இது எனது நண்பனின் படைப்பு....
நன்றாக இருந்தது...
நீங்களும் படித்துப் பாருங்களேன் !
உயிர் வலி அறிந்து
உளம் ஆற
உறுதி கொண்டு
உண்மையே பேசி
பழிச்சொல் பல கேட்டு
கானல் நீராய்
கனவுகள் யாவும் கலைய
மண் குதிரை மேல்
சவாரி செய்து
மணல் புயல் எதிர்கொண்டு
மேற்குலகம் செல்வதற்கு
எம் பொருள் இழந்து
ஊர் இழந்து
உறவு இழந்து
ஊன் இழந்து
உறக்கம் இழந்து
உயிர் மட்டும்
இழக்காது
அன்பை உண்டு
கண்ணீரைக்குடித்து
உணர்வொன்றே மூச்சாய்
வருமா விடியல்
எமக்கென்று
முகாமில் ஓர்
விடியல்
அகதியாய் நான்
இன்று...
Subscribe to:
Post Comments (Atom)
4 . பின்னூட்டங்கள்:
இதுவும் கடந்து போகும், நம்பிக்கை வெகு முக்கியம்!!!
ஆமாங்க..
சரியா சொன்னீங்க தோழரே...
கவிதை சுமாராக தான் உள்ளது
எனினும் கருத்து நன்றாக உள்ளது
// Anonymous said...
கவிதை சுமாராக தான் உள்ளது
எனினும் கருத்து நன்றாக உள்ளது//
நன்றி நன்றி...
Post a Comment