Sunday, 4 January 2009

திரைவிமர்சனம் - சிலம்பாட்டம்அண்மையில் சிலம்பாட்டம்ன்னு ஒரு படம் பார்க்க வாய்ப்பு கிடைச்சுது.
( ஓசி டிக்கட் :))) ).

ஏற்கனவே பல பேர் இதப்பத்தி பிரிச்சி மேஞ்சிருந்தாலும் என்னால எதுவும் பேசாம இருக்க முடியல...

சரி சிம்புவோட படம்ன்னு போய் உட்கார்ந்தா......
அந்தாளு சிங்கிள் ஆக்டிங்கு குடுத்தாலே அந்தப் படத்த நாம கஷ்டப்பட்டு தான் பார்த்து முடிக்கணும். இதுக்குள்ள இந்தப் படத்துல தலைவருக்கு டபுள் ஆக்டிங்காமாங்ங்ங் !!! தாங்க முடியலப்பா அந்த கொடுமையை....

படத்துல அவரோட முதல் அவதாரம் (???) ஒரு கோயில் பூசாரியா காட்டியிருக்காங்க. ரொம்ப நல்லவரா அந்த வேஷத்துல நடிச்சிருக்கது நம்பக்கூடிய மாதிரி இல்ல... (அவரப்பத்தி தெரியும்ல்ல நம்மளுக்கு !)

சிம்புவுக்கு அப்பா காரக்டர்ல நடிக்க வேண்டிய பிரபு, அவருக்கு அண்ணணாவந்து பெரிய காமெடி பண்ணியிருக்காரு ! (என்ன கொடுமை சரவணன் இது???)

முதல் பாதியில ஹீரோயினா வர்ற சானா கான் வாங்கின சம்பளத்துக்கு ரொம்பவே (ஆ)பாசமா நடிச்சிருக்காங்க... பாவம் அந்தப் புள்ளைக்கு யாராவது புதுத்துணி வாங்கிக் குடுங்கப்பா !
சிம்புவோட ரெண்டாவது ஜோடி சினேகாவோட நடிப்பும் சொல்லிகிற மாதிரி இல்ல. (ஏ புள்ள சினேகா, நீ ரொம்ப மாறீட்டம்மா !!!)
படத்துல ரொம்ப முக்கியமான விஷயம் : ரெண்டாவது சிம்பு ரொம்ப கோவக்காரராமாங்ங்ங் !!! தாங்க முடியல இவங்க கற்பனைய...
இத காரணமா வச்சே இரண்டாவது பாதில ஏராளமான சண்டைக்காட்சிகள் !
ஆனா ஒரே ஒரு சிலம்பு சண்டை தான் இருக்கு. பேரு மட்டும் சிலம்பாட்டம் !

வழக்கமா படத்தோட கதையையும் தாண்டி சிம்புவோட டான்ஸ் நன்னா இருக்கும்.படம் பார்க்கப்போகும் போதே நண்பன் சொன்னான் படத்துல சிம்பு ஆடுறது பாக்யராஜ் ஸ்டைல்ல (அதாங்க Exercise பண்ணுறது) இருக்குடான்னு.. நான் தான் நம்பல. பார்த்தா பிறகு தான் விளங்கிச்சு உயிர் காப்பான் தோழன்னு !(உண்மைய சொன்னான்ல அதான்.. இந்த இடத்துல நீங்க சிரிக்கனும்ங்கோ)

முக்கியமா படத்துல ஜோக்ஸப்பத்தி எழுதியே ஆவனும்ங்க. ஜோக்ஸப் பார்த்துட்டு ஒருகணம் எஸ்.ஜே.சூர்யா தான் இந்த படத்தோட டைரக்டரோன்னு நினைச்சுட்டேன். அந்தளவுக்கு இரட்டை அர்த்த வசனங்கள் ! இதுல இவரு அஜீத்துக்கு சப்போர்ட்டு பண்ணி டயலாக் பேசுறாராமாங்ங்...

தலையெழுத்துன்னு பார்த்து முடிச்சேன் இந்த படத்தை...
கடைசியா படத்தப்பத்தி ஒரு லைன்ல சொல்றதுன்னா

சிலம்பாட்டம் : "சண்டைல படம் கொஞ்சம் குறைவா இருக்குங்க !!!"

இந்தப்படத்த பார்த்த யாருக்காவது படம் நல்லா இருக்குன்னு தோனிச்சுன்னா அதுக்கான காரணத்தை சொல்லவும்...
பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.
திரைவிமர்சனம் - சிலம்பாட்டம்SocialTwist Tell-a-Friend

4 . பின்னூட்டங்கள்:

Anonymous said...

Thangal blogs thodarnthu padikiren. Interesting. Found one more matter that almost all DMK ministers have more than one wife like MK, Anbalagan, Balu and kkRaja etc. Why don't you write a blog on this? Hope it will be very much interesting

வேத்தியன் on 7 January 2009 at 14:16 said...

// Anonymous said...

Thangal blogs thodarnthu padikiren. Interesting. Found one more matter that almost all DMK ministers have more than one wife like MK, Anbalagan, Balu and kkRaja etc. Why don't you write a blog on this? Hope it will be very much interesting\\

நம்மளுக்கு அரசியல் எல்லாம் இஷ்டம் இல்லைங்க...

LOSHAN on 8 January 2009 at 10:18 said...

ஹா ஹா.. நீங்களும் பிரிச்சு மேஞ்சிட்டிங்களே?

நான் பிரிச்சு மேய முதலே நீங்க அந்த நல்ல காரியத்தை செஞ்சிருக்கீங்களே..


//சிலம்பாட்டம் : "சண்டைல படம் கொஞ்சம் குறைவா இருக்குங்க !!!"
//

இது தான் பன்ச்.. ;)

தொடர்ந்து இதே போன்ற படங்களைப் பார்த்து கலாய்ங்க.. ;)

வேத்தியன் on 8 January 2009 at 11:32 said...

//LOSHAN said
தொடர்ந்து இதே போன்ற படங்களைப் பார்த்து கலாய்ங்க.. ;)\\

இதே போன்ற படங்களா ???
தாங்க முடியாது சாமி நம்மளால...
:)))

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.