Tuesday, 19 May 2009

என்னா அதிர்ஷ்டம் ???


6000 அடி உயரத்திலிருந்து பாரசூட் இல்லாமல் குதித்து உயிரோடு இருக்கிறார் ஒரு skydiver.
ஆச்சரியமாக இல்லை???

இங்கிலாந்தின் Tamworth, Staffordshireஐச் சேர்ந்த James Boole என்பவரே இவ்வாறு அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியவர்...
இவர் நிலத்தை அடைய சற்று முன்னரே தனது பாரசூட்டை விரித்துள்ளாஅராம்...
சற்று முன்னென்றால் எவ்வளவு நேரம்???
அது தான் ஆச்சரியம் சாமி... நிலத்தை அடைய 2 செக்கண்ட்ஸுக்கு முன் !!!



James Boole



இந்த நபர் ஒரு பிள்ளைக்கு அப்பா.
ஒரு டீ.வி. விவரணச் சித்திரத்துக்காக இன்னொரு Skydiverஐ படம் பிடிக்க சென்றுள்ளார்.

கூட பறந்தவர் தவறாக சிக்னல் கொடுத்ததால் பனி மிகுந்த ஒரு மலையின் உச்சியை அடைய 2 செக்கண்ட்ஸுக்கு முன்னரே தனது பாரசூட்டை விரித்துள்ளாராம்...
6000 அடியிலிருந்து பறக்கத் தொடங்கியிருக்கிறார்கள் இவர்கள்.
மலையின் உச்சியை வந்தடையும் போது இவரின் கதி 100 mph !!!

James Booleஇன் பின்பகுதி, விலா என்புகள், பற்கள் என்பவற்றுக்கு சிறிது சேதம் ஏற்பட்டிருக்கிறதாம்...

இந்த படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்ததாம்.
விபத்து நடந்த உடனே மொஸ்கோவிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்களாம்...
இங்கிலாந்துக்கு திரும்ப முதல் கொஞ்சம் உடல்நிலையை தேற்றிவிட்டு செல்வதற்காக ரஷ்யாவில் தங்கியிருக்கிறாராம் இவர்...

இவர் ஒரு மெக்கானிக்கல் எஞ்ஜினியர்.
இவர் கடந்த 12 வருட காலமாக பாரசூட்டில் பறந்து பழக்கம் உள்ளவர்.
2000க்கும் மேற்பட்ட தடவைகள் பறந்து அனுபவம் உள்ளவர்...

அவனவன் சைக்கிள் மோதியே எமன்கூட ஐக்கியமாயிடுறானுங்க...
இந்தாளு என்னான்னா அலேக்கா பறந்து வந்தும் அதுவும் பாரசூட் இல்லாம பறந்து வந்து சின்ன விபத்தோட தப்பிச்சிருக்காரு...

என்ன கொடுமை இது சரவணன் ???
:-)
என்னா அதிர்ஷ்டம் ???SocialTwist Tell-a-Friend

25 . பின்னூட்டங்கள்:

Mal ramanathan said...

naattu nilamai patri ezhutha ungalukku thairiyam illayaa????

mal ramanathan said...

i think i'm the 1st!!!

mal ramanathan said...

இந்த நபர் ஒரு பிள்ளைக்கு அப்பா

oh vilaiyadittu than vilaiyaaduraar!!!

mal ramanathan said...

அவனவன் சைக்கிள் மோதியே எமன்கூட ஐக்கியமாயிடுறானுங்க...

engada naatla summaa irunthaale எமன்கூட aikkiyamaagidalaam!!

வேத்தியன் on 19 May 2009 at 22:08 said...

Mal ramanathan said...
naattu nilamai patri ezhutha ungalukku thairiyam illayaa????//

ஏன் நான் உயிரோட இருக்கிறது விருப்பமில்லையா???

வேத்தியன் on 19 May 2009 at 22:08 said...

mal ramanathan said...
i think i'm the 1st!!!//

நீங்க தான் மாப்ள...
வாங்க...

வேத்தியன் on 19 May 2009 at 22:09 said...

mal ramanathan said...
இந்த நபர் ஒரு பிள்ளைக்கு அப்பா

oh vilaiyadittu than vilaiyaaduraar!!!//

ரைமிங்ல பின்னுறியளே தல...

வேத்தியன் on 19 May 2009 at 22:10 said...

mal ramanathan said...
அவனவன் சைக்கிள் மோதியே எமன்கூட ஐக்கியமாயிடுறானுங்க...

engada naatla summaa irunthaale எமன்கூட aikkiyamaagidalaam!!//

அதுதான் சொல்றாங்க...
Srilanka, a land like no otherன்னு...
:-)

ஆ.சுதா on 20 May 2009 at 09:21 said...

ரொம்ப அதிஷ்ட்டக்காரர்தாங்க

நமிதா said...

http://www.youtube.com/watch?v=Yd6z41Dsing

///

ஆதவா on 20 May 2009 at 13:28 said...

மனுஷன் உடம்புக்குள்ள ரப்பர் ஏதாச்சு வெச்சிருப்பாரோ என்னவோ... ஆண்டவனுக்கே வெளிச்சம்..

நட்புடன் ஜமால் on 20 May 2009 at 13:32 said...

தப்பிச்சாட்டாரா

நல்லது.

S.A. நவாஸுதீன் on 20 May 2009 at 13:44 said...

அதாங்க வேத்தியன் விதின்னு சொல்றது.

"பெரிய பாறை விழுந்து பொலச்சவனும் இருக்கான், புல் தடிக்கி விழுந்து செத்தவனும் இருக்கான்"னு எங்க ஊர் பாக்கம் சொல்வாங்க. சரியாத்தான் இருக்கு

Revathyrkrishnan on 20 May 2009 at 14:13 said...

அதிர்ஷ்டம் அதிகம் தாங்க அவருக்கு...

அப்துல்மாலிக் on 20 May 2009 at 14:24 said...

ஆச்சரியப்படக்கூடிய விஷயம்தான்,
நீண்ட‌ ஆயுள் இருக்குப்போல‌

ந‌ல்ல‌துதானே....

கார்த்திகைப் பாண்டியன் on 20 May 2009 at 14:53 said...

நல்ல வேளை.. மனுஷன் பொழச்சானென்னு சந்தோஷப்படுங்கப்பா..

இராகவன் நைஜிரியா on 20 May 2009 at 15:24 said...

வாழ்க்கை என்பதே விசித்திரம் நிறைந்ததுதான். அதில் இதுவும் ஒன்று. சைக்கிளில் இருந்து கீழே விழுந்து செத்தவனும் உண்டு, இது மாதிரி மலையில் மோதி பிழைத்தவனும் உண்டு. ஆயுசு கெட்டி வேற என்ன சொல்வது. பிழைத்தவரை சந்தோஷம்.

Rajeswari on 20 May 2009 at 19:43 said...

முத்துராமலிங்கம் கூறியிருப்பது போல,அவர் அதிர்ஷ்டசாலிதான்.

தேவன் மாயம் on 20 May 2009 at 20:21 said...

அவனவன் சைக்கிள் மோதியே எமன்கூட ஐக்கியமாயிடுறானுங்க...
இந்தாளு என்னான்னா அலேக்கா பறந்து வந்தும் அதுவும் பாரசூட் இல்லாம பறந்து வந்து சின்ன விபத்தோட தப்பிச்சிருக்காரு...///

வேத்தி!!தாமத வருகையாகிவிட்டது!!

ஆ.ஞானசேகரன் on 20 May 2009 at 23:44 said...

//இராகவன் நைஜிரியா on 20 May 2009 15:24 said...
வாழ்க்கை என்பதே விசித்திரம் நிறைந்ததுதான். அதில் இதுவும் ஒன்று. சைக்கிளில் இருந்து கீழே விழுந்து செத்தவனும் உண்டு, இது மாதிரி மலையில் மோதி பிழைத்தவனும் உண்டு. ஆயுசு கெட்டி வேற என்ன சொல்வது. பிழைத்தவரை சந்தோஷம்.//

வழிமொழிகின்றேன்

நசரேயன் on 21 May 2009 at 02:09 said...

சும்மா இருக்கும் போதே மண்டையை போடுரவங்களும் நிறைய பேர் இருக்காங்க

அ.மு.செய்யது on 21 May 2009 at 09:46 said...

இதுக்கு பேரு தான் சாகப் போறவன் வாயில சர்பத் ஊத்தி காப்பாத்துறதுன்னுவாங்க..

வேத்தியன் on 21 May 2009 at 09:46 said...

வந்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்...

வேத்தியன் on 21 May 2009 at 09:47 said...

அ.மு.செய்யது said...
இதுக்கு பேரு தான் சாகப் போறவன் வாயில சர்பத் ஊத்தி காப்பாத்துறதுன்னுவாங்க..//

ஆஹா...
என்னா ரைமிங் என்னா ரைமிங்????
:-)

வேத்தியன் on 21 May 2009 at 09:47 said...

அ.மு.செய்யது said...
இதுக்கு பேரு தான் சாகப் போறவன் வாயில சர்பத் ஊத்தி காப்பாத்துறதுன்னுவாங்க..//

ஆஹா...
என்னா ரைமிங் என்னா ரைமிங்????
:-)

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.