2009ம் ஆண்டு பிறந்ததற்கு அடையாளமாக போட்ட பட்டாசுகளின் சல்பர் நாற்றம் கூட இன்னும் பல ஊர்களில் போயிருக்க மாட்டாது.
ஒருமாதிரி 2009 வந்திருச்சுன்னு சந்தோஷமா இருக்கு. அந்த சந்தோஷத்துடன் உங்களுக்கு ஒரு நகைச்சுவையான விஷயத்தை சொல்ல ஆசைப்படுறேன்.....
அண்மையில் என் வீட்டுக்கு வந்திருந்தவர் தனக்கு நடந்த ஒரு அனுபவத்தை எனக்கு சொன்னார். அது ரொம்ப காமெடியான அனுபவம் !
80களில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிப்போகும் வழக்கம் பிரபலமாகியிருந்தது. அவரும் அப்பிடித்தான் எங்கேயோ போவதற்காக சிலகாலம் இந்தியாவில் இருக்கும் போது நடந்தது தான் இந்த மாபெரும் காமெடி !
ஒருநாள் காலையில் வழமைப்போல் பசியெடுக்க, சாப்பிடுவதற்காக ஒரு கடைக்கு இவரும் இவரின் நண்பருமாக ( நண்பர் பாவம் ! ) சென்றனராம்.
வழமையாக சாப்பிடும் அயிட்டங்களை தவிர்த்து புதுசா ஏதாவது சாப்பிடலாம்ன்னு சொல்லி Menu cardஐ பார்க்கும் போது புதுசா ஒரு அயிட்டம் அவர் கண்ணில் பட்டதாம். அது பேரு................ "குலாப் ஜாமூன்" !
அப்போ அதை சாப்பிடலாம்ன்னு அவருக்கும் நண்பருக்கும்ன்னு சொல்லி 2 குலாப் ஜாமூன் ஆர்டர் பண்ணிட்டு காத்திருந்தா..... பத்து நிமிஷத்துல வந்ததோ Ice-cream கிண்ணத்துல சிறிய உருண்டை ! அது தான் குலாப் ஜாமூன்னு பாவம் அவங்களுக்கு தெரியலயாம்.
அப்புறம் என்ன பண்ணுவது ? அகோரப் பசி வேறு ! அதை சாப்பிட்டு முடிச்சுட்டு பில்லை கட்டீட்டு ஒரே ஓட்டமா அடுத்த கடைக்கு போய் என்ன சாப்பிட்டுருப்பாங்கன்னு நினைக்கிறீங்க ?
எல்லாம் வழமையான இட்லியும் சாம்பாரும் தான் !
இந்த கதையை சொல்லி முடிச்சுட்டு அவர் சொன்ன அறிவுரை :
'எப்பவும் அகோரப் பசியிருக்கும் போது புதுசா எதையும் try பண்ணப்படாது'
இந்த காமெடியான கதையை சொல்லும் போது அவர் முகத்தில் ஒரு ஏமாற்றம் தெரிந்தது !!!
நமக்கு காமெடி, அந்த நேரத்தில் அவருக்கு எப்பிடி இருந்திருக்கும் ?
இதில் இன்னொரு பெரிய காமெடி என்னான்னா, ஆர்டர் செய்தது நம்மவர் தான்.
இவருடன் சென்ற நண்பர் பாவம் !
எள்ளுடன் சேர்ந்து எலிப்புழுக்கையும் காய்ந்த கதை தான் !
Subscribe to:
Post Comments (Atom)
8 . பின்னூட்டங்கள்:
அஃகஃகா! வாழ்த்துகள் நண்பரே!!
பல விஷயங்கள் இப்படிதாங்க..
அனுபவிக்கும் போது கஷ்டமாக இருந்த்தது, பின்னாளில் நினைக்கும் போது சிரிப்பாக இருக்கும்.
உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி தோழர்களே !
ஆமாம் சரிதான்.. அனுபவிக்கும் போது வேதனையாக இருக்கும். பின்னர் அதுவே சிரிப்புக்குரிய விடயமாகிவிடும்...
காமெடி அனுபவங்கள் எப்பவுமே இப்படித்தான், நான் நிறைய எடுத்து விடுறேன்
-குகு-
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி தோழரே...
ஆமாங்க...
அனுபவத்தை பின்னர் நினைத்துப் பார்க்கும் போது நகைப்புக்குரிய விஷயமாகி விடுகிறது...
இதில் நகைச்சுவையாக ஒன்றுமே இல்லையே
// Anonymous said...
இதில் நகைச்சுவையாக ஒன்றுமே இல்லையே//
சிலவேளை நான் எழுதிய விதம் அப்பிடி நகைச்சுவையாக இல்லாமல் இருக்கலாம்.
நிலைமையை நினைத்துப் பாருங்கள்..
அப்பிடியும் சிரிப்பு வரவில்லையென்றால் நல்ல மருத்துவரை நாடலாமே ??? :)))
Post a Comment