வார்த்தைப் பிரயோகங்களை மிக மோசமாகக் கையாளும் இன்றைய காலத்தில் தமது தாய்மொழியைக் கூட சரியாகச் சொல்லத் தெரியாத பலர் உளர்.
உதாரணமாக வெளிநாடுகளில் பல காலமாக வாழும் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தாய்மொழியைக் கற்பிப்பதில் தயக்கம் காட்டுவது ஏனோ தெரியவில்லை. தாய்மொழியை எழுதக் கற்பிக்காவிடினும் பரவாயில்லை, ஒழுங்காகப் பேசுவதற்காவது கற்றுக் கொடுக்கலாம் ! பிள்ளைகளுக்கு 'அம்மா' எனும் வார்த்தையைக் கூட ஒழுங்காகச் சொல்லக் கற்றுக் கொடுப்பதில்லை. நீண்டகாலம் வெளிநாட்டிலிருந்து விட்டு தாய்நாட்டுக்குத் திரும்பும் நம்மவர்கள் தமது பிள்ளைகள் தடுமாறி தடுமாறித் தமிழ் கதைப்பதையும் ஆங்கிலத்தில் அதிகம் பேசுவதையும் ஒரு நாகரிகமாகக் கருதுகிறார்களோ தெரியவில்லை !!!
நமது தாய்மொழியான தமிழுக்கு இப்படியொரு அவலநிலை தேவையா ???
மேலும், சந்தர்ப்பவசத்தினால் சில சமயங்களில் நமது மொழியை ஆங்கிலத்தில் தட்டச்சு (Type) செய்ய வேண்டிய நிலைமை வந்தால் கூட அதிகமானோர் 'TAMIL' என தட்டச்சு செய்கின்றனர். ஆனால் அது தவறாகும். 'THAMIZH' என்பதே சரியான முறையாகும்.இப்படிக் காணப்பட்டால் தான் வேற்று மொழியைச் சேர்ந்தவர்கள் கூட தமிழை 'தமிழா'ய் உச்சரிப்பர்.
பல தமிழர்களே தமிழை 'தமிலா'ய் உச்சரிக்கும் பொழுது நாம் வேற்று மொழிக் காரர்களைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன ஆகிவிடப் போகின்றது ???
எனது இந்தப் பதிவைப் படித்த பின்னர் ஒருவராவது திருந்துவாராயின், அதுவே இந்த பதிவிற்கும் தமிழுக்கும் கிடைக்கும் பெரிய விளைவாகும்...
அனைவரும் திருந்துவோம் ! தமிழைத் தமிழாய்ப் பேசுவோம் !
Subscribe to:
Post Comments (Atom)
7 . பின்னூட்டங்கள்:
உண்மை தான், இது அடிப்படையிலேயே ஏற்பட்ட தவறு என்று தான் கூற வேண்டும், அதாவது தமிழ்ப் புத்தகத்தில் TAMIL என்று எழுதிய நாள் அன்று தொடங்கிய சரித்திரம்; மொழிக்கொரு கறுப்பு சரித்திரம் என்றே கூற வேண்டும்... (சரித்திரம் படைத்த மொழிக்கே இந்நிலை, என்ன கொடுமை சரவணா இது???)
இத்தளத்தை மேய்க்கும் வேத்தியனிடம் ஒரு சக வேத்தியன் என்ற முறையில் ஓர் கேள்வி...
நம் பாடசாலையில் படிக்கும் எத்தனை பேருக்கு எம் பள்ளிக்கு இப்படி ஒரு தமிழ் பெயர் உண்டென தெரியும்??
ஏன் இது குறித்து எம் தற்போதைய தமிழ்ப் பொறுப்பு ஆசிரியரிடம் "ஏன் ஐயா நாம் பரிசளிப்பு விழாவில் எம் பள்ளிப் பெயரை தமிழில் வேத்தியர் கல்லூரி என்று கூறாமல் றோயல் கல்லூரி என்று கூறுகிறார்கள்??" என வினவிய போது அவருடைய பதில்,
"It has always been the tradition and we just follow it"
hmm, அவருடைய தமிழார்வம் இதில் இருந்தே புலப்படுகிறது, வேத்தியர் கல்லூரி என்று ஒரு ஜந்து சரித்திரத்தில் பெயர் வைத்தது ஏனோ அந்த ஜந்துவுக்கு புலப்படவில்லை...
நான் ஏன் இந்த உதாரணத்தை தேவையின்றி உளறுகிறேன் என்று நினைக்கலாம்; எல்லாம் காரணத்துடன் தான்....
நான் முதல் கூறிய அடிப்படை பிழைகளுக்கு காரணமே பின்னர் கூறிய மதிப்பிற்குரிய அம்மகான்கள் தான்...
இது சத்தியமான உண்மைக்கதை;
இது தவறு செய்யும் ஆசிரியர்களின் கவனத்துக்கு மட்டும்...
நல்லவர்களும் உள்ளனர் என்பதற்கு இன்று பெய்த மழையே சாட்சி...
வாழ்க தமிழ்;
வளர்க தமிழினம்...
ஆமாம்....
சரியானதும் தெளிவானதுமான விளக்கம்.
உங்கள் விமர்சனத்துக்கு நன்றிகள்...
நீங்கள் கூறியது போல அவர்கள் திருந்தியிருந்தால் மற்றவர்களும் திருந்தியிருப்பார்கள். என்ன செய்வது???
அது அவர்கள் செய்த தவறா அல்லது காலத்தின் தவறா??? இனியாவது திருந்த வேண்டும் என்பதே எனது ஆசைகள்.
இன்னொரு முக்கியமான விடயம் உமேஷ் ! அடுத்த முறை விமர்சிக்கும் போது தயவுசெய்து உங்கள் பெயரைக் குறிப்பிடவும். :)
//'THAMIZH' என்பதே சரியான முறையாகும்.இப்படிக் காணப்பட்டால் தான் வேற்று மொழியைச் சேர்ந்தவர்கள் கூட தமிழை 'தமிழா'ய் உச்சரிப்பர்.
ஆனால் இந்த வழக்கு தமிழர்களுக்கு மட்டுமே தெரிந்தது, வேற்று நாட்டவர்கள் இதனை தமிஸ் என்று உச்சரிக்க போகிறார்கள்
//நீண்டகாலம் வெளிநாட்டிலிருந்து விட்டு தாய்நாட்டுக்குத் திரும்பும் நம்மவர்கள் தமது பிள்ளைகள் தடுமாறி தடுமாறித் தமிழ் கதைப்பதையும் ஆங்கிலத்தில் அதிகம் பேசுவதையும் ஒரு நாகரிகமாகக் கருதுகிறார்களோ தெரியவில்லை !!!
உன்னைச் சொல்லிக் குத்தமில்ல, என்னச் சொல்லிக் குத்தமில்ல.. காலம் செய்த கோலமடி
என்ன செய்வது????
'ழ'வை சரியாக உச்சரிக்க ஆங்கிலத்தில் வசதியில்லை என்று ஆங்கிலக்காரர்கள் வருத்தப் படவேண்டியது தான்... :)
அம்மா, அப்பா என்று குழைந்தைகள் அழைப்பதை அவமானமாக கருதும் பெற்றோர்கள், நம் செந்தமிழ் நாட்டில் இருக்கும் வரை தமிழை காப்பற்ற இயலாது...
உங்கள் கருத்துக்கு நன்றி இராகவன்.
ஆமாம் நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான்.. என்ன செய்வது ???
அவர்களாய் பார்த்து திருந்த வேண்டும் என்பதையே நான் இந்த கட்டுரையின் மூலம் எதிர்பார்க்கின்றேன்.
ம்.. என்ன பண்ணுவது???
வெளிநாட்டுக்குப் போன பிறகு வெள்ளைகாரன் போல மாறிவிட்டார்கள் போலும்...
குளிருக்கு மரத்துப் போன ஜந்துகளுக்கு இப்படி எழுதி எல்லாம் உரைக்காது...
Post a Comment