அப்பிடி இப்பிடின்னு ஒருமாதிரி 2008 முடிஞ்சு, 2009 வந்திருச்சுப்பான்னு எல்லாரும் சந்தோஷமா இருப்பாங்கன்னு புரியுது.... அப்பிடித்தானே???
இந்த கடந்துபோன 2008ல மறக்க முடியாத பல விஷயங்கள் நடந்திருக்கு. பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பிய கமல்ஹாஸனின் 'தசாவதாரம்' வெளியாகி வெற்றி பெற்றது முதல் அதிகமானோரின் விருப்பின் பேரில் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக Barack Obama தெரிவானது வரை பல விஷயங்கள் !!!
*முதல்முதல்ல கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளில் 'Review' முறை அறிமுகமாச்சு.
*பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியாகவிருந்த பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதும், முஷாரப் ஜனாதிபதிப்பதவி கைமாறியதும்.
*Euro 2008 கால்பந்து தொடரில் ஸ்பெயின் சாம்பியனானது.
*ஒலிம்பிக் போட்டிகள் மிக கோலகலமாக நடந்து முடிந்தது.
*வல்லரசு நாடான அமெரிக்காவின் பொருளாதாரம் நிலைகுலைந்து தடுமாறியதும், இதனால் ஏனைய நாடுகளின் பொருளாதார நிலைகுலைவும்.
இப்படி எத்தனையோ பல சந்தோஷமானதும், துக்கமானதுமான நிகழ்வுகள் நடந்த இந்த 2008 இன்றோடு முடிவடைகிறது.
நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் அப்பிடின்னு சொல்லி வரப்போற 2009ம் ஆண்டை சந்தோஷமா வரவேற்போம். இந்த 2009ம் ஆண்டு எல்லோருக்கும் நல்லதா அமையனும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன் !
வரப்போற எல்லா நல்லது கெட்டதையும் தாண்டி இந்த வருஷத்தை நல்லதா மாத்திக்கிற வித்தை அவனவன் கையில தான் இருக்கு... ஆமாவா இல்லையா ???
எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!
0 . பின்னூட்டங்கள்:
Post a Comment