூட்டம் கூடிடும்ல..
ஆமா மச்சான்...
கடைசி வரை மழைத்துளி பாடலை முழுசா பாடி முடிக்கவேயில்லையே...
ஒவ்வொரு தரமும் வந்து கெடுத்து விடுவார் அந்த ஷண்...
:-)
//மத்தது மன்றங்கள்...
நம்ம பள்ளியில தமிழ் மன்றங்கள் சில இருக்கு..
இந்து மாணவர் மன்றம், தமிழ் இலக்கிய மன்றம், தமிழ் கர்னாடக இசை மன்றம், தமிழ் நாடக மன்றம்...
//
கிளாஸ் கட்டடிச்சுட்டு பிராக்டிஸ் பண்ண நல்ல சான்ஸ்..
அசத்தல் பதிவு வேத்தி..பழைய நினைவுகள்.
அ.மு.செய்யது said...
//மத்தது மன்றங்கள்...
நம்ம பள்ளியில தமிழ் மன்றங்கள் சில இருக்கு..
இந்து மாணவர் மன்றம், தமிழ் இலக்கிய மன்றம், தமிழ் கர்னாடக இசை மன்றம், தமிழ் நாடக மன்றம்...
//
கிளாஸ் கட்டடிச்சுட்டு பிராக்டிஸ் பண்ண நல்ல சான்ஸ்..
அசத்தல் பதிவு வேத்தி..பழைய நினைவுகள்.//
ஆமா ஆமா...
வேற வேலை நமக்கு???
:-)
நன்றி செய்யது...
அருமை தல
கடையம் ஆனந்த் said...
அருமை தல//
மிக்க நன்றி தல...
Nice,
but there are so much to say when it comes about our school days!!
Exams--Copycats, Teachers, **Girls.. etc etc
expecting the part2
&
if its in a further better TAMIL slang, it will be more appreciated.
Magnifier
---------
Anonymous Blog Followers
நீங்கள் படித்த பள்ளி ரொம்ப அருமை உங்கள் கல்வி போலவே
கல்லூரி வாழ்க்கைக்கும் நுழையுங்கள் இன்னும் நிறைய அனுபவப்பாடம் கற்பீர்
லேட்டாக வந்ததிறிகு மன்னிக்கவும்
பள்ளி போட்டோ அழகாஉ உள்ளது.
நான் மறுபடியும் பள்ளி வாழ்க்கைக்கு சென்று வந்ததுபோல் உள்ளது.
அருமையான பதிவு..வாழ்த்துக்கள்
நன்றி...
அபுஅஃப்ஸர்
Rajeswari
Post a Comment