ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்ன்னு சொல்லுவாங்க...
இது ஸ்வீடன் நாட்டுல நடந்த சம்பவம். ஹொண்டா ரைடர்ல வந்தவரு கிட்டத்தட்ட 250 km/hல வந்திருக்காரு. வேகம் ரொம்ப அதிகம்ங்கிறதால ப்ரேக் போடக் கூட நேரம் இல்லையாம். கார் மெதுவா தான் வந்திருக்கு. ஹொண்டா ரைடர்ல கார்கூட மோதி அடுத்த கணம் அவரும் அவரோட பைக்கும் காருக்குள்ள இருந்திச்சாம்... காருக்குள்ள 2 பேர் இருந்திருக்காங்க. விபத்து நடந்ததும் அவங்களும் பைக் காரருமாக மொத்தம் மூனு பேர் அந்த இடத்திலேயே போயிட்டாங்களாம்...
இது சம்பந்தமா Stockholm மோட்டார்சைக்கிள் கண்காட்சியில ஸ்வீடன் பொலீஸின் விபத்துத் தடுப்புப் பிரிவு நடாத்திய ஃக்ராபிக் டெமான்ஸ்ரேஷன்ல காட்டப்பட்ட படங்கள் தான் இது...
இதுல மோட்டார்சைக்கிள் தெரியுதா???
இந்த பதிவைப் பாத்து யாராவது திருந்துவாங்களாயிருந்தா, அதுதான் இந்தப் பதிவின் மூலம் கிடைக்கும் பெரிய பலனா இருக்குமுங்க...
யாராவது ரொம்ப ஸ்பீடா வண்டி ஓட்டுற உங்க நண்பர்களுக்கும் இது பத்தி சொல்லுங்க...
இது சம்பந்தமா எனக்கு ஒன்னு தோனுது...
'செல்க பைக்கில் நிதானத்துடன்,
அன்றேல் விளையும் மோசமான மரணம்'
இது புதுக்குறள்னும் வச்சுக்கலாம்... என்ன நான் சொல்றது???
யாராவது ரொம்ப ஸ்பீடா வண்டி ஓட்டுற உங்க நண்பர்களுக்கும் இது பத்தி சொல்லுங்க...
இது சம்பந்தமா எனக்கு ஒன்னு தோனுது...
'செல்க பைக்கில் நிதானத்துடன்,
அன்றேல் விளையும் மோசமான மரணம்'
இது புதுக்குறள்னும் வச்சுக்கலாம்... என்ன நான் சொல்றது???
Speed Thrills, But Kills...
10 . பின்னூட்டங்கள்:
நல்ல எச்சரிக்கைப் பதிவு!
ரொம்ப கொடூரமான படம்.
செலுத்துக வாகனம் சற்றே நிதானம்
விலக்கும் அதுவே விபத்து.
// பழமைபேசி said...
நல்ல எச்சரிக்கைப் பதிவு!//
நன்றி நன்றி...
// இப்னு ஹம்துன் said...
ரொம்ப கொடூரமான படம்.
செலுத்துக வாகனம் சற்றே நிதானம்
விலக்கும் அதுவே விபத்து.//
ஆஹா ஆஹா...
இது தான் புதுக்குறள் இல:2
:-)
அடப்பாவமே... :-((((
நானும் இனி உந்துருளியை கவனமாக நிதானமாக செலுத்தனும்.
எச்சரிக்கை செய்ய வேண்டிய விஷயம்
இதோடில்லாமல் சைலன்ஸரை பிடிங்கிவிட்டு ஓட்டுகிறார்களே அவர்களை பார்த்தாலே கோபமாக வரும்.
வேத்தியா எப்படிச் சுகம்?? ம்... கவனம் இல்லா விட்டால் காலடியில் மரணமாம்... நல்ல தகவல் நண்பரே! தொடருங்கள்.
நாட்ல எவ்வளவோ நடக்கிது இது நடக்கிறத்துக்கு என்ன
Post a Comment