Thursday, 21 May 2009

என்னடா உலகமிது ???


நம்ம நாட்டுல என்னவென்னவோ எல்லாம் நடக்குதுப்பா...
வெற்றித் தளபதி அதிபர் ரா___ஷ போர் எல்லாம் முடிந்துவிட்டது என்று அறிவித்து விட்டாராம்ல...
என்ன கொடும ரா___ஷ இது ???
(இதை சென்னை 28 படத்துல பிரேம்ஜி ஸ்டைல்ல வாசிங்கப்பா...)

இனி நம்ம சமத்துவ இலங்கையில சிறுபாண்மைன்னு ஒன்னே இல்லையாம்ல...
அடேங்கப்பா...
ஏன்யா உங்களுக்கு இப்பிடி ஒரு அறிக்கையை 30 வருஷத்துக்கு முன்னமே விடனும்ன்னு தோனலையா???
அப்பாவி மக்களாவது பிழைச்சிருப்பாங்கல்ல???
செஞ்சு முடிக்க வேண்டிய அநியாயங்களையெல்லாம் செஞ்சு முடிச்சுட்டு இப்ப விடுறாங்களாம்ல அறிக்கை..
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரத்துக்கா இந்த அறிக்கை ???

இலங்கை தொலைக்காட்சிகள் அனைத்திலும் நேற்றும், நேற்றைக்கு முந்தைய நாளும் ஒரே காட்சிகள் தான்..
அது தான் தசாவதாரம் படத்தின் பார்ட் - 2வாம்...
என்னா மேக்கப் ??
சும்மா சொல்லக் கூடாது சிங்கள சகோதரர்களை..
இல்லாத ஒன்னை இருக்குனு காட்டுறதுல தனித் திறமை தான்யா உங்களுக்கு...
தசாவதாரம் பார்ட் - 2வின் ஒரு சின்ன பிட் இங்கே க்ளிக்குங்க...

கடந்த மூனு நாளா நம்ம நாட்டுல ஒரே ஆர்ப்பாட்டம் தான்..
1996ல இலங்கை உலகக் கிண்ண இறுதிப் போட்டியில வென்ற போது கூட இந்தளவுக்கு நம் சகோதரர்கள் சந்தோஷப்பட்டிருப்பார்களா என்பது சந்தேகம் தான் நமக்கு...
என்னா குதூகலம் ???

வீதி எங்கும் வண்டிகளில் கும்பல் கும்பலாக சந்தோஷ பேரணி...
வாத்தியங்கள், இசையுடன்...
அதுல என்ன பெரிய காமடின்னா, நான் அந்தப் பக்கத்தால போயிட்டிருந்த போது வாத்தியத்தில் வாசிக்கப் பட்ட பாடல் “அடி என்னாடி ராக்கம்மா...” எனும் தமிழ்ப் பாடல் தான்..
ஏன்யா இவ்வளவு செய்யத் தெரிஞ்ச உங்களுக்கு தமிழ்ப் பாட்டு இல்லாம பேரனியையும் நடத்த தெரிஞ்சுருக்கணும்ல???
ஓ அதுதான் அன்னையில இருந்து ஜனாதிபதி சொல்லீட்டார்ல.. இனிமே நம்ம நாட்டுல சிறுபாண்மைன்னு ஒன்னு இல்லைன்னு..
ஒருவேளை அதா இருக்கலாம்...

இவ்வளவு காலமும் இலங்கை அரசு சொல்லி வந்த உண்மைகளைப் போலவே இப்போதும் ஒரு பெரிய உண்மையை சொல்லியிருக்காங்க...
அது என்ன உண்மைன்னு கேக்கக் கூடாது..
அதுக்கு தான் தசாவதாரம் பார்ட் - 2 பிட் இமேஜ் தந்துருக்கிறேன்ல...
:-)

நான் குடியிருக்கும் தெருவில் இந்த சந்தோஷத்தை கொண்டாடும் முகமாக ஒரு குடும்பத்தினர் நேற்று தைப்பொங்கலுக்கு நாம் வீட்டுக்கு முன் பானை வைத்து பொங்குவது போன்று பாற்சோறு செஞ்சாங்கப்பா...
ஆஹா என்ன ஒரு கருமாந்திர காட்சி.. ச்சீ கண்கொள்ளா காட்சி அது ...
பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் உயிரிழந்து அரசுக்கு கிடைத்த இந்த வெற்றியை (???) வீட்டுக்கு முன் பானை வைத்து பாற்சோறு செய்து கொண்டாடும் அளவுக்கு இருக்கு இதுங்களோட மனநிலை...
(நிறைய எழுதத் தோனுது.. முடியல.. அவ்வளத்தையும் எழுதினா சென்சார் போர்டுக்கு தான் போகும்...)

வெற்றியை கொண்டாடும் முகமாக நேற்று அரசாங்க விடுமுறை...
நாளையும் வெற்றிவாகை சூடிய படையினருக்கு மரியாதை செய்வதற்காக கொழும்பிலுள்ள பாடசாலைகள் எல்லாம் க்ளோஸ்டு...
இதே வெற்றி வாகை சூடிய (???) படையினர் தான் இரண்டு வருட காலத்துக்கு முன் ஐ.நா.வின் அமைதிப் படை குழுவில் சென்று அங்கு கற்பழிப்பு குற்றத்தில் பிடிபட்டு நொந்து நூடுல்ஸாகி திரும்ப இலங்கை வந்தார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும் நண்பர்களே...
ச்சீ அது இலங்கை படை வீரர்கள் இல்லை.. அவர்கள் மாதிரி வேஷம் போட்ட வேறு சதிகாரர்களாம்ல...
இது அரசு தரப்பு உண்மை... இலங்கை அரசு சொன்னால் அது உண்மையாத் தான் இருக்கும் ...
:-)

சொல்லப் போனா எவ்வளவோ வருது..
ஆனா எவ்வளத்த தான் சொல்லுறது ???
நக்கீரன்ல வந்துள்ள அட்டைப்பட கிராபிக்ஸ் படம் உண்மைன்னு இவங்களுக்கு தெரிய வரும் நேரம் வெகு தொலைவில் இல்லைங்கிறது மட்டும் உண்மை...
அப்போ பார்ப்போம் ரியல் தசாவதார ஹீரோவை...
அதுவரை காத்திருப்போம் நாம் !!!
என்னடா உலகமிது ???SocialTwist Tell-a-Friend

66 . பின்னூட்டங்கள்:

Anbu on 21 May 2009 at 16:11 said...

1st

Anbu on 21 May 2009 at 16:14 said...

சூப்பர் தல..கலக்கல் பதிவு..

அ.மு.செய்யது on 21 May 2009 at 16:19 said...

இலங்கை செய்திகளுக்காக,

கொழும்பிலிருந்து வேத்தியன்.

( அந்த ரேஞ்சுக்கு இருந்தது பதிவு..அசத்தல் வேத்தியன் )

அ.மு.செய்யது on 21 May 2009 at 16:19 said...

நம் நாட்டில் நடப்பவைகளை எழுத உங்களுக்கு தைரியம் இல்லையா என்ற ஒருவர் பின்னூட்டத்தில் கேட்டிருந்தாரெ !!!

அவருக்கு இந்த பதிவு பதிலடியா ?

கார்த்திகைப் பாண்டியன் on 21 May 2009 at 16:39 said...

இலங்கை அரசின் செய்திகள் பொய்யாகவே இருக்கட்டும்.. தமிழின போராட்டத்தை முன்னெடுத்து செல்ல தலைமை மீண்டு வரும் என்றே நம்புகிறேன்

சந்தனமுல்லை on 21 May 2009 at 16:49 said...

ஹ்ம்ம்ம்!!!

குடந்தை அன்புமணி on 21 May 2009 at 17:06 said...

அசத்தல் பதிவு!

ஜுர்கேன் க்ருகேர்..... on 21 May 2009 at 17:17 said...

அருமை

thevanmayam on 21 May 2009 at 18:16 said...

வேத்தியன்!
எப்போதிலிருந்து இப்படி?

thevanmayam on 21 May 2009 at 18:17 said...

கடந்த மூனு நாளா நம்ம நாட்டுல ஒரே ஆர்ப்பாட்டம் தான்..
1996ல இலங்கை உலகக் கிண்ண இறுதிப் போட்டியில வென்ற போது கூட இந்தளவுக்கு நம் சகோதரர்கள் சந்தோஷப்பட்டிருப்பார்களா என்பது சந்தேகம் தான் நமக்கு...
என்னா குதூகலம் ???///

என்னவோ போங்கப்பா!!

thevanmayam on 21 May 2009 at 18:18 said...

அதுல என்ன பெரிய காமடின்னா, நான் அந்தப் பக்கத்தால போயிட்டிருந்த போது வாத்தியத்தில் வாசிக்கப் பட்ட பாடல் “அடி என்னாடி ராக்கம்மா...” எனும் தமிழ்ப் பாடல் தான்..
ஏன்யா இவ்வளவு செய்யத் தெரிஞ்ச உங்களுக்கு தமிழ்ப் பாட்டு இல்லாம பேரனியையும் நடத்த தெரிஞ்சுருக்கணும்ல???///

கேள்வி நல்ல கேள்வி!!

அபுஅஃப்ஸர் on 21 May 2009 at 18:37 said...

இலங்கையிலிருந்து ஒரு கலக்கல் நேரடி ரிப்போர்ட்

நல்லாயிருக்கு வேத்தியன் பதிவு

இதையெல்லாம் பார்க்கும்போது தமிழர்கள் மனம் எந்தநிலைமையிலே இருக்கும் என்பதை கண்முன்னே விரிகிறது.

தேர்தல்லே தோத்தவன் வீட்டுமுன்னாடி வெடிவெடிச்சால் அவன் மனம்படும் பாடுமாதிரியான் நினைக்க தோணுது

அபுஅஃப்ஸர் on 21 May 2009 at 18:38 said...

//அடேங்கப்பா...ஏன்யா உங்களுக்கு இப்பிடி ஒரு அறிக்கையை 30 வருஷத்துக்கு முன்னமே விடனும்ன்னு தோனலையா???//

Good Question, Will Rajabakshe answer for it

நிலாவும் அம்மாவும் on 21 May 2009 at 18:56 said...

கலக்கல் வேத்தியன்.

எல்லாரும் உணர்ச்சி வசப்பட்டு வசை பாடுற சமயத்தில உங்களோட நையாண்டி பதிவு நிஜமாவே கலக்கல்

இங்க இருந்துகிட்டு நாங்களா ஏதோ கற்ப்பனை பண்ணிக்குறது விட அங்க இருக்குற நீங்க சொல்ற சேதிகளை நம்புறேன்

நம்ம உண்மை விளம்பி அரசாங்கத்தை புட்டு புட்டு பொடச்ச விதம் சூப்பர்

Tamilan said...

தமிழனுக்கு எதிரானவர்களும் ஆப்பு அடிக்கப்பட வேண்டியவர்கள் (இதில் தழிழர்(?) சிலரும் அடங்குவத்தான் கவலைக்குரியது.)...

.............................................................................................

தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக வந்த செய்தியில் நடந்தது இதுவாகவும் இருக்கலாம்...

சரத் பொன்(னயன்)சேகாவின் தொலைபேசி உரையாடல்...(உரையாடல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது...)

பொன்சே : நான் பொன்சே கதைக்கிறன்...

000 : சொல்லுங்க sir...

பொன்சே : எனக்கு அவசரமா நாலு ஐந்து body வேணும்...

000 : bodyயா...எதுக்கு...?

பொன்சே : நான் சொன்னத செய் man...

000 : நானே arange பண்ணனுமா...?

பொன்சே : ஆமா...

000 : உங்க பேரில் bill போடட்டா...?

பொன்சே : evidence நீயே create பண்ணுவா போல...no evidence man...

000 : எங்கே arrange பண்ண...?

பொன்சே : எங்கேயாவது சீக்கிறம் arrange பண்ணு...

000 : House of Fashion , No Limitன்னா okவா...?

பொன்சே : house of fashion , no limit...! என்ன man சொல்றா...?

000 : girls போடுற உள் bodyயதான சொல்றீங்க...?

பொன்சே : ஆமா...உங்க வீட்டு கொடியில் காயிறத எடுத்திட்டு வா...

000 : அது use பண்ணியிருக்கு பறவாயில்லயா...?

பொன்சே : you idiot...டேய்......
உங்கள எல்லாம் வச்சுகிட்டு...இந்தியாவும் உலக நாடுகளும் இல்லாட்டா என்ன வச்சு காமெடிதான் பண்ணியிருப்பீங்க...அப்புறம் எல்லோரும் சேர்ந்து ரூபவாகினியில் அசத்தப்போவது யாரு சிங்களத்திலதான் பண்ணிகிட்டு இருந்திருக்கவேணும்...(அதுவும் நல்லாத்தான் இருக்கும்...அதுல விஜயகாந்த் voiceல மிமிக்கிரி பண்ணி பாகிஸ்தான் தீவிரவாதிகள பிடிக்கிறமாதிரி...நீங்க புலிகள தீவிரவாதின்னு பொய் அறிக்கை விட்டு பிடிக்க வேண்டியதுதான)

நான் சொன்னது dead body man...!

000 : ooooo...sorry sir...

பொன்சே : சீக்கிறம் arrange பண்ணு...

000 : ஆண் bodyயா...? பெண் bodyயா...?

பொன்சே : ஆ.....gym
body...
ஐயோ...முடியல...இப்பவே கண்ணை கட்டுதே...

000 : கோபப்படாதீங்க...இப்ப உங்க plan புரிஞ்சு போச்சு...

பொன்சே : இப்பவாவது புரிஞ்சுதே...சீக்கிறம் bodyய ready பண்ணி முள்ளிவாய்க்கால் எடுத்துட்டு வா...
middle ageல ஒரு இரண்டு...கொஞ்சம் oldடா ஒரு இரண்டு...young ageல ஒன்று...

000 : ஏன் முள்ளிவாய்க்கால்...?கொழும்பில் வாய்க்கால் இல்லையா...?

பொன்சே : கொழும்பில் எங்க இருக்கு...?

000 : வெள்ளவத்த பாலத்துக்கு கீழ் ஓடுதே அது...

பொன்சே : ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்தான்...எதுக்கு risk எடுத்துகிட்டு...

000 : எனக்கு risk எடுக்கிறதெல்லாம் rusk சாப்பிடுறமாதிரி...(உலக நாடுகள் ஆப்படிக்கிற உங்க areaவ பொத்தி மறைச்சுக்கிட்டதால எங்க ஆப்போட sharpபு புரியல...தனியா வந்திருந்தா தெரிஞ்சிருக்கும்...ஆப்பு)

பொன்சே : ஒரு வகையில பார்த்தா அதுவும் குட்டி யாழ்ப்பாணம்தான்...ஆனாலு களனி ஆறு கப்பு கொஞ்சம் overரா இருக்கு...அதால நான் சொன்ன இடத்துக்கு கொண்டுவா...வரும்போது ஒரு plastic surgeonஐயும் கூட்டிட்டு வா...

000 : அதை விட கிரபிக்ஸ்ல செய்யிறது நல்லம்ன்னு நினைக்கிறன்...

பொன்சே : do what i said man...

000 : ok sir...

(அப்புறம் என்ன நடந்திருக்கும்னு சொல்லனுமா என்ன...!)

.............................................................................

(மறுநாள்...)

பொன்சே : என்ன man!...நாம விட்ட பீலா இப்பிடி ஆகிட்டுது...(தமிழன் என்ன கேனயனா?...எவ்வளவோ கண்டுபிடிச்சிட்டம்...இதை கண்டுபிடிக்கமாட்டமா...?)

000 : இதுக்குத்தான்...எதையுமே plan பண்ணிப் பண்ணனும்...plan பண்ணிப் பண்ணாட்டா இப்படித்தான் சொதப்பும்...

bitter luck...sorry better luck next time...

so....வதந்திகளை நம்பாதீர்கள்...இதற்கான பதிலை வரும் காலம் சொல்லும்...அதுவரை நம்பிக்கையுடன் காத்திருப்போம்...


...[நாங்க அடிக்கிற ஆப்பு ரொம்ப ரொம்ப sharp-pu]...

வேத்தியன் on 21 May 2009 at 19:40 said...

Anbu said...
1st//

வாங்க அன்பு...
ரொம்ப நாளைக்கு பிறகு...

வேத்தியன் on 21 May 2009 at 19:41 said...

Anbu said...
சூப்பர் தல..கலக்கல் பதிவு..//

மிக்க நன்றி நண்பா...

வேத்தியன் on 21 May 2009 at 19:41 said...

அ.மு.செய்யது said...
இலங்கை செய்திகளுக்காக,

கொழும்பிலிருந்து வேத்தியன்.

( அந்த ரேஞ்சுக்கு இருந்தது பதிவு..அசத்தல் வேத்தியன் )//

ஆஹா...
மிக்க நன்றி செய்யது...

வேத்தியன் on 21 May 2009 at 19:42 said...

அ.மு.செய்யது said...
நம் நாட்டில் நடப்பவைகளை எழுத உங்களுக்கு தைரியம் இல்லையா என்ற ஒருவர் பின்னூட்டத்தில் கேட்டிருந்தாரெ !!!

அவருக்கு இந்த பதிவு பதிலடியா ?//

கிட்டத்தட்ட அப்பிடித் தான்...
தரியம் இல்லையென்று இல்லை..
உண்மைகளை அப்பிடியே எழுதினால் நான் அடுத்த பதிவு எழுத உயிருடன் இருப்பேனா என்று எனக்கே தெரியாதுல்ல...
:-)

வேத்தியன் on 21 May 2009 at 19:43 said...

கார்த்திகைப் பாண்டியன் said...
இலங்கை அரசின் செய்திகள் பொய்யாகவே இருக்கட்டும்.. தமிழின போராட்டத்தை முன்னெடுத்து செல்ல தலைமை மீண்டு வரும் என்றே நம்புகிறேன்//

எல்லோருடைய நம்பிக்கையும் அதேதான்...

வேத்தியன் on 21 May 2009 at 19:44 said...

சந்தனமுல்லை said...
ஹ்ம்ம்ம்!!!//

முதல் வருகைக்கு நன்றி சந்தனமுல்லை...
ஏங்க பதிவு பிடிக்கலையா??

வேத்தியன் on 21 May 2009 at 19:44 said...

குடந்தை அன்புமணி said...
அசத்தல் பதிவு!//

மிக்க நன்றிங்க...
புரொபைல் படமாக உங்க படத்தையே போட்டாச்சா???
:-)

வேத்தியன் on 21 May 2009 at 19:45 said...

ஜுர்கேன் க்ருகேர்..... said...
அருமை//

முதல் வருகைக்கு நன்றி நண்பரே...
மிக்க நன்றி...

வேத்தியன் on 21 May 2009 at 19:46 said...

thevanmayam said...
வேத்தியன்!
எப்போதிலிருந்து இப்படி?//

இன்னைல இருந்து தான்..
கிளம்பிரலாம்ன்னு முடிவு பண்ணியாச்சு..
:-)

வேத்தியன் on 21 May 2009 at 19:47 said...

அபுஅஃப்ஸர் said...
இலங்கையிலிருந்து ஒரு கலக்கல் நேரடி ரிப்போர்ட்

நல்லாயிருக்கு வேத்தியன் பதிவு

இதையெல்லாம் பார்க்கும்போது தமிழர்கள் மனம் எந்தநிலைமையிலே இருக்கும் என்பதை கண்முன்னே விரிகிறது.

தேர்தல்லே தோத்தவன் வீட்டுமுன்னாடி வெடிவெடிச்சால் அவன் மனம்படும் பாடுமாதிரியான் நினைக்க தோணுது//

மிக்க நன்றிங்க...
ஆமா, முதல் முதல்ல இலங்கையில குடியேறினவனே தமிழன் தான்..
அவனை துரத்திவிட்டுட்டு அவனுங்க மட்டும் வாழலாம்ன்னு ஆசை தோசை அப்பளம் வடை..
:-)

வேத்தியன் on 21 May 2009 at 19:48 said...

நிலாவும் அம்மாவும் said...
கலக்கல் வேத்தியன்.

எல்லாரும் உணர்ச்சி வசப்பட்டு வசை பாடுற சமயத்தில உங்களோட நையாண்டி பதிவு நிஜமாவே கலக்கல்

இங்க இருந்துகிட்டு நாங்களா ஏதோ கற்ப்பனை பண்ணிக்குறது விட அங்க இருக்குற நீங்க சொல்ற சேதிகளை நம்புறேன்

நம்ம உண்மை விளம்பி அரசாங்கத்தை புட்டு புட்டு பொடச்ச விதம் சூப்பர்//

வாங்க நிலா அம்மா...
மிக்க நன்றிங்க...

வேத்தியன் on 21 May 2009 at 19:50 said...

@ Tamilan...

நண்பா உங்க கற்பனை சூப்பர்...
:-)

ஆதவா on 21 May 2009 at 21:33 said...

ஹாஹா.... அப்படியே அழகா சும்மா [போட்டு தள்ளியிருக்கீங்க.. ஒரே சோக கீதமா இல்லாம அழகான நக்கல்....

இந்த கும்பல் கும்மாளங்களெல்லாம் பிரபாகரன் திரும்ப வந்த பிறகு மூஞ்சியை அடைச்சமாதிரியில்ல ஆயிடும்?? அட அவரு வராரு இல்ல வரல அது இல்ல மேட்டரு.... இப்படி பொணத்துக்கு மேல சோறு திங்கறதுதான் இனவெறியோட உச்சமோ??

அய்யா ராசாபாட்சா... ஓ சாரி, ராஜபட்ச... நீங்க சொல்றாப்ல சம உரிமையெல்லாம் இருக்கட்டுமய்யா.. மொதல்ல பலியான/காயமான மக்களுக்கு நீங்க என்ன செய்யப்போறீங்க.. அட்லீஸ்ட் ஒரு வருத்தம்??

ஆதவா on 21 May 2009 at 21:34 said...

ஹாஹா.... அப்படியே அழகா சும்மா [போட்டு தள்ளியிருக்கீங்க.. ஒரே சோக கீதமா இல்லாம அழகான நக்கல்....

இந்த கும்பல் கும்மாளங்களெல்லாம் பிரபாகரன் திரும்ப வந்த பிறகு மூஞ்சியை அடைச்சமாதிரியில்ல ஆயிடும்?? அட அவரு வராரு இல்ல வரல அது இல்ல மேட்டரு.... இப்படி பொணத்துக்கு மேல சோறு திங்கறதுதான் இனவெறியோட உச்சமோ??

அய்யா ராசாபாட்சா... ஓ சாரி, ராஜபட்ச... நீங்க சொல்றாப்ல சம உரிமையெல்லாம் இருக்கட்டுமய்யா.. மொதல்ல பலியான/காயமான மக்களுக்கு நீங்க என்ன செய்யப்போறீங்க.. அட்லீஸ்ட் ஒரு வருத்தம்??

குடுகுடுப்பை said...

நண்பர் வேத்தியன்.

உங்கள் வேதனைகள் புரிகிறது.மனதில் உள்ள அனைத்தையும் வெளியில் சொல்லும் நேரமல்ல இது.

ஆ.ஞானசேகரன் on 21 May 2009 at 23:38 said...

//ஏன்யா உங்களுக்கு இப்பிடி ஒரு அறிக்கையை 30 வருஷத்துக்கு முன்னமே விடனும்ன்னு தோனலையா???//

காமடியுடன் உங்கள் ஆதகங்களையும் வெளிப்படுத்தி அசத்தலாக உண்மைகளை எடுத்து சொல்லியுள்ளீர்கள் நண்பா...

மேலும் இதையும் படிங்க
சாமானியனின் எண்ணக்குவியல் - வேலுப்பிள்ளை பிரபாகரன்

ஆ.முத்துராமலிங்கம் on 22 May 2009 at 08:42 said...

கார்த்திகைப் பாண்டியன் on 21 May 2009 16:39 said...
இலங்கை அரசின் செய்திகள் பொய்யாகவே இருக்கட்டும்.. தமிழின போராட்டத்தை முன்னெடுத்து செல்ல தலைமை மீண்டு வரும் என்றே நம்புகிறேன்

இதுவே என் என்னமும்.

வேத்தியன் on 22 May 2009 at 08:52 said...

@ ஆதவா...

மிக்க நன்றி ஆதவா...

//மொதல்ல பலியான/காயமான மக்களுக்கு நீங்க என்ன செய்யப்போறீங்க.. அட்லீஸ்ட் ஒரு வருத்தம்??//

என்னங்க நீங்க இன்னும் புரியாத புள்ளையாவே இருக்கிறீங்க ???

வேத்தியன் on 22 May 2009 at 08:53 said...

குடுகுடுப்பை said...
நண்பர் வேத்தியன்.

உங்கள் வேதனைகள் புரிகிறது.மனதில் உள்ள அனைத்தையும் வெளியில் சொல்லும் நேரமல்ல இது.//

அடக்க நினைத்தும் முடியவில்லை...

வேத்தியன் on 22 May 2009 at 08:54 said...

@ ஆ.ஞானசேகரன்...

மிக்க நன்றிங்க...

வேத்தியன் on 22 May 2009 at 08:54 said...

@ ஆ.முத்துராமலிங்கம்...

மிக்க நன்றிங்க...

Mal Ramanathan said...

ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்

ஆயினும் போரது நீறும், புலி

ஆடும் கொடி நிலம் ஆறும்.

பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்

பாசறை ஆயிரம் தோன்றும், கருப்

பைகளும் ஆயுதம் ஏந்தும்.

மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை

மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த

சிங்கள கூட்டங்கள் ஓடும்

புதுவை இரத்தின துரை எழுதிய வரிகளே என் நினைவில் வருகின்றன
(இது யாரோ ஒருவரின் வலைப் பூவில் இருந்தது)


சிங்கள வெறியன் மட்டுமல்ல ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது, எந்த கட்சி ஆண்டாலும் அந்த கட்சியுடன் கூட்டுசேர்ந்து வாழ் நாள் அமைச்சர்களாக இருப்பவர்களுடைய (இவர்கள் தமிழ் பேசுபவர்கள்) கூட்டத்தவர்களும் கூத்தாடுகிறார்கள்.

இப்ப இறந்து போன மாவீரர்கள் கல்லறையில் இருந்து "வருவேன் வருவேன் கட்டாயம் வருவேன்" என்ற அருந்ததி பட வசனங்கள் ஒலிப்பதாக ஒரு உணர்வு!!
பசில் ஐயா கொட்டாபெய ஐயா ஆப்பு உங்களுக்கு எப்பவும் தயாராக உள்ளது.
விரைவில் நீங்களே அதில் வந்து அமர்வீர்கள்!!
அப்போ காயப்பட்ட இடத்துக்கு ஒத்தடம் பிடிக்க, கழுவிவிட முரளீதரன் உயிருடன் இருக்க மாட்டான்.
(முரளீதரன் தமிழின துரோகி பிணங்களை காட்டி கொடுத்தவனின் நிஜப்பெயர். இவன் எமது முன்னாள் கிழக்கு தளபதி என்று சொல்வதில் மிகவும் கேவலப்படுகிறேன்)

வேத்தியன் on 22 May 2009 at 09:17 said...

@
Mal Ramanathan...

உண்மை உண்மை...

பாலா... on 22 May 2009 at 10:01 said...

அறிக்கைக்கென்னங்க விடுவான். ஆளாளுக்கு விடுறானுங்க. பாம்புக்கு ராஜா மூங்கித்தடிதான். நல்ல இடுகை.

அமிர்தவர்ஷினி அம்மா on 22 May 2009 at 10:57 said...

கொஞ்சம் ஆறுதலான பதிவு

பாற்சோறா.......

படுபாவி மக்க, அங்க கைக்கொழந்தங்க கூட பாலில்லாம கதறிகிட்டிருக்கு,,,,

ச்ச்சே கடவுளே எதுக்கு பாழாப்போனா மனிதப் பிறவி

வழிப்போக்கன் on 22 May 2009 at 12:32 said...

வாழ்த்துகள் வேத்"தீ".....
நல்லாருக்கு.....
:)))

Vilvarasa Prashanthan on 22 May 2009 at 13:02 said...

இதுல என்ன கொடுமை என்றா .. இன்னோரு சிறுபான்மை இனமும் இதை சேர்ந்து கொண்டாடுவதுதான்... அவர்களுக்கு எப்ப ஆப்பு என்டு அவங்களுக்கே தெரியாது போல ..
சிங்க கொடியா பிடிச்சுட்டு என்னா ஆட்டம் போடுறாங்க தெரியுமா? அவங்களை பொருத்தவரைக்கும் கூத்தடிச்சு திரியிரதுக்கு இது ஒரு நாள் அவளவுதான் வருஷத்தின்ட கடைசிநாள் மாதிரி ..

உமா on 22 May 2009 at 13:04 said...

//அது தான் தசாவதாரம் படத்தின் பார்ட் - 2வாம்...//

கலக்கலா சொல்லியிருக்கீங்க.


//இலங்கை உலகக் கிண்ண இறுதிப் போட்டியில வென்ற போது கூட இந்தளவுக்கு நம் சகோதரர்கள் சந்தோஷப்பட்டிருப்பார்களா என்பது சந்தேகம் தான் நமக்கு...என்னா குதூகலம் ???
வீதி எங்கும் வண்டிகளில் கும்பல் கும்பலாக சந்தோஷ பேரணி...வாத்தியங்கள், //

இதுதாங்க எல்லாருக்கும் வேதனையாக இருக்கிறது. ஒர் இனத்தின் அழிவில் மகிழும் இவர்கள் இந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் தானா? கற்கால வாசிகளா?
வெட்கம்.

நட்புடன் ஜமால் on 22 May 2009 at 13:12 said...

\\அது தான் தசாவதாரம் படத்தின் பார்ட் - 2வாம்...
\\

super shot ...

வேத்தியன் on 22 May 2009 at 15:29 said...

பாலா... said...
அறிக்கைக்கென்னங்க விடுவான். ஆளாளுக்கு விடுறானுங்க. பாம்புக்கு ராஜா மூங்கித்தடிதான். நல்ல இடுகை.//

மிக்க நன்றி பாலா...

சுரேஷ் குமார் on 22 May 2009 at 15:29 said...

உங்களின் உள்ளக்குமுறல்களை சிறப்பாக வெளிப்படுத்திஇருக்கிறீர்கள்..
வாழ்த்துக்கள்..


//
நக்கீரன்ல வந்துள்ள அட்டைப்பட கிராபிக்ஸ் படம் உண்மைன்னு இவங்களுக்கு தெரிய வரும் நேரம் வெகு தொலைவில் இல்லைங்கிறது மட்டும் உண்மை...
அப்போ பார்ப்போம் ரியல் தசாவதார ஹீரோவை...
அதுவரை காத்திருப்போம் நாம் !!!
//

கணடீப்பா காத்திருப்போம் சகா..

வேத்தியன் on 22 May 2009 at 15:30 said...

அமிர்தவர்ஷினி அம்மா said...
கொஞ்சம் ஆறுதலான பதிவு

பாற்சோறா.......

படுபாவி மக்க, அங்க கைக்கொழந்தங்க கூட பாலில்லாம கதறிகிட்டிருக்கு,,,,

ச்ச்சே கடவுளே எதுக்கு பாழாப்போனா மனிதப் பிறவி//

மிக்க நன்றிங்க...
எல்லோருக்குமுள்ள ஆதங்கம்...

வேத்தியன் on 22 May 2009 at 15:30 said...

வழிப்போக்கன் said...
வாழ்த்துகள் வேத்"தீ".....
நல்லாருக்கு.....
:)))//

மிக்க நன்றி வழிப்போக்கரே...

வேத்தியன் on 22 May 2009 at 15:31 said...

Vilvarasa Prashanthan said...
இதுல என்ன கொடுமை என்றா .. இன்னோரு சிறுபான்மை இனமும் இதை சேர்ந்து கொண்டாடுவதுதான்... அவர்களுக்கு எப்ப ஆப்பு என்டு அவங்களுக்கே தெரியாது போல ..
சிங்க கொடியா பிடிச்சுட்டு என்னா ஆட்டம் போடுறாங்க தெரியுமா? அவங்களை பொருத்தவரைக்கும் கூத்தடிச்சு திரியிரதுக்கு இது ஒரு நாள் அவளவுதான் வருஷத்தின்ட கடைசிநாள் மாதிரி ..//

வாங்க...
சரியா சொன்னீங்க...
பொறுத்திருந்து பாக்கலாம்...

வேத்தியன் on 22 May 2009 at 15:32 said...

உமா said...
//அது தான் தசாவதாரம் படத்தின் பார்ட் - 2வாம்...//

கலக்கலா சொல்லியிருக்கீங்க.


//இலங்கை உலகக் கிண்ண இறுதிப் போட்டியில வென்ற போது கூட இந்தளவுக்கு நம் சகோதரர்கள் சந்தோஷப்பட்டிருப்பார்களா என்பது சந்தேகம் தான் நமக்கு...என்னா குதூகலம் ???
வீதி எங்கும் வண்டிகளில் கும்பல் கும்பலாக சந்தோஷ பேரணி...வாத்தியங்கள், //

இதுதாங்க எல்லாருக்கும் வேதனையாக இருக்கிறது. ஒர் இனத்தின் அழிவில் மகிழும் இவர்கள் இந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் தானா? கற்கால வாசிகளா?
வெட்கம்.//

வாங்க உமா...
கற்கால வாசிகளும் இல்லை...
கேவலமான மனிதப் பிறவிகள்...

வேத்தியன் on 22 May 2009 at 15:33 said...

நட்புடன் ஜமால் said...
\\அது தான் தசாவதாரம் படத்தின் பார்ட் - 2வாம்...
\\

super shot ...//

Thanks mate...
expecting a answer from Rajapaksha...
:-)

வேத்தியன் on 22 May 2009 at 15:33 said...

சுரேஷ் குமார் said...
உங்களின் உள்ளக்குமுறல்களை சிறப்பாக வெளிப்படுத்திஇருக்கிறீர்கள்..
வாழ்த்துக்கள்..


//
நக்கீரன்ல வந்துள்ள அட்டைப்பட கிராபிக்ஸ் படம் உண்மைன்னு இவங்களுக்கு தெரிய வரும் நேரம் வெகு தொலைவில் இல்லைங்கிறது மட்டும் உண்மை...
அப்போ பார்ப்போம் ரியல் தசாவதார ஹீரோவை...
அதுவரை காத்திருப்போம் நாம் !!!
//

கணடீப்பா காத்திருப்போம் சகா..//

வாங்க நண்பா...
மிக்க நன்றிங்க...

பித்தன் on 22 May 2009 at 21:42 said...

எழுதுறது தமிழ்ல, கையெழுத்து போடுறது ஆங்கிலத்திலையா ?

புல்லட் பாண்டி on 22 May 2009 at 23:02 said...

நல்ல துணிச்சலான பதிவு... இப்படியான பதிவுகளை தொடர்ந்து எழுதுங்க..
வாழத்துக்கள்...ஓட்டும் போட்டாச்சு...

வேத்தியன் on 23 May 2009 at 10:29 said...

பித்தன் said...
எழுதுறது தமிழ்ல, கையெழுத்து போடுறது ஆங்கிலத்திலையா ?//

வாங்க பித்தன் சார்...
என்ன பண்ண??
ஆங்கிலத்துல தானே கிடைக்குது..
தமிழ்ல அடிச்சு அனுப்பி பார்த்தேன்..
கிடைக்கலை..
:-)

வேத்தியன் on 23 May 2009 at 10:29 said...

புல்லட் பாண்டி said...
நல்ல துணிச்சலான பதிவு... இப்படியான பதிவுகளை தொடர்ந்து எழுதுங்க..
வாழத்துக்கள்...ஓட்டும் போட்டாச்சு...//

மிக்க நன்றி புல்லட்...

S.A. நவாஸுதீன் on 23 May 2009 at 10:52 said...

ஆதங்கத்தைக் கூட நகைச்சுவையோடும் அதே சமயம் அதன் முழு அம்சமும் வெளிப்படும் வகையில் நன்றாக சொல்லி இருக்கின்றீர்கள் வேத்தியன்.

வேத்தியன் on 23 May 2009 at 11:03 said...

S.A. நவாஸுதீன் said...
ஆதங்கத்தைக் கூட நகைச்சுவையோடும் அதே சமயம் அதன் முழு அம்சமும் வெளிப்படும் வகையில் நன்றாக சொல்லி இருக்கின்றீர்கள் வேத்தியன்.//

மிக்க நன்றி...

பித்தன் on 23 May 2009 at 11:49 said...

//வேத்தியன் on 23 May 2009 10:29 said...
பித்தன் said...
எழுதுறது தமிழ்ல, கையெழுத்து போடுறது ஆங்கிலத்திலையா ?//

வாங்க பித்தன் சார்...
என்ன பண்ண??
ஆங்கிலத்துல தானே கிடைக்குது..
தமிழ்ல அடிச்சு அனுப்பி பார்த்தேன்..
கிடைக்கலை..
//

மனமிருந்தால் மார்க்கம் உண்டு

reena on 23 May 2009 at 13:02 said...

:(((

Anonymous said...

Vilvarasa Prashanthan said...
இதுல என்ன கொடுமை என்றா .. இன்னோரு சிறுபான்மை இனமும் இதை சேர்ந்து கொண்டாடுவதுதான்... அவர்களுக்கு எப்ப ஆப்பு என்டு அவங்களுக்கே தெரியாது போல ..
சிங்க கொடியா பிடிச்சுட்டு என்னா ஆட்டம் போடுறாங்க தெரியுமா? அவங்களை பொருத்தவரைக்கும் கூத்தடிச்சு திரியிரதுக்கு இது ஒரு நாள் அவளவுதான் வருஷத்தின்ட கடைசிநாள் மாதிரி ..//

ஆமாங்க அவங்கள் ஆடும் ஆட்டம் அதிலும் கிழக்கின் ஒரு முஸ்லீம் அமைச்சன் ஆடுகின்றான் உண்மையான தொப்பி பிரட்டி என்றால் இவங்கள்தான்.

கேட்டால் தங்களை யாழ்ப்பாணத்தில் இருந்து அடித்துதுரத்தி விட்டார்கள் என்ற கதை. யாழ்ப்பாணம் அரசாங்க கட்டுப்பாட்டில் வந்து பல வருடங்கள் ஆனாலும் இவர்களை இன்னமும் அங்கே குடியேற்றவிடாமல் வைத்திருப்பது அரசாங்கமும் முஸ்லீம் எம்பிகளும் என்ற உண்மை இந்த பதர்களுக்கு புரியவில்லை.

சிங்களமக்கள் இவர்களுடன் ஒப்பிடும்போது எவ்வளவோ மேல் .

வேத்தியன் on 23 May 2009 at 18:32 said...

பித்தன் said...
//வேத்தியன் on 23 May 2009 10:29 said...
பித்தன் said...
எழுதுறது தமிழ்ல, கையெழுத்து போடுறது ஆங்கிலத்திலையா ?//

வாங்க பித்தன் சார்...
என்ன பண்ண??
ஆங்கிலத்துல தானே கிடைக்குது..
தமிழ்ல அடிச்சு அனுப்பி பார்த்தேன்..
கிடைக்கலை..
//

மனமிருந்தால் மார்க்கம் உண்டு//

அப்பிடி எழுதுற சைட் தெரிஞ்சா சொல்லுங்க பித்தன் சார்...
:-)

வேத்தியன் on 23 May 2009 at 18:32 said...

reena said...
:(((//

வாங்க ரீனா...

Kripa on 24 May 2009 at 12:17 said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்

கானா பிரபா on 24 May 2009 at 17:17 said...

:0 nalla irukku

வேத்தியன் on 25 May 2009 at 09:14 said...

கானா பிரபா said...
:0 nalla irukku//

மிக்க நன்றி அண்ணா...

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.