கூறியிருந்தார்.
அபு விரைவில் குணமடைந்து வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்...
________________________________________________________________
சென்னையில் சத்யம் திரையரங்கில் நேற்று “அங்காடித்தெரு” திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.
________________________________________________________________
சென்னையில் சத்யம் திரையரங்கில் நேற்று “அங்காடித்தெரு” திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.
“அங்காடித்தெரு” திரைப்படத்தின் இயக்குனர் “வெயி” எனும் வெற்றிப்படம் தந்த வசந்தபாலன்.
தயாரிப்பு - ஐங்கரன் இன்டர்நஷனல்.
ஹீரோ - மகேஷ்.
ஹீரோயின் - அஞ்சலி.
இசை - ஜி.வி.பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனி.
யதார்த்தமாக படமெடுக்கிறேன் பேர்வழின்னு சொல்லிட்டு வர்ற சில இயக்குனர்கள் கூட வெளிநாட்டில் டூயட் ஷூட் பண்ண தயங்குவதில்லை.
படத்தில் கதைன்னு ஒன்னு இருக்கோ இல்லையோ நாயகனும் நாயகியும் சந்தோஷமாக ஆடிப்பாடும் டூயட் இல்லாமல் படமே இல்லையென்ற நிலமைக்கு வந்துவிட்டது நம் தமிழ் சினமா...இது தொடர்பாக இந்த பாடல் வெளியீட்டு விழாவில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் பாலுமகேந்திரா...
அவர் கூறிய கருத்துகள்...
” தமிழ் சினிமா தற்போது மாற்றம் கண்டு வருகிறது. ஆனால் இந்த டூயட் என்னும் விஷயம் மட்டும் இன்னும் மாறாமல் அப்பிடியே இருக்கிறது.
இந்த டூயட் பாடல்கள் எரிச்சலை உண்டுபண்ணுகிறது.
டீ.வியில் இந்த டூயட் பாடல்கள் ஒளிபரப்பப்படும் போது ஒலியைக் குறைத்துவிட்டு பார்த்தால் போதை ஏறிய இரண்டு குரங்குக் குட்டிகள் ஆடுவது போல தோன்றுகிறது.
இதை மற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் “முள்ளும் மலரும்” படத்தில் பின்னணி இசையாக அமைத்து தருமாறு மகேந்திரனிடம் கேட்டேன், அவரும் ஒப்புக் கொண்டார்.
வழக்கமாக காதலர்கள் என்ன செய்வார்கள் என்று காண்பித்தால் மட்டும் போதுமானது.
நான் எனது படங்களில் காதல் காட்சிகளை எவ்வாறு எடுப்பேனோ அது போலவே “அங்காடித்தெரு” படத்தில் வசந்தபாலனும் செய்துள்ளார்.
“வெயில்” எனும் அவரின் முதல் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
“அங்காடித்தெரு” படமும் எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக அமையும் என நம்புகிறேன் ” என தெரிவித்தார்.
_______________________________________________________________
28 . பின்னூட்டங்கள்:
ஹய்யா.. மீ த பஸ்ட்டு..
படிச்சுட்டு வாறன்..
//டிவியில் இந்த டூயட் பாடல்கள் ஒளிபரப்பப்படும் போது ஒலியைக் குறைத்துவிட்டு பார்த்தால் போதை ஏறிய இரண்டு குரங்குக் குட்டிகள் ஆடுவது போல தோன்றுகிறது//
ஹ ஹ..கண்டிப்பா மச்சி...
மீதசெகண்டு.... !!
ஆதங்கம் கரெக்கிட்டுதான்.. ஆனா என்ன பண்றது ..???
அவரு சொல்றது சரி.. நீ என்ன மாப்ள சொல்ற..
டூயட் வேணுமா. வேண்டாமா..
நண்பர் அபுஅஃப்ஸர் விரைவில் குணமடைய எங்கள் பிரார்த்தனைகளையும் பதிவு செய்து கொள்கிறோம்.
இதுவரை வெளிநாட்டில் ஒரு ஷாட் கூட எடுக்காத ஒரே இயக்குனர் மணிரத்னம் மட்டுமே.அதை ஒரு கொள்கையாகவே அவர் வைத்துள்ளார்.
வெளிநாட்டில் டூயட் வைப்பதற்கான ஒரே காரணம்:
புரொடியூசர் செலவில் டைரக்டர்கள் வெளிநாடுகளை பார்க்க வேண்டாமா ?
நண்பர் அபு குண்மடைய பிரார்த்திக்கிறேன்!!
தமிழ் சினிமா தற்போது மாற்றம் கண்டு வருகிறது. ஆனால் இந்த டூயட் என்னும் விஷயம் மட்டும் இன்னும் மாறாமல் அப்பிடியே இருக்கிறது.
இந்த டூயட் பாடல்கள் எரிச்சலை உண்டுபண்ணுகிறது///
டூயட் மாறவே மாறாது!!!
சுரேஷ் குமார் said...
ஹய்யா.. மீ த பஸ்ட்டு..
படிச்சுட்டு வாறன்..//
வாங்க சுரேஷ்...
கடைக்குட்டி said...
மீதசெகண்டு.... !!
ஆதங்கம் கரெக்கிட்டுதான்.. ஆனா என்ன பண்றது ..???//
அதானே??
நாம போறதே டூயட் பாக்கத்தான்...
:-)
லோகு said...
அவரு சொல்றது சரி.. நீ என்ன மாப்ள சொல்ற..
டூயட் வேணுமா. வேண்டாமா..//
இதென்ன மாப்ள கேள்வி???
நம்மளப் ப்த்தி தெரியும் தானே???
:-)
அ.மு.செய்யது said...
நண்பர் அபுஅஃப்ஸர் விரைவில் குணமடைய எங்கள் பிரார்த்தனைகளையும் பதிவு செய்து கொள்கிறோம்.
இதுவரை வெளிநாட்டில் ஒரு ஷாட் கூட எடுக்காத ஒரே இயக்குனர் மணிரத்னம் மட்டுமே.அதை ஒரு கொள்கையாகவே அவர் வைத்துள்ளார்.
வெளிநாட்டில் டூயட் வைப்பதற்கான ஒரே காரணம்:
புரொடியூசர் செலவில் டைரக்டர்கள் வெளிநாடுகளை பார்க்க வேண்டாமா ?//
அதானே டைரக்டர்கள் வெளிநாடு சுத்திப் பாக்கிறது இந்த தருணங்கள்ல தானே...
@ thevanmayam...
வாங்க தேவா...
|இன்று நண்பர் அபுஅஃப்ஸருக்கு அறுவை சிகிச்சை என நண்பர் நவாஸுதீன்
கூறியிருந்தார்.
அபு விரைவில் குணமடைந்து வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்...|
நானும் வேண்டிக்கிறேன்.
பாலுமகேந்ரா ஆதங்கம் சரிதான்.
அங்காடி தெருவே நல்ல படம் என்று எதிர்பார்கின்றேன்.. பார்ப்போம்.
பொன்மேனி உருகுதே...
//டீ.வியில் இந்த டூயட் பாடல்கள் ஒளிபரப்பப்படும் போது ஒலியைக் குறைத்துவிட்டு பார்த்தால் போதை ஏறிய இரண்டு குரங்குக் குட்டிகள் ஆடுவது போல தோன்றுகிறது//
:-)))
எப்படியெல்லாம் திங்க் பண்ணுறாருப்பா
//Anonymous said...
பொன்மேனி உருகுதே...//
ஹா ஹா ஹா
"பொன்மேனி உருகுதே" டூயட் பாடல் அல்ல.
வெளிநாட்டுக்கு வந்து சுத்திப் பார்க்கிறாங்கன்னா நினைக்கிறீங்க?
என்னோட ரெண்டு செண்ட்: பாடல்களே தேவை இல்லை. பின்னணி இசை மட்டுமே போதும்.
அதுவும் பின்னணியாவே இருக்கணும். பலபடங்களில் தேவையில்லாம, அந்தக் காலத்துலே நாடகமேடைக்குமுன் இருக்கும் ம்யூஸிக் பிட்'லே உக்காந்துக்கிட்டு
மேடையில் நடப்பதுக்கேற்ற மாதிரி இல்லாம அவுங்கபாட்டுக்குத் தனி ஆவர்த்தனமா 'வாசிச்சுக்கிட்டு' இருப்பாங்க பாருங்க அதே நிலமைதான் இருப்பதுபோல இருக்கு.
இதுவரை வெளிநாட்டில் ஒரு ஷாட் கூட எடுக்காத ஒரே இயக்குனர் மணிரத்னம் மட்டுமே.அதை ஒரு கொள்கையாகவே அவர் வைத்துள்ளார்.
வெளிநாட்டில் டூயட் வைப்பதற்கான ஒரே காரணம்:
புரொடியூசர் செலவில் டைரக்டர்கள் வெளிநாடுகளை பார்க்க வேண்டாமா ?
KANNATIL MUTTAMITTAL?
|இன்று நண்பர் அபுஅஃப்ஸருக்கு அறுவை சிகிச்சை என நண்பர் நவாஸுதீன்
கூறியிருந்தார்.
அபு விரைவில் குணமடைந்து வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்...|
நண்பர் குணமடையட்டும்..!
பாலும்கேந்திரா....!
நன்றி,
ஆ.முத்துராமலிங்கம்...
கிரி...
துளசி கோபால்...
UNGALODU NAAN...
டக்ளஸ்...
நண்பர் அபுஅஃப்ஸர் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள்! டூயட் எங்கு எடுப்பது என்பது பிரச்சினை இல்லை ரசிக்கத்தக்கதாய் எடுப்பது என்பதே இங்கு கேள்விக்குறிதான்! (நாமளும் நாலு இடத்தைப் பார்க்க இந்த டூயட் உபயோகமா இருப்பதும் உண்மைதானே!)
இவங்கள எல்லாம் திருத்தவே முடியாது நண்பா
நண்பர் அபுஅஃப்ஸர் விரைவில் குணமடைய எங்கள் பிரார்த்தனைகளையும் பதிவு செய்து கொள்கிறோம்.
நன்றி,
குடந்தை அன்புமணி...
கார்த்திகைப்பாண்டியன்...
அஃப்ஸர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!!!!
--------------
பகிர்வுக்கு நன்றி வேத்தியன். டூயட் பாடல்கள் இப்பொழுதெல்லாம் எரிச்சலைத்தான் உண்டுபண்ணுகின்றன. ஆனால் அதற்கு இன்னும் மவுசு குறைந்தபாடில்லை!
நண்பர் அபுஅஃப்ஸர் விரைவில் குணமடைந்து வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஆதவா said...
அஃப்ஸர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!!!!
--------------
பகிர்வுக்கு நன்றி வேத்தியன். டூயட் பாடல்கள் இப்பொழுதெல்லாம் எரிச்சலைத்தான் உண்டுபண்ணுகின்றன. ஆனால் அதற்கு இன்னும் மவுசு குறைந்தபாடில்லை!//
அது சரிதான்...
படம் பாக்க மட்டுமா நாம தியேட்டர் போறோம்??
:-)
கடையம் ஆனந்த் said...
நண்பர் அபுஅஃப்ஸர் விரைவில் குணமடைந்து வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.//
வருகைக்கு நன்றி ஆனந்த்...
Post a Comment