Thursday, 15 January 2009
திரைவிமர்சனம் - படிக்காதவன்
இன்று தான் தனுஷ் உடைய 'படிக்காதவன்' படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
அதையும் பார்த்தேன். (இப்ப எல்லாம் செய்யுற பாவத்துக்கு உடனே தண்டனை கிடைச்சுடுமாம் இல்ல... நேத்து நான் என்ன பாவம் செஞ்சேனோ??? இதை இன்னைக்கு பார்த்துட்டேனே... )
சரி; 'சூப்பர்ஸ்டார்' நடிச்சு பெரிய வெற்றி பெற்ற படம்ங்கிறதால போனேன். 'சிலம்பாட்டம்' போன போது டிக்கட் நண்பன் உபயம்.. இதுக்கு டிக்கட் என்னோடது...
ரொம்ப கவலையா இருக்கு :(((
ஒரு படத்துக்கு எப்படி விமர்சனம் எழுதுறதுன்னு எனக்கு தெரியாது.நான் என் மனசுல பட்டதை எழுதுறேன்.. ஓகே???
இந்தப் படத்தை முழுசா பார்த்து முடிக்கிறதுங்கிறது ரொம்ப கஷ்டமான விஷயம்.இவ்வளவு நாளும் படத்துல ஒரு வில்லன் மட்டும் இருந்தான்.படத்துல கதைன்னு ஒன்னு இல்லைன்னாலும் படத்தை விளங்கக்கூடியதாயிருந்திச்சு.
இந்தப்படத்துல 3/4 வில்லன்கள்... எவன் வில்லன், எவன் நல்லவன்ன்னு தெரியவேயில்ல... ஒருத்தனோட ஒருத்தன் மாறி மாறி சண்டை பிடிக்கிறான். ஆனா எதுக்காக சண்டை பிடிக்கிறான்னு பார்க்கிறவங்களுக்கு புரிஞ்சேயிருக்காது.
ஹீரோ தனுஷ் வீட்டுல எல்லாரும் படிச்சவங்க ( நம்ம ஹீரோ 'படிக்காதவன்' ஹிஹி ) இவரு படிக்கலங்கிறதால அப்பாக்கு இவரை பிடிக்காது. அப்பாவுக்கு பிடிக்காத ஹீரோ தான் கடைசில ஜெயிப்பாருங்கிறது தமிழ் சினமா ஃபார்முலா போல ! ) அதனால எப்பவும் வீட்டுல சண்டை. அம்மா இவருக்கு சப்போர்ட்டாம்...
ஒருமுறை தனுஷோட அண்ணிக்கு ஆஃபீஸ்ல பிரச்சினையாம். அப்போ வில்லன் கோஷ்டியை ஒரு கடைக்கு கூப்பிட்டு தனுஷ் கிட்ட சொல்லி அடிக்கிற சீன் ஏற்கனவே ஏதோ படத்துல வந்ததுங்கிறது மட்டும் தெரியுது. ஆனா என்ன படம்ங்கிறது நினைவுக்கு வரல, தெரிஞ்சவங்க சொல்லுங்க.
வேலை எதுவும் இல்லாம சும்மா ஊர்சுற்றித் திரியும் இவருக்கு கல்யாணம் பண்ணி வைக்க தனுஷோட மாமியின் மகளான ஆர்த்தியை பேசுறாங்க.அது இவருக்கு பிடிக்கலயாம். அப்போ ஃப்ரென்ட்ஸோட அட்வைஸ்படி தமன்னாவை காதலிக்க ஆரம்பிக்கிறார். மெதுவா அப்பிடியே கதை நகருது.
இதுக்குப்பிறகு இரண்டாவது பாதியில தான் கதையே மாறிப்போயிடுது. பயங்கர சண்டை. பழைய காலத்துல மன்னர்கள் போர் புரியமுன் வீரர்கள் முன்னே போவதுபோல இதுல மெயின் வில்லன்கள் சண்டை பிடிக்க முன் அவனுங்களோட கையாட்கள் சண்டை போட்டு விழுறானுங்க. மெயின் வில்லன்கள் வாயால சண்டை போட்டுட்டு போயிருவாங்களாம். இவனுங்க எல்லாம் வில்லன்களாம். தாங்க முடியல இந்த கொடுமையை !!!
ஹீரோயின் தமன்னா எதிர்ப்பார்த்தபடியே வில்லனோட மகள் !
வழக்கம் போலவே ஹீரோயினுக்கு நடிக்கவே வாய்ப்பு இல்லை :)
இதுக்குப்பிறகு சொல்லவ வேணும் மீதிக்கதையை ??? சொல்லுறதுன்னாலும் நமக்கு ஞாபகத்துல இல்ல ! நித்திரையாயிட்டேன் :)))
விவேக் சம்பந்தப்பட்ட காமெடி ஸ்கிரிப்ட் டைரக்டரே எழுதினது போல. காமெடி கதைக்கு ஒத்துழைக்கவே இல்லை.
பாடல்களும் ஸ்பெஷலா இல்ல.
'படிக்காதவன்' (Remake) பெருத்த ஏமாற்றம்...
இந்தப்படம் யாருக்காவது நல்லா இருந்துச்சுன்னா காரணத்தை சொல்லுங்க...
Subscribe to:
Post Comments (Atom)
19 . பின்னூட்டங்கள்:
கட்டாயம் இந்த படத்தைப் பாக்கனுமுங்க நான்.நல்லா எழுதிறிங்க
// kajan's said...
கட்டாயம் இந்த படத்தைப் பாக்கனுமுங்க நான்.நல்லா எழுதிறிங்க\\
நன்றி நன்றி கஜன்....
என்னைப் பொறுத்த வரைக்கும் படிக்காதவன் அருமை. படிக்காதவன் மாறுபட்ட பார்வையில் விரைவில் வெளிவரும். இஃகிஃகி!
// பழமைபேசி said...
என்னைப் பொறுத்த வரைக்கும் படிக்காதவன் அருமை. படிக்காதவன் மாறுபட்ட பார்வையில் விரைவில் வெளிவரும். இஃகிஃகி!\\
நன்று நன்று...
எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறேன்...
//ஒருமுறை தனுஷோட அண்ணிக்கு ஆஃபீஸ்ல பிரச்சினையாம். அப்போ வில்லன் கோஷ்டியை ஒரு கடைக்கு கூப்பிட்டு தனுஷ் கிட்ட சொல்லி அடிக்கிற சீன் ஏற்கனவே ஏதோ படத்துல வந்ததுங்கிறது மட்டும் தெரியுது. ஆனா என்ன படம்ங்கிறது நினைவுக்கு வரல, தெரிஞ்சவங்க சொல்லுங்க.//
மகேஷ் பாபு நடித்த ஒரு தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி.இந்த படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஒரு இரட்டை சகோதரி இருப்பார்.இருவரிடையேயான உறவைப்பற்றிய கதை.Title மறந்துவிட்டது.
// தியாகி said...
//ஒருமுறை தனுஷோட அண்ணிக்கு ஆஃபீஸ்ல பிரச்சினையாம். அப்போ வில்லன் கோஷ்டியை ஒரு கடைக்கு கூப்பிட்டு தனுஷ் கிட்ட சொல்லி அடிக்கிற சீன் ஏற்கனவே ஏதோ படத்துல வந்ததுங்கிறது மட்டும் தெரியுது. ஆனா என்ன படம்ங்கிறது நினைவுக்கு வரல, தெரிஞ்சவங்க சொல்லுங்க.//
மகேஷ் பாபு நடித்த ஒரு தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி.இந்த படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஒரு இரட்டை சகோதரி இருப்பார்.இருவரிடையேயான உறவைப்பற்றிய கதை.Title மறந்துவிட்டது.\\
ஆமாங்க இப்ப தான் நினைவுக்கு வருது.
தலைப்பையும் யாராவது சொல்லீட்டீங்கன்னா நிம்மதியா தூங்கலாம் :)))
//தலைப்பையும் யாராவது சொல்லீட்டீங்கன்னா நிம்மதியா தூங்கலாம் :)))//
படத்தின் பெயர் 'அர்ஜுன்'.
இவ்வளவு நாளும் படத்துல ஒரு வில்லன் மட்டும் இருந்தான்//
வேத்தியன் வில்லு பாருங்க,அதுல படம் பாக்கிரவங்கல தவிர எல்லாருமே வில்லந்தான்.
பழமைபேசி said...
என்னைப் பொறுத்த வரைக்கும் படிக்காதவன் அருமை. படிக்காதவன் மாறுபட்ட பார்வையில் விரைவில் வெளிவரும். இஃகிஃகி!//
கெளப்புங்க....
Telugu film Arjun ( Mahesh babu)
படிக்காதவன் வில்லன் சுமனின் தாய் மொழி படத்தின் படி தெலுகு ஆகும் ஆனாலும் அவர் வீட்டிலும் அவரது அடியாட்களுடனும் பேசுவது சுத்த தமிழில் இந்த லாஜிக் எங்கயோ இடிக்குதே
இன்னொரு விடயம் chennai city centerக்கு முன்னாடி வெள்ளைக்கார ஜாக்சன் துரை காலத்தில் பாவித்த அந்த இரட்டை குழல் துப்பாக்கியால் அணிவகுத்து ஒருவரை ஒருவர் சுட்டு விழுத்தும் காட்சியில் காமடி காட்சிகளே தோற்று விடும்
இயக்குனர் சுராஜ் அவர்கள் தமிழ் நாடு போலீஸ் சிரிப்பு போலீஸ்னு இன்னும் நினைச்சுகிட்டு இருப்பார் போல
// குடுகுடுப்பை said...
இவ்வளவு நாளும் படத்துல ஒரு வில்லன் மட்டும் இருந்தான்//
வேத்தியன் வில்லு பாருங்க,அதுல படம் பாக்கிரவங்கல தவிர எல்லாருமே வில்லந்தான்.\\
:)))
இப்ப கதையோட ஃபார்மூலா இது தான் போல இருக்கு...
// அகில் பூங்குன்றன் said...
Telugu film Arjun ( Mahesh babu)\\
அப்பாடா...
இப்பத்தான் ஒரு மனநிம்மதி வந்திருக்குங்க...
தகவலுக்கு நன்றிங்க...
// malmarugan said...
படிக்காதவன் வில்லன் சுமனின் தாய் மொழி படத்தின் படி தெலுகு ஆகும் ஆனாலும் அவர் வீட்டிலும் அவரது அடியாட்களுடனும் பேசுவது சுத்த தமிழில் இந்த லாஜிக் எங்கயோ இடிக்குதே\\
ஆமா ஆமா...
இப்பத்தான் இதப்பத்தி யோசிக்க வருதுங்க...
// malmarugan said...
இன்னொரு விடயம் chennai city centerக்கு முன்னாடி வெள்ளைக்கார ஜாக்சன் துரை காலத்தில் பாவித்த அந்த இரட்டை குழல் துப்பாக்கியால் அணிவகுத்து ஒருவரை ஒருவர் சுட்டு விழுத்தும் காட்சியில் காமடி காட்சிகளே தோற்று விடும்
இயக்குனர் சுராஜ் அவர்கள் தமிழ் நாடு போலீஸ் சிரிப்பு போலீஸ்னு இன்னும் நினைச்சுகிட்டு இருப்பார் போல\\
ஆமாங்க...
அது வேட்டையாடும்போது காக்கா,குருவி சுட பாவிக்கிறது இல்ல???
மக்கள் துன்பங்களை மறந்து அந்த இரண்டு மணி நேரமும் மகிழ்ச்சியாக இருக்கவே திரைப்படங்களை நாடுகின்றனர் அவ் வகையில் படிக்காதவன் ஒரு சிறந்த பொழுது போக்கு சித்திரம் ஆகும்
உங்கள் விமர்சனம் ஒரு நிதர்சனமான ஒன்றல்ல திரு வேத்தியன்
// Anonymous said...
மக்கள் துன்பங்களை மறந்து அந்த இரண்டு மணி நேரமும் மகிழ்ச்சியாக இருக்கவே திரைப்படங்களை நாடுகின்றனர் அவ் வகையில் படிக்காதவன் ஒரு சிறந்த பொழுது போக்கு சித்திரம் ஆகும்
உங்கள் விமர்சனம் ஒரு நிதர்சனமான ஒன்றல்ல திரு வேத்தியன்//
இது படிக்காதவன் பற்றிய என்னுடைய நிலைப்பாடு தான்...
பலருக்கு இது பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன்.
நல்ல விஷயம் தான்...
உருப்படியான
தமிழ்ப்படம்
அரிதாகத்தான்
வருது
தேவா.....
Post a Comment