Wednesday, 28 January 2009

இதுதான் புதிய கீதாசாரம்


இதுதாங்க புதிய கீதாசாரம்.
உடனே இது ஏதோ 'கீதா' பத்தினதுன்னு நினைக்க வேணாங்க...
:-)
மின்னஞ்சலில் வந்த சரக்கு.
எதை நீ படித்தாய்
மறந்து போவதற்கு

எதை நீ புரிந்துகொண்டாய்
பரிட்சையில் கேள்விகள் புரிவதற்கு

என்று நீ ஒழுங்காக கல்லூரி வந்தாய்
வருகை கணக்கு குறையாமல் இருப்பதற்கு

எந்த ஃபிகரை நீ காதலித்தாயோ
அவளிடமே நீ செருப்படி வாங்குவாய்

எந்த ஃபிகரை நீ மகா மட்டமாக திட்டுவாயோ
அவளிடமிருந்தே காதல் கடிதம் பெறுவாய்

எந்த ஃபிகர் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ
அது நாளை மற்றொருவனுடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடுகிறது

இதுவே கல்லூரி நியதியும்
ஃபிகர்களின் குணாம்சமும்.

--------------------------------------------------------------------------------------------------

இது அறியாமை
:

சிறிய காலமாகவே ஆதிக்கம் செலுத்திவரும் இணையம்,மின்னஞ்சல் பத்தி அவ்வளவா யாருக்கும் தெரியாதுன்னு நினைக்கிறேன்...
ஏன்னா, எனக்குத் தெரிஞ்சு கொஞ்சம் வயசானவங்கெல்லாம் கணனி பத்தி பேசும்போதெல்லாம் மின்னஞ்சல் அனுப்புறதுக்கு 'எனக்கு ஒரு internet அனுப்புங்க'ன்னும் இணையத்தில் உலாவும் போது 'நான் இப்ப emailல இருக்கேன்'ன்னும் சொல்லுறத கேட்டிருக்கேன்...
ஏன் இது??? இது இணையம் பத்தியும் மின்னஞ்சல் பத்தியும் அவங்களோட அறியாமைன்னு சொல்லுறதா??? அல்லது இது அடிப்படைல வேற காரணம் இருக்கா???

ஒருமுறை எனது நண்பன் ஒருவனின் வீட்டுக்கு சென்றிருந்த போது அவனின் தந்தை அவரின் நண்பரோடு கதைத்த உரையாடல் இது :
'முன்னேல்லாம் நாம ஏதாவது லெட்டர் எழுதுறதுன்னா கையால எழுதினோம். ஆனா இப்போல்லாம் சின்ன ஃபோன் நம்பர் எழுதுறதுக்கும் கம்பியூட்டர் முன்னாடி போய் உக்கார்ந்திர்ரானுங்க...'
இதுக்கும் காரணம் என்ன???
வேலையை இலகுவாக கொஞ்சம் சாதனங்களை பாவிச்சு செய்யுறதை அவங்க விரும்புறாங்க இல்லயா???

இந்த விஷயம் சம்பந்தமா பின்னூட்டங்களை எதிர்ப்பார்க்கிறேன்...
விளங்கினவங்க சொல்லுங்க...
இதுதான் புதிய கீதாசாரம்SocialTwist Tell-a-Friend

8 . பின்னூட்டங்கள்:

தேவன் மாயம் on 28 January 2009 at 19:32 said...

எந்த ஃபிகரை நீ காதலித்தாயோ
அவளிடமே நீ செருப்படி வாங்குவாய்

எந்த ஃபிகரை நீ மகா மட்டமாக திட்டுவாயோ
அவளிடமிருந்தே காதல் கடிதம் பெறுவாய்
//

வேத்தியன் கலக்கல்

வேத்தியன் on 28 January 2009 at 19:43 said...

// thevanmayam said...

எந்த ஃபிகரை நீ காதலித்தாயோ
அவளிடமே நீ செருப்படி வாங்குவாய்

எந்த ஃபிகரை நீ மகா மட்டமாக திட்டுவாயோ
அவளிடமிருந்தே காதல் கடிதம் பெறுவாய்
//

வேத்தியன் கலக்கல்//

நன்றி ஐயா...

Anonymous said...

எந்த ஃபிகரை நீ காதலித்தாயோ
அவளிடமே நீ செருப்படி வாங்குவாய்...
எந்த ஃபிகரை நீ மகா மட்டமாக திட்டுவாயோ
அவளிடமிருந்தே காதல் கடிதம் பெறுவாய்...
நிஜத்திலும் நிஜமென்றே கூற வேண்டும்..
நல்லதோர் கற்பனை...

பிற்பகுதியில் கூறப்பட்ட விடயமும் ஒரு வகையில் உண்மை தான்;
இது அறியாமையின் விளைவு தான்...
இதில் குறை கூறப் படவேண்டியவர்கள் இளைஞர்களாகிய நாம் தான்...
அறிந்தும் அறியாமலும் நாம் அவர்களுக்கு இதை சொல்லி கொடுப்பதில்லை...
என் நான் கூட அப்பிடித்தான், என்ன இருந்தாலும் அவர்களுக்கு அதிகம் தெரிந்தால் பின்னர் எம் சுதந்திரம் நாசமாகிடுமே...

எல்லாம் ஒரு சுயநலத்தின் விளைவு என்றே நான் கூறுவேன்...

வேத்தியன் on 5 February 2009 at 11:04 said...

// observer said...
வணக்கம் நாங்கள் தினம் ஒரு மென்பொருள் என்னும் பெயரில் ஒரு பதிவு எழுதி வருகிறோம் . அதற்கு உங்கள் ஆதரவு தேவை , எங்களை ஆதரிக்க விரும்பினால் கீழே ஆங்கிலத்தில் உள்ள code ஐ உங்கள் வலைப்பதிவில் பதியலாம் .இந்த code ஐ copy செய்து உங்கள் வலைப்பதிவில் ->layout->Add a Gadget ->HTML/JavaScript குச் சென்று paste செய்து பதிந்து விடவும் மிக்க நன்றி .code ஐ பெறுவதற்கு http://tamilwares.blogspot.com/2009/01/support-us.html//

போட்டுட்டேன்...
முயற்சிக்கு வாழ்த்துகள்

ஆதவா on 10 February 2009 at 11:21 said...

ஹாஅ..... கீதையை எப்படியெல்லாம் மாத்திப்புட்டீங்கப்பா... ஆர்.எஸ்.எஸ் காரங்க வந்து படிச்சிடப்போறாங்க.

இரண்டாவது :

அறியாமை அல்ல. அவர்களுடைய அறிவுத் திறனின் எல்லை அதுவரை உள்ளது, அவ்வளவே... படித்த சிலருக்கு IT என்ன வேலை செய்கிறோம் என்று சொன்னால் புரியாது... அதே, Software Engineer ஆ இருக்கேன் என்று சொன்னால், ஏதோ தெரிந்தவர்கள் போல தலையாட்டுவார்கள்...

கம்யூனிகேஷனுக்கு எந்த மொழியும் தடையாக இருக்கக் கூடாது.. அல்லது ஒரு மொழியின் எந்த வார்த்தைகளும் மாறியிருப்பதனால் பாதிப்பு இல்லை..

அடுத்து :

நாம் விஞ்ஞானத்தினால் சோம்பேறி ஆகிறோம் என்பதெல்லாம் வீண் செய்திகள்.. அன்று கணிணி இல்லை அதனால் காகிதத்தில் எழுதவேண்டியிருந்தது.. இன்று நிலைமை அப்படியல்ல. காலம் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களை உரித்துக் கொண்டே வருகிறது.... அதில் உரியாத மனிதர்கள் சற்று வித்தியாசமாகத்தான் பார்ப்பார்கள்...

வேத்தியன் on 10 February 2009 at 11:27 said...

// ஆதவா said...
ஹாஅ..... கீதையை எப்படியெல்லாம் மாத்திப்புட்டீங்கப்பா... ஆர்.எஸ்.எஸ் காரங்க வந்து படிச்சிடப்போறாங்க.

இரண்டாவது :

அறியாமை அல்ல. அவர்களுடைய அறிவுத் திறனின் எல்லை அதுவரை உள்ளது, அவ்வளவே... படித்த சிலருக்கு IT என்ன வேலை செய்கிறோம் என்று சொன்னால் புரியாது... அதே, Software Engineer ஆ இருக்கேன் என்று சொன்னால், ஏதோ தெரிந்தவர்கள் போல தலையாட்டுவார்கள்...

கம்யூனிகேஷனுக்கு எந்த மொழியும் தடையாக இருக்கக் கூடாது.. அல்லது ஒரு மொழியின் எந்த வார்த்தைகளும் மாறியிருப்பதனால் பாதிப்பு இல்லை..

அடுத்து :

நாம் விஞ்ஞானத்தினால் சோம்பேறி ஆகிறோம் என்பதெல்லாம் வீண் செய்திகள்.. அன்று கணிணி இல்லை அதனால் காகிதத்தில் எழுதவேண்டியிருந்தது.. இன்று நிலைமை அப்படியல்ல. காலம் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களை உரித்துக் கொண்டே வருகிறது.... அதில் உரியாத மனிதர்கள் சற்று வித்தியாசமாகத்தான் பார்ப்பார்கள்...//

வருகைக்கு நன்றி ஆதவா...
உங்கள் கருத்துக்கும் நன்றிகள்...

குடந்தை அன்புமணி on 10 February 2009 at 14:14 said...

கேபிள் கனெக்சன் இருக்கா என்று யாரும் சொல்லமாட்டார்கள். சன் டி.வி. கனெக்சன் இருக்கா என்றுதான் கேட்பார்கள். அதுபோல்தான், இன்டர்நெட் பற்றியும்.

வேத்தியன் on 10 February 2009 at 14:23 said...

// அன்புமணி said...

கேபிள் கனெக்சன் இருக்கா என்று யாரும் சொல்லமாட்டார்கள். சன் டி.வி. கனெக்சன் இருக்கா என்றுதான் கேட்பார்கள். அதுபோல்தான், இன்டர்நெட் பற்றியும்.//

:-)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.