Wednesday, 6 May 2009

ஏன் சுவிஸ் வங்கி ???


நம்மள்ல பலரும் படத்துல பார்த்தோ, புத்தகத்துல வாசிச்சோ, அல்லது செய்திகள்ல கேட்டோ சுவிஸ் வங்கிகள், அவற்றில் கணக்குகள் பற்றி ஒரு அபிப்பிராயம் வைத்திருப்போம்...
சொல்லப்போனால், நாமளும் சுவிஸ் வங்கியில் ஒரு கணக்கு வைத்துக் கொண்டால் பெருமையாக இருக்குமே என்று நினைப்பவர்களும் உள்ளனர்.
:-)

பெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகள், முன்னால் கணவன்/மனைவிகளிடமிருந்து தனது சொத்துகளை பாதுகாக்க நினைக்கும் பிரபலங்கள், குற்றவாளிகள் போன்றோர் மட்டுமே சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் அது தப்பு !
சுவிஸ் வங்கியில் யார் வேண்டுமானாலும் கணக்கு வைத்துக் கொள்ள முடியும், பணமிருந்தால் !
:-)

நிலையில்லாத அரசு ஆட்சி நடத்தும் நாட்டில் வசிப்பவர்கள் முக்கியமாக இங்கே கணக்கு வைத்துக் கொள்கிறார்கள்.
ஏனென்றால் அரசு கவிழ்ந்து நாடு வங்குரோத்து நிலைமையை அடைந்தாலும் தமது பணம் கவனமாக இருக்குமல்லவா ???


சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துக் கொள்வதால் உள்ள நன்மைகள்...



1. இரகசியத்தன்மை (Privacy)
ஒரு மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையில் என்ன உறவுமுறை இருக்குமோ அதே மாதிரியான இரகசியத்தன்மை பேணப்படும்.
கணக்கு உரிமையாளரின் முன்னனுமதியின்றி கணக்கு பற்றிய தகவல்களை இன்னொருவருக்கு வழங்குவதை சுவிஸ் நாட்டு சட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

ஒரு சில சந்தர்ப்பங்களில் மாத்திரமே கணக்கு பற்றிய தகவல்களை வழங்க முடியும். அவை :
* குற்றச் செயல்கள்.
* போதைப் பொருள் கடத்தல்/ வணிகம் செய்தல்.

கணக்கு உரிமையாளரின் அனுமதியின்றி தகவல்களை வெளியிட்டால் அரசால் என்ன தண்டனை வழங்கப்படும் தெரியுமா ???
6 மாத சிறைத் தண்டனை + அபராதம் - 50000 ஸ்விஸ் ஃப்ராங்க்ஸ். (கிட்டத்தட்ட 2186000 இந்திய ரூபாய்கள் - தகவலுக்கு நன்றி : http://www.x-rates.com)

2. குறைந்த அபாயத்தன்மை (Low Risk)
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ள இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.
அதாவது யாராவது முற்றிலும் வங்குரோத்து நிலமையை அடைய நேரிடும் சந்தர்ப்பம் இருந்தாலும் சுவிஸ் வங்கியில் இருக்கும் பணம் பாதுகாப்பாகவே இருக்கும்.
அத்தோடு சுவிஸ் நாடானது பலமான பொருளாதார பின்னணியைக் கொண்டுள்ளது.
அத்தோடு 1505ம் ஆண்டுக்குப் பின் எந்தவொரு நாட்டுடனும் போர் புரிந்ததே கிடையாது.

சுவிஸ் வங்கியாளர்களுக்கு எப்பிடி, எவ்வளவு, எதில் முதலீடு செய்தால் எப்பிடி, எவ்வளவு இலாபம் கிடைக்கும் என்று நன்றாக அறிவுறுத்தப்பட்டுள்ளார்களாம்...

கணக்கு உரிமையாளர் பாதுகாப்பு பற்றிய விதிமுறைகள் எல்லாம் SBA எனப்படும் Swiss Bankers Associationஇன் Depositor Protection Agreementஆல் நிர்ணயிக்கப்படும்.
இந்த விதிமுறைகள் அடங்கிய தொகுப்பு உரிமையாளருக்கு மேலும் பாதுகாப்பு சேர்க்கும் விதத்தில் 2004ம் ஆண்டில் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது.

சுவிஸ் ஃப்ராங்க் உலகின் முதலான பணங்களில் ஒன்றாக கொள்ளப்படுகிறது. காரணம், சமீபத்தில் அதன் பணவீக்க சதவீதம் 0.



சுவிஸ் வங்கியில் கணக்கு ஒன்றை ஆரம்பித்தலும், பாவித்தலும்...

சுவிஸ் விதிகளின்படி சுவிஸ் வாசிகள் அல்லாத வெளிநாட்டவர் ஒருவர் கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதற்கு குறைந்தது 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். மற்றும்படி வேறு ஒன்றும் முக்கியமாக நிபந்தனைகள் கிடையாது...

உங்கள் கணக்கில் பணம் எந்த நாட்டு நாணயமாகவும் இருக்கலாம்.
பலர் சுவிஸ் ஃப்ராங்க், அமெரிக்க டொலர், யூரோ, ஸ்டேர்லிங் பவுண் என வைத்துக் கொள்வர்.
கணக்கு ஆரம்பிக்க குறைந்த தொகை இதுதான் என எதுவும் கிடையாது.
ஆனால் கணக்கு ஒன்றை ஆரம்பித்ததும் குறைந்தது இவ்வளவு பேண வேண்டும் என உண்டு.

வங்கியையும், கணக்கு வகையையும் தெரிதல்...
எந்த வகையான முதலீடு செய்கிறோம், எவ்வளவு முதலீடு செய்கிறோம் என்பதை வைத்து வங்கியை தெரிய வேண்டும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்கள் கணக்கு பற்றிய இரகசியத்தன்மையை வெளியிட நீங்கள் விரும்பாவிட்டால் உங்கள் நாட்டில் கிளை இல்லாத சுவிஸ் வங்கியை தெரிவு செய்ய வேண்டுமாம்.
ஏனெனில் வங்கிகள் அமைந்துள்ள நாட்டு சட்டங்களுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும் !

வட்டி ஈட்டுதல்...
உங்களுடைய கணக்கை சுவிஸ் ஃப்ராங்கில் பேணினால் உங்களுக்கு வட்டி கிடைக்கும். ஆனால், அந்த நாட்டு விதிகளின்படி வரி செலுத்தவே அது தீர்ந்து விடும்.
ஆக, சுவிஸில் வாழாத கணக்காளர்கள் அமெரிக்க டொலர், யூரொ, ஸ்டேர்லிங் பவுண் என வெளிநாட்டு நாணயமாக வைத்துக் கொள்வர்.
இதன்போது உங்கள் பணம் சர்வதேச பணச் சந்தையில் புழக்கத்தில் விடப்பட்டு அதன்மூலம் வட்டி ஈட்டலாம்...

ஆனால் இனி சிறிது தகவல்கள் தேவைக்கேற்ப வெளியிடப்படுமாமே...
தேவாவின் இந்த பதிவை படித்துப் பாருங்க...
தலைப்பில் சொடுக்கவும்...

_______________________________________________________________

எப்பிடில்லாம் கஷ்டப்பட்டு ஒரு மனுஷன் பணம் சம்பாதிச்சு வரி கட்டுறான்...
அதயெல்லாம் இந்த அரசியல்வாதிகள் கொள்ளையடிச்சு எவ்வளவு ஈஸியா பதுக்கிடுறானுங்க...
என்ன கொடுமை சரவணன் இது ???
ஏன் சுவிஸ் வங்கி ???SocialTwist Tell-a-Friend

17 . பின்னூட்டங்கள்:

S.A. நவாஸுதீன் on 6 May 2009 at 18:42 said...

நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கீங்க வேத்தியன். நம் நாட்டு அரசியல்வாதிகளின் ஊழல் பேச்சுக்கு மட்டுமே பெயர் போன சுவிஸ் வங்கிகளின் சுவாரசியமான தகவல்கள் பரிமாரியதற்கு மிக்க நன்றி

அ.மு.செய்யது on 6 May 2009 at 18:44 said...

தெளிவான விளக்கம்.

பகிர்வுக்கு நன்றி வேத்தியன்.

இந்திய அரசியல்வாதிகளின் கருப்பு பணம் மட்டும் 70 லட்சம் கோடிகள் சுவிஸ் வங்கியில் போடப்பட்டுள்ளதாம்.

நாமல்லாம் எங்க மேல வர்றது ??

அப்பாவி முரு on 6 May 2009 at 18:56 said...

ஐய்யயோ, திருடன்களுக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியங்களை வெளியே சொல்லீட்டையே வேத்தியா...

ராஜ நடராஜன் on 6 May 2009 at 19:33 said...

ஸ்விஸ் வங்கி கணக்குல யாரோ மாட்டிகிட்டாங்கன்னு உங்கள் பெயரைக்கூட கவனிக்காமல் படிச்சிகிட்டே வந்தேன்.பின்னூட்டம் வந்தபின்பே வேத்தியன் என அறிந்தேன்.

நல்ல தகவல்கள்.கூடவே காசு சேர்த்தப்ப இதையெல்லாம் சொல்லாம கணக்கு காட்டுன்னு சொல்லிகிட்டிருக்கிற காலத்துல வந்து தகவல் சொல்றீங்களேன்னு நிறையப் பேர் வருத்தபடற மாதிரி தெரியுது.

ஹவாலா மேக்னட்டுகளுக்கு இதெல்லாம் ஜுஜிபின்னும் ஒரு கூட்டம் கத்துற மாதிரி தெரியுது.

தேவன் மாயம் on 6 May 2009 at 20:28 said...

இதெல்லாம் சரி வேத்தியன், பணம் ரொம்ப இருந்தா எனக்கு அனுப்புங்க!! நான் 2 மடங்க்காக மாத்தி அனுப்பி விடுகிறேன்11

தேவன் மாயம் on 6 May 2009 at 20:35 said...

சுவிஸ் ஃப்ராங்க் உலகின் முதலான பணங்களில் ஒன்றாக கொள்ளப்படுகிறது. காரணம், சமீபத்தில் அதன் பணவீக்க சதவீதம் 0.
///
அப்படியா!!

தேவன் மாயம் on 6 May 2009 at 20:46 said...

ஹி ஹி ஹி!!!

நசரேயன் on 6 May 2009 at 20:56 said...

நல்ல விளக்கம்

ஆ.சுதா on 6 May 2009 at 20:57 said...

சுவிஸ் பேங்கை பற்றி விவரமா கொடுத்திருக்கீங்க.. இன்னும் முழுமையா படிக்கவில்லை அப்புறமா படிச்சுடரேன்.

ஆதவா on 6 May 2009 at 23:11 said...

நான் தெரிஞ்சுக்க விரும்பிய பதிவு... நீங்களே அதுவும் தமிழ்ல கொடுத்திட்டீங்க.... ரொம்ப நன்றிங்க...

ஸ்விஸ் பேங்க் குறித்து சொல்லரசனும் ஆ. ஞானசேகரனும் எழுதியிருக்கிறார்கள்.. இருந்தாலும் இவ்வளவு விளக்கமாக நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்!!

இந்திய பணம், நம்ம அ.மு.செய்யது சொல்றாப்ல 70 லட்சம் கோடியா??? அட கேடிகளா!~!!!

கார்த்திகைப் பாண்டியன் on 7 May 2009 at 11:52 said...

பகிர்வுக்கு நன்றி வேத்தியன்

பட்டாம்பூச்சி on 7 May 2009 at 16:08 said...

//எப்பிடில்லாம் கஷ்டப்பட்டு ஒரு மனுஷன் பணம் சம்பாதிச்சு வரி கட்டுறான்...
அதயெல்லாம் இந்த அரசியல்வாதிகள் கொள்ளையடிச்சு எவ்வளவு ஈஸியா பதுக்கிடுறானுங்க...//

சரியான கேள்வி.

புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன்.
பகிர்வுக்கு நன்றி.

KRICONS on 7 May 2009 at 18:04 said...

வாழ்த்துக்கள் உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளது. அதுக்கு முன்னாடி இதை படித்துவிட்டு போகவும்
http://kricons.blogspot.com/2009/05/blog-post_07.html

வேத்தியன் on 8 May 2009 at 10:25 said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல...

வேத்தியன் on 8 May 2009 at 10:26 said...

me the 15...
:-)

கிராமத்து பயல் on 8 May 2009 at 11:32 said...

இலங்கையிலிருந்து கிராமத்து பயல் அண்ணே அழகான நல்ல தகவல் தந்துள்ளீகள் நிறைய தகவல் அறிய முடிந்தது மிக்க நன்றி ...........

Rajeswari on 8 May 2009 at 14:18 said...

வரும் தேர்தலில் ஜெயித்தால் சுவிஸ்ல் இருக்கும் பணத்தை இந்தியா கொண்டுவருவோம் என்று வாக்குறிதிகளை கொடுத்து அண்ட புழுகு புழுகுபவர்களை என்ன செய்வது?

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.