ஆரம்பித்த பெருமைக்குரியவர் நிலாவும் அம்மாவும்.
இதுவரை தொடர்ந்தவர்கள்...
ரவீ.
ஹேமா.
மற்றும் என்னை அழைத்த நண்பர் தேவா.
இதோ கேள்விகளும் பதில்களும்...
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
எனது நிஜப் பெயர் இதுவல்ல.
நான் படித்த பாடசாலை வேத்தியர் கல்லூரி, கொழும்பு. (Royal College, Colombo.)
ஆக என் பெயரை “வேத்தியன்” என வைத்து கொண்டேன்...
பாடசாலை சம்பந்தப்பட்டவை யாருக்கு பிடிக்காமல் போகும்???
ஆக எனக்கு என் பெயர் ரொம்பப் பிடிக்கும்...
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
பொதுவாக எதற்கும் நான் அழுவதில்லை. அழுது நேரத்தை வீணாக்காமல் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் சிறந்தது என்று கருதுபவன் நான்...
ஆனால் 4 நாட்களுக்கு முன் விஜய் டீ.வியில் பிரேமின் நடனத்தை பார்த்து சிறிது கண்கலங்கி விட்டேன்...
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ம்... என்ன சொல்வது ???
சரி இருந்துட்டுப் போகட்டும், என் கையெழுத்து எனக்குப் பிடிக்கும்...
4.பிடித்த மதிய உணவு என்ன?
நான் வெஜிடேரியன்...
அம்மா கையால் எது சமைத்தாலும் அது எனக்கு நன்றாகத் தான் இருக்கும்...
சோறு, முளைத்த பயற்றம்பயிறு கறி, கத்தரிக்காய் கறி, சாம்பார், பாயாசம்.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
அந்த இடத்துல நல்லா பேசினா உடனே அவர் என் நண்பர்...
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடலில் குளிக்கவே அதிகம் விரும்புவேன்...
அலைகளோடு விளையாடும் அந்த அனுபவம் ஒவ்வொரு தடவையும் பிடிக்கும்...
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகம், அணிந்துள்ள ஆடையும் அதை அணிந்துள்ள விதமும்...
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்சது - இன்னொருவருக்கு சற்றும் யோசிக்காமல் உதவும் குணம் கொஞ்சமாவது உண்டு எனக்கு...
பிடிக்காதது - முன்கோபம்...
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
இப்போ தான் 20...
திருமண அழைப்பிதழ் ஒவ்வொருவரின் வீடு தேடி வரும் !!! :-)
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் வலையுலக நண்பர்கள் பக்கத்தில் இல்லையென்பது வருத்தம் தான்...
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
கறுப்பு கலர் டெனிம், கறுப்பு கலர் டீ-ஷேர்ட்...
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
ஒன்றும் பார்க்கவில்லை...
இசைப்புயலின் புயலிசையில் “தென்மேற்குப் பருவக்காற்று...” - படம் - கருத்தம்மா...
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
பிடித்த நிறமான கறுப்பாக மாறவே விருப்பம்...
14.பிடித்த மணம்?
Play Boy சென்ட்டின் அசத்தலான மணம்... :-)
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
அபுஅஃப்ஸர்
புதிய பதிவர்களையும் அன்போடு நடத்துபவர்...
நல்ல எழுத்தாளர்...
அ.மு.செய்யது
நல்ல சிந்தனையாளர்...
புதியவர்களை ஊக்கப்படுத்துவதில் இவரும் ஒருவர்...
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
அவரது கவிதைகள் பொதுவாகப் பிடிக்கும். அதுவும் இந்தக் கவிதை ரொம்பப் பிடிக்கும்...
17. பிடித்த விளையாட்டு?
கால்பந்து
18.கண்ணாடி அணிபவரா?
கடந்த இரண்டு வருடமாக அணிகிறேன்...
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
யதார்த்தமான எல்லா படங்களும் ரொம்பப் பிடிக்கும்...
நகைச்சுவைப் படங்களும் பிடிக்கும்...
20.கடைசியாகப் பார்த்த படம்?
ஆனந்த தாண்டவம்...
21.பிடித்த பருவ காலம் எது?
மழைக்காலம்...
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
Oliver Twist - by : Charles Dickens...
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது மாற்றி விடுவேன்...
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் - அமைதியான இரவு நேரத்தில் ஒலிக்கும் புல்லாங்குழலின் இசை (அது சத்தம் அல்ல, இசை...)
பிடிக்காத சத்தம் - வாகனங்களிலிருந்து வரும் எல்லா சத்தங்களும்...
பேரரசு படங்களில் வரும் வில்லன்கள் போடும் “ஏ”, “ஓ” சத்தங்களும் பிடிக்காது... :-)
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
இலங்கையை விட்டு நான் சென்றது என்றால் நயினாதீவு... :-)
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
கொஞ்சம் சுருதி, தாள, லய நயத்தோடு பாட்டு பாடத் தெரியும்...
மிருதங்கம் மற்றும் Drums வாசிப்பேன்...
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நம்பிக்கைத் துரோகம்...
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
முன்னர் சொன்னது போல முன்கோபம்...
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
ஹவாய் தீவுகள்...
இது வரை சென்றது கிடையாது.. ஒரு நாள் செல்வேன்...
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
மற்றவர் புகழும் அளவுக்கு இல்லையென்றாலும் மற்றவர் மதிக்கும் அளவுக்கு பெற்றவர்களின் மதிப்பு குறையாமல் இருக்க வேண்டும்...
31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
என்னத்தச் சொல்ல...
திரும்பவும் சொல்றேன்... இப்போ தான் 20...
இன்னும் 10 வருஷம் போனாலும் எனக்கு 20 தான்... ஏன்னா சொன்னத மாத்திச் சொல்ற பழக்கம் எனக்கு கிடையாதுல்ல... :-)
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுமளவுக்கு இன்னும் எதையும் பெரிதாக சாதிக்கவில்லை...
அந்தளவுக்கு அனுபவமும் கிடையாது...
இந்தத் தொடர் பதிவுக்கு நான் அழைப்பவர்கள், எனது நண்பர்கள்...
1. அபுஅஃப்ஸர் - என் உயிரே
2. அ.மு.செய்யது - :: மழைக்கு ஒதுங்கியவை ::
வந்து எழுதி அசத்துங்க நண்பர்களே !!!
40 . பின்னூட்டங்கள்:
he the 1st!!!
நானும் பிரேமின் நடனம் பார்த்தேன்.நெகிவாய் இருந்தது.
வலையுல நண்பர்கள் பக்கத்தில் இல்லாத வருத்தமா? வாங்க ஒருமுறை இந்தியாவிற்கு...
நீங்கள் அழைத்த அபு சாருக்கும்.செய்யது சாருக்கும் வாழ்த்துக்கள்
சுவாரசியமா இருக்கு. அடுத்து வரும் அ.மு.செய்யது, அபுஅஃப்ஸர் இருவருக்கும் வாழ்த்துக்கள். யப்பா, ரெண்டு பேரும் மெரிட்ல பாஸ் பண்ணனும் (பிட் அடிச்சாவது). ஒழுங்கா கேள்வி பதில் தயார் பண்ணுங்க
நல்ல பதில்கள்.
அருமை வேத்தியரே.
அடுத்து வரும் இருவருக்கும் வாழ்த்துகள்
-----இலங்கையை விட்டு நான் சென்றது என்றால் நயினாதீவு... :-)-----
Whatta Geography Knowledge..Play GEO CHALLENGE n FB ..:))
தம்பி வேத்தி அடிக்கடி 20 வயது எனப் புலம்புவதன் காரணம் என்னவோ? 20 வயதில்தான் காதல் வரும் ஹிஹிஹி
வேத்தியா இப்படி எத்தனைப்பேரு கிளம்பிருக்கீங்க... ஆஅவ்வ்வ்வ்வ்வ்
உங்களுடைய பதில் அனைத்தும் வெளிப்படையாக இருந்தது.. வாழ்த்துக்கள்
உக்காந்து யோசிக்க வெச்சிட்டீங்க..
என்(ங்)களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி
சந்திப்போம் என்னுடைய பதிவில்...
maal said...
he the 1st!!!//
நீ கலக்கு மச்சி...
:-)
@ Rajeswari...
இந்தியா வரேன்..
இந்த ஜூன் மாதம்..
வந்து சந்திக்கலாம்...
:-)
@ நவாஸுதீன்...
நன்றிங்க...
@ ஜமால்...
அண்ணே வந்தாச்சா???
வாங்க வாங்க...
நீங்க இல்லாம காஞ்சி போய் இருக்கு கடை...
:-)
@ வந்தியத்தேவன்...
ஆஹா...
வயச சொல்ல வேண்டிய இடத்துல சொல்லித் தானே ஆகணும்...
அதான்...
:-)
@ அபுஅஃப்ஸர்...
அண்ணே வாங்க...
எழுதி அசத்துங்க...
உங்களைத் திரும்பிப் படிக்கும்படியான பதிவு இது.
இருந்தாலும் 20 வயதை கடந்த இருபது வருடங்களாக நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பதுதான் ரொம்ப கொடுமையாக இருக்கிறது...
கார்த்திகைப் பாண்டியன் என்னை அழைத்திருந்தார். நானும் எழுதிவைத்திருக்கிறேன்.... தரவேண்டும்!!!!
@ ஆதவா...
ஆஹா.. 20ன்னு 20 வருஷமாவா??
:-)
விரைவில போடுங்க நண்பா...
//14.பிடித்த மணம்?
Play Boy சென்ட்டின் அசத்தலான மணம்... :)//
ஹா ஹா...
நல்ல சுவாரஸியமான பதிவு !!!
மாட்டி விட்டுட்டேளா ??
@ செய்யது...
நன்றி...
வேற வேலை நமக்கு ???
:-)
எழுதி அசத்துங்க தல...
கடைசி வரைக்கும் உங்க பெயரை சொல்லவில்லையே நண்பா. ரொம்ப ரொம்ப மேலோட்டமாக சொல்லிட்டீங்க.
நண்பா அப்புறம் இந்த தொடர் விளையாட்டில் நிலவும் அம்மாவுக்கு பிறகு ஹேமா எழுதினாங்க. நீங்க அவர் பெயரை விட்டு விட்டு வீட்டிர்கள் சேர்த்து விடுங்கள்.
அப்புறம் 20? இதற்கு என்ன விளக்கம் நண்பா.
நிதானமா ஒவ்வொருக் கேள்விக்கும்
தெளிவா பதில் எழுதியிருக்கீங்க வேத்தியன். உங்களின் நல்ல அறிமுகம் போலவே உள்ளது.
வாழ்த்துக்கள்.
ஓ இதான் வேத்தியனா!
இருபது வயசா?? எத்தினை வருசம் தான் இதையே சொல்லிட்டு இருப்பீங்க!
-----இலங்கையை விட்டு நான் சென்றது என்றால் நயினாதீவு... :-)-----
ammaadiyov......
எத்தினி வருசமா இந்த 20 வயசு
கடையம் ஆனந்த் said...
கடைசி வரைக்கும் உங்க பெயரை சொல்லவில்லையே நண்பா. ரொம்ப ரொம்ப மேலோட்டமாக சொல்லிட்டீங்க.
நண்பா அப்புறம் இந்த தொடர் விளையாட்டில் நிலவும் அம்மாவுக்கு பிறகு ஹேமா எழுதினாங்க. நீங்க அவர் பெயரை விட்டு விட்டு வீட்டிர்கள் சேர்த்து விடுங்கள்.
அப்புறம் 20? இதற்கு என்ன விளக்கம் நண்பா.//
வாங்க நண்பா...
உண்மையான பெயர் பிரசன்னா...
ஹேமா பெயர் சேர்த்தாச்சு...
நான் இப்போ தான் பள்ளி கல்வி முடிச்சிருக்கேன் நண்பா...
இந்த ஜூலையில தான் கல்லூரி போறேன்...
வருகைகு நன்றி நண்பா...
ஆ.முத்துராமலிங்கம் said...
நிதானமா ஒவ்வொருக் கேள்விக்கும்
தெளிவா பதில் எழுதியிருக்கீங்க வேத்தியன். உங்களின் நல்ல அறிமுகம் போலவே உள்ளது.
வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி நண்பா...
கவின் said...
ஓ இதான் வேத்தியனா!
இருபது வயசா?? எத்தினை வருசம் தான் இதையே சொல்லிட்டு இருப்பீங்க!//
வாங்க கவின்...
இது தான் வேத்தியன் விளக்கம்.
அடிக்கடி சொல்றதால பொய்ன்னு படுதோ???
இப்ப தான் பள்ளி கல்வி முடிஞ்சிருக்கு.
ஜூலையில தான் கல்லூரி..
வருகைக்கு நன்றி...
நிலாவும் அம்மாவும் said...
-----இலங்கையை விட்டு நான் சென்றது என்றால் நயினாதீவு... :-)-----
ammaadiyov......//
வாங்க நிலா அம்மா...
உணமையில தாங்க...
:-)
நசரேயன் said...
எத்தினி வருசமா இந்த 20 வயசு//
ஆஹா..
எல்லாருக்கும் இந்த சந்தேகமா???
பொய் இல்லைங்க..
உண்மைதான்..
இந்த ஜூலையில இந்தியா வரேன்..
அப்போ பார்த்து தெரிஞ்சுக்கலாம்ல...
:-)
Simply Superb....!
அசத்தல் பதில்கள்..
//டக்ளஸ்....... said...
Simply Superb....!//
தொர இங்கிலிபீசு எல்லாம் பேசுது..
நயினாதீவு... ?
enga irukku ?
வேத்தியன் கலக்கீட்டேள்!! பேஷ்!! பேஷ்!!!
அபு செய்யது தொடருங்க!!!
@ டக்ளஸ்...
நன்றி மாப்ள...
கார்த்திகைப் பாண்டியன் said...
அசத்தல் பதில்கள்..
//டக்ளஸ்....... said...
Simply Superb....!//
தொர இங்கிலிபீசு எல்லாம் பேசுது..//
நன்றி...
:-)
பித்தன் said...
நயினாதீவு... ?
enga irukku ?//
யாழ்ப்பாணத்துக்கு மேல்...
thevanmayam said...
வேத்தியன் கலக்கீட்டேள்!! பேஷ்!! பேஷ்!!!//
வாங்க தேவா...
நன்றிங்க...
ஹேய் வேத்தியன்..
சேம் சுவீட் பா..
எனக்கும் கருப்பு தான் ரொம்ப பிடிக்கும்..
சுரேஷ் குமார் said...
ஹேய் வேத்தியன்..
சேம் சுவீட் பா..
எனக்கும் கருப்பு தான் ரொம்ப பிடிக்கும்..//
ஐ.. சூப்பர் கலரு...
:-)
தாமதத்திற்கு மன்னிக்கவும்.. நேரம் கிடைக்கவில்லை...
பதில்கள் அருமை,.. நீங்களும் என் நாடு என்று இதுவரை அறிந்திருக்கவில்லை..
Post a Comment